Monday, June 30, 2008

வணக்கம் மக்கா,
புகைப்படக்கலையின் அதி முக்கிய மூலப்பொருள் "ஒளி". ஒளியின் அருமை நமக்கு எப்போ தெரியும் இருட்டுல தானே.(எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறேன்னு பாக்குறீங்களா?) வழக்கமா இருட்டியவுடன் புகைப்பட பொட்டிய மூடி வச்சுட்டு வீட்ட பாத்து நடைய கட்டிடுவீங்க இல்லையா ? ஆனா இருட்டிய பிறகு பல வித்தியாசமான, ஆச்சர்யமூட்டும், மனதை கவரும் படங்கள் நமக்கு காத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த மாசம் உங்க கூட சேர்ந்து நானும் குறைந்த அளவு ஒளியில் புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள போகிறேன். இந்த மாத போட்டித் தலைப்பு "இரவு நேரம்". (PIT வாசகர்கள் ரொம்ப நல்லவங்க என்ன தலைப்பு குடுத்தாலும் படம் பிடிச்சி தாக்குவாங்க :) )

இந்த மாதப்போட்டியை உங்களுக்கு தொகுத்து வழங்குவது An& மற்றும் நாதஸ் :)

போட்டிய தொடங்கியாச்சு. உங்களுடைய கை(காமிரா)வண்ணங்களை வரும் ஜூலை 15 , 23:59 (இந்திய நேரம்) க்குள் உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும். ஜூலை 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே சீவீயார் அண்ணாச்சி இரவில் புகைப்படங்கள் எடுப்பதை பற்றி ஒரு அறிமுகம் குடுத்து இருக்காரு. அதை ஒருக்கா படிச்சிட்டு உங்க ஆட்டத்தை ஆரம்பிச்சுடுங்க :)


மாதிரிப் படங்கள்:

(ஜீவ்ஸ்)


(An&)


(சீவீயார்)


(பீவீ)





(சர்வேசன்)


(பீவீ)


படமெல்லாம் பார்த்தாச்சா ?

இது அமாவசை இரவில் எடுத்தப்படம் ன்னு கடிக்கக்கூடாது, சரியா !


ரெடி, கேமரா, ஆக்ஷ்ன்..



இது வரை போட்டிக்கு வந்த படங்களை பார்வையிட

இனி நீங்கள் , உங்களின் படங்களை கீழ்கண்ட படிவத்தின் மூலம் நேரடியாக இணைக்க முடியும். தீபாவுக்கு ஒரு பெரிய நன்றி !!

...

Friday, June 27, 2008

எந்தரோ மகானுபாவலு...அந்தரிகி வந்தனமுலு. டாப் 10இல் இடம்பிடிச்ச படங்கள்ல 5 படங்களுக்கான விமர்சனங்களை நேத்தே பாத்துட்டதால இப்புடு எஞ்சிய 5 படங்களுக்கான விமர்சனமுலு.

6. Ila

சர்வேசன் : நல்ல composition. ஆனா, அவர் பார்ப்பது, லேப்-டாப்னு, பளிச்னு தெரியல. மொதல்ல பாக்கும்போது, மெடிட்டேஷன் பண்றாறோன்னு நெனச்சுட்டேன். 'a day at work' என்ற தலைப்பை நையாண்டி செய்வது போல், ராத்திரி நேரத்து ஃபோட்டோவை போட்டதும் தெய்வ குத்தமயாயிடுச்சு. மொத்தத்தில், நல்ல லைட்டிங்கில், அழகாக பதியப் பட்ட படம். குறைய தேடினாலும், கெடைக்க மாட்டேங்குது.

கைப்புள்ள : பாத்த உடனே 'வாவ்' சொல்ல வச்ச படம். நல்ல காட்சியமைப்பு. வழக்கமா இப்படி இரவு காட்சியில Flash போட்டு கெடுத்துடுவோம் - இந்த படம் இருக்கிற ஒளியையே பயன்படுத்தி இருக்கிறதுதான் இப்படத்தின் சிறப்பு. கொஞ்சம் Blurred மாதிரி தெரிவது பலவீனம்.


சர்வேசன் : படத்தை க்ளிக்கிய angle எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வரையப்படும் படமும், புகைப்படத்துக்கு ஒரு ஏத்தத்தைக் கொடுக்குது. unlucky shot. நிறைய பேர், 'ஆ'ன்னு இவரை சுத்தி நின்னு பாக்கர மாதிரி இருந்திருந்தா தூக்கியிருக்கும். ஓவியரை மட்டுமே காட்டுவதால், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு, கீழ படுத்து கிடுத்து, கட்டடங்களை விச்தாரத்தை காட்டி, angle மூலம் கவர்ந்திருக்கலாம்.

கைப்புள்ள : Point-of-View தான் இந்த படத்தின் வெற்றி. கேமராவை தரை மட்டத்தில் வைத்து எடுத்ததனால் படத்தின் காட்சியமைப்பு மற்ற படங்களில் இருந்து தனிப்பட்டு இருக்கு. இவரு என்னத்த வரையறாருன்னு ஓரக் கண்ணால் பார்க்கும் அந்த பார்வையாளர் அம்மணியும் சேர்த்து இருப்பது படத்துக்கு அழகு சேர்க்குது. குறைன்னு பாத்தா அந்த வெள்ளைப் பை பின்னாடி உறுத்துது - கொஞ்சம் நகர்ந்து எடுத்திருக்கலாமோ? அருகில் இருக்கும் கட்டிடங்களின் பிரமாண்டத்தை காட்டுவதற்காக முயற்சி செஞ்சிருக்கலாம். இந்த படத்தில என்ன கத்துக்கலாம்? எப்போதும் தோள் / கண் மட்டத்தில் இருந்துதான் எல்லாரும் படம் எடுக்கறோம். அதனால்தான் நம்ம படங்கள் எல்லாம் வழக்கமானவையாய் இருக்கு. வெட்கம் பாக்காம உருண்டு படுத்தோ, உயரமான எடத்தில இருந்தோ எடுத்தாதான் வித்தியாசப்படுத்திக் காட்ட முடியும்.

Point of Viewக்கு ஒரு எடுத்துக்காட்டு பாருங்க - கற்கை நன்றே கற்கை நன்றே. அருமையா காட்சியமைப்பு செய்யப்பட்ட ஒரு படத்தையும், குறைவான சொற்களையும் பயன்படுத்தி படிக்கிறவங்களைச் சிந்திக்க வச்சிருக்காரு பாருங்க.
கெளசிகனோட தரை ஓவியம் படம் போன்றே இருக்கும் இன்னொரு படத்தைப் பாருங்கள். ஓவியம், வரைபவர் இரண்டின் மேலும் கவனம் செல்லுவதற்காக ஓவியத்தைத் தலைகீழாய் படம்பிடித்திருக்கும் உத்தியைக் கவனியுங்கள். இவர் இப்படத்தில் காட்ட விரும்புவது, ஓவியத்தின் அழகினை அல்ல, வரைந்தவரின் திறமையை என்பது படம் பார்க்கும் போதே தெரியுதில்லையா?
33. T.Jay

சர்வேசன் : நிறைய disturbance படத்துல. ஒண்ணு, இந்த ரெண்டு வேலையாட்களை தனியா க்ளிக்கியிருக்கலாம். ஒருத்தர் மும்முரமா வேலை செய்வதும், இன்னொருவர் தம்மடித்து வெட்டியா இருப்பதும், ஒரு interesting சப்ஜெக்ட்டாய் மாறியிருக்கும்.இல்லன்னா, இடது புற வேலையாளை மட்டும் ஓரத்தில் வைத்து, கார்/ரோடெல்லாம் காட்டியிருக்கலாம்.

கைப்புள்ள : இன்னும் கொஞ்சம் நகர்த்தி, தெருவைப் பெருக்குபவரை ஒரு ஓரத்தில் வைத்து விரைந்து செல்லும் வாகனங்களைப் பின்புறத்தில்(background) வைத்து எடுத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். "They also serve who only stand and wait"னு சொல்லற மாதிரி இருந்திருக்கும்.

36. MQN

சர்வேசன் : கச்சிதமா இருக்கு. ஆனா, இழுக்கல.கார் மேல இருக்கர பேப்பர், distract பண்ணுது போல. கலர் தூக்கிட்டீங்களா? இத, interestingஆ மாத்தணும்னா, ஷட்டர் ஸ்பீடு கொறச்சு, spray paint சர்ர்னு வர மாதிரி காட்டினாதான் உண்டு :)

கைப்புள்ள : அருமையான பிற்தயாரிப்பு(Postprocessing). பிசிறு, குறைபாடு என்று பிற்தயாரிப்பில் எதுவும் தெரியவில்லை. இவர் பயன்படுத்தியிருக்கும் உத்தியின் பெயர் 'selective colouring'. நமது கருப்பொருளின்(subject) மீது பார்வையாளர்கள் கூடுதல் கவனத்தைச் செலுத்த வைக்கும் ஒரு உத்தி. இப்படத்தில் வண்டியின் மீது வண்ணம் இருக்குமாறும், மற்ற எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளையாக வைத்திருந்தால் இப்படம் கவிதையாக இருந்திருக்கும். அதாவது, வண்ணம் இல்லா உலகுக்குத் தன் உழைப்பால் வண்ணம் தீட்டிச் சிறப்பு சேர்க்கின்றார் என்று. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு பாருங்களேன்.

42. Shiju

சர்வேசன் : royal shot! நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. எல்லாரும் flickrலயே நிறைய சொல்லிட்டாங்க.குறிப்பா, நிழல் அருமையா இருக்கு படத்துல. ஆனால், அருவா/எளநீரு பக்கத்துல, இந்த மாதிரி 'a day at work' எல்லாம் எடுபடாம போயிடுச்சு என்பதே மெய்! :) படத்தில் ஒரு குறையும் லேது.
கைப்புள்ள : அருமையான டைமிங். கொஞ்சம் பகல் வெளிச்சமும் இருக்கும் பொன் மாலை பொழுதில் இப்படத்தை எடுத்திருப்பது சிறப்பு. அருமையான புகைப்படங்கள் எடுப்பதற்கு இந்த சமயமே சிறந்தது என்று புகைப்பட வலைத்தளங்கள் பலவற்றிலும் கூட குறிப்பிட்டிருப்பார்கள். இதை படிப்பவர்கள், இவ்வாறான சமயத்தில் புகைப்படங்களை எடுத்து பாருங்கள். உங்கள் படங்கள் வெகு சிறப்பானதாக அமையும். சர்வேசனார் சொன்னது போல படத்தில் குறை என்று ஒன்றும் தெரியவில்லை.

Thursday, June 26, 2008

வணக்கம் நண்பர்களே!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜூன் மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள் இதோ. ஒவ்வொரு படத்துக்குக் கீழேயும் அதற்குண்டான விமர்சனங்களைக் காணலாம்.



சர்வேசன் : போட்டித் தலைப்புக்கு மிகப் பொருத்தமான படம் இதுதான். அருவாள் வீச்சு முடிந்ததும் பிடிக்காமல் அருவாள் பாதி வீச்சில் இருக்கும்போது பிடித்திருந்தால், மேலும் மெருகேறியிருக்கலாமோ? :) பின்னணியில் இருக்கும் தேங்காய்களும், பாழடைந்த சுவரும், முறுக்கேறிய கைகளும், முண்டாசும் படத்துக்கு value சேர்கின்றன.

கைப்புள்ள : நாங்கள் மிகவும் எதிர்பார்த்த காட்சியமைப்பு இப்படத்தில் வெகு சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படத்தில் இளநீர் வெட்டுபவருக்குப் பின்னால் இரைந்து கிடக்கும் இளநீர் கூடுகளைக் காணும் போது, எவ்வளவு தூரம் அவர் உழைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அத்துடன் எடுத்துக் கொண்ட வேலையில் அவருடைய ஈடுபாடும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. கொஞ்சம் உத்துப்பாத்தா வெட்டிய இளநீரிலிருந்து சிதறும் சில்லு ஒன்றையும் காணலாம். இளநீர் வெட்டுபவரைச் சுற்றும் முற்றும் இடையூறாக எந்தவொரு பொருளும் இல்லை. Close enough to cover the subject, just long enough to cover the essential background. சர்வேசன் சொன்னா மாதிரி வெட்டற கத்தி கொஞ்சம் மேல இருக்கற மாதிரி இருந்திருந்தா தசாவதார லெவலுக்கு(உலகத்தரம்...ஹி...ஹி) போயிருக்கும். கலரில் இப்படம் எப்படியிருக்கும் என்று காணும் ஆசையும் வருகிறது.


சர்வேசன் : அருமையான தருணத்தில் அழகாக க்ளிக்கப்பட்ட படம். மெய்மறந்து நாதஸ் ஊதுபவரும், பின்னணியில் இருக்கும் அந்த அம்மாவும், தத்ரூபமாக வந்துள்ளனர். படத்தில் உள்ள ஒரு extra textureம் (increased color contrast?) நல்லாவே இருக்கு பார்க்க. ஒரே குறை, படம் horizontal framing செய்யாமல், vertical frameing செய்தது. இன்னும் நிறைய பக்த கோடிகள் இடப்பக்கம் தெரிந்திருந்தால், படம் அடுத்த கட்டத்துக்கு போயிருக்கும்.

கைப்புள்ள :தன்னை மறந்து நாதஸ்வரம் இசைக்கும் ஒரு கலைஞரை வெகு அழகாகச் சித்தரிக்கிறது இப்படம். அவருக்கு அருகில் பயபக்தியுடன் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அப்பெண்ணைக் காணும் போது, அது இவருடைய இசையின் விளைவாகத் தான் என்றும் வெகு சுலபமாகத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது(அவ்வாறு இல்லாது போயிருந்தாலும்:) ) படத்தின் இடது புறம் மேலே தெரியும் வெள்ளை patch சற்று இடையூறாக இருக்கிறது. இருப்பினும் வலப்புறம் தெரியும் வண்ணத் தோரணங்களைக் காட்டுவதற்காக அதை crop செய்யாமல் வைத்திருக்கிறார் போலும்? படத்தில் உபயோகப் படுத்தியிருக்கும் effectsஉம் காட்சியமைப்பும் படத்தை ஒரு ஓவியம் போலத் தோன்றச் செய்வது அழகு.



சர்வேசன் : எறும்புகள் பேசிக் கொள்வது போல படம் அமைந்திருப்பது அழகு.

கைப்புள்ள : எறும்புகள் தான் உழைக்கும் வர்க்கத்திற்கு(Working Class)நாம் காட்டும் எடுத்துக்காட்டு. சின்ன வயசுல எத்தனையோ தடவை உத்து உத்து எறும்புகள் என்ன பேசிக்குதுங்கன்னும், பண்ணுதுங்கன்னும் பாத்துருப்போம். அதை அப்படியே கச்சிதமாப் பதிவு செய்திருக்கு இந்தப் படம். சுறுசுறுப்பா ஓடிக்கிட்டிருக்கற எறும்புகள் நின்னு பேசிக்கும் போது எடுக்க நல்ல டைமிங் வேணும்.


ஸ்பெஷல் மென்ஷன்: Surveysan's Picks
இந்த மாதிரிப் படங்களெல்லாம் நிறைய காட்சிப்படுத்த வேண்டும். இதெல்லாம் என்னான்னே தெரியாம நிறைய பேர் வளர்றாங்க. அருமையான முயற்சி. ஸ்லோ ஷட்டர் நல்ல முயற்சி. ஆனால், நெல் எறியும் தாத்தா, உடம்பு பாதி அழிந்தது போல் இருக்கிறது. சூரியனுக்கு அந்தப் பக்கத்திலிருந்து முயன்றிருக்கலாம்
குழந்தை சீரியஸாக கையில் ஸ்க்ரூ ட்ரைவருடன் வண்டியைப் பார்ப்பது அருமை.

வெற்றி பெற்ற மூவருக்கும் எங்கள் வாழ்த்துகள். வெற்றி பெற்ற படங்களைத் தவிர முதல் பத்தில் இடம் பெற்ற மற்ற படங்களைக் குறித்தான கருத்துகளுடன் ஓரிரு நாட்களில் இன்னுமொரு பதிவை எதிர்பாருங்கள்.

போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படங்களைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்கும் ஒரு எண்ணமும் இருக்கின்றது. அன்றாட வேலையினூடே எந்தளவு அது சாத்தியம் என்று தெரியவில்லை:) இயன்றவரை முயற்சிக்கிறோம். நன்றி.

Friday, June 20, 2008

வணக்கம் மக்கள்ஸ்,
ஜூன் மாதப் போட்டிக்கானத் தலைப்பை அறிவிச்சப்போ, தலைப்பு ரொம்ப கஷ்டமாயிருக்குன்னு சில பின்னூட்டங்கள் வந்துச்சு. ஆனா வந்திருக்கற படங்களின் தரத்தைப் பாக்கும் போது, எந்த தலைப்பும் நம்ம மக்கள்ஸுக்குக் கஷ்டமானது இல்லைன்னு ரொம்பத் தெளிவாத் தெரியுது. சரி, இப்ப இந்த மாதப் போட்டியில தேர்வான முதல் பத்து படங்கள் உங்கள் பார்வைக்கு.






6. Ila
7. வாசி
28. Srikanth
30. கௌசிகன்
33. T.Jay
35. Amal
36. MQN
42. Shiju
47. Sathiya
48. Venkatesan PS


கூடிய விரைவில் முதல் மூன்று படங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம்.

சர்வேசன்/கைப்புள்ள

Monday, June 16, 2008

வழக்கம் போல இந்த மாசமும் கலக்கல் படங்கள்.

ஒவ்வொரு மாசமும் போட்டிக்கான தலைப்பு வைக்கும்போது பல தலைப்புகள் அலசி, நிறை குறைகளை கலந்து பேசி, கடைசியா ஒண்ண தேர்ந்தெடுத்து அறிவிப்போம்.
இந்த மாதமும் அது நடந்தது.

"அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)"னு தலைப்பு முடிவானதும், எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம் இருந்தது.
வேலை செய்யர ஆளு/மிருகம்/உயிரினம் எல்லாம் கேக்கறோமே, நம்ம மக்கள் தைரியமா, களம் இறங்கி க்ளிக்குவாங்களான்னு.

கைப்ஸ் போட்ட, போட்டி அறிவிப்பு பதிவில் இடம் பெற்ற ஸாம்பிள் படங்கள் எல்லாம் பாத்திருப்பீங்க. குறிப்பா, நம்ம ஜீவ்ஸின் கொல்லிமலை டீ-ஆத்தா போட்டோவெல்லாம் பாத்திருப்பீங்க.

டீ-ஆத்தாவின் முகத்தில் தெரியும் புன்முறுவல் என்ன?
முகத்தில் தெரியும் தன்னம்பிக்கை என்ன?
அடுப்பின் புகை என்ன?
படத்தில் நிழலின் சிறப்பென்ன?
கலக்கியிருக்காருல்ல மனுஷன்?

அதிலிருந்தே தெரிஞ்சிருக்கும், இந்த தலைப்புக்கு என்னவெல்லாம் எடுக்கமுடியும்னு.

எடுத்திருக்காங்களா நம்ம மக்கள்?

லேசுல விட்டுருவாங்களா?

கீழ பாருங்க.

போட்டிக்கு வந்த 50 படங்கள் கட்டம் கட்டியிருக்கோம்.
(லோடாக கொஞ்சம் நேரம் ஆகலாம், பொறுமைஸ்)

ஏதாவது விடுபட்டிருந்தாலோ, தவறிருந்தாலோ, தெரிவிக்கவும்.
வாசகர்களும், சக போட்டியாளர்களும், உங்களுக்குப் பிடித்த நிறை குறைகளை சொல்லிட்டுப் போங்க. படம் புடிச்சவங்களுக்கு உபயோகமா இருக்கும்.

டாப்-10னுடன் விரைவில் சந்திக்கிறோம்.

பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றீஸ் பல.

-சர்வேசன்/கைப்புள்ள

பி.கு: PIT ஆசிரியர் குழுவில் இருப்பவர்களின் படங்கள், சும்மா பார்வைக்காக மட்டுமே. போட்டியில் சேர்த்துக் கொள்ள படமாட்டாது.






1. இம்சை
2. Sankar
3. கவிதா/Kavitha
4. Jeeves
5. மணிமொழியன்
6. Ila
7. வாசி
8. வல்லிசிம்ஹன்
9. Amaan Abdullah
10. JackieSekar
11. கிரி
12. துளசி கோபால்
13. Peeveeclick
14. Newbee
15. ஆனந்த்
16. Boston Bala
17. Jil Jil
18. goma
19. Nathas
20. ரிஷான் ஷெரீப்
21. Athi
22. Sumathi
23. லக்குவண்
24. பாரிஸ் திவா
25. கயல்விழி முத்துலெட்சுமி
26. ராஜ நடராஜன்
27. நந்து f/o நிலா
28. Srikanth
29. சின்ன அம்மிணி
30. கௌசிகன்
31. பிரபு ராஜதுரை
32. ஒப்பாரி
33. T.Jay
34. Truth
35. Amal
36. MQN
37. நானானி
38. சூர்யா
39. ராமலக்ஷ்மி
40. கார்த்திக்
41. ஆயில்யன்
42. Shiju
43. நாமக்கல் சிபி
44. நிலாக்காலம்
45. Illatharasi
46. Geetha
47. Sathiya
48. Venkatesan PS
49. Kuttibalu
50. ஓவியா
51. Gokulan
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff