Friday, October 26, 2007

உணவு புகைப்படக்கலை சார்ந்த நமது PIT மாதாந்திர போட்டி நடத்துவதற்கு முன்னாலேயே இதை காட்டியிருக்கலாம். ஆனால் இன்று தான் இது என் கண்ணில் பட்டது,அதான் உங்க கிட்ட காட்டலாமேன்னு.....

Better late than never!! :-)


Tuesday, October 23, 2007

நண்பர்கள் என்னிடம் புகைப்படத்துறை சம்பந்தமாக கேட்கும் பல விஷயங்களில் முதன்மையான கேள்வி
என்ன கேமரா வாங்கலாம்???

இதற்கு என்ன பதில் சொல்லலாம் என்றே எனக்கு தெரியாது.ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை,பட்ஜெட்,ஆர்வம்,திறமை எல்லாம் உண்டு. இப்படி பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முடிவு இது.இதில் முக்கால்வாசி விஷயங்களை அவங்களே யோசிச்சு பாத்து தான் சொல்ல முடியும்,நாம ஒன்னும் சொல்ல முடியாது்.இன்னும் சொல்லனும்னா,ஒரு விதமான கலந்தாலோசனை (counselling) வெச்சு முடிவு பண்ற அளவுக்கு சீரியசான மேட்டரு இது!! :-)
அவங்கவங்களே நிறைய கூட்டி கழிச்சு பாத்து ,ஆராய்ச்சி பண்ணிதான் வாங்கியாகனும்.அப்படி முடிவு பண்ணுறதுக்கு என்னவெல்லாம் யோசிக்கனும்னு இந்த பதிவுல பாக்கலாம்.

1.) தேவை : மொதல்ல நீங்க வாங்கப்போகிற கேமராவில் என்னவெல்லாம் வேண்டும் என்று முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
கேமரா எதுக்கு பயன்படுத்தப்போறோம்?? சும்மா நண்பர்கள் கூட படம் எடுத்துக்கறதுக்கா?? ஆர்வத்தோட இந்த கலையை கத்துக்கிட்டு இதுல திறமையை வளர்த்துக்கொள்வதற்கா,இதை வைத்து காசு பண்ணுவதற்கா?? இப்படி...

எந்த மாதிரி படம் எடுக்க போறோம்?? பெரும்பாலும் இயற்கை காட்சிகளையா(landscape)?? இல்லை மக்களையா(portraits)?? இல்லை விளையாட்டு நிகழ்வுகளையா?? (sports) ..... இதுமாதிரி

புகைப்படக்கலையில் அறிவு..ஏற்கெனவே ஏதாவது கேமரா வெச்சிருந்து என்னென்ன ஃபீச்சர்ஸ் எல்லாம் இருக்கு அதெல்லாம் எப்படி பயன்படுத்தனும்னு தெரியுமா?? இல்ல இப்போதான் புதுசா வாங்க போறீங்களா?? எதையும் மாத்தாம சும்மா auto mode-ல போட்டுட்டு சுட்டு தள்ள போறீங்களா??

எந்த மாதிரி சிறப்பு அம்சங்கள் வேணும்?? ஜூம் அதிகமா இருக்கறது அவசியமா??LCD திரை பெருசா இருக்கனுமா?? ராத்திரி நல்லா படம் எடுக்கறா மாதிரி வேணுமா??கை உதறல்களை சமாளித்து தெளிவான படங்கள் தர தொழில்நுட்பம(Image stabilisation)் வேணுமா??

பையில எவ்வளவு காசு இருக்கு??
இப்படி ஏகப்பட்ட விஷயங்களை முதலில் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

2.) எவ்வளவு MP வாங்கலாம்??
மொதல்ல இந்த MP என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.MP என்பது megapixel என்பதன் சுருக்கம். உங்கள் படத்தில் உருவாகும் காட்சி எவ்வளவு புள்ளிகள் மூலம் உருவாக்கபடும் என்பதையே இந்த MP சுட்டி காட்டுகிறது.
உங்கள் கணிணியில் display settings-இல் 16bit,24bit என்று உள்ளது அல்லவா!!அதே மேட்டர்தான் இதுவும். உங்கள் படங்கள் எல்லாம் பிரிண்ட் போட போகிறீர்கள் என்றால் அதிகப்படியான MP இருப்பது நல்லது.மற்றபடி 5 MP-க்கு மேற்படியாக எவ்வளவு இருந்தாலும் சரிதான்!! இரண்டு கேமாராக்களில் ஒன்று 6MP இருந்து இன்னொன்றில் 7MP என்று இருந்தால் அதிகப்படியான MP தான் நல்லதா என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டும்.
MP அதிகமாக அதிகமாக உங்கள் படத்தின் அளவுதான் பெரிதாகிக்கொண்டு போகும். ஆனால் என்ன? MP அதிகமாக இருந்தால் படம் எடுத்துவிட்டு அதன் மேல் cropping போன்ற மற்ற பிற்தாயாரிப்பு உத்திகளை பயன்படுத்தினால் தாங்கும். கம்மியான MP-இல் கொஞசம் வெலை செய்தாலே படத்தின் பளபளப்பு குறைந்துவிடும்!

3.)எவ்வளவு zoom வாங்கலாம்?
பல பேர் முடிஞ்ச வரைக்கும் ஜூம் அதிகமா இருக்கற கேமரா வாங்கறதுதான் நல்லது அப்படின்னு நெனைச்சிட்டு இருக்காங்க. தூரக்க இருக்கற காட்சிகளை எடுப்பதற்கும் கிட்டக்க இருக்கற பொருட்களை பெரிதாக எடுப்பதற்கும் இந்த அதிகப்படியான ஜூம் உபயோகமா இருந்தாலும்,பல சமயங்களிலே அவ்வளவு ஜூம் தேவையே படாது. அதுவும் ஒளியின் அளவு கம்மியாக இருந்தால் அதிகமா ஜூம் பண்ணா கேமரா ஃபோகஸ் பண்ணாது.அதனால அதிகமா ஜூம் இருந்தாலே எல்லா சமயமும் கிட்டக்க /பெரிதாக எடுக்கலாம் என்று சொல்ல முடியாது.அதுவுமில்லாம அதிகமா ஜூம் பண்ண பண்ண படத்தின் ஷேக் அதிகமாக வரும்,அதனால் உங்க கிட்ட மிக மிக உறுதியான கைப்பிடி இருந்தாலோ அல்லது முக்காலி இருந்தாலோ ஒழிய அதிகப்படியான ஜூமில் நல்ல படங்கள் வராது.
அதுவுமில்லாமல் கேமராவில் ஜூம் அதிகமாக இருந்தால் அதற்கேற்றார்போல் கேமராவும் பெரிதாக இருக்கும். புகைப்படக்கலையில் பெரிதாக ஆர்வம் இல்லையென்றால் ஒன்றிரண்டு மாதங்களில் அவ்வளவு பெரிதான கேமராவை வெளியில் எடுத்து புகைப்படம் எடுக்க சுவாரஸ்யம் போயிடும்.பெரும்பாலான தொடக்கக்கட்ட கேமராக்களில் 3x அல்லது 4x ஜும் லென்ஸ்கள் இருக்கும்.ஆரம்ப நிலையில் இருக்கும் புகைப்பட அர்வலருக்கும் சும்மா சுற்றுலா,உறவினர் நண்பர்கள் என்று புகைப்படம் எடுக்க விரும்புவர்களுக்கும் அந்த ஜூமே போதுமானது என்பது என் கருத்து

4.) பேட்டரி
கேமராக்களில் இரண்டு விதமான பேட்டரிகள் உள்ள கேமரா வகைகள் உண்டு. ஒன்று கேமாராவோடு வரும் பேட்டரி.இதை அவர்கள் கொடுக்கும் சார்ஜர் கொண்டு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.பேட்டரி தீர்ந்துவிட்டால் திரும்பவும் அவர்கள் கொடுக்கும் ரீசார்ஜரில் ரீசார்ஜ் செய்துக்கொள்ள வேண்டும்.இந்த வகை பேட்டரிகள் கேமராவின் எடையை சற்றே கூட்டவும் செய்யும். அடுத்த வகை நாம் எல்லா இடங்களில் உபயோகிக்கும் சாதாரண பேட்டரிகள். தீர்ந்துவிட்டால் எந்த கடையில் வேண்டுமென்றாலும் வாங்கி பொருத்திக்கொள்ளலாம். இதிலும் ரீசார்ஜபிள் பேட்டரிகள் வாங்கிக்கொண்டால் ஒவ்வொரு முறையும் பேட்டரி வாங்கும் செலவு குறையும்.

5.) வடிவமைப்பு
என்னதான் அம்சமாக படம் பிடித்தாலும் கேமரா பிடிப்பதற்கு வாட்டமாக இல்லையென்றால் படம் எடுக்கும் ஆர்வமே போய் விடும் கைக்கு அடக்கமாகவும்,பிடிப்பதற்கு சுலபமாகவும்,எல்லா கண்ட்ரோல்ஸும் சுலபமாக உபயோகிக்கும் படியும் இருக்கும் கேமராக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். அதுவும் கேமராவில் உள்ள LCD திரை எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். பல கேமராக்களில் LCD திரை கேமராவோடு ஒட்டி இருக்கும்,ஆனால் சில கேமராக்களில் LCD திரையை தனியாக பிரித்து அங்கே இங்கே திருப்பிக்கொள்ளலாம். இதனால் பலவேறு கோணங்களில் நாம் கேமராவை திருப்பி படம் எடுத்துக்கொள்ளலாம்.

6.) SLR-ஆ?? Point and shoot-ஆ???
இது ரொம்ப பெரிய தலைப்பு மக்களே!! இது குறித்து தனியாக வேண்டுமானால் ஒரு பதிவு போடுகிறேன். ஷுட்டெர் ஸ்பீடு என்றால் என்ன,அபெர்சர் என்றால் என்ன,ISO என்றால் என்ன என்று நுணுக்கங்கள் தெரியாத பட்சத்தில் கற்றுக்கொள்வதற்கு ஒரு point and shoot வாங்கி பழகி விட்டு,பிறகு SLR வாங்கிக்கொள்ளலாம். இப்பொழுது வரும் சில high end point and shoot கேமராக்கள் இரண்டுக்கும் நடுவிலான குறையை நன்றாகவே தீர்க்கிறது என்று சொல்ல வேண்டும்.சிறிது காலம் point and shoot வாங்கி பழகினால் SLR வாங்கலாமா வேண்டாமா என்று உங்களுக்கே தெளிவாகிவிடும்.

புகைப்படக்கலை என்பது மிகவும் சுலபமான விஷயம் கிடையாது.அதில் பல ஏமாற்றங்கள்,சலிப்புகள்,எரிச்சல்கள்,உழைப்பு.விடாமுயற்சி எல்லாம் உண்டு.ஒரு நல்ல படத்தை பார்த்தால் அதன் பின் ஒளிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஒத்துக்கப்பட்ட படங்கள் நம் கண்ணுக்கு தெரியாது.இதெல்லாம் மீறி உங்களுக்கு இந்த கலையில் ஆர்வமிருந்தால் மட்டுமே SLR வாங்குவது உசிதம்.
When in doubt ,get a high end point and shoot.

இப்படியாக கேமரா வாங்க வேண்டுமென்றால் நீங்கள் பல விஷயங்களை யோசித்து பார்க்க வேண்டும். உங்கள் தேவையை முதலில் தெளிவாக முடிவு செய்து கொண்டு இணையத்தில் நன்றாக மூழ்கி எழுங்கள்.கூகிளிருக்க பயம் ஏன்.
Dpreview போன்ற தளங்கள் உங்கள் தேடுதல் வேட்டையில் மிகவும் உபயோகமாக இருக்கும்

இத்தனையும் தேடி பிடிக்க பொறுமை/ஆர்வம் இல்லையென்றால் கீழே இருக்கும் கேமராக்கள் என்னுடைய சிபாரிசு.கேமரா உலகம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது.நான் தரும் இந்த பட்டியல் ,எனக்கு தெரிந்த வரை (எனக்கு தெரிந்தது மிகவும் குறைவு) இப்பொழுதைய நிலையில் வாங்கக்கூடிய கேமராகள்.

Point and shoot - Canon A630
High end point and shoot - Canon S5 IS.
DSLR
பையில துட்டு இருந்தால் - Nikon D80
கொஞ்சம் குறைவாக இருந்தால் - Canon rebel XTi or 400D(இது நான்/விழியன் வைத்திருப்பது)
இதற்கும் குறைவான விலை வேண்டுமென்றால்
Nikon D40X அல்லது Canon Rebel XT or 350D

இதுதான் இப்போதைக்கு தலைசிறந்த கேமராக்கள் என்றெல்லாம் நான் வாக்குமூலம் தாரவில்லை,நான் பார்த்தவரை என் நண்பர்களிடம் பார்த்த வரையிலும் இந்த கேமராக்கள் நம்பி வாங்கக்கூடியவை என்று பரிந்துரைக்கிறேன்.அவ்வளவுதான்!! :-)

எந்த கேமராவை வாங்குவதாக இருந்தாலும் ஒன்றிற்கு நான்கு விமர்சனங்களை இணையத்தில் தேடி பிடித்து படித்துவிட்டே வாங்குங்கள். :-)

இணையத்தில் வாங்குவதாக இருந்தால் தேடிப்பிடித்து நல்ல பேரம் தேடி பிடிக்கலாம்.இணையத்தில் வாங்குவதாக இருந்தால் வாங்கும் தளம் நம்பகமானதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (திரும்பவும் கூகிளிருக்க பயமேன்)

பதிவு பெரிதாகிப்போனதால் சில முக்கியமான விஷயங்களோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங்களுக்கு தோன்றும் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!! :-)
வண்ணப்படங்களை விட கருப்பு வெள்ளை படங்களுக்கு ஒரு தனி சிறப்பு இருப்பது உண்மைதான். வண்ணக் கலவைகள் பல நேரங்களில் நாம் சொல்ல விரும்பும் கருத்தை சொல்ல விடாமல் தடுத்துவிடுகிறதோ என்ற ஐயம் தோன்றாமல் இருப்பதில்லை

கிட்டத்தட்ட அனைத்து டிஜிடல் கேமராக்களிலும் கருப்பு வெள்ளை படங்களை எடுக்கும் வசதி இருக்கிறது. ஃபிக்காசா பயன்படுத்தி வண்ணப்படங்களை கருப்பு வெள்ளைக்கு மாற்றும் சில வழிகள் இந்தப் பதிவில்.

இருப்பதிலேயே எளிய முறை ஃபிக்காசா வின் கருப்பு வெள்ளை முறையை நேரடியாகப் பயன்படுத்துவதுதான். இது Effects-> B&W இடத்தில் இருக்கிறது.

.
ஆனால் இந்த முறையில் நமக்கு தேவையான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்பு குறைவு.

மற்றுமொரு நிறை வசதிகள் இருக்கும் முறை Effects-> Filtered B&W உபயோகிப்பது.

Pick color பொத்தானை அமுக்கினால் ஒரு வண்ணப் பட்டியல் காட்சிதரும். எலிக்குட்டியை அதன் மேல் ஒடவிட்டால் கருப்பு வெள்ளைப் படத்தின் மாற்றங்கள் தெரியும். உங்களுக்கு பிடித்தமான கருப்பு வெள்ளை படத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

Sunday, October 21, 2007

அட இந்த மாத புகைப்படப் போட்டி படங்களைப் பார்த்ததும் எச்சில் ஊறியது உண்மை! சரி அவற்றில் எனக்குப் பிடித்த இரண்டுபடங்களை பிரேம் போட்டு மாட்டினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை!


Wednesday, October 17, 2007

வணக்கம்,

இந்த பதிவில் இரவு புகைப்படங்களை பற்றிய எனது அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன்.
இரவு புகைப்படம் (Night Photograph) எப்போதும் கனவாகவே இருந்தது. புதிய கருவி (Canon 400D Rebel XT) வாங்கியதில் இருந்து ஒரு இரவு காட்சி கூட எடுக்க வரவில்லை. முதல் தவறு முக்காலி (Tripod) இல்லை என்பது என்று புரிந்தது. இரண்டாவது சரியான நிறுப்பில் (Setting) வைக்க தெரியவில்லை என்பது தான். என்னென்னவோ முயற்சித்தும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. பிருந்தாவன் தோட்டதிற்கு சென்று எடுத்த வண்ணமயமான தண்ணீர் காட்சிகள், பேயின் நடமாட்டம் போல காட்சி தந்தது.
காசிக்கு சென்று இருந்த போது ஹிந்து நாளேட்டின் முக்கிய புகைப்படக் கலைஞர் கே.ஆர்.தீபக்கை சந்திக்க நேர்ந்தது.அவர் தான் கங்கை ஹார்த்தியினை எடுக்கும் போது என்ன செட்டிங் வைக்க வேண்டும் என கற்றுக்கொடுத்தார். அட படங்கள் அருமையாக வருகின்றதே !!!
முக்காலியின் அவசியம்:
இரவு புகைப்படங்களுக்கு முக்காலி (Tripod) மிக மிக அவசியமானது. ஏன் என்றால் நீண்ட நேரம் புடைக்க (Expose) செய்ய வேண்டி இருக்கும். அத்தனை நேரம் அசையாமல் கருவியை பிடித்திருக்க வேண்டும். (இரவும் புகைப்படங்கள் எடுக்கும் போது கிளிக் செய்வதை விட self timer உபயோகிக்க பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் நாம் கிளிக் செய்யும் போது ஏற்படும் அசைவுகள் கூட படங்களை கெடுத்துவிடலாம் என்கின்றார்கள். டிரைபாடில் வைத்து Self Timer வைக்கும் போது மிகச்சிறந்த காட்சிகள் நமக்கு கிடைக்கும்.
சூரியன் மறைந்து அதன் வெளிச்சம் மட்டும் இருக்கும் சமயத்தில் எடுக்கும் காட்சிகள் பிரமாதப்படுத்தும். ஏனெனில் வெவ்வேறு வண்ணங்கள் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கீழே உள்ள படம் இரவு புகைப்படக்கலைக்கு தேவையான தொழிநுட்ப விடயங்களை நமக்கு தெளிவாக்கும். மேலும்

படத்திற்கு நன்றி (www.cambridgeincolour.com/)
இரவின் என்னென்ன எடுக்கலாம் என்கின்ற சில வழிகாட்டுதல்கள்
  • இரவு வாழ்கை
  • கட்டிடங்கள், மண்டபங்கள்
  • நீர் நிலைகளும் அதன் பிரதிபலிப்புகளும்
  • வான வேடிக்கைகள் (இதற்கு தனியாக யாரேனும் எழுதலாமே)
  • மின்னல்கள்
  • இரவின் நரகம்..ச்ச இரவின் நகரம்
  • விழாக்கள்
  • இன்னும்..இன்னும்......
ISO :
இரவும் புகைப்படங்களுக்கு அதிக ISO பயன்படுத்தினால் படங்கள் தெளிவாக வரும்.
சென்றவாரம் மைசூரில் நடந்த தசரா திருவிழாவிற்கு சென்றிருந்த போது எடுத்த படங்கள் இவை. மூன்றும் ஒரே நேரத்தில் எடுத்தவை தான். ஆனால் வேறு வேறு Exposure. ஒவ்வொரு படத்திலும் படத்தின் ஆழம் அதிகரித்து கொண்டே போவதை காணலாம். முதல் படத்திற்கு -2 Exposure (Under Expose), அடுத்ததற்கு -.67, மூன்றாவது 0 Exposure. ISO : 400
படம் : 1
படம் : 2
படம் : 3
இரவு புகைப்படங்கள் எடுப்பது மற்ற படங்களை எடுப்பதை விட சற்று சிரமம் தான், ஆனால் அதன் பலன்கள் ஆஹா !!!

தொடரும்.

- விழியன்
இப்போது போட்டிக்கு வந்த எல்லா புகைப்படங்களைப்பற்றியும் நடுவர்களின் கமெண்டுகள். PiT குழுவினரும் தங்கள் கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நடுவர் பணியில் மாட்டிவிட்டமைக்கு .. . மன்னிக்கவும்.. நடுவர் பணிக்கு தேர்வுசெய்தமைக்கு PiT குழுவினருக்கு மிகவும் நன்றி :-Dஆயில்யன்:
வழக்கமான கோணம், சப்ஜெக்டான குப்பூஸ் ஒரு அழகுணர்ச்சியுடன் அடுக்கப்பட்டிருக்கலாம். தேவையற்ற ப்ளாஸ்டிக் கவர் போன்று கவனத்தை திசை திருப்பும் பொருட்களை தவிர்திருக்கலாம்.ஆனா வித்தியாசமான உணவு வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் நன்றி ;-) .. ஊத்தாப்பம் மாதிரி இருக்கு.
Has to think on arranging the food items properly to get a interesting shot...Its just a snapshot of his dinner :)

சிவபாலன்:
உங்கள் பதிவிலேயே பல விமர்சனங்கள் வந்து விட்டன :-) , அந்த ஆரஞ்சு சுழை அழகியதாக தோன்றுகிறது, அதை தனியே வைத்து எடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்குமோ ?!
Though its different with butterfly..there are lot of tech issues like sharpness, exposure etc., Again its just a snapshot.

இம்சை:அடாடா எவ்வளவு வகைகள். பைனாப்பிள் அல்வா பார்க்கவே நல்லா இருக்கு, ஆனாலும் அந்த கரண்டி மட்டுமில்ல, ஆங்காங்கே தெரியும் வண்ணத்துளிகள் இன்னும் அதிகமாயிருந்திருந்தால் மிகவும் அழகு சேர்த்திருக்குமோ..?!
Has to think on arranging the food items properly to get a interesting shot...Its just a snapshot

காசி ஆறுமுகம்:
உணவு அருமையாய் அடுக்கப்பட்டிருந்தாலும், பின்னால் இருக்கும் பேக்டிராபிலும், அங்கங்கே விழுந்திருக்கும் நிழலை தவிர்திருந்தாலும் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.
Both are good..But my eye is looking for some more properties to add a value to the pic..But its good though it lacks sharpness.

போட்டோ பழனி:
ப்ரேமிங்கை சரியாய் பயன்படுத்திய படங்களில் ஒன்று, மொபைல் போனிலேயே இப்படி அட்டகாசமா ? குறைந்த பிக்சல் இருப்பதால் நிறைய நாய்ஸ் உள்ளது, ஷார்ப்னெஸும் இல்லை.
2nd one is not interesting. Also lack of sharpness.

சிரீகாந்த்:
முதல் படம் நல்ல டெக்னிக் ஆனால் உணவு என்ற தீம்கேற்ற ஒன்றாய் தோன்றவில்லை, இரண்டாம் படம் மிகவும் அருமை, சிகப்பு பேக்டிராப்பில் ஆப்பிளின் வண்ணம் தூக்கலாய் தெரியாவிடிலும், ரொம்ப ஸ்டைலிஷான படம் இது.
Both are good..1st one not made to top 10 b'se of lack of sharpness and composing issues. Should have shown more apple..

கைப்புள்ள:போட்டிக்கான முதல் படத்தில் ப்ரசென்டேஷன் இன்னும் கண்ணைகவரும் வண்ணம் இருந்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும். இரண்டாவது படத்தில் உங்க தங்கமணி ஐடியா வொர்கவுட் ஆகிடுச்சுனு நினைக்குறேன் :-)
2nd one not made to top 10 as it dont have much sharpness and composing issues.

நட்டு:
முதல் படத்தில் போகஸ் இல்லவே இல்லை. இரண்டாவது போட்டோ மிகவும் அருமை, செம ப்ரொபொஷனல், நாதன் சொன்ன மாதிரி ஒரு ஓரமாய் வைத்திருந்தால் அட்டகாசமாய் இருந்திருக்குமோ ? அன்னாசியின் கலரும் அருமையான தேர்வு.
1st - just a snapshot and no sharpness
2nd - might be in top 10, but lost due to composing..it might be interesting if he placed it in any corners..

வீரசுந்தர்:
வித்தியாசமாய் செய்யமுயன்றுள்ளது தெரிகின்றது, ஷார்ப்னெஸ் சுத்தமாய் இல்லாதது மிகப்பெரும் குறை.
lack of sharpness, no interesting composition

ஒப்பாரி:
இரண்டு படங்களுமே அருமை, முதல் படத்தில் போகஸ் எங்கோ ஒரு மூலையில் இருப்பதைப்போலவும், ஷார்ப்னெஸ் இல்லாதது போலவும் உள்ளது. இரண்டாவது படம் அருமை.
congrats, both made to top 10.

சத்தியா:
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வைத்து எடுத்திருக்கலாம் முதல் படத்தை, சின்ன ரெஸொல்யூஷனில் படம் அழகாய் இருக்குது.இரண்டாவது படத்தில் க்ராபிங் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம்.
1st one - lighting is not enough..severly underexposed and arrangements not proper..

மஞ்சு:இரண்டாவது படத்தில், பின்புலம் மற்றும் பச்சை, ஆரஞ்சு நிறப்பழங்களை மாற்றி மாற்றி அடுக்கியிருந்தால் இன்னும் அழகாயிருந்திருக்கும்.
1st -pic of a pic is not valid..
2nd - no interesting composition

சதங்கா:
இரண்டு படத்திலும் க்ராப்பிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம்
its good, though some exposure issues r there..but arrangements are not good , also lack of sharpness.

முகவை மைந்தன்:
மிகவும் வித்தியாசமான அரேஞ்மென்ட், மிகவும் பொறுமை சார் உங்களுக்கு. ஆனால் ஷார்ப்பாக இல்லையே.
great arrangements, but lack of sharpness..

ஜெயஷ்ரீ:
நீங்க இல்லாமல் உணவுத்திருவிழாவா, அது புகைப்படத்திருவிழாவாகவே இருந்தாலும் :-) , அருமையான புகைப்படங்கள், மிகவும் ஷார்ப்பாக அழகாக இருக்கின்றது. (அந்த தக்களி இரசப்பதிவு என்னோட பேவரைட் ;-)
1st one - Paathiram padithiduchu..close call might be good..
2nd one - just a snapshot.

காட்:
இரண்டாவது படம், நாதன் சொன்னதை கவனித்திருந்தால் அழகாக வந்திருக்கும்.
both are severly underexposed..take care of composition

விழியன்:
மாதுளை படம் சரியாய் வந்திருக்கின்றது, மூன்றாவதை தவிர, போகஸ் மற்றும் லைட்டிங் நன்றாக இருக்கின்றது
both are good..but 4th one made to top 10 b'se of some diff color arrangements as single color generally dont attract much..if u've added some thing interesting in 2nd pic, it might be good. loved other pics in your food items..

சுந்தர்:
சாதரண சாலட்டா அது :-) , இரண்டாவது படம் ரொம்ப நடுங்கினால் போல் இருக்கின்றதே. பாதி இருட்டில் இருக்கும் சாலட் அருமையான யோசனை நல்ல எக்ஸிக்யூஷன்.
2nd one - diff colors, looks attractive..but total lack of sharpness

நாகை சிவா:இரண்டாவது படதின் கோணம் சற்று வித்தியாசமாயிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். முதல் படம் நன்றாக வந்திருக்கின்றது
2nd one was different from others..but overexposure and lack of arrangements made it below the list..

ஆதி:
இட்லியை கொஞ்சம் வெளிச்சத்துல படம் பிடிச்சிருக்கலாம், வண்ணங்கள் சரியாய் பொருந்தி இருக்கு ஒன்றோடொன்று. நெல்லிக்காய் சரியான க்ராபிங்க், ப்ரேமிங்க், கோணம் என படம் அழகாய் வந்திருக்கு.
1st one - underexposed and not good arrangement


எந்த அடிப்படையில் இம்முறை புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


முதலில், ஷார்ப்னெஸ் & போகஸ். எடுக்கப்படும் சப்ஜெக்ட் முன்னிலையில் சரியாய் போகஸ் ஆகி பார்பவரின் கவனத்தை கவர்வது முக்கியம். படங்கள் நடுக்கத்துடன் இருப்பது மற்றொரு முக்கியமான ஒரு தவறு.


இரண்டாவது லைட்டிங், உடனே பி.சி. மாதிரி இருட்டில் ஒரு ஓரத்தில் குட்டி லைட்டை வைத்து எடுத்தால்தான் அருமையான லைட்டிங் என்பது என்று நினைத்திருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். எந்த படத்திலும், பரவலான வெளிச்சம், பார்ப்பவர் காணவிரும்புவதை நாம் கண்ணைக்கவரும், மைல்டான, கண்ணைக்கூசாத ஒளியில் கொடுத்தாலே மினிமம் அது போதும்.


அழகுணர்ச்சி, உணவுப்பொருட்கள் எடுக்குறோம், எந்த ஹோட்டல்லங்க ஒட்டியிருக்குற படம் மாதிரி பரிமாறுறாங்க ;-) , பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும் சாதரண் ஹோட்டலுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், உணவை பிரசண்ட் பண்ணும் விதம். ஒரு சாதரண தயிர்சாதத்துல கூட, காரெட், கொத்தமல்லி, திராட்சை என சரியான விகிதத்தில் தூவி, ருசியாயிருக்குமா என யோசிக்க வைக்காமல் வாங்க வைப்பது தான் கலை. அதுதான் Food Photogaphy பொருத்த வரைக்கும் முக்கியமானதாய் இருக்கும்.


எக்ஸ்போஷர், பிளாஷ் போட்டு எடுக்கும்போது மிகவும் கவனமாய் இருக்கவேண்டிய விஷயங்களில் ஒன்று. அழகான அரெஞ்மெட்டை கூட சொதப்பிவிடும் ஆற்றல் இதற்கு உண்டு :-)


Disturbance, நாம் எடுக்கும் சப்ஜெக்ட், மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே படத்தில் தெரிய வேண்டும், தேவையற்ற பாத்திரங்கள், ப்ளாஸ்டிக் பைகள் என பார்ப்பவரின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்கள் வேண்டாம்.

இவை மட்டுமல்ல கவனிக்க வேண்டிய விஷயங்கள், இவை இந்த தலைப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் , நன்றிகளும் :-)

உலக PiT வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த மாதத்தின் 17ஆம் தேதி வெளிவரும் போட்டி முடிவுகள், (வேற ஒண்ணுமில்லீங்க தாமதமான முடிவுகள்னு டீஸன்டா சொல்ல முயற்சி பண்ணேன், சரியா வரல, விட்ருங்க....)

தவிர்க்க இயலாத காரணங்களால் முடிவுகள் தாமதமானலும் , முந்தைய பதிவு கொஞ்சம் சுவாரசியத்தால் ஈடு கட்டியிருக்கும் என நினைக்கிறேன் :-D ....

முன்பே சொன்ன மாதிரி, குறைந்த அளவு புகைப்படங்கள் என்று நினைத்திருந்த போதிலும், இறுதி தேர்வு மிகவும் கடினமாகத்தான் இருந்தது. மூன்று இடங்களே இருப்பதால், மற்ற படங்கள் நன்றாக இருந்த போதிலும், "It was a close call to be decided" ...


சரி இனி போட்டி முடிவுகள் பார்ப்போமா..

மூன்றாவது இடம்:


இந்த இடத்திற்கு பலமான போட்டி, யாரைத்தேர்வு செய்வது, விடுவது என்று. ஆனால் இறுதியில் தேர்வானது இரண்டு படங்கள்.


3.அ) ஆதியின் நெல்லிக்கனி:


- Great arrangements and well composed. Lighting is slightly bad thats why it went to 3rd position

3.ஆ) விழியனின் ஒரு கூட்டு கிளி:


- Great Colors again- Flash lighting made some over exposed portion but still its great

இரண்டாவது இடம்:


சுந்தரின் சாலட் - Great colors and good closeup work. முதலிடத்திற்கு கடுமையான போட்டி கொடுத்த புகைப்படம் இது, இரண்டாவது இடம் என்பது சில காரணங்களால் (என்ன ? , முதல் படத்தின் விளக்கத்தில் பார்ப்போம்) கொடுக்கப்பட்ட இடம், மற்றபடி அருமையான புகைப்படம்.முதலிடம்:


ஒப்பாரியின் மீன் வறுவல். - Professional looking, nice lighting, good arrangements, Sharp - Congrats.


இவரின் இரண்டு புகைப்படங்களுமே அருமையாக இருந்த போதிலும், இரண்டாவது புகைப்படம் லைட்டிங்கினால் சிறப்பு கவனம் பெற்றது. இரண்டாவது இடம் பெற்ற சாலட் இருப்பதை அழகாக எடுத்தது, அதாவது இதற்கென உணவுப்பொருட்களை சிறப்பாக அடுக்காமல். ஆனால் இந்த மீன் வருவல், கொஞ்சம் அழகாய் தெரிய வேண்டுமென அர்ரெஞ் செய்யப்பட்டு, கொஞ்சம் வெளிச்சம் அதன் மீது பரவ எடுத்த விதம், இதை முதலிடத்திற்கு ஏற்றி விட்டது.


(இம்முறை கூர்ந்து கவனித்தால், முதல் மூன்று இடம் பெற்ற புகைப்படங்கள் அனைத்தும் இந்த போட்டிக்கென இதுவரை கற்றவை மனதில் கொண்டு எடுக்கப்பட்டவை, ஆக மக்களே, இனிமேல் போட்டிகள் கடிமையாகிக்கொண்டே போகுமென தோன்றுகிறது, தொகுப்பிலிருந்து எடுப்பது எடுபடுவது ரொம்ப கஷ்டம்.)


முதல் மூன்று இடங்கள் பெற்ற நால்வருக்கும் நடுவர்கள் சார்பாகவும், PiT குழுவினர் சார்பாகவும் , மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)


ஒவ்வொரு முறையும், இந்த போட்டிகளால் நம்மிடையே இருக்கும் அதிகம் அறியப்படாத அட்டகாசமான புகைப்பட கலைஞர்கள் அறிமுகமாவார்கள், இம்முறை இந்த வகையில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவரின் ஆப்பிள் புகைப்படங்கள் செம புரொபஷனல், இவரின் முந்தைய பதிவுகளை பார்க்க பார்க்க, அட்டகாசமாய் இருக்கின்றது. ஸ்ரீகாந்த், நீங்களும் உங்களிடையே இருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன் :-)


அடுத்த பதிவில் ஒவ்வொரு படங்களுக்குமான நடுவர்களின் காமெண்டுகள்.

Tuesday, October 16, 2007

களப்பணியாக, ஓட்டல் ஓட்டலாக அலைந்து திரிந்தவர்களுக்கும், அவரவர் தங்கமணியை தொந்தரவு செய்து பாராட்டுக்களுக்கு (?) நடுவே க்ளிக்கியவர்களுக்கும், மெகா சீரியலுக்கு மட்டுமின்றி புகைப்படபோட்டிக்கும் சேர்த்து கொஞ்ச நேரம் பட்டனி போட்டு போட்டி போட்ட அம்மணிகளுக்கும்,நாம் சமைத்ததை நாமே சாப்பிடாவிட்டால் & நாமே புகைப்படமெடுக்காவிட்டால் வேறு யார் செய்வார் என்று மனம்தளராத பேச்சிலர் உடன்பிறப்புகளுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!


PiT குழுவினர் நடத்தும் புகைப்பட போட்டி அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது என்று சொல்லலாம். இந்த வலைத்தளத்தில் வரும் பாடங்களை படிப்பவர்களுக்கு, களத்தில் இறங்கி படித்ததை பயன்படுத்திப்பார்க்க வாய்ப்பாய் மட்டுமின்றி, மேலும் முயற்சிகள் செய்து பார்க்க படிப்பவர்களை ஊக்கமூட்டுவதாகவே செயல்படுகின்றது.

இதுவரை வந்த புகைப்பட தலைப்புகளும் சரி, புகைப்படங்களும் சரி, தங்களிடையே இருக்கும் தொகுப்பிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதையே அதிகமாக கொண்டிருந்தது (என்னையும் சேர்த்துதான் ;-) , இதில், படித்ததை பயன்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமின்றி போனது.

இம்முறை சர்வேசன்/ஆனந்த்/சிவிர்/நாதன் அவர்களின் தேர்வுகளில் "உணவு" என்ற தினமும் நாம் காணும் காட்சி தேர்வானது. அட உணவுதானே என்றில்லாமல் அதிலும் வித்தியாசங்கள் காட்ட தேவையானதை சிவிர்-இன் பதிவு சரியான நேரத்தில் அமைந்தது, பங்கேற்பாளர்களுக்கு போட்டியின் நோக்கத்தை புரியச்செய்தது.

பழைய புகைப்படங்களை எடுத்து போடும்போதே அசத்தும் நம் மக்கள், இம்முறை கற்றதை பயன்படுத்தி அசத்தியுள்ளார்கள். சென்ற முறை போன்று அதிக அளவில் போட்டியாளர்கள் இல்லாதபோதும் படங்களின் தரம் நடுவர்களின் தேர்வை சென்ற முறை போலவே கடினமாக்கியிருந்தது.

போட்டியாளராய் மட்டுமின்றி நடுவராக பணி புரிதலும் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. முக்கியமாய் முதல் பத்து படங்கள் தேர்வு செய்தபோது கவனிக்கவேண்டிய விஷயங்கள், எதில் எல்லாம் சாதரண விஷயங்கள் என்று நினைத்திருந்தோமோ, அதில் எல்லாமும் கவனம் வேண்டும் என்பது ஒரு முக்கியமான பாடம்.

போட்டிக்கான இறுதிப்படங்கள் தேர்வு செய்யும் நிலையில் இருப்பதால், கொஞ்ம் சுவாரசியத்தை உண்டாக்க, இந்த டாப் ட்வெல்வ் + ஒன் புகைப்படங்கள். (அட இல்லிங்க, இதை தேர்வு செய்யும் போது கோர்ட் சூட் போட்டு நாற்காலியெல்லாம்... அந்த கூத்தெல்லாம் இல்லீங்க..) இதில் இருக்கும் வரிசை நிலை எதையும் குறிப்பதில்லை.
ஒவ்வொரு படங்களுக்கும் கமெண்டுகளை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம், சிறிது தாமதமானதுக்கு மன்னிக்கவும் மக்களே !!!!

விரைவில் முடிவுகளை !!! அதுவரை கெஸ் செய்வது ஒரு போட்டியாக நடக்கட்டுமே... சர்வேசன் ஒரு சர்வே ? ;-)

முதல் சுற்றுக்கு தேர்வானவைThursday, October 11, 2007

வணக்கம் வணக்கம் வணக்கம்!!
இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மக்களே !!
ஏன்னு கேக்கறீங்களா?? அக்டோபெர் மாத போட்டிக்கு வந்த படங்களை எல்லாம் ஒரு தடவை ஆற அமர பாருங்க ! அப்புறம் ஏன்னு கேட்க மாட்டீங்க!! மக்கள்ஸ் எல்லாம் ச்சும்மா பட்டைய கிளப்பிட்டாங்க-ல!!!
ஒவ்வொரு படமும் அசத்தலா இருக்கு. இந்த பதிவின் நோக்கமே,நம்ம தமிழ் மக்கள் புகைப்படக்கலையில் நிறைய விஷயங்கள் கத்துக்கனும்,புதுசு புதுசா படங்கள் எடுத்து புதிய புதிய உத்திகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தான்.அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த தான் மாதாமாதம் நாங்கள் நடத்தும் இந்த போட்டி.போட்டி,பரிசு என்பதெல்லாம் விட நான்கு பேர் கூடி புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்வதற்கான ஒரு மேடை என்று தான் இந்த போட்டியை நாங்கள் பார்த்துவந்திருக்கிறோம். அந்த நோக்கத்தை முழுவதும் நிறைவேற்றும் விதமாக இந்த மாத போட்டி அமைந்தது மிகவும் மகிழ்ச்சி. நேரம் செலவழித்து நீங்கள் படங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சி ,உங்கள் படங்கள் ஒவ்வொன்றிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
யார் கடைசியில் தேர்ந்தெடுக்க படுகிறார்களோ இல்லையோ,ஆனால் பங்கு கொண்ட அனைவரும் இங்கு வெற்றி பெற்றவர்கள் தான். எல்லா போட்டியிலையும் இத சொல்லி டென்ஷன் படுத்தினாலும் இந்த போட்டிக்கு இந்த விஷயம் சரியா பொருந்துங்க!! ஏன்னா உணவு புகைப்படக்கலை என்னும் ஒரு புது முயற்சியில் ஈடுபட ஒரு அருமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொண்டீர்கள்.இத்தனை அழகழகான படங்களில,் சிலவற்றை தான் நடுவர்களால் தேர்வு செய்ய முடியும் ஆனால் ஒன்றொக்கொண்று சளக்காத பல படங்களை இந்த போட்டியில் கண்டுள்ளோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நடுவர்களை பார்த்தால் தான் சிறிது பாவமாக இருக்கிறது. நல்ல வேளை நான் இப்பொழுது இந்தியாவில் இல்லையென்பதால் கொஞ்சம் நிம்மதியாக தூங்க முடியும்.ஜீவ்ஸ் அண்ணாத்த எதற்கும் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளவும்.இவ்வளவு கஷ்டமான வேலையில் அவர்களை மாட்டி விட்டதற்காக அவர்கள் என் மேல் கொலை வெறியில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!! :-)
நடுவர்களின் வேலை எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும் என்பதால் அவர்களுக்கு போதுமான நேரமும் ,ஒத்துழைப்பும் உற்சாகமும் தருவோம்.
15-ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்பட்டு விடும்.அதற்கு முன் நடுவர்களின் நேரமும் சௌகரியத்திற்கும் ஏற்ப ட்ரைலெர் பதிவுகள் வரலாம்.அந்த முடிவை நடுவர்களிடமே விட்டு விடுகிறேன்.
இப்போதைக்கு உங்க எல்லோருக்கும் எங்கள் மனம் கனிந்த நன்றியையும்,போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களையும் கூறி விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்! :-)

Monday, October 8, 2007

படங்கள் எடுக்கும் போது உங்க கேமராக்களிலோ அல்லது எடுத்த அப்புறம் கணிணியில் படம் சார்ந்த மென்பொருள்களிலோ இந்த பட்டை வரைபடத்தை (Histogram) பார்த்திருப்பீர்கள்.பல சமயங்களில் அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே மேலோட்டமாக பார்த்துவிட்டு விட்டிருப்போம். ஆனால் இன்றைக்கு இவைகளை பற்றி என்னவென்று பார்த்துவிடுவோம் வாருங்கள்.

இந்த பட்டை வரைப்படம் உங்கள் படத்தில் உள்ள வெளிச்சம்,மற்றும் வெளிச்சமற்ற பகுதிகளின் வரைபடம் என்று கொள்ளலாம். இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு போக போக இருட்டிலிருந்து வெளிச்சப்புள்ளிகளின் அளவை பொருத்து கோடுகள் உயரமாகவோ,உயரம் குறைந்தோ காணப்படும்.இதன் ஒரு முக்கியமான உபயோகம் என்னவென்றால்,உங்கள் கேமராவின் LCD திரையில் படம் ஒழுங்காக வந்திருக்கிறதா என்பதை முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும்,படம் அதிக ஒளியினால் வெளிரிப்போயுள்ளதா,அல்லது வெளிச்சம் குறைந்து இருட்டிவிட்டதா என்பதை இந்த தட்டைப்படத்தை கொண்டு அனுமானித்துக்கொள்ளலாம்.
சில உதாரணங்களை பார்க்கலாமா??

கீழே உள்ள படத்தினையும் அதற்கான தட்டைப்படத்தினையும் பாருங்கள்கீழே இருக்கும் படத்தில் வெளிச்சம் அதிகமாக இருப்பதால் சற்றே வலது புறத்தில் உயரமான கோடுகள் இருப்பதை பார்க்கலாம்.இதனால் படம் சிறிது over exposed ஆகி இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்துக்கொள்ளலாம்.


இப்பொழுது கீழே இருக்கும் படத்தையும் அதற்கான தட்டை வரைபடத்தையும் பாருங்கள்.இந்த படத்தில் குழந்தை கருப்பு வண்ணத்தில் சட்டை அனிந்திருப்பதாலும்,படம் சற்றே வெளிச்சம் குறைந்து காணப்பட்டிருபதாலும் தட்டை வரைப்படத்தில் இடது புறம் கோடுகள் உயர்ந்து காணப்படுகின்றன.


இப்பொழுது எந்த ஒரு பக்கமும் தனியாக உயர்ந்து நிற்காமல் சீராக பரவி இருக்கும் ஒரு தட்டை வரைபடத்தையும்,அதற்கான படத்தையும் கீழே பாருங்கள்.இடது பக்கம்,வலது பக்கம் என்றில்லாமல் எப்படி ஒரே சீராக (ஓரளவிற்கு) கோடுகள் எல்லா பக்கமும் இருக்கிறது என்று பாருங்கள்.

புகைப்படக்கலையின் மற்ற பாடங்களை போல் இதுவும் நாம் நல்ல புகைப்படம் எடுப்பதற்கான ஒரு கருவி மட்டுமே. தட்டை வரைப்படம் ஒரே சீராக பரவி இருந்தால்தான் நல்ல படம் என்றோ,அப்படி இல்லாமல் இருந்தால் நல்ல படம் இல்லை என்றோ யாராலும் சொல்ல முடியாது.ஆனால் அடுத்த முறை எங்கேயாவது தட்டை வரைப்படம் பார்த்தால் பேந்த பேந்த முழிக்காமல்,அது என்ன,அதற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றாவது புரிந்துக்கொள்ள இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.

பதிவு புரியவில்லை என்றால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.அடுத்த முறை இன்னும் தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன்.
நன்றி! :-)

படங்கள் மற்றும் ஆங்கில மூலம் :
Understanding Histograms

Monday, October 1, 2007

வலையுலக நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்,
அக்டோபர் மாதத்திற்கான PIT புகைப்பட போட்டிக்கான அறிவிப்பு இதோ.

தலைப்பு - உணவுப்பொருட்கள்
நடுவர்கள் - நாதன் மற்றும் யாத்திரீகன்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்
போட்டிக்கான விதிகள்:அதிகபட்சம் இரண்டு படங்கள் போட்டிக்காக சமர்பிக்கலாம்.எதுவும் சொல்லாத பட்சத்தில் இடுகையில் உள்ள முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
காலம்
- அக்டோபர் 1 முதல் 10
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 15 அக்டோபர்
படங்கள் ஏதாவது உணவு பதார்த்தமாகவோ அல்லது கனி காய்கறிகளாகவும் இருக்கலாம்.அதுக்காக செடி கொடி, ஆடு,மாடு,கோழி எல்லாம் உயிரோடு இருக்கும்போது படம் எடுத்து அனுப்பினால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது!! :-)
முடிந்த வரைக்கும் போட்டிக்காக புதிதாக படம் எடுத்து அனுப்பப்பாருங்கள்,ஏற்கெனவே எடுத்திருக்கும் படங்களில் இருந்து எடுத்து அனுப்பினால் பொதுவாக அவ்வளவாக பொருந்தி வராது.
போட்டிக்கு படம் எடுக்க டிப்ஸ் வேண்டுமென்றால் இந்த பக்கத்திற்கு சென்று படித்துக்கொள்ளுங்கள்!!
பங்கு பெறும் அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)

பி.கு:இந்த இடுகை இந்த குழுப்பதிவின் 50-ஆவது இடுகை!! :-)

போட்டியாளர்களின் படங்கள் :

1.) ஆயில்யன்

2.) சிவபாலன்

3.) இம்சை

4.) காசி ஆறுமுகம்

5.) போட்டோ பழனி

6.) Srikanth - படம்1 படம்2

7.) கைப்புள்ள

8.) நட்டு

9.) veerasundar

10.) ஒப்பாரி

11.) சத்தியா

12.) மஞ்சு

13.) சதங்கா

14.) முகவை மைந்தன்

15.) Jayashree Govindarajan

16.) God Pic1 Pic2

17.) விழியன்

18.) வற்றாயிருப்பு சுந்தர்

19.) நாகை சிவா

20.) ஆதி
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff