Monday, February 25, 2013

புகைப்படஙகளில் நேர்த்தி - 6.. APERTURE என்றால் என்ன?

9 comments:
 






 
ஏன் aperture ஐ மாற்ற வேண்டும்? அது தான் கேமராவே சரியாக பார்த்துக்கொள்கின்றதே,பின் எதற்கு நாம் அதை கவனிக்க வேண்டும்?

அதற்கு முன்,aperture என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்,

APERTURE என்றால் என்ன?

பொதுவாக கேமராக்களை பயன்படுத்துபவர்கள் பொரும்பாலோனோர் குழம்புவது இந்த aperture என்றால் என்ன,இதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றியாக தான் இருக்கும்..

இதை பற்றி சுறுக்கமாக சொல்வது எனபது சற்று கடினம்..ஆனால், சற்று பொறுமையாக புரிந்துகொண்டால் இது ஒன்றும் பெரிய விசயமில்லை..

APERTURE என்பது லென்ஸ் வழியாக கேமராவுக்குள் ஒளி செல்வதற்காக திறக்கப்படும் பாதையின் அளவை குறிப்பதாகும்..அந்த பாதை, இந்த படங்களை பார்த்தால் புரியும்..

 
இது ஒன்றுமில்லை,எப்படி நம் கண்களை விரித்து அகலமாக பார்த்தால் நன்றாகவும்,கண்களை சுறுக்கி பார்த்தாலோ அல்லது சிறிய குழாய் வழியாக பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படி தான்.. இதை தான் photographyல் aperture என்கிறோம்..

நாம் சற்று மங்கலான வெளிச்சங்களில் எப்படி உஷாராக கண்களை அகலமாக பார்ப்போம் இல்லையா...அதே மாதிரி தான் லென்ஸும், படம் எடுக்கும் போது வெளிச்சம் குறைவாக இருந்தால் லென்ஸில் aperture ஐ அகலமாக்க வேண்டும்..

இந்த பாதை அகலமாக திறந்தால் வெளிச்சம் அதிகமாகவும்,குறைவாக திறந்தால் வெளிச்சம் குறைவாகவும் கேமராவுக்கு கிடைக்கும்

 


மேலே உள்ள படத்தில் முதலில் இருப்பது குறைவான aperture பயன்படுத்தியது.. அதாவது          f 24 ற்கும் மேல் என்று இருக்கலாம்.. இதனால் வெளியிலிருந்து வரும் வெளிச்சம் ,லென்ஸ் வழியாக கேமராவுக்குள் செல்லும் போது வெளிச்சம் குறைவாகின்றது.. இதனால் நமக்கு shutter speed குறைவாக தான் கிடைக்கும்..

அதற்கு கீழே உள்ள லென்ஸ் படத்தில் அதிக aperture பயன்படுத்தப்பட்டுள்ளது.. f1.8 என்று இருக்கலாம்.. இதனால் வெளிச்சம் கேமராவுக்கு அதிகம் செல்வதை நாம் பார்க்கலாம்..



APERTURE அளவுகள்:

aperture அளவுகள் என்பது சில குறிப்பட்ட நம்பர்களால் அளவிடப்பட்டுள்ளது.. இதை லென்ஸ்களிலும், சிறிய கேமராக்களிலும் நாம் பார்க்கலாம்.. இது தொடர்பான பழைய பதிவு இங்கே..


பொதுவாக சராசரி மனிதர்களின் கண்களின் aperture என்பது f 2.0 முதல் f 8 வரையில் திறக்கும் என்று தோராயமாக கணக்கிட்டுள்ளார்கள்

 
aperture அகலமாக( wide aperture ) திறக்க திறக்க குறைவான நம்பர்களால் குறிப்பிடப்படுகின்றன(உ.ம். f 2.8 , f2.0,f1.8)..  

இந்த மாதிரி அகலமாக பயன்படுத்தும் போது வெளிச்சம் நமக்கு அதிகமாக கிடைக்கும், இதனால் நாம் shutter speed ஐ அதிகம் அமைக்கலாம்..shutter speed அதிகம் கிடைத்தால் படத்தை shake, blur இல்லாமல் sharp ஆக படம் எடுக்கலாம்..

இதே அகலத்தை குறைக்கும்( narrow aperture ) போது , இதன் அளவு, அதிக நம்பர்களால் குறிப்பிடப்படுகின்றன( உ.ம். f8 , f11 , f32).. 

இந்த மாதிரி பயன்படுத்தும் போது நமக்கு குறைவாக தான் shutter speed அமையும்.. இதனால் படங்கள் எடுக்கும் மிகுந்த கவனத்துடன் கேமராவை ஆடாமல் எடுக்க வேண்டும்..

இது எப்படி என்றால்,
உதாரணமாக, f 8 என்கிற aperture ஐ பயன்படுத்தும் போது, ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்தில் நமக்கு shutter speed என்பது 1/20 secs.. கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இதனால ,நம்மால் blur ,shake இல்லாமல் படத்தை எடுப்பது சற்று கடினமே..

இப்போது ஒளியின் பாதையை(aperture) f 3.5 என்று  திறந்து அகலமாக்கினால், அதே வெளிச்சத்தில் நமக்கு 1/160 secs என்று shutter speed அதிகரிக்கும்..இந்த shutter speed ல் நம்மால் எளிதாக blur , shake இல்லாமல் அதே வெளிச்சத்தில் படம் எடுக்கமுடியும்..
 
சரி, அதிக அளவு அகலம் என்பது தான் நல்லது , இதனால் தான் வெளிச்சம் அதிகம் வரும் என்றால், பின் எதற்கு குறைவான அகலம் எல்லாம்?
 
என்ன தான் நாம் aperture ஐ அகலமாக திறந்தால் வெளிச்சம் அதிகம் வரும் என்றாலும், குறைவான aperture ( f 8 , f11 , f32) பயன்படுத்தும் போது தான் படத்தில் area of sharpness கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும்.. இதை தான் depth of field(DOF) என்று சொல்வார்கள்..

அதிக aperture( குறைவான f number)  ஐ பயன்படுத்தும் போது குறைவான DOF ம் , குறைவான (அதிக f number) aperture ஐ மாற்ற மாற்ற அதிக DOF ம் கிடைக்கும்..

இதையும் நாம் கண்களை சுறுக்கமாகவும் , அகலமாகவும் திறந்து ஒரே இடத்தை பார்த்தால் புரியும்..

அதனால் தான் aperture என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது..இதை பற்றி விளக்கங்களுடனும், 
programme mode ல் கேமராவே சரியாக aperture ஐ பார்த்துக்கொள்கின்றதே,பிறகு எதற்கு நாம் அதை கவனிக்க வேண்டும்? என்பதையும் அடுத்த பகுதியில் பார்ப்போம்..

அன்புடன் 
கருவாயன்..

9 comments:

  1. விளக்கங்கள் அருமை...

    அடுத்த பகிர்வை ஆவலுடன்... நன்றி...

    ReplyDelete
  2. எளிமையான விளக்கம்.

    ReplyDelete
  3. nice article. thanks

    ReplyDelete
  4. thanks .... its very useful 4 my examination...

    ReplyDelete
  5. Thanks.... But I can't download this pdf... Pls help

    ReplyDelete
  6. I suppose to write on tamil, i dont have tamil font in sys. Godd one, make lot of sense. மகிழ்ச்சி

    ReplyDelete
  7. அனைத்து விளக்கமும் அருமை Sir

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff