Showing posts with label pit. Show all posts
Showing posts with label pit. Show all posts

Friday, August 2, 2013

வணக்கம் நண்பர்களே,

இந்த மாதத்திற்கான தலைப்பு: ‘இலை(கள்)’  

படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-08-2013

போட்டிக்கான விதிமுறைகள் இங்கே


ஆல்பர்ட் காமஸ் என்பவர் இப்படிச் சொல்கிறார் "ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும்போது இலையுதிர் காலம் என்பது இரண்டாவது வசந்த காலம்". இலைய பூவோட ரேஞ்சுக்கு சம்மந்தப்படுத்துகிறார். பூ மட்டுந்தானா அழகு? இலையுந்தான்! இந்த மாதம் இலைகள அழகாக் காட்ட வேண்டியது உங்க பொறுப்பு. 

இலையும் அழகுதான் என்பதற்கு சில எடுத்துக் காட்டுகள்:

#Anand

#Anton


#Ramalakshmi

#Anand

#Anton

#Naathas

# Ramalakshmi

***

Sunday, August 19, 2012

19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினமாகிய இன்று ஃபோட்டோகிராஃபி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள தினகரன் வசந்தத்தில்.. ‘தமிழில் புகைப்படக்கலை’.

பிரகதீஸ்வரர் ஆலயம் - சர்வேசன்; புறா - நவ்ஃபல்; சிலந்தி - ஆன்டன்; பிரஷ், ஆரஞ்சு - ஆனந்த் விநாயகம். உறுப்பினர் எடுத்த இப்படங்களுடன் PiT-ல் வெளியான ஆகச் சிறந்த படங்கள் வரிசையில் இடம் பெற்றவை நந்து f/o நிலாவின் கருப்பு வெள்ளைப் படமும், அமலின் ஸ்ட்ராபெர்ரி படமும். இருவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி தினகரன் வசந்தம்!


தொடர்ந்து இயங்கக் காரணமாக இருந்து வரும் PiT வாசகக் குடும்பத்தினருக்கும், பயனாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
***

Sunday, July 1, 2012

வணக்கம் நண்பர்களே,
மீண்டும் உங்களை மாதாந்தப் போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
  • இந்த மாதத் தலைப்பு "காகிதம்".
  • போட்டிக்கான விதிமுறைகள் இங்கே
  • படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15-07-2012


தலைப்பு: காகிதம் (paper)
காகிதம் அல்லது தாள் அல்லது கடதாசி இந்த தலைப்புக்கு ஏற்ற படங்களை முடிவுத் திகதிக்குள் அனுப்பி விடுங்கள். காகிதத்துடன் தொடர்புடைய எதுவும் படமாக அமையலாம். புத்தகம், ஒரிகாமியில் செய்யப்பட்ட காகித உருவங்கள், பணம் (நோட்டுத்தாள்), காகிதத்தால் சுற்றப்பட்ட பொருட்கள், செய்தித்தாள் சுவரொட்டி, இப்படி எதுவாகவும் இருக்கலாம்.


தலைப்புக்குப் பொருந்தமான படம் எடுத்தால் பாதி வெற்றி. மீதி வெற்றி ஒளிப்படக்கலையின் அடிப்படைகளையும் நுட்பங்களையும் அதில் உள்வாங்கியிருப்பது. இறுதியில் படைப்பாற்றலை (creativity) பயன்படுத்துவது. இதையெல்லாம் எங்கு கற்பது? இங்கேயே கிட்டத்தட்ட 500 பதிவுகள் உள்ளன. நிச்சயம் அவை உங்களுக்கு உதவ முடியும்.


தலைப்பிற்கு சில உதாரணங்கள் பின்வருமாறு:


# நவ்ஃபல்


# நவ்ஃபல்

# நவ்ஃபல்

# ராமலக்ஷ்மி

Tuesday, January 3, 2012

அன்பின் நண்பர்களுக்கு PiT குழுமத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நத்தார், புத்தாண்டு, போகி, பொங்கல்...... ஒரே கொண்டாட்டம்!

நானும் என் பாட்டுக்கு கொண்டாட்டம் வைக்க முடிவு பண்ணிட்டன். அதாங்க இம்மாத தலைப்பு "கொண்டாட்டம்"

தலைப்பு பார்த்ததும் உங்களுக்கு கொண்டாட்டமோ என்னமோ எனக்கு சாம்பிள் படங்கள் தேடியே திண்டாட்டமாச்சு. அதவிட கொடும, கொண்டாட்டம்னா என்ன எங்கிறதுக்கு விளக்கம் தேடுறதிலேயே போச்சு. ஒரு வெப் சைட்டுல இப்பிடி எழுதியிருந்தாங்க...

நான்கு நண்பர்கள்
தெரு மூலையில
நான்கு பியர் போத்தல்களுடன்

கொண்டாட்டம்

அதே வெப் சைட் இன்னும் ஒருபடி மேல போய் இப்படி விளக்கம் கொடுத்திருந்தாங்க...

உங்க பிறந்தநாள நூறு பேரோடும்
பண்டிகைய ஆயிரம் பேரோடும்
கல்யாணத்த லட்சம் பேரோடும் கொண்டாடலாம்
ஆனா உங்களுக்கு பிடிச்சவங்களோட கொண்டாடுறதுதான்
கொண்டாட்டம்


இதெல்லாம் கொண்டாட்டமோ இல்லையோ, அது ஆளாளுக்கு வேறுபடும். ஆனா நான் சொல்லுற கொண்டாட்டம் முக்கியமான பண்டிகைகள், மகிழ்ச்சியான விழாக்கள், வாழ்க்கையில் முக்கியமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் என்பனவற்றை வெளிப்படுத்த வேண்டும். படத்த பார்க்கும்போதே நாமளும் கொண்டாடுற மாதிரி ஃபீலிங் வரவேணும்.

சாம்பிளுக்கு இதோ சில படங்கள்....


# ஜீவ்ஸ் - வேலை கிடைத்த கொண்டாட்டம்


# Naufal - புத்தாண்டு கொண்டாட்டம்

# ராமலக்ஷ்மி - நெருப்பு விழா கொண்டாட்டம்

# கருவாயன் - பாடசாலை விடுமுறைக் கொண்டாட்டம்

# கல்யாணம் கட்டப்போறமே எங்கிற கொண்டாட்டம்


போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

பொங்கல், போகி கொண்டாட்டங்களை மனதில் கொண்டு படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதியினை நீட்டித்திருக்கிறோம்: 20-01-2012

அன்புடன்
அன்டன்

Wednesday, November 23, 2011


தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள் / காணொளிகள் / ஒலிப்பதிவுகளுக்கான போட்டி இது.
போட்டிக்கான புகைப்படங்கள் போட்டி வலைவாசல் வழியாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். போட்டியில் பங்கு பெறுவது மட்டுமல்லாது, நம்மிடம் உள்ள தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் என்பனவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு என்பது என் கருத்து.

போட்டி வலைவாசல்:
http://ta.wikipedia.org/wiki/contest

தமிழ் விக்கிப்பீடியா:

இப்பதிவை இங்கு பதிவிட ஆதரவளித்த PiT உறுப்பின நண்பர்களுக்கு என் நன்றிகள்!

அன்புடன் அன்டன்
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff