Friday, September 25, 2009

சில்லவுட் – பத்துக்கு பதிலா பதினஞ்சு

15 comments:
 
A "failed attempt" is always better than "No Attempt" அப்படீன்னு எங்க இங்க்லீஷ் டீச்சர் சொல்லுவாங்க. இது ஏதோ நம்ம மனசை தேத்த மிஸ் சொல்லறாங்கன்னு நாங்க எல்லாரும் பேசிக்குவோம். அதுவும் Essay writing competition லே நம்ம கட்டுரை முதல் ரவுண்டை கூட தாண்டாதப்போ போட்டியை வேடிக்கை பார்க்கரது மட்டுமே செய்யும் கும்பல் இருக்கே.. அவங்க ஒட்டுமொத்தமா நம்மள ரவுண்டுகட்டி " என்னமா கண்ணு... புட்டுகிச்சா? " ன்னு கேக்கும்போது.. போட்டியிலே தேர்வாகலையேங்கிர வருத்தத்தை விட, இப்படி நம்மை அவமான படுத்தறாங்களேன்னு மனசுக்குள்ளே புகையும். போட்டியும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்ன்னு தோணும். அப்போ அந்த பக்கம் வந்த எங்க இங்கலிஷ் மிஸ் கிண்டல் பண்ணின கும்பலை பார்த்து விட்ட டோஸ் தான் இது. (அப்புறம் வந்த Essay Writing competition லே செலெக்டானேனா இல்லையான்னெல்லாம் கேக்கப்படாது.. மிஸ் கிட்டே சொல்லிக்குடுப்பேன்.. ஆமா !) எட்டாங்கிளாஸிலே மிஸ் சொன்னது, பிட்டிலே சேர்ரதுக்கு முன்னே ஏதோ ஒரு மூலையிலே மங்கிக்கிடந்துது. ஆனா பிட்டிலே மாசாமாசம் போட்டிக்கான படங்களை பார்க்கும்போது ஒரு வாசம்னானும் திருவாசகமா சொன்னாங்கன்னு நினைக்கத்தோணுது. இந்த மாத சில்லவுட் போட்டிக்கு அனுப்பின எல்லா போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சுத்தமா கலந்துக்காத்தவங்களைவிட நீங்க எவ்வளாவோ மேல் (பீமேல்). சரி, தேர்வான முதல் 15 படங்களை பார்ப்போமா !!. மொத்தம் வந்த 58 படங்களில், 15 படங்களை மட்டும் முன்னிறுத்த நாலு காரணம் உண்டு. ஒண்ணு, எல்லா போட்டியிலேயும் சொல்லரா மாதிரி – தலைப்போட சரியா ஒத்துப்போகலை. ரெண்டாவது, கம்பி – குச்சி மாதிரியான distractions. சில பேரோட படங்களிலே light கம்மியா இருக்கும் போது படத்திலே "கறுப்படிக்குமே" , அதுமாதிரியான படங்களை சில்லவுட்ட்னு தப்பா நினைச்சுடாங்க. (வருத்தப்படாதீங்க, இனிமே சரியான சில்லவுட் எதுன்னு கத்துக்கிட்டா போச்சு). மூணாவது, ஒரிஜினல் 'பரவாயில்லாமா இருக்கு', படத்தை எடுக்கும் போது இருந்த உண்மையான சூழலை அதே மாதிரி கொண்டுவரணும்ன்னு நினைக்கிறாங்க. அதுக்காக GIMP / Photoshop லெ ரொம்பவே மெனக்கெட்டிருக்காங்க. ஆனால், மேக்கப் போடும் போது எங்க நிறுத்தணும்ன்னு தெரியாம திணறியிருக்காங்க. அதனாலேயே அங்க அங்க திட்டுதிட்டா பவுடர் வந்து படத்தோட அழகையே மாத்திடுச்சு.சிலரோட படத்திலே கிராப் & பிரேமிங்க பண்ணினா நல்லா இருந்திருக்கும், பண்ணாம விட்டுட்டாங்க. ( மேக்கப் போடாலும் தப்பு - போடலைன்னாலும் தப்புன்ங்கிரா மாதிரி இருக்கில்லே).. மேக்கப் போடணும், ஆனா அளவோட நிறுத்தணும், அதான் பாயிண்ட் Not Revelent to Topic
  1. Arun.jbg
  2. VALLISIMHAN
  3. Malten.jpg
  4. jaya.jpg
  5. somayajula.sastry
  6. S.M.Anbu Anand
  7. Ashok
  8. Sri
Distractions / blur / கறுப்படித்திருப்பது / Noise/ glare
  1. Vaasi
  2. gurupandi.jpg
  3. Knbpsa
  4. Goma
  5. Sriram
  6. Tulasi
  7. Ramalakshmi
  8. Gnanaprakash
  9. Nundhaa
  10. Parthasarathy
  11. Nilofer Anbarasu
  12. Thiva
  13. jwaharclicks .jpg
Missed out due lack of cropping & framing
  1. Manivannan
  2. Vennila meeran
  3. Gaanaprakash
  4. Kamal (Noise on the edges)
  5. Prem G
  6. Madan
Brilliant for ecards, but seems to loose an edge somewhere
  1. Nila's Mom
  2. Venkiraja
  3. T Jay
  4. Aadav
  5. Karthi
எல்லாம் சரிதான், தேர்வான 15 படங்கள் + இங்கே பட்டியலிட்டிருக்கும் 33 படங்கள். மிச்சம் 10 படம் என்ன ஆச்சு?.. இதுக்கு என்கிட்டே பதில் இல்லை. இந்த 10 படங்கள் எந்த வரிசயிலேயுமே வரலை. முதல் சுற்றில் தேர்வான 15 படங்களும் இந்த 10 படத்தை தூக்கி சாப்பிடு ஏப்பம் விட்டுடுச்சு.. அம்புட்டுத்தேன். அடுத்த பதிவுல வின்னர்ஸு யாரு பார்க்கலாம். //டிஸ்கி தேர்வு செய்யப்பட்ட படங்கள் எல்லாமே நடுவர்களின் மனதுக்கு சரியானதாக தோன்றியவையே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். இதுவே வேறு நடுவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த தேர்வில் சில மாறுதல்கள் இருக்கலாம் துல்லியமான அளவீடுகள் புகைப்படத்துக்கு இல்லை. அதன் படி நீங்கள் நல்ல படம் என நினைத்த படங்கள் தேர்வு செய்யப்படாமல் இருக்கலாம். அதுக்காக டென்சன் ஆயிடாதீங்க. எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.//

15 comments:

  1. தவறாக நினைக்கவேண்டாம். வடிவேலு சொல்றாப்ல, எதுக்கு அடிச்சாய்ங்கன்னு சொல்லிட்டு அடிச்சா மனசுக்கு ஆறுதலா இருக்கும். காரணமே சொல்லாம அடிக்குறது வருத்தமாவ்ல இருக்குது... நம்ம பேரு கட்டகடைசியில
    Brilliant for ecards, but seems to loose an edge somewhere
    -ன்னு வந்திருக்கு. இது எந்த வகையில சேரும்னு தெரிஞ்சா அடுத்த போட்டியான பொம்மைகள் போட்டிக்கு அந்த தவறை திரும்ப செய்யமாட்டேன்.

    ReplyDelete
  2. அம்மாடியோ!!!
    ஒரு படம் பளிச்சிட என்னவெல்லாம் பார்த்து எடுக்க வேண்டியிருக்கு!!!சும்மா தட்டினா போதும் என்றிருக்காமல்,
    அடுத்த முறை கவனமாகக் கையாள்வேன்.
    பிட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வெங்கிராஜா :


    (இது என் கணிப்பு மட்டுமே )

    அதிகமாய் எக்ஸ்போஸ் ஆகியிருக்கும் வானம் ( மேலே ) & ட்ரீட்மெண்ட் -makes it to look like a abnormal and takes the silhouette "Beauty" away.

    ஒரு நடுவராக மற்ற படங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ( என்னுடைய படம் இடம்பெற்றால் முதலில் நான் செய்வது இதுவாகத் தான் இருக்கும். அனைத்துப் படங்களையும் வரிசைப் படுத்தி மூன்றாம் மனிதக் கண்ணோட்டத்துடன் என் புகைப்படத்தையும் விமர்சித்துப் பார்ப்பேன் ).

    உங்கள் பதிவில் இருக்கும் இது ஒரு பொன்மாலைப்பொழுதுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் பாருங்கள். தலைப்புக்குத் தேவையான "சில்ஹவுட் " பஞ்ச் மிஸ்ஸிங்.

    தனிப் படமாக இது அருமைய். தலைப்புக்குள் லேசாக நுழைந்தும் நுழையாமல் இருப்பது போல் இருப்பதே இதன் குறை என்று நினைக்கிறேன்.

    ( நடுவர்கள் வேறு விளக்கம் வைத்திருக்கலாம். இது என் தனிப்பட்ட எண்ணமே )

    நன்றி

    ReplyDelete
  4. வெங்கிராஜா,


    டிஸ்கி படிக்கலையா? :)

    உங்க கேள்வி நியாயமானது. என் மனசுக்கு தோணரத சொல்லறேன். ஜட்ஜஸ் அப்பாலிக்கா சொல்லுவாங்க.
    நான் பார்த்த வரை, உங்க படம், abstract வகை. சட்டுனு சப்ஜெக்ட் என்னன்னு புரியல. வானம் அழகமா வந்திருந்தாலும், ரொம்பவே செயற்கைத் தனமா தெரியுது.
    சப்ஜெக்ட் நட்ட நடூல இருக்கரதும் எடுபடலை.

    மை 2 பைசா :)
    http://picasaweb.google.com/pitcontests/PiTSept09Silhouette#5380227309864351122

    உங்க வரிசையில் இருக்கும் படங்களில், T.Jay படம் நல்லா வந்திருக்கு. ஆனா, உத்து கவனிச்சீங்கன்னா, இடது பூற ப்ரிட்ஜி முழுமைப் படாமல், பன்ச் கொறஞ்சிருக்கு.

    ReplyDelete
  5. ம்ம்ம் நெக்ஸ்ட்டு மீட் பண்றென் :))))

    ReplyDelete
  6. The photos are fantastic ! Interesting info on photography. Thanks.

    -Toto
    Film4thwall.blogspot.com

    ReplyDelete
  7. வணக்கம் வெங்கிராஜா,
    "தப்பாவே நினைக்கலை", உங்க கேள்வி நியாயமானது தான், பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.
    தேர் + மேகம் அற்புதமான கோம்போசிஷண். ரிக்ஷாகாரன் படத்திலே வாத்தியாரும் மஞ்சுளாவும் கனவு சீனிலே பாடிகிட்டே பிரேமிலே வருவாங்களோன்னு எதிர்பாக்க தோண்டுது. absolutely brilliant dramiatic / dreamy / theaterical effect.ஆனால், இந்த பிளஸ் பாயிண்ட்டே, போட்டிக்கு மைனஸ் பாயிண்டாயிடுச்சு. We were unable to determine if the charriout or the cloud is the primary subject. .. உங்களுடைய "கூரையின் கீழ்" படத்தை கட்டம் கட்டி போட்டா சூப்பரா இருக்கும்ங்கிரது என் தனிப்பட்ட அபிப்பராயம்.

    உங்க படத்தை குத்தம் சொல்லணும்ங்கிரது என் நோக்கம் இல்லை. you have made a brilliant attempt, just that it does not come across with the much needed WOW factor. Hope you understand.

    நன்றி,
    தீபா கோவிந்த்

    ReplyDelete
  8. வணக்கம் தீபா நான் இந்த போட்டிக்கு புதியவன். புகைப்படக்கலையும் புதிதுதான். எனது வேலையில் ஒரு பகுதி என்றாலும் இன்னும் பல நுணுக்கங்கள் இருப்பதை இதன் மூலம் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி. விமர்சனம் என்பது நல்லவற்றை மட்டும் பாராட்டுவதல்ல. சரியில்லதற்றிக்கு காரணத்தை மிக சரியாக சொல்லவேண்டும். அந்த வகையில் நீங்கள் மிக சரியாக கையண்டு இருக்கிறீர்கள். அதிஷ்டம் எனக்கு இல்லை என்றாலும் அதை சரி செய்ய மட்டும் அல்ல இதன் மூலம் பல யுத்திகளை கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி தீபா... அடுத்த முறை எனது படைப்பு இன்னும் மெறுகேறியிருக்கும் என்பது நிச்சயம்...

    நல்ல படத்தை பாராட்டுவதும், சரியில்லாத படத்தை காரணம் சொல்லுவது மிக சரியாக செய்ய வேண்டும். அதை நீங்கள் மிக மிக சரியாக செய்திருக்கிறீர்கள்... மிக்க நன்றி தீபா...

    ReplyDelete
  9. ஐ... நானும் ரவுடி..... நானும் ரவுடி...

    நம்ம படமும் பதினஞ்சுல.... நன்றிங்கோவ் !!

    ReplyDelete
  10. 2009 ஜனவரி-ல ஆரம்பிச்ச என்னோட பிட்-உடனான பயணத்துல (after reading in Ananda-vikatan), இரண்டாவது முறையா shortlisted, ........... பொறுத்து, பொறுத்து பிட்-ல கத்துகிட்டது எல்லாத்துக்கும் பலன் கிடைக்க ஆரம்பிச்சிருச்சு.......!

    நன்றி வாத்தியாரே (பிட் தான்) !!!!

    ReplyDelete
  11. Very Good Selection.
    thank u and best wishes

    ReplyDelete
  12. நன்றிங்கோவ்.....ஏதோ ஒரு இடத்துல பேரு இருக்கே..அது போதும்

    விட்றா விட்றா சூனா பானா, நமக்கு விட்டுக் குடுத்தே பழகி போச்சு...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  13. விஜயதசமியில் குருவுக்கு நன்றி சொல்லும் தினம்...

    PiT யில் நுழைந்த சில வாரங்களிலேயே மிக அருமையாக புகைப்படக்கலையை நன்றாக கற்றுக் கொண்டேன்.

    குருவான PiTக்கும் எனக்கு கற்றுக் கொடுத்த நண்பர்களாகிய ஆசிரியரியர்களுக்கும் மிக்க நன்றி...

    என் உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன் உங்களின் போதிப்பையும் உங்களையும்...

    ReplyDelete
  14. //நல்ல படத்தை பாராட்டுவதும், சரியில்லாத படத்தை காரணம் சொல்லுவது மிக சரியாக செய்ய வேண்டும். அதை நீங்கள் மிக மிக சரியாக செய்திருக்கிறீர்கள்... மிக்க நன்றி தீபா...//
    I second KamalaKannan. Great job Deepa!

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff