Tuesday, January 3, 2012

2012 ஜனவரி மாத போட்டி அறிவிப்பு - கொண்டாட்டம்

15 comments:
 
அன்பின் நண்பர்களுக்கு PiT குழுமத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நத்தார், புத்தாண்டு, போகி, பொங்கல்...... ஒரே கொண்டாட்டம்!

நானும் என் பாட்டுக்கு கொண்டாட்டம் வைக்க முடிவு பண்ணிட்டன். அதாங்க இம்மாத தலைப்பு "கொண்டாட்டம்"

தலைப்பு பார்த்ததும் உங்களுக்கு கொண்டாட்டமோ என்னமோ எனக்கு சாம்பிள் படங்கள் தேடியே திண்டாட்டமாச்சு. அதவிட கொடும, கொண்டாட்டம்னா என்ன எங்கிறதுக்கு விளக்கம் தேடுறதிலேயே போச்சு. ஒரு வெப் சைட்டுல இப்பிடி எழுதியிருந்தாங்க...

நான்கு நண்பர்கள்
தெரு மூலையில
நான்கு பியர் போத்தல்களுடன்

கொண்டாட்டம்

அதே வெப் சைட் இன்னும் ஒருபடி மேல போய் இப்படி விளக்கம் கொடுத்திருந்தாங்க...

உங்க பிறந்தநாள நூறு பேரோடும்
பண்டிகைய ஆயிரம் பேரோடும்
கல்யாணத்த லட்சம் பேரோடும் கொண்டாடலாம்
ஆனா உங்களுக்கு பிடிச்சவங்களோட கொண்டாடுறதுதான்
கொண்டாட்டம்


இதெல்லாம் கொண்டாட்டமோ இல்லையோ, அது ஆளாளுக்கு வேறுபடும். ஆனா நான் சொல்லுற கொண்டாட்டம் முக்கியமான பண்டிகைகள், மகிழ்ச்சியான விழாக்கள், வாழ்க்கையில் முக்கியமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் என்பனவற்றை வெளிப்படுத்த வேண்டும். படத்த பார்க்கும்போதே நாமளும் கொண்டாடுற மாதிரி ஃபீலிங் வரவேணும்.

சாம்பிளுக்கு இதோ சில படங்கள்....


# ஜீவ்ஸ் - வேலை கிடைத்த கொண்டாட்டம்


# Naufal - புத்தாண்டு கொண்டாட்டம்

# ராமலக்ஷ்மி - நெருப்பு விழா கொண்டாட்டம்

# கருவாயன் - பாடசாலை விடுமுறைக் கொண்டாட்டம்

# கல்யாணம் கட்டப்போறமே எங்கிற கொண்டாட்டம்


போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

பொங்கல், போகி கொண்டாட்டங்களை மனதில் கொண்டு படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதியினை நீட்டித்திருக்கிறோம்: 20-01-2012

அன்புடன்
அன்டன்

15 comments:

 1. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!! இந்த ஆண்டை பி.ஐ.டி-யுடன் கொண்டாடுவோம். :)

  ReplyDelete
 2. அருமையான பதிவு. நல்ல படங்கள்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. ஒவ்வொரு படத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது! நன்றி!

  ReplyDelete
 4. நல்ல தலைப்புதான்,. இப்ப கொண்டாட்ட சீசன்தானே!

  எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. கொண்டாட்டம் கிற தலைப்பு பார்க்க easy யா தான் இருக்கு.ஆனா ready பண்ணதான் ஒரே திண்டாட்டம் போங்க..but யோசிக்க still we have time..:D

  ReplyDelete
 6. நான் அனுப்பிய புகைபடம் ஆல்பத்தில் இன்னும் வரவில்லையே எப்போது வரும்......,

  ReplyDelete
 7. all fotos r nice , first time in this awesome photograpy site. Congrats on ur effort :)

  ReplyDelete
 8. நான் அனுப்பிய புகைபடம் ஆல்பத்தில் இன்னும் வரவில்லையே

  ReplyDelete
 9. இளங்குமரன் ஜிகே அப்படின்னு இருக்கிறது உங்க படம் தானே? சரி பாருங்கள்.

  ReplyDelete
 10. அன்பு ராம லக்ஷ்மி மேடம்! உங்க புகைப்படங்கள் தான் உங்க எழுத்தை மெருகேற்றுகிறது என்பது என் தாழ்மையான கருத்து. இப்போது காமிரா வாங்குவது என்றால் என் போன்ற கத்துக்குட்டிகள் எந்த வகையான டிஜிட்டல் காமிரா வாங்குவது நல்லது. விலை எந்த ரேஞ்சில் இருக்கும் என்று கொஞ்சம் வழிகாட்டுங்களேன் ப்ளீஸ்!

  ReplyDelete
 11. ஏன் புகைப்படங்கள் குறைவாக உள்ளது ..
  வழக்கமான போட்டியாளர்கள் எல்லாம் என்ன ஆயுற்று ?.

  ReplyDelete
 12. @ க.நா.சாந்தி லெட்சுமணன்,

  ரூ 10000-க்குள் நம் தேவைக்கேற்றபடி எல்லா ப்ராண்டிலும் கைக்கு அடக்கமான நல்ல பாயிண்ட் அண்ட் ஷூட் டிஜிட்டல் கேமராக்கள் கிடைக்கின்றன. ஆரம்ப நிலைக்கு பயன்படுத்தும் முறைகளும் மிக எளிதாகவே இருக்கும்.
  Nikon Coolpix அல்லது Canon Powershot முயன்று பாருங்களேன். அடுத்ததாக Sony Cyber-shot.

  இந்த லிங்க்கும் உங்களுக்கு பயனாகக் கூடும்: http://www.pcworld.com/reviews/collection/1603/top_10_point_and_shoot_cameras.html

  இதில் நான் Nikon Coolpix மற்றும் Sony Cyber-shot இரண்டுமே உபயோகித்திருக்கிறேன். நல்ல படங்களைத் தந்தன.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff