Wednesday, October 17, 2007

PiT - உணவுப்பொருட்கள் - அக்டோபர் மாத போட்டி முடிவுகள்

18 comments:
 

உலக PiT வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த மாதத்தின் 17ஆம் தேதி வெளிவரும் போட்டி முடிவுகள், (வேற ஒண்ணுமில்லீங்க தாமதமான முடிவுகள்னு டீஸன்டா சொல்ல முயற்சி பண்ணேன், சரியா வரல, விட்ருங்க....)

தவிர்க்க இயலாத காரணங்களால் முடிவுகள் தாமதமானலும் , முந்தைய பதிவு கொஞ்சம் சுவாரசியத்தால் ஈடு கட்டியிருக்கும் என நினைக்கிறேன் :-D ....

முன்பே சொன்ன மாதிரி, குறைந்த அளவு புகைப்படங்கள் என்று நினைத்திருந்த போதிலும், இறுதி தேர்வு மிகவும் கடினமாகத்தான் இருந்தது. மூன்று இடங்களே இருப்பதால், மற்ற படங்கள் நன்றாக இருந்த போதிலும், "It was a close call to be decided" ...


சரி இனி போட்டி முடிவுகள் பார்ப்போமா..

மூன்றாவது இடம்:


இந்த இடத்திற்கு பலமான போட்டி, யாரைத்தேர்வு செய்வது, விடுவது என்று. ஆனால் இறுதியில் தேர்வானது இரண்டு படங்கள்.


3.அ) ஆதியின் நெல்லிக்கனி:


- Great arrangements and well composed. Lighting is slightly bad thats why it went to 3rd position

3.ஆ) விழியனின் ஒரு கூட்டு கிளி:


- Great Colors again- Flash lighting made some over exposed portion but still its great

இரண்டாவது இடம்:


சுந்தரின் சாலட் - Great colors and good closeup work. முதலிடத்திற்கு கடுமையான போட்டி கொடுத்த புகைப்படம் இது, இரண்டாவது இடம் என்பது சில காரணங்களால் (என்ன ? , முதல் படத்தின் விளக்கத்தில் பார்ப்போம்) கொடுக்கப்பட்ட இடம், மற்றபடி அருமையான புகைப்படம்.முதலிடம்:


ஒப்பாரியின் மீன் வறுவல். - Professional looking, nice lighting, good arrangements, Sharp - Congrats.


இவரின் இரண்டு புகைப்படங்களுமே அருமையாக இருந்த போதிலும், இரண்டாவது புகைப்படம் லைட்டிங்கினால் சிறப்பு கவனம் பெற்றது. இரண்டாவது இடம் பெற்ற சாலட் இருப்பதை அழகாக எடுத்தது, அதாவது இதற்கென உணவுப்பொருட்களை சிறப்பாக அடுக்காமல். ஆனால் இந்த மீன் வருவல், கொஞ்சம் அழகாய் தெரிய வேண்டுமென அர்ரெஞ் செய்யப்பட்டு, கொஞ்சம் வெளிச்சம் அதன் மீது பரவ எடுத்த விதம், இதை முதலிடத்திற்கு ஏற்றி விட்டது.


(இம்முறை கூர்ந்து கவனித்தால், முதல் மூன்று இடம் பெற்ற புகைப்படங்கள் அனைத்தும் இந்த போட்டிக்கென இதுவரை கற்றவை மனதில் கொண்டு எடுக்கப்பட்டவை, ஆக மக்களே, இனிமேல் போட்டிகள் கடிமையாகிக்கொண்டே போகுமென தோன்றுகிறது, தொகுப்பிலிருந்து எடுப்பது எடுபடுவது ரொம்ப கஷ்டம்.)


முதல் மூன்று இடங்கள் பெற்ற நால்வருக்கும் நடுவர்கள் சார்பாகவும், PiT குழுவினர் சார்பாகவும் , மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)


ஒவ்வொரு முறையும், இந்த போட்டிகளால் நம்மிடையே இருக்கும் அதிகம் அறியப்படாத அட்டகாசமான புகைப்பட கலைஞர்கள் அறிமுகமாவார்கள், இம்முறை இந்த வகையில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவரின் ஆப்பிள் புகைப்படங்கள் செம புரொபஷனல், இவரின் முந்தைய பதிவுகளை பார்க்க பார்க்க, அட்டகாசமாய் இருக்கின்றது. ஸ்ரீகாந்த், நீங்களும் உங்களிடையே இருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன் :-)


அடுத்த பதிவில் ஒவ்வொரு படங்களுக்குமான நடுவர்களின் காமெண்டுகள்.

18 comments:

 1. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 2. Excellent choices!

  வாழ்த்துக்கள் வெற்றிசாலிகளுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும்.

  எல்லாரும் கலக்கிட்டாங்க.

  ஸ்ரீகாந்தின் ஆப்பிள் சூப்பர்ப். தனியா அவர கண்டுக்கனதுக்கு நன்றி! :)

  யாத்ரீகன், வெற்றிப் படங்களை, இந்தப் பதிவுல எடுத்து போடலாமே, பாக்கரதுக்கு ஈஸியா இருக்கும்.

  ReplyDelete
 3. Yathreegan, dont worry about the delay. ore than else you won here as a grand jury! My wishes to all those who took fine pictures. more than winning the competitions are for learning and the quality of entries is a proof that this is the best ongoing creative project in Tamil blogging! You all made it happening!

  ReplyDelete
 4. இந்த முறை போட்டியை மிஸ் பண்ணியது மனதுக்குவருத்தமா இருக்கு..

  வெற்றி பெற்றவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
  மற்ற படங்கள் எல்லாமே கூட அற்புதமா இருந்தது இந்த் முறை.

  ReplyDelete
 5. திரு.ஒப்பாரி,சுந்தர்,விழியன் ஆதி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஸ்ரீகாந்தின் படம் எனது எதிர்பார்ப்பு.அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கு.எனது அன்னாசி திரு.CVR அவர்களது பதிவிலிருந்து கற்று பரிட்சித்துப் பார்த்த படம்.அதாவது 5 பஞ்சுப் பலகைகள் வாங்கி பெட்டி செய்து மேக்ரோவில் கிளிக்கியது.அவருக்கும்,ஜீவ்ஸ் மற்றும் வாத்தியார்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 6. இந்த மாதப் போட்டியில் உபயோகமாக நிறைய தெரிந்து கொண்டேன். அதற்காக என் புகைப்படங்கள் இனிமே பிரமாதமாக வரும் என்று சொல்ல முடியாது. நான் சமைத்ததை எடுக்கும் நேரங்கள் கொஞ்சம் அகாலமான நெருக்கடியானவை. ஆனால் நிதானமாக எடுக்க முடிந்தால் கவனம் வைப்பேன். நடத்துபவர்கள் அனைவருக்கும் நன்றி.

  பங்கேற்றவர்கள், பரிசுபெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள். கருணாநிதி, ஜெயலலிதாவை பந்தாவிற்காக தொகுதியில் எதிர்த்து நிற்கும் சுயேட்சை குப்புசாமியைப் போல், பங்கேற்றதில் நானும் பெருமைப் படுகிறேன்.

  கீழே இருக்கும் வரிகள் சுந்தருக்கு மட்டும்:

  சுந்தர், :) உணவுக் குறிப்பு எதுவும் சொல்லத் தெரியாவிட்டாலும் பாவம் சுந்தர், படம் போட்டாவது பரிசு வாங்கட்டும் என்றுதான் நான் வேண்டுமென்றே சுமாரான படங்களை போட்டிக்கு அனுப்பினேன். சொல்ல வருவது..

  குறி தப்பல..
  குறி வெக்கல!!

  ReplyDelete
 7. @பிரகாஷ்:
  சரியான கணிப்பு :-)

  @சர்வேசன்:
  வேறு கணினியில் இருந்ததால் போட முடியவில்லை, இப்பொழுது Dஒனெ :-)

  @ஓசை செல்லா:
  நன்றி செல்லா :-)
  @நட்டு:
  உங்க அன்னாசி படம் ரொம்ப சூப்பரா இருந்தது, ஆனா ஒரு சின்ன விஷயம்தான் அதை தேர்வு செய்வதில் யோசிக்க வைத்தது... கமெண்டுகள் அடுத்த பதிவில் ;-)

  ReplyDelete
 8. மகிழ்ச்சி. பங்கு பெற்ற எல்லோருக்கும் வெற்றி என்பது இதுவரை வந்த பின்னூட்டங்களில் தெரிகிறது. இந்த முறை போட்டி படங்களின் தரம் நடுவர்களை நிச்சயமாய் திணரடித்திருக்கும், srikanthin ஆப்பிள் நானும் எதாவது ஒரு இடத்தில் எதிர்பார்த்தேன், எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை அதனாலேயே அனைத்துப்படங்களுக்கான் விமர்சனங்களை தாங்கிவரும் அடுத்த பதிவை ஆவளுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. makale,

  thernthedukapatta padangal nalla choices, matrum ennai patri kuripitamaikum mikka nandri.

  inimel varum maathangalilum, vara pogum pathivukalin moolamum, vaanga elorum sernthe kathukalaam...

  :)

  :)

  ReplyDelete
 10. // கருணாநிதி, ஜெயலலிதாவை பந்தாவிற்காக தொகுதியில் எதிர்த்து நிற்கும் சுயேட்சை குப்புசாமியைப் போல், பங்கேற்றதில் நானும் பெருமைப் படுகிறேன்.//
  jayashree, we found a great writer in a photography contest!lol!

  ReplyDelete
 11. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  நல்ல தேர்வுகள்.

  ஸ்ரீகாந்தோடு எதிர்பார்த்தேன்.

  @நட்டு, நீங்க கொஞ்சம் கிராப் பண்ணி இருந்தா சூப்பராயிருக்கும்

  அடுத்த போட்டி என்ன ?

  ReplyDelete
 12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  இந்த போட்டியில ஜெயிக்கலனாலும் , அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!!

  ReplyDelete
 13. யாத்திரீகன் முன்பே சொன்னது போல் நமது போட்டிகளின் அடுத்த கட்டம் இந்த போட்டிகள் என்று சொன்னால் அது மிகையாகாது!!

  செல்லா சொன்னது போல
  ///competitions are for learning and the quality of entries is a proof that this is the best ongoing creative project in Tamil blogging! You all made it happening!////
  இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  வழக்கம் போல போட்டியில் படங்கள் அனைத்தும் வெகு அருமை!!
  பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி!!

  சுப்பர் போஸ்ட் யாத்திரீகன்!! :-)

  ReplyDelete
 14. சொக்கா நெசமாவே பரிசு எனக்கா? நம்பவே முடியலை.

  1. படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தி என்று சொன்னால் மிகையாகாது.

  2. தொழில்நுட்ப பார்வையில் மட்டுமே முதலாவது, இரண்டாவது என்று சொல்ல இயலுமே ஒழிய ரசிகனின், பார்வையாளனின் பார்வையில் மிகவும் பசியைக் கிளப்பிய படங்கள் ஒவ்வொன்றும். அந்த அளவுக்கு அற்புதமான படங்கள்.

  3. சாலட் படத்தில் ஓரத்தில் தோன்றும் ஒளி ஃபிளாஷின் வெளிச்சம் அல்ல (இதை படத்தின் கோணத்திலிருந்தே கண்டுகொண்டிருப்பீர்கள் என்று தெரியும்). அவசரமாக சமையலறை மேசையின் மீது வைத்து குட்டிப் பெண்ணோட படிக்கும் விளக்கைப் ஓரமாகப் பிடித்துக்கொள்ளச் சொல்லி எடுத்தது. அப்போதுதான் வெட்டிய காய்கறி என்பதால் அதீத Freshness, ஈரப்பதத்தினால் எதிர்பார்த்த அளவு நேர்த்தி கிடைத்தாலும் ஒளி பிரதிபலித்ததைத் தவிர்க்கவே இயலவில்லை. மேலும் எடுத்தது காலை ஆறு மணிக்கு. இங்கிட்டு சூரியன் இனிமே வர்றது அபூர்வம். காஃப்ஃபிக் கோப்பையைப் போட்டியில் சேர்த்திருக்கலாமோ என்று பின்பு தோன்றியது.

  4. போட்டிக்கு அனுப்பிய இன்னொரு படம் சீன உணவகத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் பணிசெய்யும் நிறுவனத்தின் CEO-வின் தட்டிலிருந்த Tuna மற்றும் காமா சோமா என்று என்னென்னவோ பெயர் வைத்திருந்த மீன் உணவு. என்ன அழகாக அடுக்கியிருந்தார்கள் தெரியுமா? ஆனால் வெளிச்சம் போதவேயில்லை. :-(

  5. பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் மறுபடியும் இங்கு சொல்வதில் தவறில்லை. இம்மாதிரி பொருட்களையெல்லாம் புகைப்படம் எடுப்பேன் என்று ஒருமுறைகூட நினைத்துப் பார்த்ததில்லை. PiT மூலமாக இப்போது ஒவ்வொரு காட்சியையும் காமிரா கண்கொண்டு பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். இது PiT-இன் மகத்தான சாதனை. PiT குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். போதுமான அளவு பதிவுகள் சேர்ந்ததும் தமிழில் புத்தகமாக வரக்கூடிய தகுதி நிறையவே இருக்கும் வலைப்பதிவு இது.

  ஜெஸ்ரீ

  //சுந்தர், படம் போட்டாவது பரிசு வாங்கட்டும் என்றுதான் நான் வேண்டுமென்றே சுமாரான படங்களை போட்டிக்கு அனுப்பினேன். சொல்ல வருவது..//

  இதை நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுமா? ப(பூ)ட(க)மாவே காட்டிட்டீங்களே! :-)

  //குறி தப்பல..
  குறி வெக்கல!!//

  யாருப்பா அடுத்த ரஜினி படத்தை எடுக்கப் போறது? பஞ்ச் டயலாக் ரெடி.

  செல்லா.. //jayashree, we found a great writer in a photography contest!// என் வாயைக் கிண்டாதீங்க. அவ்வளவுதான் சொல்லமுடியும்!

  ஒப்பாரி இன்னொரு முறை ஆனந்தமாக ஒப்பாரி வைக்கலாம்! :-) ஆதி, விழியன் ஆகியோருக்கும், மற்ற கடும்போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ஸ்ரீகாந்தின் ஆப்பிள் அருமையான படம். ஒரு வினாடி ரோஜா அரவிந்தசாமியின் சிவப்பு ஸ்வெட்டர் நினைவில் பளிச்சிட்டது!

  நன்றிகள்.

  ReplyDelete
 15. பங்கேற்றவர்கள், பரிசுபெற்றவர்களுக்கு என் வாழ்த்து

  ReplyDelete
 16. ஒரு அலசு அலசலாமா எல்லா படங்களையும்?

  என் பார்வையில், நெல்லியும், ஸாலட்டும், கொஞ்ச முன்னாலயும், குக்கும்பர் ஒரு ஸ்டெப் பின்னாலயும் போயிருக்கணும்.

  யாரும், அடிக்க வராதீங்க. மனசுக்கு பட்டத சொல்றேன்.

  குக்கும்பர் ஸ்லைட்டா ஓவர் எக்ஸ்போஸ்ட். ???

  மீன் சூப்பர். ஆனா, கருவேப்பிலை பச்சையா போட்டது, செயற்கையா இருக்கு ;) மீன் என்பதால், மன்னிச்சு விட்டுடலாம்.
  ஒப்பாரி, ரெஸிப்பீ சொல்லலியேங்க இன்னும் :)

  ReplyDelete
 17. வெற்றி பெற்ற எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  முதல் இடத்தைப் பிடித்த மீன் படத்தைப் பற்றி மட்டும் ஒரு சிறிய விமர்சனம்.

  மீன் படம் Under exposed அத்துடன் கொஞ்சம் Out of focus. அடுத்த முறை இம்மாதிரியான குறைகள் நடுவர்களால் கவனிக்கப்படுமென நினைக்கிறேன்.

  கலந்து கொண்ட யாரும் தொழில்ரீதியான புகைப்படப்பிடிப்பாளர்கள் இல்லை என நினைக்கிறேன், ஆகையால் பரவாயில்லை.

  அடுத்தமுறை இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஆத்தா... நானும் fotografy contest'ல prize வாங்கிட்டேன்... :-) வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  முக்கியமாக, நிறைய கற்றுக் கொடுத்த blog posters'க்கும் நன்றிகள் பல.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff