Thursday, September 17, 2009

DSLR உத்திகள் - Zoom Burst

13 comments:
 
பள்ளிப் பிராயத்திலும் கல்லூரிப் பிராயத்திலும் கையில் கேமரா இருந்ததில்லை. வேலைக்கு போக ஆரம்பித்த பிறகும் கூட கேமராவை உடனே வாங்க முடியவில்லை. அலுவலக விஷயமாய் முதல் முறை டில்லி செல்லும்போது, அங்கிருந்து ஆக்ரா பயணித்து தாஜ்மகாலை காண ஒரு நண்பனுடன் ஒரு குட்டி டூர் அடித்த போதும் கூட கேமரா கையில் இல்லை.
அவசரத்துக்கு அங்கே வாசலில் ஒருவர் 100ரூவாய்க்கு வாடகைக்குக் கொடுத்த ஒரு கோனிகா காமெராதான் உதவியது. ஆனா, அதிலும் படம் எடுத்து கழுவிப் பாத்தா எல்லாமே மங்கலா தான் வந்திருந்தது. அந்த கடுப்புலதான் சொந்தமா கேமரா வாங்கும் அவா எழுந்து, அப்பரமா சிங்கைக்கு போன போது அங்கிருக்கும் முஸ்தாஃபாவில், முதல் வேலையாய் யாஷிகா பாயிண்ட் & ஷூட் வாங்கி வைத்தேன்.

ஆனாலும் கூட சில மாசத்துல, அடுத்தவர்களின் SLR பாக்கும்போது, மோகம் அதிகமாயி வெம்பி வேதனையாயிடுச்சு. கடல்தாண்டி இங்கண அமெரிக்க வாழ்வை துவங்கியதும், முதலில் வாங்கியது, அழகிய Nikon SLR தான். ஒழுங்கா படம் எடுக்க வருதோ இல்லியோ, பாலு மகேந்திரா மாதிரி, அந்த லென்ஸை சொழட்டி சொழட்டி இடது கையால் லென்ஸை தாங்கி, குணிஞ்சு வளஞ்சு க்ளிக்கும் சுகமே சுகம்.

குறிப்பா, கிருச்சுக்காக்னு ஷட்டர் சத்தம், கேட்பதர்க்கு ரொம்பவே ரம்யம். இது கையில் வந்தப்பரம், யாஷிகா பாயிண்ட் & ஷூட், பொம்மை கேமரா மாதிரி ஆகிப் போச்சு. இப்போ சென்னையில், கேட்பாராற்றுக் கிடக்கிறது. Nikonல் இருந்து டிஜிட்டலுக்கு மாறும்போது, DSLRக்கு போக முடியவில்லை. டப்பு ரொம்ப ஜாஸ்தியாயிருந்தது.
வேர வழியில்லாமல், இதிலும் ஒரு Canon பாயிண்ட் & ஷூட்டுடன் வாழ்க்கை நகரத் துவங்கியிருந்தது.

ஆனாலும், க்ருச்சுக்காக் ஷட்டர் சத்தம் கேட்காமல் ரொம்ப நாள் தள்ள முடியாமல், DSLRஐ வாங்கித் தொலைத்தாயிற்று.

DSLR செலவு செய்ததுக்கு உருப்படியா உபயோகிக்கணும்னு முடிவு பண்ணிதான், சுய பரிசோதனையில் கொஞ்சம் கொஞ்சமா விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சது.
DSLRன் சக்தியே, Manualல் வித விதமாய் பல விஷயங்களை எடுக்க முடிவது தான். ஆனாலும், நான் Autoவை விட்டு வர ரொம்ப காலமாயிற்று. PiT உந்துதலினால் ஓரளவுக்கு பயிற்சியும் முயற்சியும் திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

எனக்கு ரொம்பவே பிடித்தது, AEB (Auto exposure bracket) செட்டப்பில், ஒரே காட்சியை மூன்று exposureகளில் க்ளிக்கி, அதை பின்னர் கலந்து செய்யும் HDR படங்கள் தான்.

DSLR நமக்குத் தரும் சுதந்திரத்தை இன்னும் நல்லா பயன் படுத்தணும் என்ற அவா சமீபத்தில் எழுந்தது. இணையத்தை அலசிய போது, சிலது கண்ணில் பட்டது.
பட்டதை இங்கு கொட்டலாம் என்று முடிவு.
(யப்பாடி, இவ்ளோ பெரிய பில்டப்பா?)

முதல் முயற்சியாக, உங்களுடன் பகிர இருப்பது, Zoom Burst என்னும் ஈஸி உத்தி (டெக்குனிக்கு).

இதன் செய்முறை:
அ. கேமராவை ட்ரைபாடில் பொருத்திக் கொள்ளுங்கள்.
ஆ. Zoom Burst ஆக்க நினைக்கும் சப்ஜெக்ட்டை கட்டம் கட்டுங்கள்.
இ. உங்க ஷட்டர் வேகம் அட்லீஸ்ட் 1 நொடியாவது வைக்க வேண்டும். 1 நொடி நேரம் திறந்து வைப்பதால், வெளிச்சம் குறைவாக கேமராவுக்குள் அனுமதிக்க, குட்டி அபெர்ச்சரை (பெரிய F எண்) தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது குட்டி ISOவை (100) தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்க. கேமரா லைட் மீட்டரில் காட்சியின் ஒளி சரியா இருக்குமாறு Fஐயும், ISOவையும் கூட்டிக் கொறச்சு பாருங்க.
ஈ. இப்போ க்ளிக்குங்க
உ. க்ளிக்கியதும், ஷட்டர் திறந்து மூடுவதர்க்குள். உங்கள் ஜூமை சீராக திருகுங்கள். உள்ளிருந்து வெளியோ, வெளியிருந்து உள்ளேயோ, அது உங்க இஷ்டம்.

ஷட்டர் திறந்திருக்கும்போது, இப்படி ஜூமை திருகுவதால், உங்க சென்சாரில் பதியும் படம், 'வித்யாசமாய்' வரும்.

இது ஒரு தபா பண்ணிப் பாத்தீங்கன்னா, அப்பரமா, நீங்களே வித விதமா வித்யாசமான சப்ஜெக்ட்டை தேடிப் பிடித்து ஷூட்டுங்க. ஏதாவது ஒண்ணு 'நச்'னு வர வாய்ப்பிருக்கு.

சேம்ப்பிள்ஸ் சில:

1) ஜீவ்ஸின் Zoom Burst:


2) Fatmanwalking from flickr


3) என் முயற்சி:


4) முரளி என்பவ்ரின் ஜூப்பர் படம் ஃப்ளிக்கரில் பார்க்க இங்கே சொடுக்கவும்.

DSLR இல்லாதவங்க என்ன பண்றதுன்னு தலையை சொறிய வேண்டாம். இருக்கவே இருக்கிறான் Gimpபன்.

An& அண்ணாச்சி கேட்டதும் கொடுத்தார்.
கிம்ப்பில் இந்த ஜூம் பர்ஸ்ட் செய்ய
Filter -> Blur -> Motion Blur -> Zoom செய்து மகிழலாம்.

இனி என்ன? கோடு போட்டாச்சுல்ல? ரோட்ட போட்டுடலாம்ல?
போட்டு உங்க ஜூம் பர்ஸ்ட்டை பதிவேத்திச் சொல்லுங்க.

நன்னி!

13 comments:

 1. டமில் படிக்கத் தெரியாத சில அலுவலக நண்பர்களுக்க்காக ஆங்கிலத்தில் ஒரு குட்டி ப்ரீஃபிங்:

  to do zoom burst,
  1) set camera on tripod
  2) set shuttler speed to 1 sec or more
  3) adjust aperture/iso accordingly, to get right exposure
  4) click
  5) while shutter is open, zoom in or out your lense
  6) expect interesting results :)

  shukriya!

  ReplyDelete
 2. // முதலில் வாங்கியது, அழகிய Nikon SLR தான். ஒழுங்கா படம் எடுக்க வருதோ இல்லியோ, பாலு மகேந்திரா மாதிரி, அந்த லென்ஸை சொழட்டி சொழட்டி இடது கையால் லென்ஸை தாங்கி, குணிஞ்சு வளஞ்சு க்ளிக்கும் சுகமே சுகம்./

  ஸேம் பிளட் !

  ReplyDelete
 3. // க்ளிக்கியதும், ஷட்டர் திறந்து மூடுவதர்க்குள். உங்கள் ஜூமை சீராக திருகுங்கள். உள்ளிருந்து வெளியோ, வெளியிருந்து உள்ளேயோ, அது உங்க இஷ்டம்//

  ஒஹோ!

  ரைட்டு!

  ReplyDelete
 4. ஒழுங்கா படம் எடுக்க வருதோ இல்லியோ, பாலு மகேந்திரா மாதிரி, அந்த லென்ஸை சொழட்டி சொழட்டி இடது கையால் லென்ஸை தாங்கி, குணிஞ்சு வளஞ்சு க்ளிக்கும் சுகமே சுகம்.///  அதே அதே

  ReplyDelete
 5. Thanks surveysan. Same story here. Just few months back turned towards manual mode. This blog is very useful.

  ReplyDelete
 6. நன்றி Ganesh Babu, நிலா அம்மா, ஆயில்ஸ்.

  ReplyDelete
 7. மிக்க நன்றி உங்களுக்கு மிக பொறுமையாக விளக்கியதற்கும் அதற்கு முன் உங்கள் கேமிரா கதையை சொன்னதற்க்கும்...

  ReplyDelete
 8. அந்த முதல் படத்த ஒரு பத்து செகண்ட் தான் பார்த்தேன்...அதுக்குள்ள தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுத்திடுச்சு:)

  புதுசு புதுசா என்னென்னமோ கண்டு பிடிக்கிறாங்கப்பா...நானும் ட்ரை பண்றேன்!

  ReplyDelete
 9. இன்று புதிதாக ஒரு விடயம் கற்றுக்கொண்டேன். பகிர்ந்ததற்கு நன்றி.
  எனக்கும் கூட சிறுவயதில் இருந்து புகைப்படக்கலையில் ஏற்பட்ட ஆசை பூர்த்தியாக பல வருடங்கள் ஆனது. அதுவே Point-and-shoot, High-zoom-P&S, D-SLR என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. இதுவரையும் Composition ஐ கற்றுக்கொண்டு வருகிறேன் (பெரும்பாலும் Auto-mode இலேயே இருந்து வருகிறேன்). மற்றைய நுட்பங்களையும் கற்க வேண்டுமென்ற ஆர்வம் இந்த மாதிரி பதிவுகளை பார்க்கும்போது ஏற்படுகிறது.
  எனது அரிச்சுவடி முயற்சிகளை http://www.clicking-moments.blogspot.com/ இல் பதிவேற்ற ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.
  அன்புடன்,
  விஜயாலயன்

  ReplyDelete
 10. கமலகண்ணன், நன்னி!

  Sathiya, தலை சுத்தர மாதிரியும் எடுக்கலாம். வேர ஏதாவது 'பன்ச்' கொடுக்கவும் இந்த உத்தி பயன் படலாம். க்ரியேட்டிவ்வா எதையாவது க்ளிக்கினீங்கன்னா சொல்லுங்க. எனக்கும் இன்னும் ஒரு 'பன்ச்' படம் எடுக்க முடியல்ல. முயற்சி தொடருது ;)

  விஜயாலயன், உங்க பேரும் அருமை. உங்க படங்களும் அருமை. குறிப்பா AIT, Thailand படம்.
  http://clicking-moments.blogspot.com/2009/09/canal-around-asian-institute-of.html

  ReplyDelete
 11. நன்றி சர்வேசன்! கவலையான விடயம் என்னவென்றால் அந்த புகைப்படத்தில் இருந்த அழகான சூழலை அபிவிருத்தி என்ற பெயரில் உருமாற்றி, இப்போது வெற்றுக் கால்வாய் மட்டும் உள்ளது.
  அன்புடன்,
  விஜயாலயன்

  ReplyDelete
 12. vijay, kodumaidhaan :(
  room pottu yosippaanga polarukku.

  ReplyDelete
 13. Dear Sir,

  I am photographer. Can you please give me some tricks and techniques about wedding photography. I am using nikon D70s. please advice me about focus point.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff