“கேள்வி கேக்கிறது ரொம்ப ஈசி, பதில் சொல்பவனுக்கு தானே அதோட கஷ்டம் தெரியும்” ன்னு வடிவேலு சொல்வது சரியாத்தான் இருக்கு. போட்டியிலே கலந்துக்கிறது ரொம்ப-ரொம்ப ஈசி, அதிலேருந்து மூணே மூணு சூப்பர் படத்தை மட்டும் செலெக்ட் பண்ண சொல்லறது ஆகாசத்திலே மின்னர நட்சத்திரங்களிலே மூணை மட்டும் சொல்லுங்கிறா மாதிரி இருந்துச்சு. நானும் நந்துவும் நொந்து நூடுல்ஸாயிட்டோம்.
எல்லாத்தையும் பெப்பெரப்பேன்னு பரத்திப் போட்டு பார்த்ததும் மலைச்சுப்போயிட்டோம். அடங்கொக்கமக்கா . . . ஆழம் தேரியாம காலை விட்டுட்டோமான்னு ஒரு சந்தேகம் லேசா தலைதூக்கிச்சு. . ஹ்ம்ம். என்ன ஆனாலும் புலியை முறத்தாலையே விரட்டியடிச்ச பாரம்பரியம் இல்லையா..(பாட்டீ நீ பண்ணின வேலை.. இப்பொ பாரு என் நிலமைய...) இதுக்கெல்லாம் பயந்துருவோமா என்ன... (பாட்டி உள்ளேயிருந்து எக்கோ).. கோதாவிலே இறங்கியாச்சு. . முடிவை சொல்வதுக்கு முன்னாடி எங்களுடைய சில observations.
சத்தியா : - சூப்பர் டைமிங்க், இன்னும் சூப்பர் செட்டிங்ஸ். தூரத்திலே இருக்கும் படகுகளும், 2 மீனவர்களும். ஒத்தையா நிக்கிற தென்னமரம் எல்லாம் அம்சமா இருக்கும. சில்லவுட்டிலையும் தப்பு சொல்ல முடியாது. ஆனா என்ன படத்தை க்ளிக்கர அவசரத்திலே தென்னைமரம் உச்சியிலே வெட்டுபட்டு இருக்கிறதை கவனிக்கலை போல இருக்கு. ஒருவேளை, இதே நேரத்திலே க்ளிக்கிய மத்த படங்களிலே தென்னைமரம் முழுசாக்கூட வந்திருக்கலாம், ஆனா நீங்க போட்டிக்குன்னு இதை அனுப்பிட்டீங்க. அதாங்க உங்க படம் தேர்வாகலை. இல்லைன்னா நான் உங்க படத்த்க்கு டோட்டல் சரண்டர்.
அனு & நந்தகுமார் :-
அனு, உங்க படத்திலே சூரியன் கண்ணுக்குள்ள டார்ச் அடிக்கிரா மாதிரி இருக்கு. இது ஒருவிதமான glare ஐ குடுக்குது. இது மட்டும் இல்லை, We find that your picture has dispersed subjects. அதாவது, beach umbrella லேயிருந்து குட்டிபாப்பா வரைக்கும் சொல்லறாமாதிரி தனியா தெரியிர சில்லவுட் எதுவுமே இல்லை. ஆனால், opposite side லே ஒரு அற்புதமான கோம்போசிஷண் ஒளிஞ்சிருக்கிரதை கவனிச்சீங்களா?? கொஞ்சூண்டு சூரியன், ஓடிவர பாப்பா, எதையோ சாப்பிடுரதிலே மும்மரமா இருக்கும் மக்கள்ஸ், இவங்களை மட்டும் கட்டம் கட்டியிருந்தா என்னமா இருந்திருக்கும்.
நந்தகுமார், இது அந்த மாட்டுக்கார வேலன் தானே! மாட்டை எல்லாம் ஓட்டிட்டு, இவர் தனியா சைக்கிள்ளே போரார். ரைட்டா?.நீங்க தேர்வு செஞ்ச லொகேஷண் & angle சூப்பர். உங்க சப்ஜக்ட் elevation லே இருக்கிராமாதிரி க்ளிக்கினது நல்லா அமைஞ்சிருக்கு. ஆனால், ரொம்ப தூரத்திலெயிருந்து எடுத்ததாலோ என்னமோ, கும்மிருட்டுக்கு நடுவிலே, சைக்கிள்காரர் பொட்டு மாதிரி தெரியிரார். நீங்க பார்த்த clarity எங்க கண்ணுக்கு புலப்படலை. ஒருவேளை, இவரை நடுநாயகமா வைக்காம, ஓரத்திலே வச்சு, மரம் & விழுதுகளை கட்டம் கட்டியிருந்தா காட்சி முழுமையா மனசிலே நிறஞ்சிருக்கும்ன்னு நினைக்கறேன்.
உங்க ரெண்டு பேர் படமும் சூப்பர், ஆனால் அதிலே மத்தவங்களுக்கு எதை காட்டணும்ன்னு நீங்க தான் முடிவு பண்ணணும். Try to look at the same frame from a different perspective.
இரவுகவி :-
picturesque settings ங்கிறதுக்கு அற்புதமான படம். “ கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” ங்கிறா மாதிரி, இந்த படத்தை பார்த்ததுமே கவிதை தானா வரும். அவ்வளவு நேர்த்தியான படம். பட்.. கட்டம் கட்டின விதம் தான் கொஞ்சம் நெருடலா இருக்கு. Bunt edges அல்லது patterned framing இது ரெண்டிலே ஏதாவது ஒண்ணு மட்டும் வச்சிருந்தாலே படம் எங்கேயோ போயிருக்கும். ஆனால், ரெண்டுமே இருக்கிறது கவனத்தை ஜோடியிலேயிருந்து திசைதிருப்புரா மாதிரி இருக்கு. சூரியன் கொஞ்சம் அதிகப்படியா ஆரெஞ்ச் பவுடர் பூசிகிட்டாரோ?
நடுவர்களின் சிறப்பு கவனம் பெற்ற படம் :- MQN
Indoor silhouette, rather unique perspective. உண்மைய சொல்லுங்க. வீட்டுக்குள்ளேயே சில்லவுட் எடுக்க முடியும்ன்னு எத்தனை பேர் யோசிச்சிருப்பீங்க?. சூப்பர்ங்க. ஆனால் ஒரு சின்ன நெருடல், உங்க படம் ஒவ்வொரு மானிடர்ல ஒவ்வொரு மாதிரி தெரியுது. என்னோட வீட்டு மானிடர்ல, கொலுசு டிசைன்வர நல்லா தெரியுது.. ஆனா ஆபீஸ் மானிடர்ல, இது ஒரு பெர்பெக்ட் சில்லவுட். நந்துவுக்கு இதே தான் சொல்லரார். (படு அட்டகாசமான படம், கொஞ்சம் டீடெய்ல் தெரியறமாதிரித்தான் இருக்கு.ஒவ்வொரு மானிட்டருக்கும் கொஞ்சம் இது மாறுது. என் ஆஃபீஸ் மானிட்டரில் கொஞ்சம் நல்லாவே டீடெய்ல் தெரியுது. வீட்டில் அவ்வளவா தெரியல)போட்டி ஆரம்பத்துல ப்ராக்டிகலா இப்படி ஒரு ப்ரச்சனை வரும்ன்னு சில்லவுட்டில் லேசான ஒளி வித்தியாசத்தை ஒரு தவறா எடுத்துக்க வேண்டாம்ன்னு நெனச்சிருந்தோம். ஆனா இந்த படம் அந்த லேசான அளவை தாண்டிட்டதா தோணுச்சு.. but all said and done, absolutely brilliant composition & mind blowing perspective.
சில்லவுட் மூன்றாவது நட்சத்திரம்
ஜெயகுமார் :-
Leading lines ங்கிர concept நமக்கெல்லாம் இப்போ ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும். இதையே ஜெயக்குமார் மாத்தி யோசிச்சிருப்பாரோன்னு தோணவைக்கிர படம். A tunnel is a line from the outside, a line is a tunnel from the inside. ங்கிரதை துல்லியமா எடுத்துக்காட்டும் படம். இது மட்டும் அல்ல, காட்சி அமைப்பும் .. இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு போகும் மனிதன்கிர எண்ணத்தை வரச்செய்யுது. மாத்தி யோசிச்சிருக்கீங்க, புதுமையான கண்ணோட்டம் . . . வாழ்த்துக்கள் ஜெயகுமார்.
சில்லவுட் ரெண்டாவது நட்சத்திரம்
ஒப்பாரீ : -
படு வித்தியாசமான சப்ஜெக்ட். சில்லவுட்டுக்கு யாரும் சிலந்தியை கற்பனை செய்ய சான்சே இல்லை. அதுவும் சிலந்தி கூடுடன். பேக்ரவுண்டும் நச்சுன்னு இருக்கு. சிலந்தி வலை பின்னும்போது எடுத்தீங்களா.. ஒரே ஒரு காலிலே இருக்கும் ஷேக் கனகச்சித்திதமா வந்திருக்கு. வினோதமான சப்ஜக்ட், . . . வாழ்த்துக்கள் ஒப்பாரீ
சில்லவுட் முதல் நட்சத்திரம்
காவியம் :
மைனசும் மைனசும் சேர்ந்தா பிளஸ்ஸாயிடும்னு கணக்கு ட்டீச்சர் சொல்வது இந்த படத்துக்குத்தான் பொருந்தும்ங்கிறது என் அபிப்பராயம்.. பல போட்டிகளில் தொடுவானம் கோணலா இருந்தாலே ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. அதே மாதிரி abrubt ஆ இருக்கும் leading lines ஐயும் தள்ளிடுவாங்க. ஆனால் இங்கே .Skewed horizon is balanced by the incomplete leading line (fence). இவர் இன்னொண்ணையும் வித்தியாசமா செஞ்சிருக்கார். சாதாரணமா இந்த மாதிரி ( ஆறு - கடலை பார்க்கும் ஜோடி ) படங்களில் நீளமான கம்பி வேலிகளின் முடிவில் சப்ஜெக்ட் இருக்கும். லீடிங் லைன்ஸ் மாதிரி. இங்க உல்டாவா இருக்கு. என்னதான் Rule of third, Skewed horizon, leading lines ன்னு ஆயிரம் வரைமுறைகள் சொன்னாலும், இது எதுவுமே இல்லாமலும் அற்புதமான படத்தை எடுக்க முடியும்ங்கிறதுக்கு காவியத்தின் இந்த படம் அற்புதமான எடுத்துக்காட்டு.. அட்டஹாசமா இருக்கு.. வாழ்த்துக்கள் காவியம்.
ஒண்ணு கவனிச்சீங்களா.. இந்த முறை தேர்வான மூணு பேருமே மாத்தி யோசிச்சிருக்காங்க( எங்கங்க ரூம் போட்டீங்க ). 3D லே Leading lines ஐ குடுத்த ஜெயகுமார், பசக்ன்னு நசுக்கிர சிலந்திப்பூச்சியை டக்குன்னு படம் புடிச்ச ஒப்பாரீ, எல்லா ரூல்ஸையும் மொத்தமா தூக்கிப்போட சொல்லும் காவியம்.. இவங்க படம் எல்லாமே, சொல்லித்தர பாடம் ஒண்ணு தான்.. Theory is different, Practical is different, and Implementation is a totally different ball game altogether.





