Wednesday, February 29, 2012

அண்மைக்காட்சி போட்டியின் முடிவுகள்:

துல்லியமாய், ஆடாமல் அசங்காமல்,  படம் பிடித்த நேர்த்திக்காக,
மூன்றாம் இடத்தில்

3. ajinhari


மிக வித்யாசமான நுணுக்கமான நுட்பத்துக்காக,
இரண்டாம் இடத்தில்,

2. r.n.suriya


அழகான காட்சியை, பக்காவாய் கட்டம் கட்டி பார்வைக்கு தந்ததற்கு,
முதல் இடத்தில்,

1. kannan



வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்.
மற்ற போட்டியாளர்களுக்கு நன்றீஸ்.

டாப்பு 16ன் மற்ற எல்லா படங்களுமே, அட்டகாசம். எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு பெரிய குழப்பம் இருந்தது இம்முறை.
உங்களின் முயற்சி, மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது. (கொஞ்சம் திகிலாவும் இருக்கு. என்னை விட நல்லா படம் பிடிக்கரவங்களை நான் என்னத்த ஜட்ஜு பண்ணிக் கழட்டறதுன்னு :) )

பாராட்டுக்கள்.


அண்மைக் காட்சி (Close-Up) படம் பிடிக்கிறதுல நீங்க எவ்வளவு திறமைசாலிகள் எங்கிறத சொல்லுறதுக்கு போட்டிக்குக்கு வந்திருந்த படங்களே சாட்சி. ஆனாலும் உங்களுக்கு சவால் போட்டி காத்துக்கிட்டிருக்கு... அதோட முடிவுத் திகதியும் நெருங்கிக்கிட்டிருக்கு... எங்கிறத ஞாபகப்படுத்தத்தான் இந்தப்பதிவு.

கண்ணாடிக்கு உள் இருக்கும் காட்சி மற்றும் பிரதிபலிப்புக் காட்சி ஆகிய இரண்டு காட்சிகள் ஓரே படத்துல வரவேணும். இதுதான் விசயம். ( இதை 2-in-1 -ன்னும் சொல்லலாம்தானே?)

முந்தைய பதிவுல காணப்படும் படத்துல அமெரிக்க சனாதிபதியையும் (உள் இருக்கும் காட்சி) வெளியில இருக்கிற மரங்களையும் (பிரதிபலிப்புக் காட்சி) அழகாக படம் பிடித்த புகைப்படக்காரர பராட்டித்தான் ஆகனும். உட் காட்சி, பிரதிபலிப்புக் காட்சி ஆகிய இரண்டையும் சரியான ஒளியைக் கொண்டு படம் புடிச்சிட்டிங்கன்னா நீங்களும் பாராட்டுக்குரியவரே!

சவால் என்பதால் ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பிடலாம் எனும் அறிவிப்பில் உற்சாகமாகி பல நண்பர்கள் பல விதமாக முயன்று படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதும் பாராட்டுக்குரியது. இதுவரை வந்திருக்கும் படங்களை கண்ணாடிப் பேழை-சவால் போட்டி ஆல்பத்தில் பார்க்கலாம்.

ஒருசிலருக்கு இந்த சவாலைப் பற்றிய புரிதலில் சிரமம் இருப்பது தெரிய வருவதால் மாதிரிக்கு..

பார்முலா: சரியான ஒளி + உட் காட்சி + பிரதிபலிப்புக் காட்சி


முடிவு தேதி: 5 மார்ச் 2012

Tuesday, February 28, 2012

பிப்ரவரி 2012 போட்டியின் டாப் 16 ஐ அறிவிக்கும்போது, சக்திவடிவேலனின், பூனைப் படம், டாப்பில் இடம் பெறமுடியாமல், சிறப்பு கவனம் மட்டுமே பெற்றது.

புலியா? பூனையா? என்னும் அளவுக்கு, மிரட்டலாய் அமைந்த படம். சரியான நேரத்தில், கிட்டத்தட்ட சரியான கட்டம் கட்டி, அமக்களமான க்ளிக்கு.
ஆனா, படம், எடுத்தது எடுத்ததுமாதிரியே, அனுப்பியிருக்கிறார். சிலப் பல டச்-அப் செய்தால், இன்னும் மெருகேறி மிரட்ட வாய்ப்பிருப்பதாய் மனதில் பட்டது.

உண்மையச் சொல்லணும்னா, GIMPல் ஏற்றி, அட்லீஸ்ட், white-balance ஆவது டச்-அப் செய்யாமல், ஒரு படத்தையும் நான் பொதுப் பார்வைக்கு, சமீப காலத்தில் அனுப்பவதில்லை.

பிற்சேர்க்கை ஒரு கலை. எனக்கு பெரிய ஆர்வம் இல்லைன்னாலும், white balance, brightness, contrast, crop எல்லாம் எப்பொழுதும் உபயோகிப்பது உண்டு.

பூனையை, எனக்குத் தெரிந்த குட்டி குட்டி பிற்சேக்கை (in GIMP) செய்ததில், இப்படி வந்திருக்கிறது. பிற்சேர்க்கை ஜாம்பவான்கள், வேறென்ன செய்ய முடியும் என்பதை செய்து விளக்கினால், சக்திவடிவேலனுடன் சேர்ந்து, நானும், இன்னும் பலரும் நன்மை அடைவார்கள் என்பது என் சித்தம். :)


Colors -> RGB

Filters -> Sharpen + Decor -> Border

Colors -> Auto-> white balance


Curves

Less bright, more contrast

Levels


Desaturate

Sunday, February 26, 2012

'அண்மைக்காட்சி'க்கு கிட்டத்தட்ட 150க்கும்  மேலான படங்கள் வந்து குவிந்தன. திக்குமுக்காடித்தான் போனேன், இவற்றிலிருந்து டாப்பு பத்தை பிரித்து மேய.

ஒவ்வொண்ணா பாத்து, பார்த்ததும் பளிச்னு பிடிச்ச 'பத்தை' கட்டம் கட்ட ஆரம்பிச்சு , கட்டம் கட்டி முடித்ததும் எண்ணிப் பாத்தா, மொத்தம் பதினாறு கட்டத்தில் இருந்தது.
ஸோ, டாப்பு 16 ஐ கண்டு களியுங்கள் (in no particular order).

1. umakanth


2. sathiya


3. kadamburvijay/CVR


4. logesh


5. dhinesh kumar


6. ashokkumar


7. kannan


8. dharmaraj


9. shravyan


10. nithi clicks


11. r.n.suriya


12. dinesh


13. ram


14. keezhairaasa


15. ajinhari
 


16. madhuarun

 

கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றீஸ் !
 
பிரித்து மேயும்போது, மனசுக்குப் பிடித்திருந்தாலும், ஏதோ ஒன்று இடித்ததால், டாப்பு 16 ல் சேராமல், சிறப்பு கவனம் பெற்ற லிஸ்ட்டில், கீழே உள்ள படங்கள்.  


jerald (சப்ஜெக்டின் அளவுக்கு கீழிறங்கி எடுத்திருந்தால் பஞ்ச் கூடியிருக்கும்)


ranjithpc (
போக்கஸ் செடியில் ?)


nazeer hussain jinnah (focus not on lead?)


balasundaram (focus issue? not cute)


selva (distracting leaf, rule of 3rd missing? head in the wrong spot. pls refer http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_11.html


kamal (background a bit distracting)


pattikkaattaan (too colorful and busy)


varunz (great attempt. punch missing)


sakthivadivelan (beautiful shot.
கொஞ்ச்சம் டச் அப் செய்திருந்தால் அமக்களமா வந்திருக்கும்.)


mutha (too much contrast and background distracting)


ngmurugesh (beauty.
குரங்கு வேறெங்கோ பார்பது மட்டுமே குறையாக பட்டது )


ramya (subject, un-interesting)


udhayan (beauty. Blurry stem distracted me, rather than pulling me in to the pic)


vinokanth (
அமக்களமா இருக்கு. ஏன் டாப்பு 16 ல் இல்லன்னு எனக்கே தெரியல. பின்னாலிருக்கும் பச்சை a little over powering)


narendran (nice. background over exposed?)


senthilarasu (a little touchup would have helped)








Friday, February 24, 2012

வணக்கம் நண்பர்களே,

நீண்...ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..

இதற்கு முந்தைய பகுதி..


படம் எடுப்பதற்கு முன் கேமராவில் நாம் செய்ய வேண்டிய விசயங்களுக்கு முன் நாம் முதலில் சரியாக செய்யவேண்டியது கேமராவை எப்படி பிடிக்க வேண்டும் என்பது தான்..



ஒரு படம் நல்ல ஷார்ப்பாக வரவேண்டுமென்றால் கண்டிப்பாக கேமரா ஆடாமல் இருப்பது அவசியம்..

அனைத்து இடங்களுக்கும் நாம் tripod எடுத்து செல்ல முடியாது,அனைவரிடத்திலும் tripod இருக்கும் என்று சொல்ல முடியாது..

எனவே முடிந்த வரை நம் கைகளினால் எப்படியெல்லாம் ஆடாமல் படம் எடுக்க முடியுமோ அதை நாம் சரியாக செய்ய வேண்டும்..

கேமராக்களை பிடிப்பதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றது.. ஏனென்றால் அப்பொழுது தான் கேமராக்கள் balance ஆக இருக்கும்.. அப்படி இல்லையென்றால் கண்டிப்பாக படம் தெளிவில்லாமல் தான் வரும்..

சுருக்கமாக சொன்னால் நமது `கைப்பாடு` தான் `ட்ரைபாட்`.

நாம் நினைப்போம் ஏன் ஒரு கையால் படம் எடுக்க முடியாது என்று.. கேமரா ஆடுவது நம்மால் பெரிதாக உணரமுடியாது.. அதே சமயம் zoom அதிகமாக அதிகமாக கண்டிப்பாக ஒரு சின்ன(micro) கை ஆட்டம் கூட படத்தை சொதப்பி விடும்..

அதை படம் எடுத்த பின் சின்ன LCD screenல் பார்த்தால் தெரியாது.. அதை நன்றாக zoom செய்து பார்க்கும் போதோ, பெரிய monitor ல் பார்க்கும் போது தான் நமது தவறு தெரியும்.


சிறிய கேமராக்களை எப்படி பிடிப்பது:

சிறிய கேமரா என்றால் கிட்டதட்ட அனைத்து கேமராக்களிலும் `view finder` இருப்பதில்லை.. இதனால் நாம் படம் எடுப்பதற்க்கு ஒரே வழி `LCD finder`தான்.. அதே சமயம் லென்ஸ் என்பதும் மிக சிறியதாக இருப்பதால் நம்மால் பேலன்ஸாக பிடிப்பதற்கு சிறிய லென்ஸ்கள் உதவாது..

கேமராவை பிடிப்பதற்கு முழு பலமும் நமது shoulder ல் தான் இருப்பதால் கண்டிப்பாக நாம் இரு கைகளையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.. ஒரு கையால் கண்டிப்பாக படம் எடுக்க கூடாது..

நான் ஒரு சிலரை(பலரை) பார்த்திருக்கின்றேன் , கேமராவை ரெண்டு கையில் பிடிப்பதற்கு கூட வளையாமல் ஒரு கையிலேயே படம் எடுப்பார்கள்.. இந்த மாதிரி ஸ்டைல் , பந்தா எல்லாம் ஒரு நல்ல படத்திற்கு ஒத்து வராது..

முடிந்த வரையில் கேமராவில் இருக்கும் strap ஐ கைகளுக்குள் இருக்கமாக பிடித்து கொண்டு படமெடுப்பது சிறிது நன்மை தரும்.


படங்கள் உதவி : vesnakozelj.com







DSLR கேமராக்களை எப்படி பிடிப்பது:


DSLR கேமராக்களை பொறுத்த வரையில் லென்ஸ் வெளியே நீண்டிருப்பதால் நமக்கு இயல்பாகவே நல்ல க்ரிப் கிடைத்து விடுகின்றது..

கேமராவும் கொஞ்சம் வெயிட்டாக இருப்பதால் சிறிய கேமராக்களை விட DSLR ல் ஆட்டம் குறைவாக தான் இருக்கும்..





இயல்பான முறையில் கேமராவை பிடித்தல்







இந்த படங்கள் அனைத்திலும் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் முழங்கைக்கு ஒரு நல்ல support கண்டிப்பாக தேவை என்பது புரியும்.. ஏதோ ஒரு வகையில் முழங்கைக்கு support இருந்தால் படத்தை ஆடாமல் எடுக்கலாம்..


அடுத்த பகுதியில் கேமராவில் செட்டிங்ஸ் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்..

நன்றி
கருவாயன்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff