Friday, December 30, 2011

2011 டிசம்பர் போட்டி- 'உன்னைப் போல் ஒருவன்' - வெற்றியாளர்கள்

10 comments:
 
வெற்றி முத்திரை பெறும் படங்களைப் பற்றிப் பார்க்கும் முன் வெளியேறும் ஒரு சிலபடங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

# ராஜசேகரன்,
பச்சை நீரின் பின்னணியில் தட்டான்களைத் தெளிவாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.
ஆனால் டைட்டான க்ராபிங். கீழ் நோக்கி நகரும் தட்டானுக்கு இன்னும் சற்று இடம் கொடுத்திருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்.

# சூர்யா,
பச்சை இலைகளில் பளிச் சிகப்பு வண்டுகள். அருமை.
ஆனால் நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாச்சுரேஷன் கூட்டினீர்களா தெரியவில்லை. எப்போதுமே சிகப்பு இருக்கும் படங்களில் வண்ணங்களில் கைவைக்காமல் இருப்பது நல்லது. சிகப்பு லேசாக அதிகரித்தாலும் அப்பகுதியின் டீடெயில்ஸ் குறைந்து விடும். ஒருவேளை நீங்கள் எந்த அட்ஜஸ்ட்மெண்டும் செய்யவில்லையெனில், மன்னிக்க. என் பார்வைக்கு சிகப்பு அதிகப்படியாகத் தெரிகிறது.

# கடலை மிட்டாய்,
நல்ல முயற்சியாயினும் படத்தில் இரைச்சல் அதிகம்.


ஏனைய பிறரின் படங்களில் பெரிய குறைகள் இல்லையெனினும் அவற்றை விட கீழ்வரும் படங்கள் சிறப்பாக இருந்தபடியால் அவை விலகுகின்றன.

சிறப்புக்கவனம் பெறும் படங்கள்:

# ஜகன்,
அருமையான படம். கதவுக் கம்பிகள் மட்டுமின்றி சொட்டும் மழைத்துளியும் ஒன்றைப் போல் ஒன்றாக.

# கீழைராஸா,
இரட்டையர்களை வைத்துத் தலைப்புக்கு பொருத்தமாக எடுத்திருக்கிறீர்கள். அதையும் யோகாசன போஸில் கருப்பு வெள்ளையில் ப்ரசெண்ட் செய்திருக்கும் விதம் அருமை.


இருவருக்கும் வாழ்த்துகள்!

படங்களுக்குள் உங்கள் பெயர்களைப் போட்டிருப்பது மட்டும் உறுத்தல். எந்தப் போட்டிக்கானாலும் சரி, படங்களைக் கொடுக்கும் போது பெயர்களை ஓரமாகவோ அல்லது பார்டரிலோ இருக்குமாறோ பார்த்துக் கொள்வது நல்லது. இது அனைவருக்குமான ஒரு குறிப்பு.

சிறப்புக் கவனத்துடன் சிறப்புப் பாராட்டையும் பெறுகிற படம்
:

# மெர்வின் ஆன்டோ
ஸ்லோ ஷட்டர் ஸ்பீடில் இரட்டையராகத் தோன்றும் படத்தை நீங்களே எடுத்திருக்கிறீர்கள். ஒரே பிரேமில் குறிப்பிட்ட நொடிகளுக்குள் எடுக்கபட்டதென பிகாஸா ஆல்பத்தில் தெரிவித்தும் இருக்கிறீர்கள். இப்படியும் படங்கள் எடுக்கலாம் எனக் காட்டிய விதத்தில் அசத்தியிருக்கிறீர்கள்.
இருப்பினும் இடப்பக்கமிருக்கும் உங்கள் மேல் வெளிச்சம் மிக அதிகமாகி விட்டதால் முதல் மூன்றுக்குள் செல்லும் வாய்ப்பு தவறுகிறது.

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள்!

படத்தை எடுத்த விதத்தை இயலுமானால் கெஸ்ட் போஸ்டாக இங்கு பகிர்ந்து கொள்ளும்படி PiT கேட்டுக் கொள்ளுகிறது.

மூன்றாமிடம்:

# ஒளித்தச்சன்
அருமையான படம். பறக்கும் பறவைகளை நேர்த்தியாக, தெளிவாகப் படமாக்குவது அத்தனை எளிதல்ல. ஒன்றைப் போலவே ஒன்று. அதிலும் ஒன்றின் இறக்கைகள் மேல்நோக்கியும் ஒன்றின் இறக்கைகள் கீழ்நோக்கியுமாக பிரமாதமான டைமிங்கில் அமைந்து போன படம். மூன்றாம் இடத்துக்கான வெற்றி முத்திரையை பெறுகிறது இப்படம்:

இரண்டாம் இடம்:

# குசும்பன்,
அழகான லைட்டிங். காட்சி அமைப்புக்கு எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஒரு விளம்பரப் படத்தின் நேர்த்தியைப் பலனாகக் கொடுத்திருக்கிறது. வெற்றி முத்திரையை அழுத்தமாகப் பதித்தாயிற்று.


முதலாமிடம்:

# இளங்குமரன்,
சிறப்பான லைட்டிங்கும், இரண்டு முகமூடிகளையும் நிற்க வைத்து எடுத்திருக்கும் விதமும் க்ளாஸ்!!
வெற்றியாளர்களுக்கும், சிறப்புக்கவனம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

தேர்வு தனிப்பட்ட ரசனையில் அமைந்தவை. முதல் சுற்றுக்குத் தேர்வு செய்யவே சிரமமாக இருக்கும் வகையில் நல்ல நல்ல படங்களைத் தந்திருந்தனர் பலரும். உற்சாகமாகக் கலந்து கொண்ட உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. அடுத்த போட்டிக்கான அறிவிப்புடன் 2012-ல் சந்திக்கிறோம்.

வாசக நண்பர்களுக்கு PiT-ன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

10 comments:

 1. மிகவும் சந்தோசமாக இருக்கிறது...கேமிரா வாங்கியபின் முதன் முதலாக பங்கு பெறும் போட்டி. நிச்சயம் இது ஊக்கமாக அமையும். நன்றி.

  ReplyDelete
 2. அருமையான தெரிவுகள். முக்கியமா முதல் படம்...

  ReplyDelete
 3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...சிறப்பு கவனம் அருமையான தீர்ப்பு. விரைவில் விளக்கம் தருகிறேன் எனது ப்ளாகில். நன்றி

  ReplyDelete
 4. குசும்பன் எடுத்த படம் கூகிள் சர்ச் பண்ணி எடுத்த மாதிரியே இருக்கே..! ;-) வேற வழியில்லாம வாழ்த்துகள் சொல்லிக்கறேன்

  ReplyDelete
 5. இந்த முறை தவற விட்டேன். வெறியோடு காத்திருக்கிறேன். அடுத்த போட்டி அறிவிப்புக்காக..

  ReplyDelete
 6. முதல் இடம் தேர்வு செய்தமைக்கு PIT குழுமத்திற்கு நன்றி
  புதிய ஆண்டின் நல்ல துவக்கம் கொடோதமைக்கு நன்றி

  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. முதல் இடம் தேர்வு செய்தமைக்கு PIT குழுமத்திற்கு நன்றி
  புதிய ஆண்டின் நல்ல துவக்கம் கொடுத்தமைக்கு நன்றி

  போட்டியில் கலந்து கொண்ட,வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...

  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. அருமையான தேர்வுகள்......வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

  PIT குழுமத்திற்க்கு எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நன்றி, உங்கள் பாராட்டுக்களுக்கும் WaterMark பற்றிய தெளிவிற்கும்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff