Saturday, January 31, 2009

எல்லோருக்கும் வணக்கம்,
புது வருஷம் பழசாக ஆரம்பிச்சாச்சு,ஒரு மாசம் போய் இன்னொரு மாசமும் வந்தாச்சு,கூடவே நமது குழுப்பதிவில் அடுத்த போட்டிக்கான அறிவிப்பும்.. :)
போன போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த படத்தை ஒரு முறை பார்க்கலாமா??


சூப்பரா இருக்குல்ல?? இந்தப்படம் எனக்கு ஏன் ரொம்ப பிடிச்சிருந்தது தெரியுமா??

அதுக்கு முன்னாடி.. புகைப்படக்கலையின் தனித்துவம் என்னன்னு எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா??

புகைப்படக்கலை என்பது நேரத்தை சிறைப்படுத்தும் செப்பட்டி வித்தை.ஒரு கணத்தில் நடக்கும் ஒரு விஷயத்தை அப்படியே நமது பெட்டிக்குள் அடக்கிவிடக்கூடிய மாயாஜாலம்.சாதாரணமாக எந்த ஒரு நிகழ்வையும் தொடர்ச்சியாக கண்டே பழக்கப்பட்ட நமக்கு இந்த மாதிரியான ”கணநேர கண்ணாடிகள்” வாய் பிளக்க வைத்துவிடுகின்றன.எனக்கு இந்தப்படம் ஏன் பிடிச்சிருக்குன்னு புரிஞ்சிருக்குமே,கூடவே இந்த மாசத்துக்கான தலைப்பு என்னன்னு யூகிச்சாச்சா?? :)
இந்த மாத பிட் போட்டியின் தலைப்பு “கணநேர கண்ணாடிகள்”. சுத்தத்தமிழில் சொல்லனும்னா “Action shots"(ஆக்‌ஷன் ஷாட்ஸ்). :-)


படத்தை பார்த்தவுடனே அந்தக்கணத்தின் அருமையை படம் பார்வையாளருக்கு
தெள்ளத்தெளிவாக உரைக்க வேண்டும்(உறைக்கவும் வேண்டும்.:-))..அது போன்ற படங்கள்...
.
எங்கோ தூங்கிக்கொண்டிருக்கும் மலையையோ அல்லது உங்கள் தெருவோரத்தில் காற்றில்லா நேரத்தில் வெட்கப்பட்டு தரையை பார்த்துக்கொண்டிருக்கும் மரத்தையோ படம் பிடித்து அனுப்பாதீர்கள்...
சரியா??

போட்டியின் முக்கிய தகவல்களின் பட்டியல் இதோ..

தலைப்பு : கணநேர கண்ணாடிகள் (Action shots)


நடுவர்:CVR


படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : பிப்ரவரி 15, 23:59போட்டி விதிமுறைகள்:-
1.) படங்கள் நீங்களே எடுத்த,உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.


2.)படங்களை pitcontests.submit@picasaweb.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பாக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com. (தயவு செய்து படத்தின் சுட்டியை மட்டும் அனுப்ப வேண்டாம்,அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. புகைப்படத்தின் சுட்டி மட்டும் இணைத்து, புகைப்படம் இல்லாத மடல்கள் நிராகரிக்கப் படும்.)


3.)நீங்கள் அனுப்பும் படத்தின் பெயர் உங்களின் பெயராக இருக்க வேண்டும்( Eg Deepa.jpg, CVR.jpg etc ...மேற்குறிப்பிட்டபடி பெயரிடப்படாத படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


4.)ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கவும் , பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.

5.)ஒரு முறை படத்தை நிர்ணயித்து PiT க்கு அறிவித்துவிட்டால், எக்காரணத்தாலும் அதை மாற்ற முடியாது.தலைப்புல சந்தேகம் இருந்தா பின்னூட்டத்திலோ அல்லது photos.in.tamil@gmail.com.என்ற முகவரிக்கு மடலிட்டு தீர்த்துக்கொள்ளவும் :-)


6.)போட்டிக்கு அனுப்பப்படும் படம் ஏதாவது பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பிட் குழுவினரால் கருதப்படும் பட்சத்தில்,அந்தப்படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்.(Pictures not suitable for public viewing shall be removed from contention based on PIT moderators discretion)


7.) எங்களின் போட்டிக்கு ஏற்கெனவே அனுப்பிய படத்தை மறுபடியும் அனுப்ப வேண்டாம்

இந்தத்தலைப்பிற்கு ஏற்ற உதாரணப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு.. :)

மேலும் படங்கள் பார்க்கனும்னா இங்கிட்டு க்ளிக் பண்ணுங்க..
வரட்டா? :-)

Tuesday, January 27, 2009

வணக்கம் நண்பர்களே!

இந்த தடவை முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்வது வழக்கம் போலவே ரொம்ப கடினமாத் தான் இருந்தது. இருந்தாலும் முதல் மூன்று தேர்வு செய்தே ஆகனும் இல்லையா.போட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் கவர்ந்திழுத்தாலும் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முதல் மூன்று இடங்களை பிடித்தவை கீழே!மூன்றாம் இடம் :

இந்த இடத்திற்கு பிரகாஷ், கோமா,ராம், அமல் மற்றும் MQN படங்களுக்கிடையே கடும் போட்டி.

இராமின் படம் HDR முறையில் எடுத்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்.

அமலின் படத்தில் வளைவுகளில் வெட்டி இருக்காமல் முழுதாய் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் முதலிரண்டில் கண்டிப்பாக வந்திருக்கும்.

கோமாவின் படத்தில் வாயிலின் வளைவிற்கு மேலே இருக்கும் இடத்தையும் சேர்த்து எடுத்திருந்திருக்கலாம். அதை வெட்டி இருப்பது அங்கே எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்து கோபுரத்தின் மீதான கவனத்தை சிதறடிக்கிறது. ஆனாலும் பைசா கோபுரத்தை இந்த கோணத்தில் பார்ப்பது இதுவே முதல் முறை. Nice framing and composition.
கடைசியில் வென்று மூன்றாம் இடத்தை பிடித்தது. MQN
Diff Composition இல் எடுத்திருந்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்குமோ என்று ஒவ்வொரு கோணத்தையும் மனதால் யோசிக்க வைக்கிறது. மிகச் சரியான நேரத்தில் அழகாக எடுக்கப் பட்ட புகைப்படம். வாழ்த்துக்கள் MQN.இரண்டாம் இடத்திற்கும் முதல் இடத்துக்கும் இடையே போட்டி போட்டது இரு படங்கள். நிலாவின் புகைப்படமும் ( ராம் கவனிக்க : நந்துவின் படம் இல்லை. ) மற்றும் சங்கரின் படமும். சங்கரின் படம் நேர்த்தியாகவும், அழகுடன் இருந்தாலும் அழகுக் குவியலாய் உணர்ச்சிகளை அற்புதமாய் வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் உள்ளங்கவர் நிலாவை பின்னுக்குத் தள்ள இயலாமல் இரண்டாம் இடத்தில் நின்று விட்டது.

ஆக இரண்டாம் இடம் சங்கர் பாலசுப்ரமணியம். வாழ்த்துக்கள்.
சீக்கிறம் வைட் ஆங்கிலள் லென்ஸ் வாங்கி பட்டையைக் கிளப்ப வாழ்த்துக்கள் சங்கர்.முதலிடம் சொல்லித்தான் ஆகனுமா.. கண்டிப்பா நந்துக்கு இல்ல. நிலாவுக்குத் தான். அருமையா போஸ் குடுத்து அப்பாவை போட்டோ எடுக்க வைச்ச நிலாதான்.

முதலிடத்தைப் பெற்று வெற்றி பெறும் நிலாவிற்கு எங்களின் வாழ்த்துக்கள். அப்படியே அப்பாக்கும் போனாப் போறதுன்னு எங்க எல்லார் சார்பிலையும் நீயே ஒரு வாழ்த்துக்கள் சொல்லிடு நிலா.Flickr explorer ல் மொத்தம் 500 இடங்களில் இரண்டாம் இடத்தை பல வாரங்கள் தக்கவைத்திருந்தது இந்தப் புகைப்படம் வாழ்த்துக்கள் நந்து!Special mention :

பிரகாஷின் படம். முழுதாய் பார்க்கையில் நிறைய Post Processing செய்தது போலத் ( உண்மையில் இல்லை) தோன்றியதோ, அல்லது sharpness குறைந்ததா .. எதுவோ ஒன்று கவனத்தை சிதறடிக்கிறது. நல்ல கோணம். மேலும் பல படங்கள் சிறப்பாக எடுக்க வாழ்த்துக்கள் பிரகாஷ்.முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் புகைப்படம் எடுத்த விதத்தையும் அதை செம்மைப் படுத்திய விதத்தையும் பகிர்ந்துக் கொள்ளுமாறு குழுவின் சார்பிலும் பங்கேற்பவர்களின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்.மீண்டும் அடுத்த போட்டியில் எல்லாரையும் சந்திக்கலாம். அடுத்தப் போட்டியிலும் அசத்த தயாரா இருங்க மக்கா!!


Thursday, January 22, 2009

வணக்கம் மக்கா!

இந்த தடவையும் வழக்கம் போல போட்டில கலந்துகிட்டு கலக்கோ கலக்குன்னு கலக்கி இருக்கும் உங்க எல்லோருக்கும் "நம்" குழுவின் சார்பில் நன்றி. கலந்துக்கிட்ட எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த மாசம் பத்து புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம்னு தான் உக்காந்தேன். ஆனா பதினைஞ்சா போட வேண்டிய கட்டாயம்.

முதல் பதினைஞ்சுக்குள்ள வந்த படங்களை பாக்கறதுக்கு முன்னாடி சில விஷயங்கள்.போன பதிவில் ஏற்கனவே சொன்னது போல அடிப்படைகளை முக்கியமாக கவனத்தில் கொள்ளுங்கள். போன பதிவில ஸ்லைடு ஒண்ணு போட்டிருந்தேன் எத்தனை பேர் பார்த்தீங்கன்னு தெரியாது. அந்த ஸ்லைட் ஆரம்ப மற்றும் இடைநிலை புகைப்படக் கலைக்கு மிகவும் தேவையான விவரங்களைத் தருகிறது. அதோடில்லாமல் எடுத்துக்காட்டுப் புகைப்படங்களையும் தந்து செட்டிங் மாறினால் எப்படி படத்தின் தன்மை மாறும் அப்படின்னு நீங்களே நேரடியா செஞ்சு பாக்கக் கூடிய வசதியோட இருக்கு. எ.கா: ஷட்டர் ஸ்பீட் அதிகமானா/குறைவான புகைப்படங்கள் எப்படி மாறுபடும் ? அதை அந்த ஸ்லைடில் நீங்களே செஞ்சு பாக்கலாம்.

இப்ப போட்டிக்கு வருவோம்.

கிருஷ்ணாவின் புகைப்படத்தில் காண்ட்ராஸ்ட் மற்றும் ஷார்ப்னெஸ் குறைஞ்சு இருக்கு. very tight cropping.

நனானி அவர்களின் புகைப்படம் அழகா இருந்தது. பழைய புகைப்படங்களுக்குண்டான மதிப்பே தனி தான். அது ஸ்கேன் செஞ்சு போட்டிருக்காங்க. நல்ல புகைப்படம்.

காரூரன் படத்தில் இருக்கும் குழந்தைக்கு சுத்திப் போடுங்க. பின்பக்கம் மரச்சட்டத்தின் நிறமும் , சருமத்தின் நிறமும், உடையின் நிறமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகிப் போனது குறை. பின் புறம் இருக்கும் சட்டம் முழுதும் குழந்தைக்கு பேக் கிரவுண்டாக வந்திருந்தாலோ அல்லது அந்த சட்டம் முழுதும் இல்லாமல் பின்னால் தெரியும் வண்ணங்கள் நிறைந்திருந்தாலோ இன்னமும் மெருகோடிருந்திருக்கும். கோணம் மாற்றி எடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது இதற்காகத் தான்.

கொரியர் கைப்புள்ள அண்ணாச்சியின் படம் அழகாய் இருந்தாலும் அதில் ஏதோ குறைவது போன்ற உணர்வு. அருமையானக் கோணம் ஆனால் பூச்சிகளின் பின்னால் தெரியும் அந்தக் கோடு Disturbing one

விஜயின் அந்த மலையில் இருக்கும் பனியும், அதன் பிரதிபலிப்பும் அருமை. But Bluish tint reduces the beauty bit. Little more contrast would have solved the problem ?

ஜாக்கி சேகர் - உங்களின் பிற புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இது அவ்வளவாக ஈர்க்கவில்லை.


திவா அவர்களின் அகல்பரப்பு புகைப்படம் முழு அளவில் பார்த்தால் அன்றி அதன் வீச்சு தெரியாது. அதுவும் தவிர சரியான படி தேவையற்றவைகளை விலக்கி இருந்திருந்தால் அல்லது பாலத்தை முழுமையாக எடுத்திருந்தால் காட்சி செம்மைப் பட்டிருக்கும்.

வெண்ணிலா மீரான் படம் - Flower over exposed bit.


ட்ரூத். இதை விட வெகு அருமையானப் புகைப்படங்கள் உங்களிடம் இருந்து நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சதாங்கா - வானமும் ஏறக்குறைய வெளிறியே இருக்கிறது. கூடவே கோபுரத்தின் நிறமும் வெண்மை என்ற போதில் அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை.

வாசியின் புகைப்படத்தில் குழந்தையின் சிரிப்பு அழகு. ஆனால் சுற்றி இருக்கும் பார்டர் ? அல்லது வேறெதுவோ ஒன்று குறைவு. வண்ணத்தில் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்னமோ

நாகப்பன் படம் அழகு. இருந்தாலும் படம் முழுமையாய் இல்லாதது போல் உணர்வு!

மேலே குறிப்பிட்ட படங்களில் சில முதல் பதினைந்திற்கு வெகு அருகில் வந்தவை. இதைவிட இவர்களால் இன்னமும் அழகுற புகைப்படம் எடுக்க முடியும் என்பதில் நிச்சயமாக எனக்கு நம்பிக்கை உண்டு. முடிந்த வரையில் புகைப்படத்தின் கீழ் எங்களுடைய கருத்துகளைத் தந்திருக்கிறோம்.
****

இனி முதல் பதினைந்து -(தர வரிசைக் கிரமமாக இல்லை. )

மாணிக்க வாசகம் சற்றே வெளுத்தது போல இருந்தாலும் அழகான படம்.
சங்கர் பாலசுப்ரமணியன் அருமையான புகைப்படம். அவர் சொன்ன மாதிரி வைட் ஆங்கிள் லென்ஸ் இருந்திருந்தா இன்னும் பட்டைய கிளப்பி இருக்கும் போல
பிரகாஷ்__GR இது பிற்தயாரிப்பு செய்யப்படாதப் படம்னா நம்பறதுக்கு கஸ்டமா தான் இருக்கு. ஆனா உண்மை. அழகான கோணம்.
Shanth அழகானக் கோயில். வானத்தின் நீல நிறம் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. மேலே வலது மற்றும் இடது புறத்தில் காணும் மரத்தின் இலைகள் இல்லாமல் இருந்தால் இந்தப் படம் வெகு சாதரணமாகியிருக்கலாம்
நந்து f/o நிலா அட்டகாசமான புகைப்படம். பின்னாலிருந்து வரும் ஒளியை உபயோகித்திருக்கும் விதமும், கூடவே நிலாவின் புன்சிரிப்புடன் கூடிய முகபாவனையும் அதை ஒளிச்சிறைப் பிடித்திருக்கும் நேரமும் அருமை. கருப்பு வெள்ளைக் காவியம் படைக்கிறது
MQN நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படக் கருவி ஒரு சாதனமே தவிர அது மட்டுமே நல்லப் புகைப்படம் எடுப்பதில்லை. எடுப்பவர் எடுக்கும் விதத்தில் Point and shoot கேமராவிலும் நல்ல புகைப்படங்களைத் தரலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. நிலையாக நின்றிருக்கும் சிறுவன், பக்கத்தில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் பெரியவர்கள் என அதை காட்சிப் படுத்திய விதம் மிக அழகு.
கருவாயன் அழகான புகைப்படம். இருந்தும் multiple leading lines இருக்கும் இந்தப் புகைப்படத்தில் கவனம் இடதுபக்கம் தெக்கி நிற்கும் நீர்த்துளி மீது சென்றுவிடுகிறது.
சூர்யா எகிறி குதிச்சதை நல்லாவே பிடிச்சிருக்காரு. நல்ல டைமிங். வானம் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.
சுமதி முன்னாடி சிவனின் நிறமும் பின்னாடி தெரியும் கருப்பும் நல்லா பொருந்துது. வலது பக்கம் சிறிது வெட்டியிருக்கலாம்.
ராம் நல்ல காட்சியமைப்பு. nice contrast
அமல் நல்ல காட்சியமைப்பு. very tight crop. நந்து சொன்னது போல அதே நிறத்தைக் கொண்டு வருவது சவாலான விஷயம்.
கோமா புதுக் கோணத்தில் பைசா சாய்ந்த கோபுரம். வானத்தில் கொஞ்சம் நீலம் பாவியிருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும்
கார்த்திக் நல்ல சில்ஹவுட் படம். பெரியதா பார்த்தா அழகா இருக்கும்.
Srini துரு துருக் கண்கள், நல்ல பேக் கிரவுண்டு. நல்ல படம்- Nice and soft lighting over the face.
ஆனந்த் விளம்பரப் புகைப்படத்துக்குறிய நேர்த்தியுடன் நல்ல ஒளியமைப்பு. வாழ்த்துக்கள்.


அம்புட்டுத்தேன்.

கூடிய விரைவில் முதல் மூன்றுடன் சந்திக்கலாம் மக்கா.. அதுவரைக்கும் பை பை

Monday, January 19, 2009

போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் முதலில் குழுவின் சார்பாகவும், பார்வையாளர்கள் சார்பாகவும் நன்றிகள் பல. வழக்கம் போல் நல்ல அதீத அழகுடன் கூடிய படங்கள் திக்கு முக்காட வைக்கிறது.

இருந்தும் சில புகைப்படங்கள் நன்றாகவே இருந்தாலும், அதில் சில காரணிகள் நம்மை அந்தப் புகைப்படத்தின் அழகை ரசிக்க விடாமல் செய்யும். முக்கியமானது "நேரம்/தேதி". இது பெரும்பாலும் தவிர்க்கக் கூடியதே. போட்டிக்கு என்று இல்லாமல் உங்களின் தனித்தேவைக்கு என்று பார்த்தாலும் இது தேவையற்றதே. நேரம் மற்றும் தேதி மற்றும் பல முக்கியமான விவரங்கள் புகைப்படத்தின் எக்ஸிஃப் [EXIF Details ] பகுதியில் ஏற்கனவே சேமிக்கப் பட்டிருக்கும். ஆதலால் அது பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் நேரம் மற்றும் தேதிக்குண்டான தேர்வை தேர்ந்தெடுப்பதை நிறுத்துங்கள்.


அதுபோலவே படத்தின் மேலேயே தலைப்பை எழுதுவது, படத்தின் அழகை வெகுவாக குறைத்து விடுகிறது.போட்டிக்கு என்று இல்லை. தனிப்பட்டத் தேவைக்கும் புகைப்படம் எடுக்கும் போதும், எடுத்தப் பின்னும் கீழே சொல்பவற்றை முடிந்த வரையில் பின்பற்றினால் நல்ல புகைப்படம் கிடைக்கும்.

1 - புகைப்படத்தின் மீது எதையும் திணிக்காதீர்கள்.
2 - வெகு சாதரணமாய் இருக்கும் புகைப்படத்தையே கோணம் மாற்றி எடுங்கள். உங்களுக்கு திருப்தியாக தோன்றும் வரை எடுத்துக் கொண்டே இருங்கள்.
3 - அடிப்படை விவரங்களை மனதில் கொண்டு அதற்கேற்றமாதிரி செயல்படுங்கள். (அடிப்படை பாடங்களின் பட்டியல் இடுகைக்கும் கீழே இருக்கிறது )
4 - புகைப்படத்தின் தேவையற்ற பகுதிகளை வெட்டிவிட்டு பாருங்கள், அல்லது வேறு கோணத்தில் க்ராப் செய்து பாருங்கள்.
5 - நீங்கள் எடுத்த புகைப்படத்தை வேறொரு மூன்றாம் மனிதரின் புகைப்படம் போல தயவு தாட்சண்யம் இன்றி உங்களுக்கு நீங்களே விமர்சித்துப் பாருங்கள்.

இவையெல்லாம் பல முறை ஏற்கனவே சொன்னது தான். மீண்டும் நினைவுறுத்துகிறோம்.
******
More tips are available in the below slide from hp.com. This slide will open only when you open this post. Not in consolidate list mode.
Thanks HP for the above slide: Link : http://www.hp.com/united-states/consumer/digital_photography/tours/beginners/index.html


உங்களுக்கு சில விவரங்கள் புரியவில்லை, ஏற்கனவே சொன்ன பாடங்களில் திருப்தி இல்லை என்று தோன்றினால், மின்னஞ்சலில் எங்களைத் தொடர்புக் கொள்ளலாம்.

முதல் பத்து இடங்களுக்கான இடத்தைப் பிடிக்கும் படங்களின் விவரம் இரண்டொரு நாளில் வெளிவரும். அதுவரை பொறுத்திருக்கவும்.

Monday, January 5, 2009

நடந்து முடிஞ்ச டிசம்பர் மாத "நிழல்" போட்டியில் வித்தியாசமான ஒரு படத்தை எடுத்து பரிசை தட்டிச்சென்றவர் திரு.வெண்ணிலா மீரான். ஏன்னடா, ஒவ்வொரு மாசமும் போட்டி முடிவுகள் சொல்லும்போது, "வித்தியாசமான படம், வித்தியாசமான முயர்ச்சி" ன்னெல்லாம் சொல்லறோமே..அப்படி என்ன தான் வித்தியாசமா பண்ணிட்டாங்கன்னு நீங்க சொல்லரது எங்களுக்கு கேக்காமல் இல்லை. அதனால் தான் நாங்களும் ஒரு வித்தியாசமான முயர்ச்சி எடுக்கலாம்ன்னு இருக்கோம்.என்னான்னா.. முடிஞ்ச வரை நம்ம எல்லாரையும் கவர்ந்த புகைப்படத்தை எடுத்தவர்கிட்டேயே எப்படி எடுத்தார்ன்னு கேட்டுவிடலாம்ன்னு தான்.ஒருத்தர் அனுபவம் இன்னொருத்தருக்கு பாடம்.

அந்த வகையிலே முதல் வெற்றி ரகசியம் நம்ம வெண்ணிலா மீரான்கிட்டே கேட்டோம். அவரும் நம்ம வேண்டுகோளுக்கு இணங்கி இந்த ரகசியத்தை மின்-அஞ்சலில் பகிர்ந்துகிட்டார். நிஜமாவே மனுஷர் ரூம்போட்டு தான் யோசிச்சிருக்கார். கிட்டதட்ட 15 - 17 படத்திலே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுக்கு தான் போட்டியிலே கலந்துக்கவே வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதோட இல்லாம, பரிசையும் தட்டிகிட்டு போயிடுச்சு.

வெண்ணிலா மீரான் சொல்லரது என்னான்னா ....
நான் எடுத்த இந்தப் படம் பற்றிய technical விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியாது. காரணம் புகைப்பட கலையில் நான் கத்துக்க்குட்டி, ஒரு பொழுதுபோக்குக்காக படம் பிடிப்பவன். நான் கற்றுக்கொள்வதற்காக தான் PIT யை தேடி கண்டுப்பிடித்தேன்.

இருந்தாலும் இந்த படத்தை எடுப்பதற்கு நான் மேற்கொண்ட முயற்ச்சியையும் அன்று எடுக்கப் பட்ட வேறு சில படங்களையும் இங்கு தருகிறேன்.

நிழல்கள் தேடி நானும் என் கேமிராவும் வெளியே சென்று எதுவும் திருப்தி அளிக்காத நிலையில் அன்று இரவு எனது அறையில் இருந்த Shuttlecock ஐ வைத்து ஏதேனும் செய்யலாம் என யோசித்து என் அறையில் இருந்த மேசை விளக்கை பயன்படுத்தி பார்த்தேன். வெளிச்சம் சரியாக அமையவில்லை. அப்போது எனக்கு கிடைத்தது என்னுடைய செல்போன் (Sony Ericson W850i). அதனுடைய ஒளியை பயன் படுத்தி தான் அந்த படத்தை எடுத்தேன். அதிலுள்ள Flashஐ பயன்படுத்தி எடுக்க ஆரம்பித்தேன்.
இந்த படங்களை போல ஒரு Shuttlecockஐ கீழே போட்டு,இந்த படத்தை போல 3 Shuttlecock ஐ வைத்து என பல முயற்ச்சிகள் செய்தேன். அப்படி செய்து பார்க்கும் போது தான் Shuttlecockஐ நிற்க வைத்து எடுக்க முயற்ச்சித்தேன். உருண்டையான அடிப்பாகம் உள்ள Shuttlecockஐ எப்படி நிற்க்க வைப்பது?!?! ஒரு கையில் கேமரா ஒரு கையில் மொபைல் light இதுல Shuttlecockஐ எப்படி பிடிப்பது, என்ன செய்றது adjust பன்னி பிடித்து இரண்டு மூன்று முறை எடுத்து பார்த்தேன்.

சரியா வரல. பின்பு தான் வீட்டில் fewi kwik இருந்தது நியாபகம் வந்தது. உடனெ ஒரு வெள்ளை பெப்பரை எடுத்து அதில் Shuttlecockஐ ஒட்டி சிறிது நேரத்திற்கு பிறகு அதன் மேலிருந்து லைட் அடித்து பார்த்தேன், அற்புதம். 3 – 4 படங்கள் க்ளிக்கினேன். போட்டியில் கலந்து கொள்ள படம் கிடைத்தது.

அது மட்டுமில்லாமல் அந்த Shuttlecockன் மீது வேறு ஒரு Shuttlecockஐ தலைகீழாக வைத்து...

இந்த படம் போல எடுத்தேன் (இந்த படத்தை பார்க்கும் போது ஒரு Shuttlecock தலைகீழாக இருப்பது போலவும் அதன் நிழல் இரண்டு Shuttlecockஐ காட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்தது). போட்டிக்கு படம் அனுப்பும் போது என்னிடத்தில் போட்டிப் போட்டுக் கொண்ட படங்கள் இவை இரண்டும் தான். நான் எதிர்பார்த்தது இதில் முழுமையாக அமையாததினால் இதை அனுப்பவில்லை.

இப்படியாக ஒரு கையில் கேமரா ஒரு கையில் மொபையில் லைட், ஏங்கிள் பார்த்து அளவு பார்த்து......... அப்பப்பா அன்றிரவு நான் உறங்க செல்லும் போது மணி 1 ஆகிவிட்டது.

முயற்சிக்கு கிடைத்த நல்ல பலன். இங்கு கிடைத்த முதல் இடம்.

நான் கண்ட உன்மை: நம்முடைய பார்வையும் அதற்குரிய முயற்சியும் சரியாக இருந்தால் அதற்குரிய பயன்/விளைவு (result) நம் மனதிற்கு நிறைவானதாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
வெண்ணிலா மீரான்


கஞ்சத்தனம் பண்ணாம க்ளிக்கோக்ளிக்குன்னு க்ளிக்குங்க,
... அடுத்த வெற்றி ரகசியம் உங்களுடையதாக கூட இருக்கலாம்.!!!

Thursday, January 1, 2009

எல்லோருக்கும் PiT குழுவின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சாமி கும்பிடும்போது “சாமீ ! எல்லாரையும் நல்லபடியா வச்சிரு, கூட்டத்திலே என்னையும் கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோ" அப்படீன்னு சந்துல சிந்து பாடறதை கண்டுக்காதீங்க.. ஏதோ உங்க பேரை சொல்லி நாங்களும் எங்க அப்பளிகேஷனை தள்ளிவிட முயற்சிப்பண்றது தான்.

புத்தாண்டுன்னு சொல்லும்போதே எல்லாருக்கும் நினைவு வருவது "புத்தாண்டு வாக்குறுதி" தான். ஆனா என்னமோ பாருங்க சொல்லி வச்சாமாதிரி 3 -4 வாரம் தான் தாக்குப்பிடிக்க முடியுது. அதுக்கபுறம் தான் புத்தாண்டு பழசாயிடுதே!. அதனால, இனிவரும் 2009 ல் நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு கேட்டு உங்களை சங்கடப்பட்டுத்த வேண்டாம்ன்னு ஒரு அபிப்பராயம். சரி, இதுக்கும் இந்த மாத போட்டி தலைப்புக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே பார்க்கறீங்களா... இருக்கே !!!

இயற்கையில் ஆரம்பிச்சு நிழல்கள் வரை போட்டி தலைப்பு வச்சு உங்களை மடக்கிடலாம்ன்னு நினைச்ச எங்களை நீங்க எல்லாருமா சேர்ந்து திக்குகுமுக்காட வச்சிட்டீங்க. ஒவ்வொரு போட்டி தலைப்பை தேர்ந்தெடுக்கும்போதும் சரி, நேர்த்தியான படத்தை அறிவிக்கும்போதும் சரி, கண்ணு முழி பிதுங்கிடும் எங்களுக்கு. சில நேரத்திலே பெருமிதமாகவும் இருக்கும் ஏன்னா, IAS collector டைய ரெண்டாம் கிளாஸ் வாத்தியாராட்டம் ஒரு பீலிங்... ( ~ என்னமோ இவரால்தான் IAS பாஸ் பண்ணினா மாதிரி). அதனால, நாம எல்லாரும் புகைப்படம் எடுக்கிறதிலே கடந்து வந்த பாதையை பார்க்கறா மாதிரி இந்த மாத போட்டி தலைப்பை வச்சிருக்கோம்.

போட்டி - தலைப்பு :- "இதுவரை நீங்கள் எடுத்த படத்திலே மிக நேர்த்தியாக இருப்பது" எதுன்னு உங்களுக்கு தோணுதோ.. அது / ஓபன் டாபிக்.
  • கமலஹாசன் சொல்லறாமாதிரி - “My best is yet to come” ன்னு நினைச்சீங்கன்னா... அந்த காட்சியை தேடி க்ளிக்கியும் அனுப்பலாம்
  • விருப்பப்பட்டா "ஏன்" அப்படீங்கரதை பதிவா போடுங்க ... படிக்கவும் , உங்கள் அனுபவத்தை தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கோம்.

படங்கள் அனுப்ப கடைசீ நாள் :- 15 Jan 2009 ( 23:59 hrs)
போட்டி விதிமுறை:-

  1. படங்கள் நீங்களே க்ளிக்கியதாக இருக்கவேண்டும் ( அந்த காலத்திலே எங்க தாத்தா எடுத்த படம் எல்லாம் அனுப்பக்கூடாது)
  2. படங்களை pitcontests.submit@picasaweb.com என்ற மின்னஞ்சலில் attachment ஆக அனுப்பவும். Please also CC photos.in.tamil@gmail.com. (Send the Picture as attachement only – DONOT email the picture URL, your entry will be rejected)
  3. உங்கள் பெயரை ப்டத்தின் பெயராக போட்டு அனுப்பவும் ( Eg Deepa.jpg, CVR.jpg etc ... Those without proper naming format will not be considered for the contest )
  4. ஒரு படம் மட்டுமே சமர்ப்பிக்கவும் , பின்னூட்டத்திலும் மறக்காமல் தெரிவிக்கவும். சரிபார்க்க ரொம்பவே உதவியாக இருக்கும்.
  5. ஒரு முறை படத்தை நிர்ணயித்து PiT க்கு அறிவித்துவிட்டால், எக்காரணத்தாலும் அதை மாற்ற முடியாது. ( இந்த தடவை தலைப்பு புரியலைன்னு சால்ஜாப்பு எல்லாம் சொல்லமுடியாதே :)) :)) !!)

என்ன ஓகேவா .... ஹ்ச் .. ஹச்... அட அதுக்குள்ளே பரணிலே ஏறி தூசி தட்ட ஆரம்பிச்சிட்டீங்களே ... சபாஷ். புகைப்படக் கண்காட்சி விருந்துக்கு நாங்களும் காத்துட்டு இருக்கோம். கலக்குங்க மக்களே.!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff