Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, June 3, 2020

வணக்கம் நண்பர்களே,

அனைவரும் நலமா? 

ஆசிரியர் குழுவினரைச் சேர்ந்த அனைவரும் காலத்தோடு ஓட வேண்டிய கட்டாயத்தால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிட் தளம் மீண்டும் இயங்க உள்ளது. அதுவும் வளர்ந்து விட்ட தொழில்நுட்பங்களை வரவேற்று.. காணொளிப் பாடங்களாக.. 

வழங்கவிருப்பவர் புதிதாக ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் நண்பர்
 திரு. சரவணவேல். 

புதிதாக இணைந்திருந்தாலும் நம் PiT உறுப்பினர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. நம் தளம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ‘குசும்பன்’ என்ற பெயரில், PiT நடத்திய பல போட்டிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்திருக்கிறார். அப்போது துபாயில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். புகைப்படக்கலையில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர், படிப்படியாகக் கற்றுத் தேர்ந்து, துபாயில் பல முன்னணி நிறுவனங்களுக்கு ‘ப்ராடெக்ட் போட்டோகிராபராக’ இருந்திருக்கிறார். பிறகு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக www.thei2studio.com  என்கிற ஒரு ஸ்டுடியோவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். திருமணம் மற்றும் குடும்ப விழாக்களுக்குப் படங்கள் எடுத்துக் கொடுக்கிறார் ஆயினும், “குழந்தைகள் போட்டோகிராஃபி” சரவணவேலின் ஸ்பெஷாலிட்டி.

லாக் டவுன் நாட்களில் இவர் யூ ட்யூபில் ஆரம்பித்த  www.youtube.com/thei2studioclassroom என்கிற ஃபோட்டோகிராஃபி சேனலில் எளிய டிப்ஸில் இனிய தமிழில் இவர் ஃபோட்டோகிராஃபி கற்றுக்கொடுக்கும் வீடியோக்களுக்கு வெகுவான வரவேற்பு! குழந்தைகளுக்கும் புரியும் வகையில் ஃபோட்டோகிராப்பி & போட்டோஷாப்பை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்தப் பாடங்கள் இனி நமது தளத்திலும் வெளியாகும். பார்த்துப் பயனுறுங்கள்!
**

Sunday, December 13, 2015

அனைவருக்கும் வணக்கம், 

இம்மாதப் போட்டித் தலைப்பு: மார்கழி

மார்கழி மாதம் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய படங்களை போட்டிக்கு அனுப்பலாம். மார்கழி என்றதும் மழைதான் பொதுவாக நினைவுக்கு வரும். வெள்ளமும் வரலாம். மேலும், பண்டிகைகள் பலவும் இம்மாதத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. கிறிஸ்தவர்களாயிருந்தால் நத்தார், பௌத்தராயிருந்தால் போதி தினம், இந்துவாயிருந்தால் பஞ்ச கணபதி, கோலங்கள், பஜனை, இசை நிகழ்ச்சிகள், யூதாயிருந்தால் ஒளித்திருவிழா என பல விழாக்கள் மார்கழியில் இடம் பெறுகின்றன. எனவே, படத்தைப் பார்த்ததும் மார்கழியை நினைவுபடுத்தக்கூடிய படங்களை அனுப்பி வையுங்கள். 

எடுத்துக்காட்டுக்கு சில படங்கள் இங்கே:

#1

#2

#3

வழமையான போட்டி விதிமுறைகள் இங்கே.


போட்டி அறிவிப்பு தாமதமாகியதால், இம்முறை படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி 25 டிசம்பர் 2015

Sunday, June 7, 2015

முக்கிய அறிவிப்பு:

ம்மாதப் போட்டிக்கான தலைப்பு என்னவெனப் பார்க்கும் முன் போட்டி விதிமுறைகளில்.., போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

பிகாஸா திடீரென மின்னஞ்சல் மூலமாக ஆல்பங்களுக்குப் படம் அனுப்பும் வசதியை நீக்கி விட்ட படியால் சென்ற மாதம் 15 தேதிக்கு மேல் பலரின் படங்கள் ஆல்பத்தில் தானாக அப்டேட் ஆகாமல் போனது. சிலர் இத்தகவலை பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும், அதன் பிறகு மற்றுமொரு மின்னஞ்சலுக்கு (CC) அனுப்பப்பட்டதில் இருந்து படங்கள் மீட்டெடுக்கப்பட்டு ஆல்பத்தில் சேர்க்கப்பட்டன.

இனி பிகாஸா மூலமாக நேரடியாகப் படங்கள் அப்டேட் ஆகமுடியாத சூழலில் ஃப்ளிக்கருக்கு மாறுகிறது PiT. ஆகையால் இனி படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: hall84eyes@photos.flickr.com
CC அனுப்ப வேண்டிய முகவரி: photos_in_tamil@yahoo.in
[இங்கும் கவனியுங்கள். cc முகவரி முன்னர் அனுப்பியது போலவே இருக்கிறதே என உங்கள் Contacts_ல் update செய்யாது இருந்து விடாதீர்கள். இது யாஹூ ஐடி. முன்னர் பயன்பாட்டில் இருந்தது ஜிமெயில்.]

விதிமுறைகள் பதிவிலும் இந்த மாற்றத்தை அப்டேட் செய்துள்ளோம். மற்றபடி நீங்கள் அனுப்பும் படத்தின் ஃபைல் பெயரும், மின்னஞ்சலின் சப்ஜெக்டும் வழக்கம் போல உங்கள் பெயரில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கவனக்குறைவாக பழைய முகவரிக்கு அனுப்பி விடாதீர்கள்.

2015 ஜூன் மாதப் போட்டி

Frame within a frame - சட்டத்துக்குள் சட்டம்

இதுதான் இம்மாதப் போட்டித் தலைப்பு. நாம் கட்டம் கட்டும் காட்சியின் ஆழத்தை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டவும், சொல்ல வருவதை அழுத்தமாகக் காட்டவும் இந்த உத்தி கையாளப் படுகிறது. கேமரா பார்வையுடன் இரசனையான கூட்டமைவு(composition)ம் சேர்ந்து பார்ப்பவரை ஈர்க்கும் இந்த வகைப் படங்கள்.

அதுமட்டுமின்றி கேமரா வழங்கும் வழமையான செவ்வக வடிவ சட்டத்திலிருந்து விலகி விதம் விதமாக சட்டமிடும் வாய்ப்பை நம்மைச் சுற்றியிருக்கும் பல விஷயங்கள் நமக்கு வழங்குகின்றன.

வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி, பைக் கண்ணாடி, வண்ண மூக்குக் கண்ணாடி, ஸ்மார்ட் ஃபோன் ஆகியவற்றில் சப்ஜெக்டின் பிம்பங்களை கொண்டு வருதலும் ஒரு உத்தி. பயணத்தின் போது இவ்வகைக் காட்சிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும். ஜன்னல் அல்லது நுழைவாயில் ஊடாகத் தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், மலைகள், மரங்களைப் படமாக்கலாம். பரந்த மரக்கிளைகளையே கூடச் சட்டமாக்கி விடலாம். உங்கள் கற்பனைக்கு வானம்தான் எல்லை!

எடுத்த படங்களிலிருந்து தேடி ஒரு சிலவற்றை மாதிரிக்காக இங்கே பகிர்ந்திருக்கிறேன். இதற்கென்றே நீங்கள் களத்தில் இறங்கும் போது சிந்தித்து அசத்தலான படங்களைத் தர முடியும்.

#1

#2


#3

#4

#5

#6

படங்கள் 1 to 6: ராமலக்ஷ்மி

படங்கள் 7 & 8: சர்வேசன்

#7

#8


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 ஜூன் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே.
***

ஜூன் 2015 போட்டி ஆல்பம் - ‘சட்டத்துக்குள் சட்டம்’ இங்கே!

Wednesday, November 5, 2014

வணக்கம் நண்பர்களே!

இம்மாதப் போட்டித் தலைப்பு: மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள்

ஊசி, ஆணி என மனிதன் உருவாக்கிய சிறு பொருள் முதல் சமையலறைப் பொருட்கள் உட்பட சுத்தியல், வாள் என வேலைத்தள பொருட்கள் ஆகிய பலவற்றை உள்ளடக்கி நீண்டு சென்று, இதன் எண்ணிக்கை கப்பல், விமானம் போன்ற பிரமாண்டமான பொருட்கள் வரை செல்கிறது. எனவே, பொருள் என்ற வரையறையினுள் உள்ளவற்றை நீங்கள் படமாக்கலாம்.

உதாரணத்திற்குச் சில படங்கள்:


Anton Cruz:









Ramalakshmi:





NITHI ANAND:


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: நவம்பர் 20, 2014.
வழமையான விதிமுறைகள்: இங்கே

Monday, November 26, 2012

எல்லாருக்கும் வணக்கம்.

முதல் சுற்றுக்குத் தேர்வான படங்கள் கீழே. எவ்வித வரிசையிலும் இல்லாமல்.


அரவிந்த்


அருண்
 



 பாபு


டிஜே


ஹரீஷ்
 

ஜெயச்சந்திரன்
 


கஜன்


கலையரசன்


 கண்தீபா


 ராஜசேகரன்


 சரவணகுமரன்


 சதீஷ் குமார்


 விஸ்வநாத்


 ஆண்டனி சதீஷ்


 நிமேஷ்

பதினைந்து பேருக்கும் வாழ்த்துகள்!

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

***

Monday, September 24, 2012


“சாலையோரக் குழந்தைகளை எடுத்தப் புகைப்படங்கள் அல்ல. சாலையோரக்  குழந்தைகளே புகைப்படக் கலையைக் கற்றுக் கொண்டு, தாங்கள் வாழும் சூழலையும், தங்களின் வாழ்க்கையையும் காட்சி மொழியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.”









செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட இக் கண்காட்சி இன்று நிறைவுறுகிறது. இடம் பெற்றிருக்கும் தொகுப்பான புகைப்படப் புத்தகமும் கண்காட்சிக்கு செல்கிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆர்வம் இருப்பவர்கள் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு கண்காட்சிக்கு சென்று இச்சிறுவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளித்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
***     

Wednesday, February 15, 2012

ரெட் ஃப்ரேம்ஸ் நடத்திய 'என் நகரின் காட்சிகள்'[Frames of My City] புகைப்படப்போட்டி 2011-ன் அறிவிப்பை சென்ற செப்டம்பர் மாதம் PiT-ல் பகிர்ந்து கொண்டிருந்தோம். இப்போது அதன் முடிவுகளை அறியவும், வென்ற அசத்தலான படங்களைக் காணவும் ஆவலாக இருப்பீர்கள்தானே?

வாங்க போய் பார்க்கலாம் இங்கே:

இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர்கள் : http://redframes.in/contest/contest-final-winner.aspx

வாராந்திரப் போட்டியில் பரிசைத் தட்டிச் சென்ற 7 பேர்கள் : http://redframes.in/contest/contest-winner.aspx

இவற்றையும் உள்ளடக்கிய டாப் 50 படங்களைப் பெரிய அளவில் நேரிலே கண்டு ரசிக்க ஆசையா? ஸ்டூடியோ கேலரி, 1 சாந்திரோடு, பெங்களூரில் பிப்ரவரி 18, 19 தேதிகளில் கண்காட்சி நடைபெற உள்ளது. வார இறுதிதானே. முடிந்தவர்கள் சென்று வாருங்கள்:)!

***

Thursday, December 1, 2011

இரட்டை. ஆனா ஒரே மாதிரியான ரெண்டு.

ட்வின்ஸ். ஆமா, ஒண்ணைப் போல ஒண்ணு.

இப்பப் புரிஞ்சிருக்குமே தலைப்பு? ‘உன்னைப் போல் ஒருவன்’:)!

மூணு வருஷம் முன்னே ‘ஜோடி’ன்னு ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். ரெண்டு வேற வேற விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலியாக் கை கோத்துக்கலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சுல வார்த்த மாதிரி இல்லேன்னாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ன்னு சொல்லும்படியா இருக்கணும்.

படத்தில் இரட்டையரே பிரதானமா இருக்கணும்.

ஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோட சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாம இயல்பான இரட்டையரா இருக்க வேண்டியதும் அவசியம்.

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

# 1 ராமலக்ஷ்மி


# 2 ராமலக்ஷ்மி


# 3 ராமலக்ஷ்மி


# 4 ராமலக்ஷ்மி


# 5

# 6 ஜீவ்ஸ்


# 7 சர்வேசன்


# 8 கருவாயன்


கோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்க ஆவலாய்க் காத்திருக்கிறோம்.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.

போட்டி விதிமுறைகள் இங்கே.

[பி.கு: ஒவ்வொரு மாதமும் உங்களில் சிலர் படங்களை மின்னஞ்சலில் சேமிப்பாகியிருக்கும் பழைய போட்டி ஐடிக்கே சமர்ப்பித்து வருகிறீர்கள். ஐடி மாற்றமாகிப் பலமாதங்கள் ஆகிவிட்டன. திருத்தம் செய்து கொள்ளுங்கள்.]
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff