Sunday, July 28, 2013

சில நேரங்களில் சிலப் பல மனிதர்களுக்கு, இம்மாதிரி தேவைகள் ஏற்படும். அதாகப்பட்டது, இரண்டு புகைப்படங்களை, ஒன்றாய் இணைத்து, ஒரே படமாய் மாற்ற வேண்டிய அவா. ***

**அப்படிப்பட்ட அவா சமீபத்தில் எனக்கு ஏற்பட்டது. கீழே உள்ள இரண்டு படங்களை இணைக்க வேண்டிய கட்டாயம். Gimpல் இதை 'சுலபமாய்' செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
முதல் பட பாப்பாவை இடது மூலையிலும், இரண்டாம் பட பாப்பாவை வலது மூலையிலும் வருமாறு செய்ய ஆயத்தமானேன்.

முதல் படத்தை, Gimpல் திறந்து,  Image->Transform->Flip Horizontally என்று செய்து கொண்டதும், பாப்பா இடது மூலைக்கு சென்று விட்டான். இப்படி.

அடுத்ததாக, இந்தப் படத்தின் அளவை பெரிது படுத்தி, வலப்பக்கம், இரண்டாம் படத்தை சொருக இடம் ஏற்படுத்தணும்.
image->canvas size தெரிவு செய்து, Widthஐ, இரண்டு மடங்காக அதிகரித்துக் கொள்ளவும். படத்தின் வலப்பக்கம் இப்பொழுது, ஒரு வெற்றிடம் வந்துவிடும்.

இப்பொழுது, இரன்டாம் படத்தை file->open மூலமாய் திறந்து, Select->All தெரிவு செய்து, Ctrl+C செய்தால், அந்தப் படம் காப்பி ஆகிவிடும். (or drag&drop 2nd pic into the 1st pic, and move)

முதல் படத்துக்குச் சென்று, ctrl+v செய்து, tools->transform tools->Move தெரிவு செய்து, paste செய்த படத்தை, வலப்பக்கம் நகர்த்திக் கொண்டால், இப்படி ஒரு படம் கிட்டும்.


கிட்டத்தட்ட வேலை முடிஞ்ச மாதிரி. ஆனா, படத்தின் நடுவில், இரண்டு வெவ்வேறான படம் என்பதை காட்டிக் கொடுத்து விடும் அளவுக்கு, அந்த 'ஒட்டு' கோடு தெரியும்.

image->flatten image செய்து கொள்ளவும்.

அப்பாலிக்கா, நடுவில் இருக்கும் ஒட்டு கோடு மட்டும், tools->Selection->Rectangular select மூலம், குட்டியாக ஒரு கட்டம் கட்டவும்.  அந்த நடுப் பக்கத்த தெரிவு செய்ததும், Filter->Blur->Gaussian Blur மூலமாய், சற்று மங்கலாக்கினால், ஒட்டு பட்டது, பெரிய அளவுக்கு தெரியாமல், படம் இப்படி ஆகிவிடும்.


இப்படி நீட்டி முழக்கி செய்யாமல், சடக்கென்று செய்ய, 'stitch' plug-inகளும் gimpல் இருக்கிறது. கூகிளினால் கிட்டும். விக்கியார் இதையும் விட்டு வைக்காமல், ஒட்டுதலின் பின்னணியை விளக்கியுள்ளார் இங்கே

1) open pic1
2) flip horizontally, as desired
3) increase canvas size to accommodate pic2
4) open pic2 and ctrl+c to copy
5) paste into pic1
6) Move and adjust as desired
7) flatten image
8) select the middle section
9) blur the middle section
10) save new image

இதை விட சுலப வழி தெரிந்தவர்கள், பின்னூட்டத்தில் தெரிவித்தால், உதவும்.

நன்றீஸ்.

-சர்வேசன்

Saturday, July 20, 2013


தி இந்து நாளிதழின் ஷட்டர்பக் அறிவித்திருக்கும் அகில இந்திய அளவிலான இம்மாதப் போட்டி ‘உழைக்கும்  முதியோர்’.

வயிற்றுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர்; உடம்பில் தெம்பில்லாவிட்டாலும் மன பலத்துடன் வாழும் வரை தன் காலில் நிற்கவேண்டும் என்கிற உறுதியோடு சிலர்; தள்ளாத வயதிலும் குடும்பத்துக்கான தம் பங்களிப்பைக் கொடுத்தாக வேண்டிய சூழலில் சிலர் எனக் காரணங்கள் வெவ்வேறாக இருப்பினும் நாடெங்கிலும் இவர்களது எண்ணிக்கை அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

இது குறித்த ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்துடன் பிர்க்பெக் பல்கலைக் கழகம், லண்டன் மற்றும்  மனித உரிமை காப்புறுதி ஆய்வு மையம், சென்னை ஆகியவற்றோடு கை கோர்த்து ‘தி ஹிந்து’  இப்போட்டியை அறிவித்திருக்கிறது.  இந்நிலையில் மாற்றம் கொண்டு வர இந்த ஆய்வு உதவும் என நம்புகிறது.

பரிசு விவரங்கள்:

முதல் பரிசு ரூ.20000/-, இரண்டாம் பரிசு ரூ.10000/-; மூன்றாம் பரிசு ரூ. 5000/- மற்றும் 3 ஆறுதல் பரிசு பெறுகின்றவருக்குப் பாராட்டுப் பத்திரங்கள். வந்துபடியே இருக்கும் ஆயிரக்கணக்கான படங்களில் அதிக வாக்கு பெறும் ஒரு படத்துக்கு ரூ.5000/-. உழைக்கும் முதியோர் நிலை குறித்த செய்தி எல்லோரையும் சென்றடைய வேண்டும், பலரும் படங்களை பார்வையிட வேண்டும் எனும் நோக்கத்துடன் வாக்களிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடும் அமைப்பாளர்கள் அதற்கானக் கடைசித் தேதி 28 ஜூலை  இரவு 11 மணி வரையில் என அறிவித்து ஒருமாத காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். போட்டி முடிவுகள் 31 ஜூலை இணையத்திலும், 4 ஆகஸ்ட் பத்திரிகைகளிலும் வெளியாகும்.  விரிவாக இதைப் பற்றி அறிய இங்கேயும் விதிமுறைகளுக்கு இங்கேயும் செல்லலாம்.

விதிமுறைகள் தமிழில் இங்கேயும்:

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி, நாளை 21 ஜூலை இரவு 11 மணி .

* படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* இந்தியாவுக்குள் கடந்த 12 மாதங்களுக்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
* ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
* படங்களின் அளவு 1.5 MB-க்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். அவர்கள் கேட்கும் பட்சத்தில் அதிக ரெசலூஷனில் (பிக்ஸலில்) கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
* உங்களுக்குப் பிடித்தமான எத்தனை படங்களுக்கும் வாக்களிக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு படத்துக்கே வாக்களிக்க இயலும்.
* இணையம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

பரிசுகளைத் தாண்டி, ஒரு நல்ல நோக்கத்துடன் நடைபெறுகிற போட்டிக்கு உங்கள் பங்களிப்பையும் தரலாமே. நாளை இரவு வரை இருக்கிறது நேரம்.
***


Saturday, July 6, 2013


 இந்த மாதத்திற்கான தலைப்பு பை(கள்).. 

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 20-7-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

 ***

சாம்பிள் படங்கள்

# ஐயப்பன் கிருஷ்ணன்.


# ராமலக்ஷ்மி # MQNaufal 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff