Wednesday, December 25, 2013

வணக்கம் நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த கிருஸ்துமஸ் மற்றும் 2014 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிட்டின் 2014 ஆம் ஆண்டு காலண்டர் நீங்களே எடுத்த, உங்களுக்குப் பிடித்தமான படத்தை பேஸ்ட் செய்து பிரிண்ட் செய்து கொள்ள ஏதுவாக   template  வடிவமைக்கப்பட்டுள்ளது. 12”X 8” அளவில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

முதலில் இந்த இலவச டெம்லேட்டை இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின்னர் இந்த இலவச டெம்லேட்டை போட்டோஷாப் அல்லது கிம்பில் திறந்துகொள்ளவும்இப்போது Magic Wand டூலை தேர்வு செய்துகொண்டு கிரே வண்ணத்தின் மீது கிளிக் செய்யவும்.
  


இனி,நீங்கள் இந்த templateல் இணைக்க விரும்பும் படத்தினை போட்டோஷாப் அல்லது கிம்பில் திறக்கவும்.இப்போது Select Menu  சென்று Select All என்பதை கிளிக் செய்யவும்(CTRL+A).


இனி Edit>Copy  செய்துகொள்ளவும்(CTRL+C).

பின்னர் template படத்திற்கு வந்து Edit>Paste>Paste Special> சென்று Paste Into என்பதனை அழுத்தவும். இப்போது உங்களது படம் இந்த கிரே நிற Photo frameல் பேஸ்ட் செய்யப்பட்டிருக்கும்.
இப்போது Edit Menu சென்று Free Transform என்பதனை தேர்வு செய்து பிரேமில் சரியாக பொருத்திக்கொள்ளவும்.
(குறிப்பு: படத்தை resize செய்கையில் SHIFT பட்டனை அழுத்திக் கொண்டு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஆக்கவும், இல்லையேல் படமானது Distortion ஆகிவிடும்).

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 
பிட் குழுவின் இனிய 
கிருஸ்துமஸ் மற்றும் 2014 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
***

Tuesday, December 24, 2013

பொகே போட்டியில் இந்த முறை மூன்றாம் இடத்தை இருவரும் முதல் இடத்தை இருவருமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

மூன்றாமிடம்: வில்லி’ G மற்றும் ஆதவா

#வில்லி’ G

#ஆதவா


இரண்டாம் இடம்: மதன்



முதலாம் இடம்: சதீஷ் குமார் மற்றும் சத்தியா
# சதீஷ் குமார்

 # சத்தியா
அனைவருக்கும் PiT குழுவின் 
இனிய கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் படங்கள்.

# மூன்றாம் இடம்: அருண் ஜோஸ்


# இரண்டாம் இடம்: வருண்

முதலாம் இடம்: ரெங்கா

வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்! ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. பொகே போட்டி முடிவு மாலையில் வெளியாகும்.
***

Monday, December 23, 2013

# அருண் ஜோஸ்


#kvp

#முத்துக்குமார்

# Nandhinieral

# அபி


#ரெங்கா


# சுதா


#வின்சென்

#வருண்


ஒன்பது பேருக்கும் வாழ்த்துகள்! 

செந்தில் குமார் அனுப்பிய படம் முதல் சுற்றுக்குள் வருவதற்கான தகுதி பெற்றிருந்தும் இரண்டு போட்டிகளுக்கும் படம் அனுப்பிய காரணத்தால் “பார்வைக்கு மட்டும்” என ஆல்பத்தில் இடம் பெற வேண்டியதாயிற்று. இனி அவ்வப்போது இரண்டு தலைப்புகள் தர PiT குழு முடிவெடுத்திருக்கும் நிலையில் ‘ஒருவர் ஒரு தலைப்புக்கு மட்டுமே படம் அனுப்பலாம்’ என்கிற விதியைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

போட்டி முடிவுகள் விரைவில் வெளிவரும்.
***


Sunday, December 22, 2013

பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அருமையான படங்களைப் பங்களித்திருந்தீர்கள். அவற்றில் முதல் சுற்றுக்கு முன்னேறும் படங்களைப் பார்க்கலாம். எந்தத் தர வரிசையின் படியும் அல்லாமல், சிறந்த பனிரெண்டு படங்கள் இங்கே:

#ஆதவா

#பானு

#மதன்

#பிரபு
#பிரேம்நாத்
#R.N. சூர்யா


#சதீஷ் குமார்

#சத்தியா

#செந்தில் குமார்

#ஷாஜி

#சுதர்ஷன்


#வில்லி’ G

பனிரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்! 

”மூடிய கதவுகள்” போட்டியில் முதல் சுற்றுக்கு முன்னேறியவை நாளை அறிவிப்பாகும்.
***

Monday, December 16, 2013

1970_ல் ஹைதராபாதில் புகைப் படக் கலையில் ஆர்வம் உள்ள ஒரு வக்கீல் நண்பருடன் வாரங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தேன்.

எனக்கு எப்போதுமெ ஒரு பழக்கம் வாகனத்தில் பயணிக்கும் போது எனது கவனம் சாலையில் மட்டும் இராது.  சாலையிலும் அதன் இரு புறங்களிலும் பறந்திடும் பறவைகளையும் பார்த்துக் கொண்டே செல்வேன்.  அன்று என் கண்களில், அலகில் இரையுடன் பறந்து சென்று வயலில் இறங்கிய, ஒரு வானம்பாடி பட்டது.

உடனே காரை நிறுத்தி விட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம்.  நாங்கள் அந்த இடத்தை அடைவதற்குள் அந்தப் பறவை பறந்து சென்று விட்டது.  ஆனால் அதன் கூடும் அதில் இருந்த இரு குஞ்சுகளும் என் கண்ணில் பட்டன.  நண்பர் நான் பார்த்த்தைக் கவனிக்க வில்லை.  உடனே அந்தக் கூட்டைச் சுற்றி ஒரு ஆறடி ஆரத்தில் ஒரு வட்டக் கோடு போட்டு, “இந்த வட்டத்திற்குள் ஒரு பறவையின் கூடு இருக்கிறது.  உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?” என்று கேட்டேன்.  அவர் சுற்றிச் சுற்றி வந்தார்.  ஆனால் அவரால் கூட்டினைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  காரணம் அது சுற்றுப் புரத்தோடு அவ்வளவு அழகாக ஒன்றி இருந்த்து.

நண்பர் கூட்டின் மீது கால் வைத்திடப் போகும் சமயம் அவரைத் தடுத்து நிறுத்தி அவருக்கு அந்த வானம்பாடியின் கூட்டினையும் அதில் இருந்த இரண்டு குஞ்சுகளையும் காட்டினேன்.  பின்னர் தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்ட வந்த போது அந்த அழகினை தூரத்தில் இருந்து படம் பிடித்தேன்.  அந்தப் படம் இதோ:

#1

(சாம்பல் தலை வானம்பாடி – Ashy crowned  finch lark
புகைப்படம்: நடராஜன் கல்பட்டு)
வானம்பாடிக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?

சாதாரணமாக பிப்ரவரி முதல் ஜுலை வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.  பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும்.  அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிஷங்களுக்குக் கூட நிகழும்.  பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே சில மீடர் தூரம் இறங்கி தன் இறக்கைகளை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.  இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.

இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும்.
#2
(ஆகாசத்துலெ இருந்து நான் பாடற பாட்டு ஒங்களுக்குப் புடிச்சிருக்கா?
படம்: இணையத்திலிருந்து..)
இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண் குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

வானம்பாடியின் இசை கேட்டிட இந்தச் சுட்டியில் அழுத்தவும் (Control + Click)
http://www.youtube.com/watch?v=tkk7bnTG5JM&feature=related

நம் நாட்டில் மூன்று வித வானம்பாடிகள் உள்ளன.  அவை ஆகாசத்து வானம்பாடி (Sky lark),  சாம்பல் நிறத் தலை கொண்ட வானம்பாடி (Ashy crowned finch lark)  மற்றும் கொண்டை கொண்ட வானம்பாடி (Crested lark) என்பவை ஆகும்.


#3

(ஆகாசத்து வானம்பாடி - Sky lark
படம்: கல்பட்டு நடராஜன்)
#4
(கொண்டை கொண்ட வானம்பாடி – Crested lark
படம்: இணையத்திலிருந்து..)
பள்ளி நாட்களில் இந்தக் கதையைப் படித்திருப்பீர்கள்.
 
ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.  ஒரு நாள் இரையுடன் திரும்பிய தாய்ப் பறவையிடம் குஞ்சுகள், “அம்மா, அம்மா... இன்று இருவர் வந்திருந்தனர்.  ஒருவர் சொன்னார் நெல் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன.  வெளி ஊரில் உள்ள நம் சொந்தக் காரர்களுக்கு சேதி அனுப்பி அவர்கள் வந்ததும் அறுவடை செய்ய்ய வேண்டும் என்று.  எங்களுக்கு பயமா இருக்கம்மா.  வேறெ எங்கயாவது போயிடலாம்மா” என்றன.

தாய்ப் பறவை சொல்லிற்று, “கவலைப் படாதீங்க.  மறுபடி அவங்க வந்து பேசினா கவனமாக் கேட்டு எங்கிட்டெ சொல்லுங்க என்ன பேசிகிட்டாங்கன்னு.”  “சரிம்மா” என்றன குஞ்சுகள்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு குஞ்சு சொல்லிற்று, “அம்மா, அம்மா இன்னெக்கி மறுபடி அந்த ஆளுங்க வந்து பேசிக்கிட்டாங்க சொந்தக் காரங்க வரதாக் காணும்.  கூலி ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பலாம்னு.  அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா.  ஆளுங்க வந்து எங்களெ மிதிச்சுட்டா நாங்க செத்துப் போயிடுவோமேம்மா.”

தாய்ப் பறவை, “கவலைப் படாதீங்க.  மறுபடி வந்தா என்ன பேசினாங்கன்னு கவனமா கேட்டு சொல்லுங்க,” என்றது.

மறு நாள் மாலை, “அம்மா, அம்மா இன்னெக்கி அவர் சொல்லிட்டு இருந்தார், ஆளுங்க வர்ரதாக் காணும்.  நாளெக்கி நாமே வந்து அறுவடை செஞ்சிடலாம்னு,”  என்றது ஒரு குஞ்சு.  இதைக் கேட்ட தாய்ப்பறவை, “இப்போ நாம வேறெ எடத்துக்குக் கெளம்ப வேண்டியதுதான்” என்று சொல்லி ஒவ்வொரு குஞ்சாக வாயில் கவ்விச்சென்று பாதுகாப்பான இடத்திற்கு குஞ்சுகளை மாற்றியது.


இந்தக் கதையில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.  ஒன்று தன் கையே தனக்குதவி என்பது.  மற்றொன்று வானம்பாடி தரையில் கூடு கட்டும் என்பது.

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள், வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே செடிகளின் வேர் அருகே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர், இலை, சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை வானம்பாடி அமைக்கும்.  குஞ்சுகளுக்கு இரை அளிப்பது ஆண் பெண் இரண்டு குருவிகளுமே.

இயற்கையில்தான் பார்த்து ரசித்திட எத்தனை அழகிய காட்சிகள்!  காட்டிலும் மேட்டிலும் சுற்றித் திரியும் போது நீங்கள் சுவாசிக்கும் தூய்மையான காற்றே ஒர் அலாதி சுகமளிக்கும்.  கூட்டுப் புழுவாய் வீட்டுச் சுவற்றுள் அடைந்து கிடக்காது வெளியே வாருங்கள்.  இயற்கையின் அழகினக் கண்டு ரசியுங்கள்.

(வண்ணப் படங்கள் மட்டும் இணைய தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை)
***

Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


Monday, December 9, 2013

#1
பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும்.
ம்மாதத் தலைப்பான ‘பொகே’ அல்லது ‘பொகா’ குறித்து அறியாதவர்களுக்காக இந்தப் பதிவு. சிலருக்கு இதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பதை அறிய முடிந்தது. தலைப்பு அறிவிப்பான பிறகே இணையத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர். தேடிப் புரிந்து கொள்ள முடிந்தால் நன்றே. அப்படி முடியாதவருக்கு தமிழில் அறியத் தருவதற்காகதானே PiT. அதுவுமில்லாமல் வித்தியாசமான, சவாலான தலைப்புகளின் மூலம் போட்டியைப் பிரிப்பதால் அறியாத விஷயங்களை வாசகர்களுக்குத் தர முடிகிறது என்பதையும் இது உணர்த்தியது. நடுவர் ஆனந்த் ஆரம்பித்து வைத்த இம்முறை அவ்வப்போது இனி தொடரும்:)!

Bokeh எனும் சொல் ஜப்பானிய மொழியில் ‘மங்கிய’ (blurred) எனும் அர்த்தம் கொண்டதாகும். ஆங்கிலத்துக்கு வந்த விட்ட இச்சொல் பொகே, பொகா, போக்கி எனப் பலவிதமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. நாம் பொகே எனப் பார்ப்போம்:).

சொல்லப்போனால் அவுட் ஆஃப் போகஸாக, மங்கலாக நாம் காண்பிக்கிற ஒரு இடம் அதிக கவனத்தைப் பெறுகிறது:).   சப்ஜெக்டின் பின்னணி அல்லது முன்னணி(background/foreground)யை சற்றே மங்கலாக்கி சப்ஜெக்டைத் தனித்துக் காட்டும் விதத்தை “depth of field” எனக் குறிப்பிடுவோம் இல்லையா? அப்படி செய்கிற போது அமைகிற அந்த blurred backround.. மங்கலான பின்னணியின் தரம்.... ஒளியை அப்பகுதி பிரதிபலிக்கிற விதம்.... இவையே ‘பொகே’  என ஒளிப்படக் கலைஞர்களால் கொண்டாடப்படுகிறது. கீழ்வரும் படத்தைப் பாருங்கள்.

#2

இதில் காகம் ஷார்ப்பாகவும் ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது படத்தின் “depth of field" உள்ளே வருகிறது. பின்னணி அவுட் ஆஃப் ஃபோகஸில் (அதாவது பின்னணி depth of field-க்கு வெளியே) உள்ளது. இப்படத்தின் shallow (ஆழமில்லாத) DOF-க்கு காரணம் லார்ஜ் அப்பெச்சரில், சப்ஜெக்டுக்கு சற்றே அருகாமையில் இருந்து, அதாவது சுமார்  ஐந்தடி தொலைவில் நின்று எடுத்தது என்பதால். பின்னால் தெரியும் மென்மையான வட்டங்கள் ஒளியின் பிரதிபலிப்புகள். ஏன் வட்டமாக உள்ளன என்றால் அந்தந்த லென்ஸுகளின் diaphragm அமைப்புக்கேற்ப வடிவம் கிடைக்கும். இது 55-200mm பயன்படுத்தி எடுத்ததாகும். இந்தப்படத்தின் அந்த மென்மையான வட்டங்கள் உள்ள பகுதி “நல்ல பொகே” ஆகக் கருதப்படுகிறது. சில கலைஞர்கள் அழுத்தமாகக் கிடைக்கும் வட்ட வடிவ ஒளிப்பிரதிபலிப்புகளே “நல்ல பொகே” என வாதிடுவதுண்டு.

ஆனால் எது நல்ல பொகே, எது சுமார் என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைதான். ஆக, பொகே என்பது வட்டம் எவ்வளவு எவ்வளவு அழுத்தம் திருத்தம் என்றெல்லாம் பார்க்காமல் மொத்தமாக அவுட் ஆஃப் போகஸ் ஏரியா எப்படிக் கவருகிறது என்பதே ஆகும்:
#3


இன்னும் சொல்லப்போனால் அவுட் டோர் படங்களில் கிடைக்கிற வட்டம் திருத்தமாய் வரைந்த மாதிரி இல்லாமல் அதாவது ஓரங்கள் தெளிவற்று இருந்தால் அழகோ அழகென்றும், க்ரீமி பொகே என்றெல்லாமும் கொண்டாடுகிறார்கள்:
#4


டுத்து உள்ளரங்கில் பொகே படங்கள் எடுப்பது குறித்துப் பார்ப்போம்.

கிறுஸ்துமஸ், புதுவருடக் கொண்டாட்டங்களின் ஒளி விளக்குகள் பொகே படத்துக்கு பொருத்தமானவை.

நினைவிருக்கட்டும். பொகே என்பது கேமராவை விட லென்ஸை சார்ந்தது. ஒவ்வொரு விதமான லென்ஸும் அது வடிவமைக்கப்பட்ட விதத்தில் வெவ்வேறு விதமான பொகேயை வழங்கும்.

உங்கள் லென்ஸின் பெரிய அப்பெச்சர்(சிறிய f நம்பர்) வைத்து எடுக்க வேண்டும். 

அப்பெச்சர் ப்ரையாரிட்டியிலேயே எடுக்கலாம். அல்லது மேனுவல் மோடில் எடுக்கலாம். கீழ்வரும் படங்கள் நான் Nikkor 50mm f/1.8 உபயோகித்த எடுத்தவை.  படம் 5 மேனுவல் மோடிலும் படம் 7 அப்பெச்சர் ப்ரையாரிட்டியிலும் எடுத்தது:

#5
Exif: 1/20s, f/2.5 , ISO400
Nikkor 50mm f/1.8

எடுத்த செட்டிங்கை மறுபடி அமைத்து உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.  இது பகல் நேரத்தில் எடுத்தபடம் உங்கள் புரிதலுக்காக:)!இரவில் எடுக்கும் போது அறைவிளக்கையும் அணைத்து விட வேண்டும்.
#6


சீரியல் விளக்குகளை இப்படி இடப்பக்கம் சுவரில் தொங்க விட்டுக் கொண்டேன். (சன்னல் போன்றவற்றில் தவிர்க்கவும். Plain பின்னணி அவசியம். அறைக்கதவுகளையும் உபயோகிக்கலாம்.) சப்ஜெக்டான அகல் விளக்கிற்கும் சீரியல் விளக்கிற்கும் இடையே சுமார் பத்தடிகள் இருக்கிற மாதிரி அமைத்திருந்தேன்.  பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும். ஆனால் நினைவிருக்கட்டும், கேமரா பொருளுக்கு மிக அருகாமையில்  (55-200mm போன்றவற்றில் லென்ஸ் அனுமதிக்கும் தூரத்தில், அதிக பட்ச zoom-ல்) இருக்க வேண்டும்.  பொருளும் கேமராவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும்.  பின்னணி சீரியல் விளக்கும் வ்யூ ஃபைண்டரில் அதே லெவலில் தெரிய வேண்டும். வொயிட் பேலன்ஸை பின்னணி ஒளி தரும் விளக்குகளுக்கு ஏற்ப (ஃப்லோரசண்ட், டங்ஸ்டன்) செட் செய்திடுங்கள்.


#7

Exif: 1/20s, f/2.5, ISO220
Nikkor 50mm f/1.8

அகல் விளக்கும் ஒளி தருவது என்பதால் f/1.8 வைக்காமல் f/2.5 வைத்து எடுத்தேன். இதே இடத்தில் ஒரு கோப்பை (அ) குடுவை வைத்து அதிலிருந்து பொகெ வெளிவருகிற மாதிரி எடுப்பீர்களானால் 1.8 நல்ல ரிசல்ட் தரும்.  50-200mm போன்ற லென்சுகளில் அதில் கிடைக்கும் அதிக பட்ச அப்பெச்சரான f3.5 -யில் செட் செய்திடலாம். கோப்பை வைத்து..

#8




#9


#10 படம்: ஆனந்த்


 கோப்பை வைத்து எடுக்கையில் அதையும் நாம் சாஃப்டாக ஒளியூட்டுதல் அவசியம். அதற்கு பக்கவாட்டிலிருந்து ஒரு டேபிள் லாம்ப் மூலமாக ஒளி கொடுக்கலாம். அல்லது பக்கத்து அறை விளக்கைப் போட்டு அதிலிருந்து கோப்பைக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெறலாம்.

இத்தனை மெனக்கிடாமல் வெளியிடங்களில் கிறுஸ்துமஸ் புத்தாண்டு அலங்கார  விளக்குகளை மட்டுமே பொகே படங்களாக்கலாம். அப்போது ட்ரைபாட் இருக்காது என்பதால் கவனமாகக் கேமராவைக் கையாள வேண்டும். ஷட்டர் ஸ்பீடை சற்று அதிகமாக வைத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் நினைவில் நிறுத்த வேண்டியது இந்த 3 விஷயங்கள்:
1.லார்ஜ் அப்பெச்சர் (சின்ன f நம்பர்);
2.சப்ஜெக்ட் மேல் க்ளோஸ் ஃபோகஸ்,
3.நல்ல தொலைவில் பின்னணி (reasonable good distance between the subject and the background).

விதவிதமான வடிவங்கள்

பொகேயின் வடிவங்கள் கேமரா லென்ஸுகளின் டயப்ரமைப் (diaphragms) பொறுத்ததெனப் பார்த்தோம்.  ஏழு நேர் ப்ளேடுகளைக் கொண்ட பழைய Nikkor 50mm f/1.4 லென்ஸுகளின் diaphragm ஹெப்டகன் வடிவ பொகேயைக் கொடுத்தன. ஹெக்ஸகன் வடிவ பொகே கொடுக்கிற லென்ஸுகளும் உள்ளன. தற்போது வருகிற பெரும்பாலான லென்சுகள் 9 வட்ட வடிவ ப்ளேடுகளைக் கொண்டே வருவதால் அவற்றின் பொகே வட்டங்களாகவே அமைகின்றன.

வித்தியாச வடிவத்துக்கு லென்ஸை மட்டும் சார்த்திருக்கத் தேவையில்லை:)!

#9

#10

படங்கள் 9.10 இணையத்திலிருந்து..

இது போல நாமே லென்ஸின் விட்டத்துக்கு ஒரு அட்டையை வெட்டிக் கொண்டு அதன் நடுவே பூ, இதயம், நட்சத்திரம் போன்ற வடிவங்களை ஏற்படுத்திடலாம். அவற்றைக் கீழ்வருமாறு அட்டையில் ஒரு cap தயாரித்து அதின் மேலே பொருத்தி லென்ஸில் மாட்டிக் கொண்டால் ஆயிற்று. வண்ணங்களோடு வடிவங்களும் உங்கள் வசம்:)!
***
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff