ட்வின்ஸ். ஆமா, ஒண்ணைப் போல ஒண்ணு.
இப்பப் புரிஞ்சிருக்குமே தலைப்பு? ‘உன்னைப் போல் ஒருவன்’:)!
மூணு வருஷம் முன்னே ‘ஜோடி’ன்னு ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். ரெண்டு வேற வேற விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலியாக் கை கோத்துக்கலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சுல வார்த்த மாதிரி இல்லேன்னாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ன்னு சொல்லும்படியா இருக்கணும்.
படத்தில் இரட்டையரே பிரதானமா இருக்கணும்.
ஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோட சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாம இயல்பான இரட்டையரா இருக்க வேண்டியதும் அவசியம்.
சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?
# 1 ராமலக்ஷ்மி

# 2 ராமலக்ஷ்மி

# 3 ராமலக்ஷ்மி

# 4 ராமலக்ஷ்மி

# 5

# 6 ஜீவ்ஸ்

# 7 சர்வேசன்

# 8 கருவாயன்

கோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்க ஆவலாய்க் காத்திருக்கிறோம்.
படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.
போட்டி விதிமுறைகள் இங்கே.
[பி.கு: ஒவ்வொரு மாதமும் உங்களில் சிலர் படங்களை மின்னஞ்சலில் சேமிப்பாகியிருக்கும் பழைய போட்டி ஐடிக்கே சமர்ப்பித்து வருகிறீர்கள். ஐடி மாற்றமாகிப் பலமாதங்கள் ஆகிவிட்டன. திருத்தம் செய்து கொள்ளுங்கள்.]
சாம்பிள் படங்கள், அருமை! ஏங்க வெறும் ட்வின்ஸ் மட்டுமா? மல்ட்டிபிள் பர்த் இருந்தா ஏத்துக்க மாட்டீங்களா?
ReplyDeleteமாதிரிபங்கள் செம மிரட்டல இருக்குங்க :-)))
ReplyDeleteநானும் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteதங்கமணிக்கு தங்கத்தில் செருப்பு வாங்கிக்கொடுத்த சர்வேசன் வாழ்க வாழ்க!
ReplyDeleteநான் எடுத்த ஒரு புகைப்படத்தினை இந்த மாத போட்டிக்கென மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருக்கிறேன்...
ReplyDeleteஎனது புகைபடத்தை போட்டிக்கு அனுப்பியுள்ளேன்
ReplyDeleteநன்றி..
sathish
புகைப்படப் போட்டியில் பங்கு பெற, படத்தை அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteநன்றி
செல்வகுமார்.
PIT குழுவினருக்கு,
ReplyDeleteவணக்கங்கள்.
டிசம்பர் 2011 PIT போட்டிக்காக எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்.
நான் அனுப்பியுள்ள படம் கீழே உள்ள சுட்டியிலும் உள்ளது.
http://www.flickr.com/photos/sathyapriyan/6441475883/in/photostream
படத்தினை பற்றிய விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.
நன்றி.
DEC 2011 PIT -க்கு நான் எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளேன்
ReplyDeleteநன்றி ! !
”இரட்டையர்” போட்டிக்கான எனது படத்தை அனுப்பியுள்ளேன். நன்றி.
ReplyDelete'குசும்பு' என்ற நானெடுத்த படம் ஒன்றினை அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteஇரட்டையர் போட்டிக்காக முதன்முதலாக படம் அனுப்பியுள்ளேன்..
ReplyDeleteஉன்னைப் போல் ஒருவன் போட்டிக்கு நானும் என் பங்களிப்பாக ஒரு புகைப்படம் (பூனை) அனுப்பியுள்ளேன்.
ReplyDelete-சைதை முரளி
I've sent a photo for December 11 contest!
ReplyDelete2011டிசம்பர் மாத உன்னைப்போல் ஒருவன் போட்டிக்கு (முதல் முறையாக) என் பங்குக்கு ஒரு படம் அனுப்பியுள்ளேன்! (ஸ்ரீராம்.jpg)
ReplyDeleteஇதுவரை வந்த படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. போட்டிப் படங்களைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஅனுப்பாதவர்கள் இன்றிரவு 12 மணிக்குள் படங்களை அனுப்புங்கள்.
மாதிரிப் படங்கள் மேலும் சில இங்கே.
இரட்டையரைப் பிடிப்பதற்குள் என்னைப்பிடி உன்னைப்பிடின்னு ஆயிடுச்சு...ஒரு வழியா அனுப்பியாச்சு
ReplyDeleteஇதுவரை வந்த படங்கள் யாவும் சேர்க்கப்பட்டு விட்டன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும். இனி வருபவற்றைச் சேர்க்க இயலாது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
ReplyDeleteதமிழில் புகைப்படக்கலையா? தமிழ் context புரியலியே?
மிகவும் அழகான படங்கள்... சூர்யா
ReplyDelete