Tuesday, February 26, 2008

இந்த மாத போட்டி ஆரம்பித்த போதே ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனம் தர முயல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் எழுதும் போதும் நிறைய விஷயங்களை திரும்பத்திரும்ப சொல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படாமல் இல்லை.அப்படி பரவலாக பல படங்களை பார்த்து சொல்லத்தோன்றிய சில பொதுவான விமர்சனங்கள் இதோ.

அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான டிஸ்கி: இந்த விமர்சனங்கள் பல நேயர்களின் விருப்பத்திற்கேற்ப பங்கேற்பாளர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வழங்கப்படுகிறது!! இதன் மூலம் யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.ஏதாவது விமர்சனம் தவறாக பட்டால் கோபித்துக்கொள்ள வேண்டாம்!! :-)

சரி ! இப்போ விமர்சனங்களுக்கு போலாமா??

தலைப்பு:
தலைப்பு வட்டம்னு வெச்சதால படத்துல எங்கேயாச்சும் வட்டம் இருந்தா போதும்னு நினைத்துக்கொள்ள வெண்டாம். படத்தை பார்த்தால் பார்ப்பவரின் மனதில் போட்டியின் தலைப்பு தோன்றினால் அதுவே தலைப்புக்கு பொருந்தும் படம்!! நிறைய நல்ல படங்கள் வரும்போது தலைப்போடு எந்த அளவுக்கு ஒத்துப்போகிறதோ அந்த அளவுக்கு தேர்ந்துடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்பதை மறக்க வேண்டாம்!! போட்டிகளில் படம் தேர்ந்தெடுக்கப்படுவதில் மிக முக்கியமான ஒரு criteria,relevance to topic!

படத்தின் சிறப்பு:
நாம் அன்றாடம் காணும் பொருட்களை அப்படியே படம் பிடித்து அனுப்பினால் அது பார்ப்பவரின் மனதில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.பொருட்களை சற்றே மேலே,கீழே,தூரம்,பக்கம் என்று பல்வேறு கோணங்களில் எடுக்க முயற்சி செய்து அந்த பொருளை சற்றே வித்தியாசமான கண்ணோட்டத்தில் படம் பிடிக்க முயலுங்கள். நூற்றுக்கணக்கான படங்கள் வரும் போது உங்கள் படம் பளிச்சென வித்தியாசமாக தெரிய வேண்டும் என்றால்,உங்கள் படத்தின் கோணம்,ஒளியமைப்பு ஆகிய எதிலாவது ஏதேனும் சிறப்பு இருப்பது அவசியம்.

காட்சியமைப்பு:
Rule of thirds,Leading lines மற்றும் இன்னபிற காட்சியமைப்பு உத்திகள் பற்றி இந்த பதிவில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம்.உங்கள் படத்தில் கருப்பொருள் தெளிவாக அடையாளம் தெரியுமாறு காட்சியில் பொருத்துவது உங்கள் படம் அழகாக தெரிவதற்கு இன்றியமையாதது.கருப்பொருளை நட்ட நடுவில் வைக்காமல் offcenter-ஆக படத்தில் நிறுத்துவது ஒரு அடிப்படையான காட்சியமைப்பு குறிப்பு.

கருப்பொருளை தனிப்படுத்துங்கள்:
உங்கள் படத்தில் கருப்பொருளை தனியாக தெளிவாக தெரியுமாறு செய்வது,திசை திருப்பங்கள் ஏதும் இல்லாமல் பார்வையாளர்கள் படத்தை விட்டு கண்ணை அகலவிடாமல் கட்டிப்போட்டு விடும். DOF,Contrast,colors இப்படி பல விஷயங்கள் மூலம் கருப்பொருள் காட்சியில் தனியாக தெரியுமாறு செய்யலாம்.அதுவுமில்லாமல் பின்னால்,பக்கத்தில் தேவை இல்லாத பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது,மற்றும் பின்னணியில் இருக்கும் காட்சி கருப்பொருளுக்கு complementing ஆக இருப்பது உங்கள் படம் சுவாரஸ்யமாக வழிவகுக்கும்.
போட்டிக்கு அனுப்பும் படங்களில் நேரம்/தேதி ஆகியவை இருந்தால் அந்த படம் ரொம்ப amateurish ஆக தெரியும்.

பிற்தயாரிப்பு:
பிற்தயாரிப்பு செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி பல இடுகைகள் இந்த பதிவில் பார்த்திருக்கிறோம்.காட்சியமைப்பு,contrast.black and white போன்ற சிறு சிறு வேலைகள் செய்வதன் மூலம் உங்கள் படத்தின் தரம் பல மடங்கு அதிகமாகும். படத்தில் border போட்டு உங்களின் கையொப்பத்தை கலையுணர்வுடன் பதித்து அனுப்பினால் அது அந்த படத்தை வெகு professional ஆக்கி விடும்.

படத்தின் pixel தரம்:
உங்கள் கண்ணோட்டம் காட்சியமைப்பு போன்றவை எவ்வளவு ஆழகாக இருந்தாலும் படம் சொர சொர வென்று பொலிவிழந்து காணப்பட்டால்,அந்த படத்தை யாருக்கும் பிடிக்காது.சரியான ஒளியமைப்பு,resolution setting,ISO இவையெலலாவற்றையும் விட ஒரு ஒழுங்கான கேமரா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி படம் பளிச்சென grainy ஆக இல்லாமல் பார்த்துக்கொண்டால் நலம்.

இப்பொழுது இந்த மாதம் வந்த படங்கள் ஒவ்வொன்றாக பார்ப்போமா?? :-)


இம்சை :
1.)குழந்தை கொள்ளை அழகு! கண்ணில் ஒளி படத்தின் சிறப்பை கூட்டுது!! படம் கொஞ்ச்ச்ச்சம் ஷேக் ஆகி இருக்கு!!மற்ற படங்களோடு ஒப்பிடும் பொழுது தலைப்போடு ஒத்து வராதது போன்ற உணர்வு.
2.) மிக சாதாரணமாக தோன்றும் படம்! ப்ளாஷ் போட்டதால் படத்தின் ஜீவன் குலைந்து விட்டதாக ஒரு உணர்வு.

ரமேஷ்
1.) அழகான வண்ணங்கள்,நல்ல காட்சியமைப்பு,Nice contrast.
2.)நல்ல கண்ணோட்டம் மற்றும் ஒளி அமைப்பு,ஆனாலும் சற்றே மங்கிப்போனது போன்ற தோற்றம் படத்தை சாதாரணமாக்கி விடுகிறது.


ஷோனா
1.)பளிச்சென்ற நிறங்கள்,சிறப்பான க்ளோஸ் அப் படம்,தலைப்போடு ஒத்துப்போவதில் குறைபாடு.
2.)நல்ல நிறங்கள்,சிறப்பான DOF ,நல்ல க்ளோஸ் அப் படம்,திரும்பவும் தலைப்போடு ஒத்துப்போவதில் குறைபாடு.படத்தில் கொஞ்சம் காண்ட்ராஸ்ட் கூட்டி,பிக்காஸாவில் darken செய்திருந்தால் பார்ப்பதற்கு இன்னும் நன்றாக இருக்கும்.

கேசவன்
1.) மிக அருமையான படம்,ஆனால் தலைப்புக்கு அவ்வளவாக பொருந்தவில்லை.

சின்ன அம்மிணி
1.)tight composition.சுத்தி கொஞ்சம் அதிகமாக இடம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நடு வெயிலில் எடுத்ததால் நிறங்கள் உயிரில்லாமல் ஒரேடியாக பளிச்சென்று இருக்கின்றன.
2.)திரும்பவும் ஒரேயடியாக நெருக்கமாக படம் அமைந்து விட்டது போன்ற உணர்வு.வட்டம் முழுவதுமாக இல்லை,சுற்றிலும் நிறைய distractions வேற.

மஞ்சு
1.)நிமிர்ந்து பார்த்து மேலிருக்கும் வட்டத்தை கவனித்ததை பாராட்டலாம்,Picasa-வில் warmify செய்து,பின் கொஞ்சம் darken செய்திருந்தால் நன்றாக இருக்கும். ஜன்னல்களினால் படத்தில் distraction.காட்சியமைப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
2.)கருப்பொருளை நட்ட நடுவே வைக்காமல் சற்றே off center-ஆக வைத்தால் படத்தில் சுவாரஸ்யம் கூடும்.முடிந்தால் ஜூம் செய்து தெரு விளக்கு மற்றும் பக்கத்தில் உள்ள கட்டிட விளக்குகள் ஆகிய distractions ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்,அல்லது crop செய்திருக்கலாம்.

சூரியாள்
1.) நல்ல subject selection.படத்தை straighten செய்து மற்றும் darken செய்திருந்தால் நன்றாக இருக்கும். வட்டம் என்பது நமது தலைப்பு என்பதால் காட்சியின் பெருன்பான்மையான பகுதி வட்டமாக அமையுமாறு படத்தை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
2.)ஏதோ கிராபிக்ஸ் செய்திருக்கிறார் போல் இருந்தது.

உண்மை
1.) தரமான இரவுக்காட்சி!! சக்கரத்தை இன்னும் கொஞ்சம் வலப்புறம் அமையுமாறு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.வலப்புறம் ஒட்டிக்கொண்டிருக்கும் Happy New year banner-ஐ காட்சியமைப்பில் தவிர்த்திருக்கலாம்,அல்லது crop செய்திருக்கலாம்.
2.)மிக அற்புதமான selective coloring. ஆனால் திரும்பவும் காட்சியமைப்பில் சற்றே குறைபாடு. கண் வலது பக்கம் பார்த்துக்கொண்டிருப்பதை போல உள்ளதால் வலது புறம் சற்றே அதிக இடம் விட்டிருக்க வேண்டும்.அல்லது கண் இடது ஓரத்தில் அமையுமாறு crop செய்திருக்கலாம்.என் கணினியில் இதை செய்து பார்த்தால் படம் பல மடங்கு அழகானது போல தோன்றியது.

துளசி டீச்சர்
1.)Nice perspective.ஆனால் பதிவில் உள்ள எல்லா படத்தையும் அதே கோணத்தில் எடுத்திருக்கிறார்.சற்றே காட்சியமைப்பை மாற்றி முயன்று பார்க்கலாம்.படத்தில் தேதி இட்ட புகைப்படங்கள் போட்டியில் பார்க்கும் போது மிக amateurish-ஆக தோன்றிவிடுகிறது.
2.)முதல் படம் போன்றே ஒரே மாதிரியான காட்சியமைப்பு.ஃப்ளாஷினால் படத்தில் செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டு விடுகிறது.தரையின் கார்பெட் வண்ணம் வேறு அவ்வளவாக சோபிக்க வில்லை


நியோ
1.)Contrast அதிகமாக்கி சூரியனை சுத்தி உள்ள மற்ற விஷயங்களை கொஞ்சம் இருட்டாகி இருந்தால் அழகாகி இருந்திருக்கும் வட்டமும் highlight ஆகி இருக்கும்.
2.)subject என்ன என்பதில் சற்றே குழப்பம்.வட்டத்தை எடுத்து காட்ட வேண்டும் என்றால் சாலையை முழுமையாக காட்டியிருக்க வேண்டும்.மேலும் குமிழ் போன்ற மேலெழும்பிய தரை பரப்பு மிகவும் ஓரமாகிப்போணாறபோன்ற உணர்வு.Circle is not clearly portrayed in this picture.

லக்ஷ்மணராஜா:
1.)நல்ல creative-ஆன படம்!! ஆனாலும் ஒரே dark and gloomy effect ஆகிபோனாற்போன்ற உணர்வு
2.)Interesting perspective,ஆனா அவ்வளவா தலைப்போடு பொருந்தாதது போன்ற உணர்வு.

தமிழ் பிரியன்
1.)படத்தில் பல்வேறு வட்டங்கள்.கவனம் முழுமையாக செலுத்த ஒரு தெளிவான கருப்பொருள் இல்லாத்தால் படத்தில் சிறப்பாக எதுவும் தெரியவில்லை.
2.) இந்த படமும் மிக சாதாரணமாக தோன்றும் படம்,சற்றே வித்தியாசமான பொருள் ஆல்லது வித்தியாசமான கோணம் ஏதாவது பயன்படுத்தியிருக்கலாம்.


முரளி
நல்ல கேமரா ஒன்னு வாங்குங்க அண்ணாச்சி!! :-)

அழகிய தமிழ்க்கடவுள்
1.)வலது புறம் குடிசை,இடது புறம் ஒரு ஆள் என்று படத்தை கவனம் சிதறுகிறது.தேர்ந்தெடுத்த கருப்பொருளும் அவ்வளவாக சுவாரஸ்யம் கூட்ட வில்லை.
2.)நல்ல composition,ஆனால் படம் கொஞ்சம் நெருக்கமாகி விட்டது போன்ற உணர்வு.இதை விட ஐந்தாவது படம் பார்க்க நன்றாக உள்ளது.

கைலாஷி
1.)மிக சாதாரணமான கோணம்,படத்தில் சிறப்பாக எதுவும் பளிச்சிட மாட்டேன் என்கிறது.
2.)திரும்பவும் மிக சாதாரணமான கோணம்.சிடியில் உங்களது மற்றும் கேமராவின் பிரதிபளிப்பால் கவனம் சிதறுகிறது.படத்தில் clarity-உம் கம்மி.

சூர்யா
1.) படம் மிகவும் grainy-ஆக உள்ளத்,வண்ணங்களும் அவ்வளவாக பளிச்ச்சிடவில்லை.வட்டம்(?!) ரொம்ப சின்னதா இருக்கே அண்ணாச்சி.
2.)முதல் படம் போலவே இந்த படமும் பிக்சல் தரம் சரியில்லை.கருப்பொருள்,கோணம் கூட சுவாரஸ்யம் கூட்டுவதாக இல்லை.

கார்த்திகேயன் குருசாமி
1.) ஆற்புதமான slow shutter speed படம்.முதல் வளையத்தின் நடுவே ஏதொ சிக்கிக்கொண்டிருப்பது போல உள்ளதே? என்னது அது? :-) ஆனா படம் கொஞ்சம் மொட்டையா இருக்கறா மாதிரி உணர்வு,ஏதோ reference point இல்லாம வெறுமையா இருக்கா மாதிரி தோணுது.
2.)வித்தியாசமான கண்ணோட்டம் மற்றும் ஒளியமைப்பு.வட்டம் அவ்வளவாக பளிச்சிடவில்லை.

நானானி
1.)சுவாரஸ்யமான கருப்பொருள்,ஆனால் மிக சாதாரணமான கோணம்,சற்றே வித்தியாசமாக எடுக்க முயற்சித்திருக்கலாம்.போட்டிக்கு படம் எடுக்கும்போது படத்தில் தேதி வராத மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.
2.)படம் dull-ஆக இருப்பது போன்ற உணர்வு.ப்ளாஷ் பிரதிபளிப்பு படத்தின் அழகை இன்னும் குறைத்து விடுகின்றன.


ரிஷான் ஷெரீஃப்
1.)பெரிய படமாக இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.அடுத்த முறை படங்கள் பெரியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.very tight composition,சற்றே வித்தியாசமான கோணத்தில் எடுக்க முயற்சி செய்திருக்கலாம்.
2.)subject என்ன என்றே தெளிவாக இல்லை.

Peevee
1.)நல்ல வண்ணங்கள மற்றும் contrast! குழுமியிருக்கும் பல சலசலப்புகளுக்கு நடுவிலும் முதன்மையாக பளிச்சென தெரியும் வட்டங்கள்,நல்ல perspective மற்றும் subject selectionஆனால் வட்டம் என்ற தலைப்புக்கு ஏற்றார்போல் படத்தை சற்றே crop செய்து distractions-ஐ விலக்கியிருக்கலாம்.

வீரசுந்தர்
1.)அவ்வளவாக தனித்தனமை இல்லாமல் சாதாரணமாக தோன்றும் படம்.மிக சாதாரணமான கோணம்,மற்றும் காட்சியமைப்பினால் எதுவும் படம் பெரிதாக கவராமல் சாதாரணமாகி போய்விடுகிறது.

நாதஸ்
1.)Neat!! நீர்த்துளிகளை நீங்கள் பொறுமையாக இடம் விட்டு பொருத்தியிருப்பது நீங்கள் ஒரு நல்ல படம் உருவாக்க எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறீர்கள் என்று காட்டுகிறது.இவ்வளவு செய்து விட்டு படத்தை அரை வட்டமாக எடுத்துவிட்டீர்களே.
2.)ரொம்ப நல்ல மெக்ரோ ஷாட்.Matrix படத்துல கணிணி திரையில் எண்கள் விழர காட்சி ஞாபகத்துக்கு வருது.அற்புதமாக படமாக்கப்பட்ட படம்.

பிரபாகரன்
1.)நல்ல படம் மற்றும் காட்சியமைப்பு,ஆனால் ஓவர் பிற்தயாரிப்பு செய்ததாலோ என்னவோ படம் செயற்கையாக தெரிகிறது.(படத்தை அதிக்கபடியா sharpen/contrast adjust பண்ணிட்டீங்களோ??)
2.)சூப்பர் silhoutte படம்!! beautiful colors and tones.பையனை விட சூரியன் கொஞ்சம் கீழே மற்றும் சற்று தள்ளி வந்திருக்கலாம்,அப்படி இல்லாவிட்டாலும் இது அற்புதமான படம்.


செந்தில்
1.)நல்ல காட்சியமைப்பு.வலது ஓர விளக்குகள் nicely complementing.இடது புறம் சற்றே வெட்டி விட்டால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
2.) இலைகள் நன்றாக பரந்து இருக்கின்றன படத்தில்,ஆனால் படத்தில் பார்த்தால் ஒரு இயற்கை காட்சி போல தோன்ற வில்லை.மேலிருக்கும் வெள்ளை தூணை வெட்டி விட்டிருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும்.


முத்துலெட்சுமி
1.) நல்ல ஒளியமைப்பு,காட்சியமைப்பு மற்றும் DOF.Bottom left மூலையில் இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் பொருளின் orientation-ஓட ஒத்து போயிருக்கும்,ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு.
2.)neat capture!! மேலே கொஞ்சம் அதிகமாக இடம் விட்டிருக்கலாம்,படம் சற்றே சின்னதாக/நெருக்கமாகிப்போனது போன்ற உணர்வு.


இல்லத்தரசி
1.) குமிழ் நட்ட நடுவில் இருப்பதை விட சற்றே தள்ளி இருந்தால் நன்றாக இருக்கும்.பின்னால் இருக்கும் வானத்தொடு குமிழ் blend ஆகி விடுகிறது(அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்கிறீர்களா?? உண்மைதான்! :-))
2.) நல்ல சிந்தனை.அருமையான காட்சியமைப்பு மற்றும் DOF.

K4K
1.) நிறைய பேர் யோசித்து வைத்த பொருள்.நல்ல perspective மற்றும் குறிப்பாக ஒரு கருப்பொருள் இல்லாத்ததால் சற்றே focus is wavering.குறிப்பாக ஏதாவது புள்ளியின் மேல் focus-ஐ நிறுத்தியிருக்கலாம்.
2.) சி டி யை சில பேர் எடுத்திருந்தாலும் ,இது வித்தியாசமான கண்ணோட்டம்.நல்ல காட்சியமைப்பும் கூட.

எஸ்.குமரன்
1.) Transparent மூடி மற்றும் பஞ்சுக்குச்சிகள்,இதில் வட்டம் சரியாக வெளிப்படவில்லை.ப்ளாஷ் வேறு படத்தை மிக சாதாரணமாக்கிவிடுகிறது.
2.) மிக சாதாரணமாக தோன்றும் கருப்பொருள் மற்றும் காட்சியமைப்பு

சத்தியா
1.)மிக நல்ல கண்ணோட்டம் மற்றும் DOF.வெங்காயம் இடது ஓரம் வந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
2.)வட்டம் முழுமையாக படம் பிடித்திருக்கலாம்,ஆனாலும் மிக நல்ல கண்ணோட்டம் மற்றும் DOF.

தினேஷ்
1.)இரண்டும் ஒரே மாதிரியான படங்கள்.நல்ல படம் ,நல்ல perspective,ஆனால் வட்டம் என்ற தலைப்பு அவ்வளவாக ஒத்துவரவில்லை என்று தோன்றியது.

தர்மா
1.)பின்னாடி உள்ள செய்தித்தாள் படத்தை வெகுவாக பாதிக்கிறது,காசுகளும் சற்றே அழுக்காக இருக்கிறது.படம் dull-ஆக இருப்பதற்கு contrast adjustment செய்து சரி செய்திருக்கலாம்.
2.)இதை போன்று புத்தகத்தில் மோதிரத்தை வைத்து இதயம் போன்ற நிழல் வர வைப்பதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்,ஆனால் அதை முயற்சி செய்திருந்தால் வட்டத்தில் இருந்து கவனம் திசை திரும்பி போயிருக்கும்,அதனால் நீங்கள் முயற்சி செய்யாமல் இருந்ததே நல்லது.நல்ல படம் பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வாசி
1.)டீ போட்டோவுக்கு lens flare-a???அதுவும் சுத்தி சுத்தி எல்லா இடத்திலையும்?? இந்த படத்துக்கு இந்த effect பொருந்தல.நீங்க இந்த அதிகப்படியான பிற்தயாரிப்பு எடுத்துகிட்ட சிரமத்தை,வித்தியாசமான கோணத்துல எடுக்க செலவிட்டிருக்கலாம்.
2.)திரும்பவும் டம்ப்ளரில் பானம் எடுப்பதை விட வேற ஏதாவது எடுக்க முயற்சித்திருக்கலாம். சுத்தி கொஞ்சம் அதிகமா இடம் விட்டிருக்கலாம்,படம் ரொம்ப நெருக்கமா இருக்கு,குறிப்பா கீழ்ப்பகுதியில்.


ஜெகதீசன்
1.)படத்தில் எந்த பகுதியும் தெளிவாக இல்லாமல் blurred-ஆக ஆக்கப்பட்டிருக்கிறது.பிற்தயாரிப்பு மூலம் அப்படி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது,அதுவுமில்லாமல் படத்தில் soft focus உத்தியின் உபயோகிப்பு படத்திற்கு பொருந்துவதாக தோன்றவில்லை.
2.)முதல் படம் போன்றே இரண்டாம் படம்.வேறு ஏதாவது படம் பிடிக்க முயற்சித்திருக்கலாம்.முதல் படத்திற்கான கருத்துக்கள் இந்த படத்துக்கும் பொருந்தும். பழத்தின் நிழல் முழுமையாக காட்சியில் இருப்பது நன்றாக இருக்கின்றது.


ஒப்பாரி
1.)நல்ல கற்பனை ஆனால் முழுவட்டமாக படம் இல்லாமல் போனது வருத்தம். நல்ல சூரிய ஓளி சுரீர் என்று அடிக்கும் நேரத்தில் படம் எடுத்திருப்பதால் படம் ரொம்ப அடிக்கறா மாதிரி வந்திருக்கு. ஏதாவது பிற்தயாரிப்பு செய்து ஒளியின் வீரியத்தை சற்றே குறைத்திருக்கலாம்.
2.)வித்தியாசமான சிந்தனை தான் என்றாலும் மிகவும் சாதாரணமாக தோன்றும் படம்.அவ்வளவாக வசீகரிக்கவில்லை.

சுடரொளி
1.)அற்புதமான படம்!! பின்னால் மங்கிப்போய் இருக்கும் பொருட்கள்,மற்றும் பிரதிபளிப்பு ஆகியவை படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.படத்தில் சற்றே அதிகமாக வெற்றிடம் இருப்பது போன்ற உணர்வு தவிர்க்கமுடியவில்லை.கொஞ்சம் tight cropping செய்திருக்கலாம்.குறிப்பாக வலது பக்கம் வெற்றிடத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று ஒரு உணர்வு!

கோகிலவாணி கார்த்திகேயன்
1.) படம் இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். படம் மங்கிப்போய் ஒளி குறைந்தும் இருப்பதால் சிறப்பாக தெரியவில்லை.
2.)படம் overexposed ஆகியுள்ளது போன்ற உணர்வு,படமும் தொளிவாக இல்லை! வெளிப்புற வட்டத்தை முழுமையாக படம் பிடித்திருக்கலாம்!! இது போன்று சூரியனை நேரிடையாக படம் எடுத்தால் கேமராவும்,கண்ணும் கெட்டுப்போக வாய்ப்புண்டு,பாத்து.. :-)

ஹரண்
1.) மிக நல்ல fireworks படம்.வட்டம் என்ற தலைப்புக்கு அவ்வளவாக பொருந்தவில்லை. காட்சியமைப்பிலும் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்,படத்தில் நிறைய distractions.
2.)நல்ல காட்சியமைப்பு மற்றும் கோணம்.

இரண்டாம் சொக்கன
1.) மிகச்சாதாரணமாக தோன்றும் படம்.கோணம்,எடுத்துக்கொண்ட கருப்பொருள்,ஒளியமைப்பு எதிலும் பெரிதாக ஒன்றும் சிறப்பில்லாத்து ஏமாற்றம்.
2.)படம் சற்றே ஷேக்காகி இருக்கிறது,அதனால் படத்தின் தெளிவில் குறைவு.சுற்றி கொஞ்சம் அதிகமாகவே காய்ந்த இலைகள் இருப்பது போன்ற உணர்வு.மேலும் கீழும் சற்றே crop செய்திருக்கலாம்.கொஞ்சம் பிக்காஸாவில் darken செய்திருந்தால் படங்களின் வண்ணம் இன்னும் கொஞ்சம் பளிச்சிட்டிருக்கும். இலைகள் எதுவும் வட்டமாக இருப்பது போல் தெரியவில்லை.

நித்யா பாலாஜி
1.) அழகாமன ஒளியமைப்பு,சற்றே இருட்டானது போல் இருந்தாலும் படம் பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது.வட்டம் முழுமையாக இல்லாதது ஏமாற்றம்.
2.)கொஞ்சம் குனிந்து கடிகாரம் கேமராவை பார்ப்பது போல கம்போஸ் செய்திருக்கலாம்.sepia ஆக்கியிருப்பது நன்று,ஆனால் சற்றே பிக்காசாவில் darken செய்து பின் sharpen செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பிரபாகர் சாமியப்பன்
1.)படம் அவ்வளவாக தெளிவாக இல்லை,கோணமும் மிகச்சாதாரணம். பொருளை சுற்றி சற்றே இடம் விட்டிருக்கலாம்,கொஞ்சமாவது context set ஆகியிருக்கும்.
2.) மஞ்சள் கருவை சுற்றியிருக்கும் திரவத்தை முழுமையாக காட்சியில் பிடித்திருக்கலாம். படத்தில் symmetry-உம் பார்த்து crop செய்திருக்கலாம்.ப்ளாஷினால் படத்தின் ஒளியமைப்பும் அவ்வளவாக திருப்தியளிக்கவில்லை.
ப்ரியா
1.) ரொம்ப சாதாரணமான படம்,கோணத்திலோ காட்சியமைப்பிலோ,ஒளியிலோ ஏதாவது வித்தியாசமாக இருந்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும்.
2.)முதல் படம் போன்றே,படத்தில் வசீகரிக்கும் அளவுக்கு பெரிதாக எதுவும் இல்லாதது ஏமாற்றம்.

இசை
1.)கேமராவின் focus நீர்க்குமிழி மேலே இல்லாமல் இலை மேலே இருக்கிறது.நீர்க்குமிழி நட்ட நடுவில் இல்லாமல் சற்று தள்ளி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்,சற்றே பிற்தயாரிப்பு செய்து வண்ணம,contrast ஆகியவற்றை கூட்டியிருக்கலாம்.பிக்காசாவில் sharpen,darken,warmify ஆகியவற்றை சரியான விகிதத்தில் பயன்படுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாகி இருக்கும்.
2.)படம் மிக plain ஆக உள்ளது. இந்த மாதிரி படங்களில் மேகங்கள் போன்ற reference points வைத்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும்.

அமான் அப்துல்லா
1.)முந்தைய வாசகருக்கு சொன்னது போல படம் ரொம்ப plain,படத்தில் ஒரு reference point இருந்தால் படத்தின் சிறப்பு கூடி விடும்.
2.)படம் கொஞ்ச்ச்ச்ச்ச்ச்சம் ஷேக்,அதனால் தெளிவில் குறைவு. சுற்றி இன்னும் கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது,சக்கரத்தை கொஞ்சம் ஓரம் கட்டுவது போல இடது புறம் வெற்றிடம் இருந்தால் காம்போசிஷன் நன்றாக வந்திருக்கும்.சக்கரத்தின் அச்சாணி rule of thirds -இன் படி அமையும் படி படத்தை crop செய்திருக்கலாம்.வித்தியசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

லொடுக்கு
1.)மோதிரத்தின் orientation-ஐ பார்த்தால் அதை நட்ட நடுவில் வைப்பதை விட offcenter-ஆக வைத்திருக்கலாம்.குறிப்பாக வலது கீழ் பக்கம் தள்ளி விட்டால் நன்றாக இருக்கும்.படத்தில நல்ல DOF.மோதிரத்தின் நிறத்திற்கு இந்த background அவ்வளவாக ஒத்து வராதது போல தோன்றுகிறது. வெள்ளை பேப்பர் ஏதாவது வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
2.)நல்ல perspective மற்றும் DOF.ஆனால் வலது புறம் இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருக்க வேண்டும்,அது இல்லாத்தால் படம் இறுக்கமாக இருப்பது போல தோன்றுகிறது.

நட்டு
1.) நல்ல படம்.இன்னும் contrast அதிகமாக்கி படத்தை sharpen செய்திருந்தால் படம் நன்றாக தெரியும்.நல்ல படமாக இருந்தாலும் இப்பொழுது மிகவும் dull-ஆக இருப்பதால் அவ்வளவாக சுவாரஸ்யம் கூட்டவில்லை.
2.)நல்ல படம்,ஆனால் மிக மிக நெருக்கமாக crop செய்யப்பட்டிருக்கிறது,சுற்றி இடம் விட்டிருக்க வேண்டும்.

Night Rams
1.)Contrast சற்று அதிகமாக்கியிருக்கலாம்.Subject நட்ட நடுவில் இருப்பதால் படத்தில் பெரிதாக சுவாரஸ்யம் தோன்றவில்லை.
2.)இந்த இடம் mackinac island எனும் இடத்தில் தானே உள்ளது.பல படங்களுக்கு சொன்ன கருத்து தான் இங்கேயும்! உங்கள் கருப்பொருளை நட்டநடுவில் வைத்தால் there is nothing in the picture to arouse interest.

கார்த்திகேயன் சண்முகம்
1.)Neat!! நிழலையும் நீங்கள் முழுமையாக காட்சியில் பிடித்தது படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.மூடி மேல் இருக்கும் கூடுதல் ப்ளாஷ் ஒளி இந்த படத்திற்கு பொருந்துகிறது.
2.) நல்ல படம்!! சற்றே மேலிருந்து, கீழிருந்து என்று கோணம் மாற்றி எடுக்க முயற்சித்திருக்கலாம்.நிழலை வெட்டாமல் விட்டிருக்கலாம்.

மோகன்குமார்
1.)சாதாரணமாக தோன்றும் படம்,ஏதாவது சிறப்பம்சம் இருந்தால் பல படங்கள் இருக்கும் ஒரு போட்டியில் உங்கள் படம் தனித்து நிற்கும்.
2.)மேகங்களுடன் எடுத்திருப்பதால் படத்தில் சுவாரஸ்யம் கூடுகிறது!! ஆனாலும் சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டியிருந்தால் படம் பல மடங்கு அழகாகி இருக்கும்.கருப்பு வெள்ளை ஆக்கியதால் பார்க்க சந்திரன் போல படம் உள்ளது.சூரியனின் சக்தி மற்றும் வீரியத்தை காட்ட வேண்டும் என்றால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
உங்கள் நிழவு படம் மற்றும் காஸ் அடுப்பு படம் அருமை

இ.கா.வள்ளி
1.)தண்ணிரில் ஒளியின் பிரதிபளிப்பு மிக சுரீரென்று பளிச்சிடுவதால் அதனால் படம் அடிக்கிறார்போல் ஆகிவிடுகிறது.தண்ணீரின் இருண்ட வண்ணம் இலையின் கருப்பு வண்ணத்தோடு சேர்ந்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யமில்லாமல் ஆக்கி விடுகின்றன.
2.)மிக் சாதாரணமான கண்ணொட்டம்.நிழல் சற்றே செட்டுப்பட்டு இருந்தாலும் அதை முழுமையாக படம் பிடிக்க முயற்சித்திருப்பது நல்லது.பின்னால் இருக்கும் நிழல் பகுதி படத்தை ஒரு வித அரை குறை ஒளி அமைப்போடு படத்தின் தரத்தை குறைத்து விடுகிறது.

கோமா
1.)வித்தியாசமான சிந்தனை,சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டி இருக்கலாம்!! மாற்றும் கருப்பொருள் நட்ட நடுவில் இருப்பதற்கு பதிலாக சற்றே தள்ளி இருந்தால் காட்சியமைப்பு மேம்படும்.
2.)நல்ல கண்ணோட்டம்! வானத்தின் நீலம் இன்னும் கொஞ்சம் நீலமாக இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும்! பிற்தயாரிப்பு செய்து அதை சரி செய்ய முயற்சித்திருக்கலாம்.வட்டத்தை முழுமையாக எடுத்திருக்கலாம்,சுற்றி எப்படி இருந்தது என்று தெரியவில்லை,அதனால் எடுக்க முடியாத படி வட்டத்தை சுற்றி ஏதாவது இருந்திருக்கலாம் என்று புரிகிறது.

டி.ஜே
1.)படத்துல வட்டத்தை பிரதானப்படுத்தி எதுவும் இல்லாதது ஏமாற்றம்.
2.)உங்கள் கலைக்கண்ணோட்டம் நீங்கள் போகும் இடம் எல்லாம் உங்களை பின் தொடர்ந்து வருவது கண்டு மகிழ்ச்சி!படத்தில் அவ்வலவாக தெளிவில்லை.கீழ்ப்பகுதி பிற்தயாரிப்பு மூலம் மங்கலாக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.Toliet paper மேல் கவனம் நம் கவனம் செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியிருந்தால் ,flush tank மேலுள்ள குழிழ் அந்த கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது.

நக்கீரன்
1.)மிக நல்ல Framing! படல் சற்றே grainy ஆகிவிட்டது படத்தின் தரத்தை குறைத்து விடுகிறது,ஆனால் நல்ல கலைத்துவம்,கண்ணோட்டம்,காட்சியமைப்பு நிறம்பிய படம்!
2.)திரும்பவும் நல்ல framing!ஆனால் முதல் படம் அளவுக்கு இல்லை. மரத்தை விட்டு சூரியனை சற்றே தள்ளி பொருத்தியிருக்கலாம்!

குட்டிபாலு
1.)மிக நல்ல ஒளியமைப்பு ,காட்சியமைப்பு மற்றும் கண்ணோட்டம்!!Neat
2.) முதல் படம் அளவுக்கு mind blowing-ஆக இல்லாவிட்டாலும் திரும்பவும் நல்ல காட்சியமைப்பு!

குசும்பன்
1.) நல்ல தெளிவான படம்.வெள்ளைக்கரு முழுமையாக படத்தில் பிடித்திருப்பது நன்று. மிக அதிகமாகவும் இல்லாமல் நெருக்கமாகவும் இல்லாமல் சரியான அளவு காட்சியமைப்பு!!Neat crop!
2.)படம் ரொம்ப அகலமாகி போய் விட்டது போன்ற உணர்வு.Background-ஐ விட்டு foreground தனித்து நிற்காததால் படத்தின் தெளிவு குறைந்து கருப்பொருளின் மேல் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

ஆதி
1.) படம் சற்றே கோணல்,பிக்காஸாவில் straighten செய்திருக்கலாம். dials-ஐ சுற்றி முழுமையாக இருட்டாகவும் இல்லாமல் இருப்பது படத்தில் ஏதோ உருத்துவது போன்ற மனநிலையை கொடுத்து விடுகிறது,மற்றபடி காட்சியமைப்பில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லாதது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.
2.)மிக சாதாரணமாக தோன்றும் படம்! படத்தில் பார்வையாளரை பெரிதாக ஈர்ப்பது போன்று எதுவும் இல்லாதது ஏமாற்றம்.

சஞ்சய்
1.)படம் ரொம்பவே நீட்டமாகி போய்விட்டது,படத்தில் தெளிவும் குறைவு!!சற்றே பிற்தயாரிப்பு செய்து contrast கூட்டியிருக்கலாம்.
2.)படத்தில் தெளிவில்லை.மேற்புறம் பிற்தயாரிப்பு செய்து இருட்டாக்கியிருப்பது போல இருக்கிறது.அது படத்திற்கு பொருந்தாதது போன்ற உணர்வு,மற்றும் அதனால் படத்தில் வட்டம் பளிச்சிடவில்லை என்றே தோன்றுகிறது.

நந்து f/o நிலா
1.)சாதாரண வளையலையும் அழகான கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறீர்கள்.நல்ல காட்சியமைப்பு!!பின்னணி மற்றும் படத்தின் தெளிவில் குறைபாடு.
2.) நல்ல ஒளியமைப்பு,காட்சியமைப்பு மற்றும் கண்ணோட்டம்.

ஜேகே
1.) ஒளி மங்கிப்போனாற்போல் இருப்பது படத்துக்கு மைனஸ். உங்கள் கருப்பொருளின் பின்னால் ஏதேதோ சாமான்கள் இருப்பது திசை திருப்புவதாக இருக்கின்றன.கருப்பொருளும் அவ்வளவாக சுவாரஸ்யமூட்டுவதாக இல்லை! சற்றே குனிந்து எடுத்திருந்தால் காட்சியமைப்பு மேம்பட்டிருக்கும்.கருப்பொருளை நட்ட நடுவில் வைக்காமல் சற்றே தள்ளி அமையுமாறு காட்சியமைத்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும்.
2.)சிடியை துடைத்து சற்றே பளபளப்பாக்கியிருக்கலாம்.மிக சாதாரணமான காட்சியமைப்பு,சற்றே வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கலாம்.ப்ளாஷ் ஒளி படத்தை ஜீவனில்லாமல் ஆக்கி விடுகிறது.

ஷிவ்
1.)நல்ல கண்ணோட்டம். சற்றே சாதாரணமான காட்சியமைப்பு. கொஞ்சம் பிற்தயாரிப்பு செய்து contrast அதிகமாக்கியிருக்கலாம்.==========இளவஞ்சி

-----------

இம்சை,உங்களோட இது ஒரு இனிய இம்சைங்க... வட்டம் போடச்சொன்னா பூகோள உருண்டை கணக்கா பாப்பாவோட மொட்டய போட்டிருக்கீங்க! வீட்டுக்குள்ளாக இல்லாம வெளில வைச்சி பேக்கிரவுண்டு ப்ளைனா க்ளிக்கியிருந்தீங்கன்னா சிவாஜி கணக்கா தூக்கியிருக்கும். போட்டிக்கெல்லாம் எதுக்கு? பாப்பா முன்மொட்டைல இந்த மொட்டை மாமாவோட ஒரு உம்மா! :)பூக்களும் பூக்களனும் அருமையான சப்ஜெக்ட்டுதான் . ஆனால் இந்த இரண்டின் சிறப்புகள் எதுவுமே சிறப்பாக வெளிப்படவில்லை.

பார்க்கற பொருளை பார்க்கறமாதிரியே எடுத்தா சிறப்பா வருமா? அடுத்தமுறை ஆங்கிளை மாத்தி யோசிங்கப்பு.ரமேஷ்,அருமையா வந்திருக்கு. சிகப்புக்குள்ள ஆரஞ்சுக்குள்ள மஞ்சளுக்குள்ள வெள்ளை வட்டங்கள்!!! வானம் முழுதும் கருமையடைந்திருப்பது ஒரு குறையோ? சூரியனுக்கே நேருக்கு நேர் போட்டிருக்கீங்க! UV ஃபில்டர் போட்டிங்களா? இல்லாமல் இப்படி அடிக்கடி எடுத்தா சென்சாரு பொத்துக்கும்.இதுவும் அருமை. கருப்பு வெள்ளை படம் தானே? சிங்கத்தலைய ஏனுங்க மறைச்சு எடுத்தீங்க?ஷோனா,முதல் படத்தில் சொல்வதற்கு எதுவும் இல்லை. வட்டம் போட்டிக்குள் வரக்கூடுமா?!இரண்டாவது அருமை. வட்டம் போட்டிக்கென ஃபோக்கஸை மீனின் கண் மீது வைத்திருந்தீர்கள் எனில் இன்னும் அருமையாக வந்திருக்கும்.கேசவன்,அருமையான மனம் மயக்கும் சாலை. அவிங்கவிங்க அவிங்கவிங்க ஆளைக்கூட்டிக்கிட்டு கையக் கோர்த்துக்கிட்டு தோளோடு தோள் உரசிக்கிட்டு நடந்துக்கினே இருக்கலாம் போல அருமையான இடம். அதுவும் நடந்து ஓஞ்சதும் வளைவுல ஒரு பெஞ்ச்சு போட்டு மசாலா பொரி ஒரே ஒரு பாக்கெட்டு வாங்கிட்டு மாறி மாறி துன்னுக்கிட்டே இருக்க அட்டகாசமா இடம்! ஆனா வட்டம் எங்கங்க?சின்ன அம்மிணி,பூக்கள், பூக்கள், பூக்கள்!! நின்ன எடத்துல இருந்து இல்லாம இடம் மாறி பார்த்திருந்தா இன்னும் நல்ல இருந்திருக்கும் தானே! வட்ட வட்ட பூக்களை தூரத்துல இருந்து நெட்டுக் குத்தலா பாத்திருந்தா அட்டகாசமா வந்திருக்கும். அதுக்காக ஹெலிகாப்டரு வைச்சாடா படம் புடிக்க முடியும்னு அடிக்க வராதீக! :)ரெண்டாவது படத்துல வலது ஓரம் மேல்நாட்டு அம்மணீயை பாதியாக வெட்டியதை வண்மையாக கண்டிக்கிறேன்! ஹிஹி....


மஞ்சு,படம் எடுத்த ஆங்கிள்ல மிஸ் பண்ணிட்டீங்க... படத்தை நேர் செய்யவும் மறந்துட்டீங்க.ரெண்டாவது படம் இருட்டுல எடுத்திருந்தாலும் பளிச்சுன்னு இருக்கு. வேண்டாத பகுதிகளை நீக்கி க்ராப் செய்து பலூனை வலப்பக்கம் வைச்சிருந்தீங்கன்னா நல்லா வந்திருக்கும்சூரியாள்,முட்டை முக்கண்ணன் திகிலைக்கெளப்பராரு. படத்தை நேர் செய்ய மறந்துட்டீங்களா?ரெண்டாவது படம் அருமை. கிராபிக்ஸா?உண்மை,லண்டன் கண்ணை வலப்பக்கமா வைத்திருந்தீர்கள் என்றால் கவனம் முழுதும் அதன் மீதானதாக இருந்திருக்கும். இரவில் எடுத்ததுதான் என்றாலும் இன்னும் ஷார்ப்பாக எடுத்திருக்கலாமோ? ISO, EV எவ்வளவு வைச்சீங்க?அருமையான வடிவமைப்பு. கண்களின் நீல வண்ண பிரதிபலிப்பும் கண்மணிப்பாப்பாவின் மேற்பரப்பின் பிரதிபலிப்பு இல்லாமையும் இயல்பானதொரு படமில்லையோ என சந்தேகப்படவைக்கிறது.துளசியக்கா,

படம் இரண்டுமே வித்தியாசமான கோணம்தான். இரண்டாவது படத்துக்கு ஏன் ப்ளாஷ் போட்டீங்க? கூடைக்குள்ளும் சேர் மேலயும் இருந்த பூனைக்குட்டிங்களை என்னா செஞ்சீங்க? அடுத்தமுறை தேதி காட்டற ஆப்ஷனை தூக்கிருங்க.நியோ,மஞ்சள் நிறம் நல்லா வந்திருக்கு. பெரிய படத்துல இருந்து க்ராப் செஞ்சிருப்பீங்க போல. ஆதவனை கொஞ்சம் ஓரமா நகர்த்தியிருக்கலாமோ?இருபக்க சாலைகளும் முழுமையாக வந்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கும். "படமெடுக்க இதுக்கும் மேல பின்னாடி போயிருந்தா பனிச்சரிவுல உருண்டு நானே முழுமையா கிடைக்காம போயிருப்பேன் டா என் வென்று!" ன்னுதானே என்னை திட்டறீங்க?! :)லக்ஷ்மணராஜா,டெக்னிக்கலா சில குறைகள் சொல்ல முடியும்னாலும் பார்த்தவுடன் மனசுல சிலீர்னு ஒரு சாரலடிக்க வைக்கும் படம். அருமை.தமிழ் பிரியன்,முதல் படம் ஒரு படம். அவ்வளவே!இரண்டாவது படத்தில்தான் உங்க "பிக்காசோ"த்தனம் தெரியுது. இன்னும் கொஞ்சம் சிரத்தையா எடுத்திருந்திக்கலாம். அதுக்குள்ளார க்வாட்டரை ஒடைச்சு ஒரு டம்ளருல ஊத்தற அவசரமா? :)முரளி,Focus, my dear Murali Focus!! ( செல்போன்ல அம்புட்டுத்தான் போகஸ் செய்ய முடியுமா?! )அழகிய தமிழ் கடவுள்,முதல் படம் பப்படம். நல்லா இல்லைன்னு சொன்னா என்னை திட்டாதீங்க. ஒரு சிறப்பான பொருளை இருக்கறது இருக்கற மாதிரியே எடுக்கறது அழகுதான். ஆனால், ஒரு சாதாரண பொருளை கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமான கோணத்துல எடுத்தாக்கூட அழகாகிடும்.இரண்டாவது படம் அருமையான இடம். எங்கேங்க இருக்காரு இந்த சிவலிங்கம்? இரண்டாவது படத்தை விட ஐந்தாவது படம் முழுமையாக இருக்கு.கைலாஷி,அண்ணே, நல்லா படமெடுத்தீங்களே... அதைச்சரியா வெட்டி போட்டிருக்கலாம் தானே? முதல்பட விநாயகரு தங்கமா? இருங்க IT Dept காதுல போட்டுவைக்கறேன்!சூர்யா,நல்லதொரு சூரிய அஸ்தம படம். ஆனால் வட்டத்திற்கு பதிலாக புள்ளிதான் இருக்கு. என்னாது புள்ளியும் வட்டம்தானா? அதுசரி. :)இரண்டாவது பூக்கோலம் ஜீவனுடன் இருந்தாலும் ஈவனாக இல்லை.கார்த்திகேயன் குருசாமி,அட்டகாசமா இருக்குங்க. வட்டமும் விளிம்பில் சிதறும் ஒளித்துகள்களும் நல்லா விழுந்திருக்கு, முன்னாடி ஒரு ஒன்னு போட்டிருந்தீங்கன்னா அந்த மார்க்கு உங்களுக்கே! :)நானானி,முதல் படத்தின் படமெடுப்பொருள் ( அதாங்க... சப்ஜெக்ட்டு ) அருமை. தேதிய யாருங்க கேட்டா?ரிஷான் ஷெரீஃப்,மனதை மயக்கும் படம். இருந்தாலும் வட்டப்போட்டிக்கு உதவுமான்னு தெரியலை.இரண்டாவது படம் சுமார்தான்.PeeVee,வட்டங்கள், வண்ணங்கள், வெளிச்சம், நிழல், இயல்பானதொரு ப்ரேம் என அனைத்தும் அருமை. பாலிமகேந்திராவின் பாடலுக்கு நடுவில் ஸ்டில் போட்டாப்புல இருக்கு. வாழ்க்கையைச் சொல்லும் வட்டங்கள்!!வீரசுந்தர்,நல்ல பூ தான்! வட்டப்போட்டிக்கு இன்னும் அழுத்தமான வட்டம் கிடைக்கலையா?யோவ் நாதஸ்,உமக்கெல்லாம் பரிசு வாங்கி போரடிக்கலையா?! :)முதல் படம் நுட்பரீதியாக அருமை. இருந்தாலும் செயற்கைமீது செயற்கையாக அமர்ந்திருக்கும் நீர்த்துளிகள் மனசுக்கு ஒருவித வெறுமையையே தருகிறது.இரண்டாவது படத்தில் பிரதிபளிப்பு தெளிவாக விழும்படி எடுத்திருந்தால் அடிபொளியாக வந்திருக்கும். பரவலான பல நீர்த்துளிகளில் கவனத்தை எங்கே வைக்க?! :)

********************************************

வேலை பளு காரணமாக இளவஞ்சி அண்ணாச்சியால் இதற்கு மேல் விமர்சனங்கள் எழுத நேரம் கிடைக்கவில்லை,அதனால் அவர் எழுதிய வரை இந்த பதிவில்! :-)

Sunday, February 24, 2008

புகைப்பட வலைஞர்களுக்கு என் முதல் வணக்கம்னேன்!

போன பதிவில் முதல் 10 படங்களை தேர்ந்தெடுத்த கதையை சீவியார் ரெம்ப சின்சியரா சொல்லியிருந்தாரு. அதுல நான் தன்மையா இதமா பேசுனதா பில்டப்பு வேற! ( உண்மை என்னன்னா இப்பவெல்லாம் வாழ்க்கைல எந்த சூடான வி(தண்டா)வாதம்னாலும் காதல் பட ஒத்தக்கை சித்தப்புதான் என் ரோல்மாடல்! :) ) அதை முழுசா படிச்சிட்டு எனக்கே பயந்தான். எங்கே இந்த முறை ஆளைவைச்சு தூக்கிருவாரோன்னு. ஆனால் நம்ப ஜீரா மூலம் ஏற்கனவே தம்பி ரொம்ப சாந்தமான ஆளு... அடிதடி வம்புக்கெல்லாம் போகமாட்டாருங்கற ஒரு நல்லெண்ண சர்ட்டிபிக்கேட்டு கிடைச்சதால் மீண்டும் அவருகூட சந்தோசமா களமிறங்கிட்டேன்.

60 பதிவர்கள், 120 படங்கள் ஆகவே இது கடினமான பணி எனக்கு அப்படின்னெல்லாம் சொல்ல மாட்டேன். பிடிச்ச வேலைய பார்க்கறதுக்கு என்னத்த கடினம்? ஆகவே அனைத்து படங்களையும் மொத்தமா ஆல்பத்துல போட்டு ஓடவிட்டு ஆராய்சி செஞ்சு செலக்ட் செய்யற வேலை ரொம்ப சொகமாகவும் ஜபர்தஸ்தாகவும் இருந்துச்சு.. :) என்ன ஒரே ஒரு சின்ன மனக்குறை என்றால் பெரும்பாலான பதிவர்கள் வட்டத்தைதேடி வட்டத்தை just like that வட்டமாகவே காட்ட முயன்றதுதான். நாமெல்லாம் வலைப்பதிவர்கள் இல்லையா? நமக்கெல்லாம் கற்பனையூற்று கண் காது மூக்குன்னு நவதுவாரங்களிலும் பீறிடும் திறமை படைச்சவங்க இல்லையா? ஒரு பொருளை படைச்சவனே ஒரு கோணத்தில் பார்த்திருக்க நாம் பலநூறு கோணங்களில் கற்பனைக்கெட்டா ஞானவெளியில் பார்த்து பிரித்து மேய்ந்து பட்டையை கிளப்பும் வலை-அகஆராய்ச்சியாளர்கள் அல்லவா? எதுக்கு சுத்தி வளைச்சு பேசிக்கினு?! நாமெல்லாம் வலையுலகத்தில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை அல்லவா?! அப்படி இருந்துகிட்டு இப்படி வட்டத்தை வெறும் வட்டமாகவே மட்டும் பார்க்காம அதன் அனைத்து பரிமானங்களையும் தோண்டித் தேடிப்பார்க்க பெரும்பாண்மையானவர்கள் தவறிட்டாங்களோன்னு ஒரு எண்ணம் எழுந்தது உண்மை. உலகத்தின் மிசச்சிறந்த புகைப்படங்கள் எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறப்பாக 100% எடுக்கப்பட்டவை அல்ல! பார்க்கும் கோணமும், அதன் மூலம் வெளிப்படுத்த விரும்பும் கருத்துமே அப்படங்களை மிகச்சிறந்தவைகளாக தூக்கி நிறுத்தியிருக்கிறது என்பதென் எண்ணம்!


CVR அமெரிக்க டைம்ல இருக்கறதால பெரும்பாலும் எங்க இந்த புகைப்பட ஆராய்ச்சி பொங்கலு நான் ஆபிஸ்ல இருக்கறப்பதான் நடந்தது ( பக்கத்து மர டப்பால இருந்து எட்டிப்பார்த்த நண்பரு: என்னய்யா... படம், லைட்டிங், கம்போசிங்னு பேச்சு ஓவரா இருக்கு? எங்கனா கோடம்பாக்கத்து குருவி சிக்கிருச்சா?! அப்ப நீ நெசமாவே வேலைய விட்டுட்டு போயிருவியா? :) )

டாப் 10ல பெரும்பாலும் நாங்க பெருசா அடிச்சுக்கலை. படங்களை விலக்குவதற்கு எங்களுக்குத் தெரிந்த அறிவுக்கு எட்டிய மிகச் சிறுசிறு குறைகளையே காரணங்களாக சொல்லிக்க வேண்டி வந்தது. என்ன செய்ய? இருக்கறது 3 இடம்தான் இல்லையா?


மூன்றாமிடம்: கார்த்திகேயன் ஷண்முகம்

வட்டம் என்ற போட்டித்தலைப்புக்கான இதைவிட சிறந்த முறையில் பொருந்தும் படங்கள் எதுவும் மாட்டவில்லை! கேனின் உள்வட்டமும் வெளிவட்டமும் சரியான முறையில் காம்பஸை வைத்து வரைஞ்சாப்புல அசத்தலான கோணம். கோணம் சற்றே மாறியிருந்தாலும் ஒரு சாதாரணப்படமாக மாறியிருக்கும் என்பது என் எண்ணம். அது மட்டுமின்றி இரண்டு வட்டங்களுக்கு இடையேயான எழுத்துக்கள் மங்கலான ஷேடோவில் மிக ரிச்சாக தெரிவதும் ஒரு சிறப்பு. அதேபோல கேனின் மேற்புறம் பிரதிபலிக்கும் வெளிச்சம் இது மெட்டல் பரப்பு என்பதால் கூடுதல் சிறப்பாக அமைந்து விட்டது. வேறொரு பரப்பில் இதே பிரதிபளிப்பு நெகடிவாக அமைந்திருக்கும். அடிப்பாகம் தெரியும் நிழல் மட்டும் சற்றே கவனத்தை கலைப்பதாக உள்ளது. இருந்தாலும் ராஜசேகரின் "இதுதாண்டா போலீஸ்" மாதிரி இந்தப்படம் "இதுதாண்டா வட்டம்!" வகை!


இரண்டாமிடம்: பிரபாகரன்

வட்டத்தை வெறும் வட்டமாக பார்க்காமல் அதனின் மற்றொரு பரிமானத்தை அழகுணர்ச்சியோடும் தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறப்பாக காட்டக்கூடியாதாக இருப்பதனால் இதனை தேர்ந்தெடுத்தோம். சிக்கென்று ஒரு சில்-அவுட். வண்ணங்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படு இயல்பான கொட்டாவியாக இருந்தாலும் தம்பியின் பல்வரிசை மட்டுமே சற்றே பயமுறுத்துகிறது! :)

சூரியனுக்கே தம்பியின் கொட்டாவி மூலம் டார்ச்லைட்டு காட்டியிருக்கிறார் நம்ப பிரபாகரன்!


முதலிடம்: குட்டிபாலு

சொல்வதற்கு ஒன்றுமில்லை. டாப் 10ல் நானும் சீவியாரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் முக்கியமாக அடிச்சுக்காமல் ஏகமனதாக தேர்ந்தெடுத்த ஒரே படம் இது. படத்தின் அமைப்பு, வெளிச்சம், வண்ணங்கள் என எதிலும் சோடைபோகாமல் உள்ளது உள்ளபடியே பளிச்சென்று ஒரு படம்.

குறையொன்றுமில்லை குட்டிபாலு கண்ணா! :) அசத்தல்!இவைகள் போக சிறப்புகவனம் பெற்ற ஒரு படம் என்று சொன்னால் அது PeeVee அவர்களுடைய பூமார்க்கெட் படம். அருமையான அட்டகாசமான வட்டங்களின் மூலம் வாழ்க்கையை சொல்லிக்காட்டும் படம். படத்தின் கம்போசிசன் என்ன? வெளிச்சமும் நிழலும் கலந்து விளையாடும் இயற்க்கை லைட்டிங் என்ன? வட்டங்கள் மனதில் தூண்டும் சிந்தனைகள் என்ன? அடடா! ஆனால் எனக்கும் நம்ப சீவியாருக்கும்தான் இந்த படத்தின்மூலம் பெரிய வாக்குவாதம். அரைமணி நேரமாகப்பேசியும் ஒருவரும் ஒத்தகருத்தை எட்ட முடியவில்லை. இத்தனை சிறப்புகள் இருந்தும் வட்டம் என்ற தலைப்புக்கு மிகச்சரியாக பொருந்தவில்லை என்ற எண்ணத்தால் தேர்ந்திடுக்க இயலவில்லை. இருந்தாலும் ஒன்று. இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


பங்கேற்ற அனைவருக்கும் இந்த சுகமான வேலையைச்செய்ய வாய்ப்பளித்த PITக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றவர்கள் அடுத்த போட்டிக்கு மீண்டும் உங்க புகைப்படப்பொட்டியை தயாராக்குமாறு நட்புடன் சின்ன வேண்டுகோள்.

அன்புடன்,

இளவஞ்சி...

Saturday, February 23, 2008மேலே நீங்கள் பார்ப்பது ஒரு அழகிய விளம்பர புகைப்படம்..காலணி நிறுவனம் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது. முதலில் சில கேள்விகள்..

1. இந்த படத்திற்கு எத்தனை முதன்மை ஒளி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?

2. ஏன் சிவப்பு நிறம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

3. வெளியில் நாம் எடுக்கும் இயற்கை படங்களுக்கும் ஸ்டுடியோவில் எடுக்கப்படும் இந்த மாதிரியான படங்களுக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?

உங்கள் கருத்துக்களை/பதில்களை எழுதுங்களேன்!

அன்புடன்
ஓசை செல்லா

Tuesday, February 19, 2008

போட்டிக்கான படங்களை தொகுக்கும் போதே மண்டை காய போகிறது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.

முதலில் பத்து படங்களை தேர்ந்தெடுக்கலாம்,நான் என்னுடைய தேர்வுகளை அனுப்பி வைக்கிறேன்,நீங்கள் உங்கள் தேர்வுகளை அனுப்புங்கள்,பிறகு கலந்தாலோசித்து பத்து படங்களை முடிவு செய்யலாம் என்று இளவஞ்சி அண்ணாச்சியிடம் பேசி வைத்துக்கொண்டேன்.
நிச்சயமாக எங்கள் இருவரின் தேர்வுகளிலும் ஒரே படங்கள் நிறைய இருக்கும் என்றும் ,மீதி கொஞ்ச நஞ்சம் ஒத்துப்போகவில்லை என்றால் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.
பின் ரவுண்டு கட்டி என்னுடைய தேர்வுகளான 9 படங்களை அனுப்பி வைத்தேன்.
அதற்கு அண்ணாச்சியின் மறுமொழியாக அவரின் தேர்வுகளான 7 படங்களை அனுப்பி வைத்திருந்தார்.அவரின் மடலில் என்ன கூறியிருந்தார் தெரியுமா??
"
CVR,
ஒன்னு மட்டும் உண்மை... உமக்கும் எனக்கும் கொலைவெறி சண்டை நடக்கப்போகுது :)"

அட்ரா அட்ரா!!! அரம்பமே அமர்க்களப்படுதே என்று அவரின் படங்கள் என்னென்ன என்று பார்க்க ஆரம்பித்தேன்.
அடக்கடவுளே என்று ஆனது!! ஏனென்றால் எங்கள் தேர்வுகளில் இரண்டு படங்கள் மட்டுமே ஒத்துப்போய் இருந்தன.

எங்கள் தேர்வுகளை எல்லாம் தனியாக ஒரு ஆல்பத்தில் போட்டு அண்ணாச்சியுடன் தொலைபேசி உரையாடலை ஆரம்பித்தேன்!!! பேச பேச நேரம் போனதே தெரியவில்லை!!!
தலைப்புக்கு பொருத்தம்,கலைத்திறன்,படத்தின் தரம்,படம் எடுக்க எடுத்துக்கொண்ட முயற்சி என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து படங்களை கழித்துக்கொண்டே வந்தோம்!!! படங்கள் குறைய குறைய ஒவ்வொரு படத்துக்கும் நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் அதிகமாகிக்கொண்டே போனது.11- இல் இருந்து 10- க்கு வர நாங்கள் எவ்வளவு நேரம் எடுத்தோம் என்று எங்களுக்குத்தான் தெரியும்!!

கடைசியில் எங்கள் தேர்வுக்குப்பின் எஞ்சிய 10 படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!! கார சாரமாக விவாதங்கள் நடந்தாலும் தன் கருத்துக்களை ஆணித்தரமாகவும் அதே சமயம் எரிச்சல் படாமல் பொறுமையாக எடுத்துச்சொன்ன இளவஞ்சி அண்ணாச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!
இதுக்கே இப்படி ,இன்னும் கடைசி மூன்று படங்கள் தேருவதற்குள் என்னென்னெ ஆகுமோ என்று மனம் பதறினாலும் ,புகைப்படக்கலை குறித்த மிக ஆரோக்கியமான வாதம் செய்த திருப்தி நெஞ்சில் நிறைந்து அடுத்த கலந்துரையாடல் எப்பொழுது வரும் என்று ஒரு வித எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது!

சரி சரி என் மொக்கையை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்!!
டாப் 10 உங்கள் பார்வைக்கு!!(எந்த வரிசையிலும் இல்லாமல்)

குசும்பன்:


குட்டிபாலு:


நாதஸ்:


PeeVee:


ரமேஷ்:


உண்மை:


கோமா:


கே4கே:


கார்த்திகேயன் ஷண்முகம்:


பிரபாகரன்:
படங்களை பார்த்தால் தமிழ்ப்பதிவுகள் பற்றி தெரிந்த எல்லோருமே நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளலாம் போல உள்ளது!!
இல்லையா??

முதல் மூன்று இடங்கள் 25 - ஆம் தேதிக்குள் அறிவித்து விடுகிறோம்,அது வரையில் பொறுத்திருங்கள்!! :-)

வரட்டா??
புகைப்படக்கலை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே பார்க்கும் போது இந்த metering mode எனும் சொல்லை அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்.அதை பற்றி அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும் ,metering mode என்றால் என்ன அதன் பல வகைகள் என்ன என்பதையும் இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை (metering mode) என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

தற்போதையக் கேமராக்களில் பலவிதமான சௌகரியங்கள் மற்றும் உபயோகங்கள் வந்துவிட்டன.கேமரா என்பது ஒளியைப் பதியவைக்கும் கருவி என்பதால் எவ்வளவு ஒளியை அனுமதிக்க வேண்டும் என்பதில் தான் படத்தின் தரம் அடங்கியிருக்கிறது (காட்சியமைப்பு,கோணம் போன்றவற்றை இங்கு குழப்பிக்கொள்ளாதீர்கள்).எவ்வளவு ஒளியை பதிந்தால் படம் நன்றாக வரும் என்பதை நிர்ணயிப்பதற்குத்தான் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறைகள் பயன்படுகின்றன.
அதாவது நீங்கள் ஆட்டோமேடிக் மோடில் ஒருக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது அந்த காட்சியைக் கம்போஸ் செய்து விட்டு கேமராவின் பொத்தானை சற்றே அழுத்தினால்,உங்கள் கேமரா படம் பிடிக்க வேண்டிய ஷட்டர் ஸ்பீடு,அபெர்ச்சர் விட்டம் ஆகியவற்றை கணித்து அவற்றை செயல்படுத்தி விடும்.இது எப்படி நடக்கிறது?? நமது காட்சிக்கு இவ்வளவுதான் அபெர்ச்சர் வேண்டும் என்று கேமராவிற்கு எப்படி தெரிகிறது???
அதை செய்வதற்கு தான் இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை.நமது காட்சியின் வெவ்வேறு புள்ளிகளில் ஒளியின் அளவை அனுமானித்து அதற்கு ஏற்றார்போல் கேமராவின் ஷட்டர்,அபர்ச்சர்,ISO,whitebalance போன்ற பல விதமான அளவுகோல்களை நிர்ணயிப்பதற்கு இந்த ஒளிக்கணிப்பு அளவுமுறை பயன்படுகிறது.இதில் உள்ள பல வகைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

Spot metering:
இதில் காட்சியின் நட்டநடுவில் உள்ள ஒளியின் அளவு மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன.படத்தின் நடு புள்ளியில் என்ன காட்சி இருக்கிறதொ அதை பொருத்தே ஒளியின் அளவு கணிக்கப்படும்!! நடு புள்ளியை சுற்றி எவ்வளவு வெளிச்சமாகவே,இருட்டாகவோ இருந்தாலும் அது ஒளிக்கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நம் focus முழுவதுமாக அமைய வேண்டும் என்று விரும்பினால் இந்த வகையான ஒளிக்கணிப்பை பயன்படுத்தலாம்.

Part்ial metering:
இது spot metering போன்றே தான் என்றாலும் spot metering-ஐ விட சற்றே அதிக பகுதிகளை ஒளிக்கணிப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.அதாவது காட்சியின் நடுப்புள்ளியை மற்றும் பார்க்காமல் அதை சுற்றி கொஞ்சம் காட்சிப்பரப்பை இந்த ஒளிக்கணிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும(மொத்தக்காட்சியில் 10-15%)்!! partial metering வகை ஒளிக்கணிப்பு பெரும்பாலும் Canon கேமராக்களில் காணப்பெறலாம்.கருப்பொருளின் மீது மட்டுமே கவனம் விழுமாறு high contrast படங்கள் எடுக்க விரும்பினால் இந்த இரண்டு வகை ஒளிக்கணிப்பு அளவுகோல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை நடுவில் உள்ள பொருட்களை மட்டுமே பளிச்சென காட்டும் என்றாலும் உங்கள் சௌகரியத்திற்கேற்ப focus lock செய்துவிட்ட பின் உங்கள் படத்தை recompose செய்துக்கொள்ளலாம்.
அதாவது முதலில் உங்கள் படம் எடுக்க நீங்கள் கேமாரவில் பொத்தானை பாதி அழுத்திய பின் கேமராவை நகர்த்தி உங்களுக்கு வேண்டிய இடத்தில் உங்கள் கருப்பொருளை பொருத்திக்கொள்ளலாம்.
இதுக்கு மேலே புரியலன்னா இந்த பதிவை படிங்க.குறிப்பா பதிவின் கடைசி பகுதியை! :-)

Center weighted average metering:
இது மிக பரவலாக பயன்படுத்தப்படும் ஒளிக்கணிப்பு அளவுகோல். பல point and shoot கேமராக்களில் அளவுகோல்கள் மாற்றும் வசதி இருக்காது. அப்படிப்பட்ட கேமராக்களில் default-ஆக இந்த ஒளிக்கணிப்பு தான் உருவாக்கப்பட்டிருக்கும். அதுவுமில்லாமல் சாதாரணமாக SLR கேமராக்களில் கூட இந்த வகை ஒளிக்கணிப்பு தான் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்படும்.
இது காட்சியின் பெரும்பான்மையான பகுதிகளை கருத்தில் கொண்டு கணிக்கப்படும் ஒரு அளவுகோல்.ஓரங்களில் இருக்கும் பகுதிகளை தவிர்த்து,நடுவில் இரூந்து ஆரம்பித்து 60-இல் இருந்து 80 சதவிகிதம் வரை காட்சியின் எல்லா பகுதிகளும் இந்த கணிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Evaluative metering:
இந்த வகையான அளவுகோலுக்கு Multizone metering,Honeycomb metering,segment metering,esp(electro selective pattern) என்று பல பெயர்கள் உண்டு.Nikon வகை கேமராக்களில் இந்த வகையான ஒளிக்கணிப்பை Matrix metering என்று கூறுவார்கள்.மற்ற முறைகளை போல இல்லாமல் இது சற்றே வித்தியாசமான ஒளிக்கணிப்பு . காட்சியில் உள்ள பல்வேறு பொருட்களை கொண்டு ஒரு விதமான விசேஷ நெறிமுறை (algorithm) கொண்டு கேமரா காட்சியில் உள்ள முக்கியமான புள்ளிகளையும் அதற்கு வேண்டிய சரியான exposure-ஐயும் கணித்து விடும். அந்த நெறிமுறை என்ன என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும்.அதாவது Canon-இன் algorithm மற்றும் Nikon-இன் algorithm இரண்டும் வித்தியாசமாக இருக்கும்.
மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நெறிமுறை என்ன என்பதை பரம ரகசியமாக வைத்திருப்பார்கள்
என்ன ஏது என்று தெரியாமல் மந்திரம் போல் காட்சியில்் உள்ள முக்கியமான புள்ளிகளும் அதற்கான focus-உம் கேமராவினால் கணிக்கப்படுவதால் இந்த முறை அனுமானிக்க முடியாத வழிமுறை(unpredictable) என்று சிலர் இதை உபயோகப்படுத்த முனைவதில்லை.

என்ன மக்களே Metering என்றால் என்ன என்றும் ,சில முக்கியமான metering modes பற்றியும் தெரிந்துக்கொண்டீர்களா??
உங்கள் கருத்துக்கள்,சந்தேகங்களை பின்னூட்டமிடுங்கள்! கலந்தாலோசிக்கலாம்!!

சரி இப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்!
இன்னொரு சவாரஸ்யமான புகைப்படக்கலை சார்ந்த தலைப்புடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்!!

வரட்டா?? :-)


References:
http://en.wikipedia.org/wiki/Metering_mode
http://www.dpreview.com/learn/?/Glossary/Exposure/Metering_01.htm
http://photonotes.org/cgi-bin/entry.pl?id=Evaluativemetering
http://digital-photography-school.com/blog/introduction-to-metering-modes/

Monday, February 18, 2008

மேகமற்ற . சாம்பல் நிற வானத்தின் மிகப் பெரிய குறை. ஒரு அழகற்ற தண்மையை படத்திற்கு தந்துவிடும். இதை பிற்தயாரிப்பில் தவிர்க்க முடியும். உதாரணதிற்கு, இந்த மாலிபு கோயில் படம்.இதை எடுத்த நேரத்தில் வானத்தில் துளியும் மேகம் இல்லை.இதை போட்டோஷாபில் எப்படி மாற்றுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம். இதே முறையை கிம்பிலும் பயன்படுத்தலாம்.இந்த முறையை பின்பற்றினால் முடிவில் படம் இந்த மாதிரி இருக்கும்
படத்தை திறந்தப்பின், New Adjustment Layer-> Selective Color. colors பகுதியில் White தேர்ந்துடுங்கள், Method-> absolute, Cyan, Majenta, Black ஆகியவற்றை மாற்றி உங்களுத் தேவையான நீல வண்ணத்தை வரவைக்கலாம்.

கூகுளில் Photoshop cloud brush என்று தேடினால் இலவச மேக பிரஷ்கள் நிறைய கிடக்கும். Adobe தளத்திலும் இலவச பிரஷ்கள் கிடைக்கும்.

Selective Color - Layer mask-ல் வெள்ளை-கருப்பு Gradient வரைந்துக் கொள்ளுங்கள்
இனி மேகப் பிரஷ்களை கொண்டு கருப்பு நிற பிரஷை தேர்வு செய்து மாஸ்கில் மேகத்தை தீட்ட வேண்டியதுதான்.
வேண்டுமானல் மீண்டும் ஒரு Level Adjustment Layer கொண்டு கொஞ்சம் படத்தை கருப்பாக்கலாம்அவ்வளவுதான். மேகம் ரெடி. அப்புறம் என்ன, படம் காட்ட வேண்டியதுதான் .


Saturday, February 16, 2008க்ளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்...
Exposure Details: f8, 12 Sec, ISO 100

அந்திசாயும் அற்புத கணங்களில் உங்கள் காமிராவையும் கண்சிமிட்டவிடுங்கள்.. வர்ணஜாலங்கள் உங்கள் மனத்தை ரம்மியமானதாக மாற்றும்... மாற்றுகிறதா??!
மக்களே!!
திரும்பவும் எங்களை உங்களின் ஆர்வத்தால் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்!!எத்தனை படங்கள்,எத்தனை பதிவுகள்!! ஆகா,ஆகா!! பிரவுசரை திறந்தாலே எல்லாம் வட்டமா வட்டமா தெரிய ஆரம்பிச்சிடுச்சு!!உங்கள் ஆதரவுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
இத்தனை படங்களில் முத்து முத்தா எத்தனை படங்கள்!! இதில் எப்படி பத்தை தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.பத்தே கஷ்டம் என்கிற போது 3 தேர்ந்தெடுப்பது பற்றி எண்ணி கூட பார்க்க முடியவில்லை!!
இளவஞ்சி அண்ணாச்சியே துணை!! :-)

முன்பே அறிவித்ததை போல இன்றுடன் போட்டியில் படங்கள் சேர்ப்பது நிறுத்தப்படுகிறது.இது வரை வந்த படங்களை பட்டியலிட்டு இந்த பதிவில் இட்டிருக்கிறேன், முடிந்த வரை கவனம் எடுத்து போட்டிருந்தாலும் நிறைய படங்கள் வந்ததால் ஆங்காங்கே தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கின்றன,அதனால் தயவு உங்கள் படங்கள் சரியாக சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளுங்கள்.ஏதேனும் தவறு இருந்தால் இந்தப்பதிவின் பின்னூட்டத்தில் அறிவிக்கவும்.நாங்கள் படங்களை தேர்வு செய்யப்போவது முழுக்க முழுக்க இந்த பட்டியலை பொருத்தே தான் இருக்கும். இந்திய நேரப்படி 18-ஆம் தேதி இரவு 8 மணிக்குப்பின் எந்த மாறுதலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்தப்படங்களில் இருந்து பத்தை தேர்ந்துடுத்து முதலில் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்,பின்னர் அதிலிருந்து 3 படங்கள் தேர்ந்தெடுத்து 25 - ஆம் தேதி வாக்கில் முடிவுகள் அறிவிக்கப்படும்!!


நன்றி!! :-)

போட்டிக்கு வந்த படங்கள்

1) இம்சை - படம்1, படம்2
2)ரமேஷ் - படம்1, படம்2
3) ஷோனா - படம்1, படம்2
4) கேசவன் - படம்1
5) சின்ன அம்மிணி - படம்1, படம்2
6) மஞ்சு - படம்1, படம்2
7) சூரியாள் - படம்1, படம்2
8) உண்மை - படம்1, படம்2
9) துளசி டீச்சர் - படம்1, படம்2
10) நியோ - படம்1, படம்2
11) சர்வேசன் - படம்1, படம்2
12) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
13) தமிழ் பிரியன் - படம்1, படம்2
14) முரளி - படம்1, படம்2
15) அழகிய தமிழ் கடவுள் - படம்1, படம்2
16) கைலாஷி - படம்1, படம்2
17) சூர்யா - படம்1, படம்2
18) ஓசை செல்லா - படம்1, படம்2
19) AN& - படம்1, படம்2
20) கார்த்திகேயன் குருசாமி - படம்1, படம்2
21) நானானி - படம்1, படம்2
22) ரிஷான் ஷெரீஃப் - படம்1, படம்2
23) PeeVee - படம்1
24) வீரசுந்தர் - படம்1
25) நாதஸ் - படம்1, படம்2
26) பிரபாகரன் - படம்1, படம்2
27) செந்தில் - படம்1, படம்2
28) முத்துலெட்சுமி - படம்1, படம்2
29) இல்லத்தரசி - படம்1, படம்2
30) கே4கே - படம்1, படம்2
31) எஸ்.குமரன் - படம்1, படம்2
32) சத்தியா - படம்1, படம்2
32) தினேஷ் - படம்1, படம்2
33) தர்மா - படம்1, படம்2
34) வாசி - படம்1, படம்2
35) ஜெகதீசன் - படம்1, படம்2
36) ஒப்பாரி - படம்1, படம்2
37) சுடரொளி - படம்1
38) கோகிலவாணி கார்த்திகேயன் - படம்1, படம்2
39) ஹரண் - படம்1, படம்2
40) இரண்டாம் சொக்கன் - படம்1, படம்2
41) நித்யா பாலாஜி - படம்1, படம்2
42) பிரபாகர் சாமியப்பன் - படம்1, படம்2
43) ப்ரியா - படம்1, படம்2
44) இசை - படம்1, படம்2
45)அமான் அப்துல்லா - படம்1, படம்2
46) லொடுக்கு - படம்1, படம்2
46) நட்டு - படம்1, படம்2
47) Night Rams - படம்1, படம்2
48) கார்த்திகேயன் சண்முகம் - படம்1, படம்2
49) மோகன்குமார் - படம்1, படம்2
50) இ.கா.வள்ளி - படம்1, படம்2
50) ஜீவ்ஸ் - படம்1, படம்2
51) கோமா - படம்1, படம்2
52) டி.ஜே - படம்1, படம்2
53) நக்கீரன் - படம்1, படம்2
54) குட்டிபாலு - படம்1, படம்2
55) குசும்பன் - படம்1, படம்2
56) ஆதி - படம்1, படம்2
57) சஞ்சய் - படம்1, படம்2
58) நந்து f/o நிலா - படம்1, படம்2
59) ஜே.கே - படம்1, படம்2
60) Shiv - படம்1

Sunday, February 3, 2008

கேமரா ஷேக் எனப்படும் அதிர்வுகள் தான் நமது படங்களின் தரத்தை குறைக்கும் முக்கியமான ஒரு பிரச்சினை.இதற்கு வழக்கமாக நாம் ட்ரைபாட் எனப்படும் முக்காலியை பயன்படுத்துவோம்.
ஆனால் அதனை எல்லா இடங்களுக்கும் எடுத்துச்செல்வது சௌகரியப்படாது.
இந்த கேமரா ஷேக் ஆவதை குறைக்க ஒரு சுவாரஸ்யமான முறையை இந்த நிகழ்படத்தில் காணலாம்.... :-)
$1 Image Stabilizer For Any Camera - Lose The Tripod - video powered by Metacafe

Friday, February 1, 2008

இதுவரை போட்டிக்கு வந்த படங்கள் :-வணக்கம் நண்பர்களே!
இந்த மாத போட்டிக்கான அறிவிப்பு தரும் நேரம் வந்துவிட்டது!!

முதல் போட்டியை பற்றி செல்லா என்னிடம் தெரிவித்த போது என்னிடம் பல கேள்விகள்.இந்த போட்டிகள் வெற்றி பெருமா.மாதா மாதம் கலந்துக்கொள்ள ஆட்கள் வருவார்களா??அத்தனை ஆர்வமும் திறமையும் நம் தமிழ் பதிவுலகில் இருக்கிறதா?? இந்த போட்டிகளை எந்தவொரு பெரிய சச்சரவும் சண்டைகளும் இன்றி சிறப்பாக நடத்த முடியுமா?? இதனால் நம் இணைய நண்பர்களுக்கு ஆர்வம் பெருகி,தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு மேடையாக இந்த போட்டிகள் அமையுமா?? இப்படி ஆயிரம் கேள்விகள்!

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை என்ன என்று மாதாமாதம் நமது போட்டிகளை கவனித்து வரும் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.அதுவும் போன தடவை நாங்கள் கொஞ்சம் abstract-ஆக ஒரு தலைப்பை கொடுத்து ,இதை வாசகர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று பார்த்தால்,தங்கள் கலையார்வம் மற்றும் திறமையை நிரூபிக்கும் வகையில அசத்தலான படங்களை அடுக்கி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்து விட்டீர்கள்!!
அந்த மகிழ்ச்சியின் குதூகலத்தோடு இந்த மாத போட்டிக்கான அறிவிப்பை வெளியிடுகிறோம்.

தலைப்பு - வட்டம் (Circle(s))
நடுவர்கள் - இளவஞ்சி மற்றும் CVR
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
(You just have to publish your pictures in your blog and give the link as comment for the post! :-).If you dont have a blog,links to photo publishing sites like flickr are Ok )
உங்கள் பதிவில் படங்களின் slideshow போடுவதை விட நேரிடையாக படத்தை பதிவிட்டால் நாங்கள் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம் - பிப்ரவரி 1 முதல் 15
முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 25 பிப்ரவரி 2008

பின்னூட்டத்தில், படத்தின் URLலையும் கொடுத்தால் எங்களுக்கு வேலை சுலபமாகும்.
உ.ம்:
பதிவு: http://something.blogspot.com/2007/12/post1.html
படம்1: http://somewhere.com/pic1.jpg
படம்2: http://somewhere.com/pic2.jpgமுடிந்த வரை தலைப்புக்கு ஏற்றார்போல் படங்கள் பிடிக்க பாருங்கள்!சரியாக காம்பசில் அளந்து வரையப்பட்ட வட்டம் தான் வேண்டும் என்பதில்லை , வானத்தில் தெரியும் முக்கால் நிலவு ,தூரத்தில் தெரியும் வட்டவடிவிலான குளம் என உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்!!

அதற்காக கண்ணில் பட்ட நெளிவு சுளிவு எல்லாம் சமர்ப்பிக்க வேண்டாம்!! (Curves and Arcs are not circles) படங்களை தேர்வு செய்யும் போது தலைப்புக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதை தான் நடுவர்கள் முதலில் கவனிப்பார்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்.

இந்த தலைப்பை பற்றி நாங்கள் விவாதிக்க ஆரம்பித்த பிறகு நம்மை சுற்றி எத்தனை வட்ட வடிவிலான பொருட்கள் இருக்கின்றன என்று எனக்கு புலப்பட்டது!! எங்கெங்கு காணிலும் வட்டமடா என்று நாம் சாதாரணமாக கவனிக்க தவறும் பல வட்டங்களை என் மனம் கண்டுபிடித்து காண்பித்தது.அதனால் உங்களுக்கு படம் எடுப்பதற்கு நிறைய பொருட்கள் கிடைக்கும், கவலை வேண்டாம்.
எல்லோரும் சாதாரணமாக எடுக்கக்கூடிய வட்ட வடிவிலான பொருட்களை விடுத்து,ஏதாவது வித்தியாசமான பொருளை எடுக்க முயற்சி செய்யுங்கள்!
போட்டி முடிவதற்குள் "வாழ்க்கை ஒரு வட்டம்டா" என்ற பன்ச் டயலாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நமது வாழ்க்கையின் புகைப்பட பாடத்தில் ஒரு சுவையான அனுபவமாக வரும் 10-15 நாட்கள் அமையும் என்று நம்புகிறேன்!!!
எப்பவும் போல கலக்குங்க!!!
வாழ்த்துக்கள்!!! :-)

அப்புறம் இன்னொரு விஷயம்!
இனிமேல் வாசகர்கள் தங்கள் படங்களை தாங்களே Slideshow-இல் சேர்த்துக்கொள்ளலாம்!
slideshow-வின் வலது மேற்புற பகுதியில் More என்று ஒரு tab இருப்பதை காணலாம்,அதை அழுத்தினால் இணையத்தில் உங்கள் படங்களையோ அல்லது உங்கள் கணிணியில் உள்ள படத்தை வலையேற்றியோ Slideshow-வில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்த பிறகு எங்களின் மட்டறுத்தலுக்கும் பின் படங்கள் slideshow-வில் தெரியும்.

இதை செய்யும் போது செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.)படத்தின் caption "பங்கேற்பாளரின் பெயர் + படம் எண்" என்ற வடிவில் தான் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு: இம்சை1,இம்சை2
இவ்வாறு இல்லாமல் வேறு எந்த caption-ஆவது கொடுத்தால அந்த படம் slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
2.) உங்கள் பதிவில் இட்ட/இணையத்தில் ஏற்றிய படங்கள் மட்டுமே சேர்க்க வேண்டும்.அதை தவிர வேறு ஏதாவது படத்தை சேர்த்தால் அந்த படம் அனுமதிக்கப்பட மாட்டாது.
3.)பின்னூட்டத்தில் உங்கள் படங்களை அறிவித்த பின்பு தான் Slideshow-வில் சேர்க்கப்பட வேண்டும். பின்னூட்டத்தில் அறிவிக்கபடாத படங்கள் Slideshow-வில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.


இதுவரை போட்டிக்கு வந்த படங்கள்

1) இம்சை - படம்1, படம்2
2)ரமேஷ் - படம்1, படம்2
3) ஷோனா - படம்1, படம்2
4) கேசவன் - படம்1
5) சின்ன அம்மிணி - படம்1, படம்2
6) மஞ்சு - படம்1, படம்2
7) சூரியாள் - படம்1, படம்2
8) உண்மை - படம்1, படம்2
9) துளசி டீச்சர் - படம்1, படம்2
10) நியோ - படம்1, படம்2
11) சர்வேசன் - படம்1, படம்2
12) லக்ஷ்மணராஜா - படம்1, படம்2
13) தமிழ் பிரியன் - படம்1, படம்2
14) முரளி - படம்1, படம்2
15) அழகிய தமிழ் கடவுள் - படம்1, படம்2
16) கைலாஷி - படம்1, படம்2
17) சூர்யா - படம்1, படம்2
18) ஓசை செல்லா - படம்1, படம்2
19) AN& - படம்1, படம்2
20) கார்த்திகேயன் குருசாமி - படம்1, படம்2
21) நானானி - படம்1, படம்2
22) ரிஷான் ஷெரீஃப் - படம்1, படம்2
23) PeeVee - படம்1
24) வீரசுந்தர் - படம்1
25) நாதஸ் - படம்1, படம்2
26) பிரபாகரன் - படம்1, படம்2
27) செந்தில் - படம்1, படம்2
28) முத்துலெட்சுமி - படம்1, படம்2
29) இல்லத்தரசி - படம்1, படம்2
30) கே4கே - படம்1, படம்2
31) எஸ்.குமரன் - படம்1, படம்2
32) சத்தியா - படம்1, படம்2
32) தினேஷ் - படம்1, படம்2
33) தர்மா - படம்1, படம்2
34) வாசி - படம்1, படம்2
35) ஜெகதீசன் - படம்1, படம்2
36) ஒப்பாரி - படம்1, படம்2
37) சுடரொளி - படம்1
38) கோகிலவாணி கார்த்திகேயன் - படம்1, படம்2
39) ஹரண் - படம்1, படம்2
40) இரண்டாம் சொக்கன் - படம்1, படம்2
41) நித்யா பாலாஜி - படம்1, படம்2
42) பிரபாகர் சாமியப்பன் - படம்1, படம்2
43) ப்ரியா - படம்1, படம்2
44) இசை - படம்1, படம்2
45)அமான் அப்துல்லா - படம்1, படம்2
46) லொடுக்கு - படம்1, படம்2
46) நட்டு - படம்1, படம்2
47) Night Rams - படம்1, படம்2
48) கார்த்திகேயன் சண்முகம் - படம்1, படம்2
49) மோகன்குமார் - படம்1, படம்2
50) இ.கா.வள்ளி - படம்1, படம்2
50) ஜீவ்ஸ் - படம்1, படம்2
51) கோமா - படம்1, படம்2
52) டி.ஜே - படம்1, படம்2
53) நக்கீரன் - படம்1, படம்2
54) குட்டிபாலு - படம்1, படம்2
55) குசும்பன் - படம்1, படம்2
56) ஆதி - படம்1, படம்2
57) சஞ்சய் - படம்1, படம்2
58) நந்து f/o நிலா - படம்1, படம்2
59) ஜே.கே - படம்1, படம்2
60) Shiv - படம்1
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff