Monday, October 29, 2012


முதல் சுற்றில் வரவேண்டியது... சில தவறுகளில் வெளியேறியவை.

படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகப் பார்க்கலாம்.

Before After Comments
 - na- 
Left corner was a distraction. Looks like edited with  picasa and  center focus option used. signature in the pic also a distraction.
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை.
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை. மேலும் இடது பக்கம் பாதி தெரியும் அந்த புதர்/செடி தவிர்த்திருக்கலாம்.
தேவையான காண்ட்ராஸ்ட் / ஷார்ப்னெஸ் இல்லை.வானத்தின் நிறம் சாம்பல் நிறத்தில் இருப்பதும் குறை.
சப்ஜெக்ட் மீது முழு கவனம் செலுத்த முடியாமல் தடுக்கும் காரணிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.சொல்ல வருவதை அவை தடுக்கின்றன.
Check the cropped/Processed version to see the diff

படம்1: Krishna
படம்2: Soundararajan
படம்3: Dr. M.K.Muruganandan
படம்4: Antony Satheesh
படம்5: Vanila
படம்6: kvp


மேலும் சில படங்களுக்கு பிகாசா ஆல்பத்திலேயே கமெண்ட் செய்திருக்கிறேன். விரைவில் முதல் மூன்றுடன் சந்திப்போம்.

Sunday, October 28, 2012

வணக்கம் மக்களே,

ரொம்ப நாளைக்கு அப்புறம் சந்திக்கிறோம்.  எல்லாருக்கும் முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துகள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவை எவை.. எதற்காக.. என்பதைப் பார்க்கும் முன் விலக்கப்பட்டவை குறித்து முதலில் பார்ப்போம்:

1 - கைவிடப்பட்டவை என்ற தலைப்பிற்கு வந்திருந்த படங்கள் பல அருமையானவை. ஆனால் சில " ஒதுக்கப் பட்டவை " க்கும் பழமைக்கும் வித்யாசம் இல்லாமல் இருந்தது.

ஒரு விளக்கின் படம்,  பழைய தொலைப்பேசியின் படம்,  இரண்டு தாத்தாக்களின் படங்கள் போன்றவை அதற்கு உதாரணம். முதியவர்களில் ஒதுக்கப் பட்டவர்கள் இருப்பார்களே அது ஓகே. ஆனால் எல்லா முதியோர்களும் ஒதுக்கப் பட்டவர்கள் அல்லர். அது போலவே பழையனவும். நாணயங்கள் ஒதுக்கப் பட்டவை அல்ல. வருங்காலப் பொக்கிஷங்கள்.  பார்த்த உடனே " அடடே... ஒதுக்கப் பட்டிருக்கே " அப்படிங்கற உணர்வு வரவைக்கும் படங்களே தலைப்புக்குச் சரியானவை. 

2 - நன்றாக வரவேண்டிய படங்கள் சில தேவையான ஷார்ப்னெஸ் இல்லாமல் ஒதுங்கிப் போயின.

3 - சில படங்கள் வெகு சாதாரணமாய் இருந்தன.

 4 - தலைப்பிற்கு சம்பந்தமில்லாத அல்லது தெளிவற்ற படங்கள்.

 5 - தாமதமாக வந்தவை தவிர்க்கப் பட்டன.

 6 - over exposed, shaken pics, distracting pics were rejected.

 7 - இத்துடன் என்னுடைய தனிப்பட்ட இரசனை & கருத்துகளின் முடிவுடன் தேர்ந்தெடுக்கப் பட்டவை உங்களின் பார்வைக்கு:

#அருண்


# சிவானந்த்
# சுரேஷ் மோகன் ராவ்


# ஜேம்ஸ்

Kandeepa

# ராஜா

# பிரேம் நாத்

# Sivapri

# வெங்கட் ராமன்

# நிலா

# சரவணன்


போட்டியின் இறுதிச் சுற்று அறிவிப்புக்கு முன்னதாக, முதல் சுற்றில் வரவேண்டியது... ஆனால் சில தவறுகளில் வெளியேறியவை குறித்து ஒரு தனிப்பதிவாக இந்த முறை தர எண்ணியுள்ளேன்.
***


Monday, October 15, 2012

பிட் அன்பர்களுக்கு வணக்கம்,

பொதுவாக நாம் எடுக்கும் புகைப்படங்களில் நமது ஞாபகத்திற்காக தேதி மற்றும் ஆண்டினை படத்தில் தெரியுமாறு கேமராவில் செட் செய்திருப்போம். அவ்வாறாக செட் செய்யப்பட்டு எடுக்கும் படங்களில் Date Stamp விழுந்திருக்கும். சிலவேளைகளில் இதனை நாம் யாருக்காவதோ அல்லது இணையத்திலோ பகிரும்போது இந்த Date Stamp நீக்கிவிட்டு பகிர்ந்தால் நன்றாக இருக்குமோ என நினைக்கும் அன்பர்களுக்காக இக்கட்டுரையை சமர்பிக்கிறேன்.

 பொதுவாக போட்டோஷாப் பயனாளர்களாக இருந்தால் இந்த Date Stamp ஐ பலவகைகளில் நீக்கலாம்(content-aware fill,Spot healing brush,patch tool,clonning tool etc). அதேபோலவே கிம்ப் பயனாளர்களும் Resynthesizer என்ற ஒரு இலவச நீட்சி மூலமாக நீக்கலாம். இந்த நீட்சியைப்பற்றி பிட் தளத்தில் ஏற்கனவே இந்த பதிவில் திரு.ஆனந்த் வினாயகம் குறிப்பிட்டுள்ளனர்.

Resynthesizer என்ற நீட்சியை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளவும். பின்னர் ஏதாவது ஒரு compression tool கொண்டு இதனை extract செய்து கொள்ளவும். extract செய்யப்பட்ட போல்டரில் lib மற்றும் share என இரு போல்டர்கள் இருக்கும். இதில் lib என்ற போல்டரில் இருக்கும் Resynth.exe பைலை காப்பி செய்து கொள்ளவும். இனி உங்களது கிம்ப் இன்ஸ்டாலேஷன் போல்டருக்கு செல்லவும். C:\Program Files\GIMP 2\lib\gimp\2.0\pulg-ins சென்று காப்பி செய்த Resynth.exe யை பேஸ்ட் செய்திடவும்.

இப்போது மீண்டும் நீங்கள் பதிவிறக்கம் செய்து பின்னர் extract செய்யப்பட்ட போல்டரில் இருக்கும் share போல்டரில் இருக்கும் smart-enlarge.scm, smart-remove.scm இரண்டு ஸ்கிரிப்ட் பைல்களையும் காப்பி செய்து C:\Program Files\GIMP 2\share\gimp\2.0\scripts இல் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

அவ்வளவுதான் Resynthesizer என்ற நீட்சியை நாம் கிம்பில் பதிந்துவிட்டோம்.

இனி, தேதி நீக்கப்படவேண்டிய படத்தை கிம்பில் திறந்துகொள்ளவும். ஏதாவது ஒரு செலக்ஷன் டூலைக்கொண்டு உங்களது தேதியை தேர்வு செய்துகொள்ளவும்.

இப்போது Fliter>Enhance> சென்று Heal Selection ஐ தேர்வு செய்யவும்.இப்போது தோன்றும் விண்டோவில் Default value ஆக 50 இருக்கும் இந்த மதிப்பு உங்களது புகைபடத்தின் தன்மையை வைத்து கொடுக்கப்படவேண்டியதாகும்.

ஆகவே முதலில் 50 இல் முயற்சி செய்யவும் ரிசல்ட் திருப்திகரமாக இருந்தால் அப்படியே விட்டுவிடவும். இல்லையென்றால் அதிகபடியான மதிப்பு கொடுத்து முயற்சிக்கவும். அவ்வளவுதான் உங்களது தேதி நீக்கப்பட்டிருப்பதை காணலாம்.

குறிப்பு : என்னுடைய சில நண்பர்கள் இந்த நீட்சி கிம்பில் (GIMP 2.8 on windows 7 64bit edition) திறக்கவில்லை என்று கூறினார்கள்.காரணம் நீங்கள் கிம்பை உங்களது கணினியில் நிறுவும்போது custom installation அல்லது Full installation முறையில் Python Scripting,Support for old plug-ins ஆகியவற்றை தேர்வு செய்திருந்திருந்தால் மட்டுமே இந்த நீட்சியானது வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


-நித்தி ஆனந்த்

Friday, October 5, 2012

கைவிடப்பட்டவை / Abandoned

இதுதான் அக்டோபர் மாதத் போட்டித் தலைப்பு.

‘காலத்தால் காணாமல் போனவை’ என முன்பொரு தலைப்பு கொடுத்திருந்தது சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்தப் போட்டிக்குக் காலம் அடித்துச் சென்றதாகதான் இருக்க வேண்டுமென்பதில்லை. உபயோகத்தில் இல்லாதவையாக.. ஒதுக்கப்பட்டவையாக.. புறக்கணிக்கப்பட்டவையாக.. காட்சிதர வேண்டும். காலத்தால் வழக்கொழிந்த பழைய கூசாவைப் பளபளவெனத் துலக்கி வைத்துப் படமெடுத்தால் அது பாதுகாக்கிற பொக்கிஷம் வகையில் சேர்ந்து விடும். அப்படியில்லாமல் Abandoned / கைவிடப்பட்டது என்கிற உணர்வு படத்தைப் பார்க்கும் போது ஏற்பட வேண்டும். மாதிரிக்கு சில படங்கள்:

#1, 2, 3 ராமலக்ஷ்மி


 ***

இது போன்ற புறக்கணிக்கப்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாதென்கிற உணர்வை மனதில் ஏற்படுத்தக் கூடியனவாகக் கீழ்வரும் உதாரணங்கள்:

# 4 கருவாயன்
#5 ஜீவ்ஸ்

பாழடைந்த கட்டிடங்கள், பராமரிக்கப்படாத கோவில்கள் போன்றனவும் இந்த வகையின் கீழ் வரும்:
#7 ராமலக்ஷ்மி


போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் அனுப்பக் கடைசித் தேதி 20 அக்டோபர் 2012.
*** 

Thursday, October 4, 2012

திரு. நடராஜன் கல்பட்டு அவர்களது புகைப்பட அனுபவங்கள் பாடங்களாக PiT தளத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அடுத்த பாகத்துக்கு செல்லும் முன் அவருடனான எனது நேர்காணல் உங்கள் பார்வைக்கு. இந்தக் கட்டுரை 19 ஆகஸ்ட் 2012, உலக ஒளிப்பட தினத்தில் தினகரன் வசந்தம் இதழில் வெளியானது.எட்டுவார முயற்சியில் எடுக்கப்பட்ட படம் இதுதான்:

இந்த அனுபவம் இன்னும் விரிவாக..  அவர் எழுதி வரும் தொடரில் வெளிவர உள்ளது. காத்திருங்கள்:)!
***

Monday, October 1, 2012

வணக்கம் நண்பர்களே..

முதல் மூன்று வெற்றியாளர்கள் யார் என்பதை பார்க்கும் முன் மற்ற படங்களின் விமர்சனங்களை பார்ப்போம்..

கீழே உள்ள படங்கள் தலைப்பிற்கு  பொருத்தமாகவும்..அதே சமயம்  படமும் நன்றாக இருக்கின்றது..

இருந்தாலும் , படத்தில் சிறப்பாக எதுவும் இல்லாமலும், எளிதாக எடுக்கப்பட்டது போல் இருப்பதாலும் இச்சுற்றில் இருந்து வெளியேறுகின்றது..


saravanan

 


ganesan

kavai prabu

 senthil kumar

 shravyan

 


tvn vijay prakash

 


uma sankar

 venki raja

 viswanath

james

அதே சமயம் ,கீழே உள்ள balaji baskaran மற்றும் siva pri ஆகியோர் படங்கள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் தலைப்பிற்கு மிகச்சரியான பொருத்தமாக இல்லை.. எனவே இப்படங்கள் இந்த சுற்றிலிருந்து வெளியேறுகின்றது..


balaji baskaran


siva pri

அடுத்தது durai அவர்களின் படம் silhouette ஆக பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. ஆனால் தலைப்பிற்கு மிக சரியாக அமையவில்லை..கொஞ்சம் crop செய்திருக்கலாம்..


snapper அவர்களின்
 
காலி பாட்டிலின் படம், sunstar உடன் மிக நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.. மணலும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.. இடது ஓரம் கொஞ்சம் இடம் விட்டு படம் எடுத்திருக்கலாம்..படத்தில் பெரிதாக குறைகள் இல்லை. இருந்தாலும் மற்ற படங்கள் தலைப்பிற்கு சற்று சிறப்புடன் இருப்பதால் இச்சுற்றில் வெளியேறுகின்றது..jagadeesh அவர்களின்

 

சிறுவர்கள் இல்லாத வெற்று விளையாட்டு திடல் தலைப்பிற்கு மிகவும் நன்றாக உள்ளது.. நல்ல angle லில் படமாக்கபட்டுள்ளது.. இருப்பினும் படம் சற்று தெளிவாக இல்லை.. மற்ற objects கொஞ்சம் distract செய்கின்றது.. இதனால் இச்சுற்றில் வெளியேறுகின்றது..

aaryan அவர்களின் படம்பார்ப்பதற்கு பளிச்சென்று எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பத படத்திற்கு அழகு.. நீல வானமும் அழகு.. ஆனால் சற்று over satruration ஆக இருப்பதால் அதுவே இப்படத்திற்கு சிறு செயற்கை தன்மையை தருகின்றது..அதே சமயம் இன்னும் கொஞ்சம் அந்த மரத்தை சேர்த்து எடுத்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகின்றது..

aravind

 

  தலைப்பிற்கு மிக நல்ல பொருத்தம்.. ரொம்ப தூரம் காலியான ரோடு.. ஒரு பக்கம் புல்வெளி , மறுபக்கம் காய்ந்த பகுதி.. வானம் எல்லாம் அழகு.. ஆனால் படத்தில் ரோடு பகுதியை இன்னும் சேர்த்து எடுத்து,மேலே வானத்தை குறைத்து எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. அல்லது இந்த மாதிரி crop செய்திருந்தால்,


 composition இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும்..


rohini அவர்களின் படம் தலைப்பிற்கு மிக பொருத்தம்.. இடமும் மிக அழகு.. பார்த்தவுடன் அந்த பெஞ்சில் போய் உட்காரவேண்டும் போல் உள்ளது..
ஆனால் over saturation , ஓரத்தில் vignette effect , நட்ட  நடுவில் சப்ஜெக்ட்... போன்றவை இப்படத்திற்கு குறைகள்..


tamil vasagan
அவர்களின் படமும் தலைப்பிற்கு மிக பொருத்தம்.. பக்தர்கள் யாரும் இல்லாத கோவில்,அந்த தூண்கள் எல்லாம் படத்திற்கு அழகு சேர்கின்றது.. ஆனால் இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம், அதே சமயம் கொஞ்சம் லைட் வெளிச்சம் அதிகமாக தெரிவது சற்று உறுத்துகின்றது..


kumaraguru அவர்களின்  வெற்று திண்ணை வீடு படம் மிகவும் அருமை.. படத்தில் கலரும் நன்றாக இருக்கின்றது.. ஆனால் வீடு பாதியாக compose செய்து இருப்பது சிறு குறை..


இறுதி சுற்றாக மூன்றாம் இடத்தை பிடிப்பதற்கு இரண்டு படங்கள்.. ஒன்று muthukumaran ன் அதிகாலை , மற்றொன்று rajkumar ன் அந்திமாலை யில் எடுக்கப்பட்ட படங்கள்..

இவ்விரண்டில் rajkumar ன் படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் மரம் மிக அழகு.. அதே சமயம் twilight நேரத்தில் இப்படம் அருமை..

rajkumar


muthukumaran
muthukumaran படத்தில்,அருமையான கிராமத்து வீட்டின் முன் வெற்று ஊஞ்சல், அதுவும் காலை வேலையில் நெல்லங்காட்டை(paddy fields) பார்த்துகொண்டே அமைக்கப்பட்டுள்ளது மிகவும் அருமை..


இவ்விரண்டு படங்களில் , rajkumar படம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் தலைப்பிற்கு தேவையான வெற்று இருக்கைகள் தான் முதன்மையாக இருந்திருக்க வேண்டும்.. அதே சமயம் மரம் நடுவில் இருப்பது சற்று உறுத்தல்.. இருந்தாலும் படம் மிக அருமை..

முத்து குமரன் அவர்களின்  படம் சற்று சாதாரணமான எடுக்கப்பட்டு இருந்தாலும் படத்தை பார்க்கும் போதே இந்த ஊஞ்சல் வெற்றாக இருக்கவே கூடாது என்று தோன்றுகின்றது இப்படத்திற்கான வெற்றியே..

எனவே,

மூன்றாம் இடம் பிடிப்பது muthukumaran .... 

அடுத்தது முதலிடத்திற்கு போட்டி போடுவது அமைதிச்சாரல் மற்றும் senthil kumar படங்கள்


இவற்றில் அமைதிச்சாரல் அவர்களின் படத்தில் இருக்கும் வெற்று ஊஞ்சல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.. distraction இல்லாத background இப்படத்திற்கு பலம்.. ஊஞ்சலும் சற்று வித்தியாசமாக இருப்பதும் நன்று..ஆனால் சற்று over exposure ஆக சப்ஜெக்ட் இருப்பது சிறு குறை..அதே சமயம் இன்னும் கொஞ்சம் இடம் விட்டு composition செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகின்றது..

எனவே,

இரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்... 


senthil kumar அவர்களின் படமும் தலைப்பிற்கு பொருத்தம்.. காய்ந்த புல்வெளி ,மேல் ஏறும் ரோடு எல்லாம் படத்திற்கு அழகு..பார்த்தவுடனேயே ஏதாவது வண்டியை எடுத்துக்கொண்டு அந்த மேட்டில் வண்டி ஓட்ட வேண்டும் போல் தூண்டுகின்றது..ஆனால் வலது ஓரத்தில் தெரியும் வீடு(பொம்மை போல் உள்ளது) பாதியாக க்ராப் செய்திருப்பது படத்திற்கு சிறு குறையே..

இருந்தாலும் அழகான கலர்ஸ், வித்தியாசமான இடம்,தலைப்பிற்கு பொருத்தமான சப்ஜெக்ட் தெளிவாக இருப்பது போன்ற சிறப்புகள் இருப்பதால்,

முதலிடம் பிடிப்பது senthil kumar....வாழ்த்துக்கள் செந்தில் குமார்..

மேலும் முதல் மூன்று இடம் பிடித்த நண்பர்களுக்கும்.. இதில் கலந்து கொண்ட அனைவரும் PIT ன் வாழ்த்துக்கள்..

விரைவில் அடுத்த மாத போட்டிக்கான தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்..

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff