Monday, December 5, 2011

கோணக் கொத்தும் அதன் முக்கியத்துவமும்- ஒளி - காரமுந்திரி-VII

1 comment:
 
அடுத்து டிரக்ட் ரிஃப்லெக்ஷன்.

ம்ம்ம்ம்ம் ஒளியை ரிஃப்லெக்ட் செய்யறது பேப்பருக்கு பதில் ஒரு பிரதிபலிக்கிற கண்ணாடின்னு வெச்சுக்கலாம்.

ஒளி மூலம் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஒரு இடத்தில இருக்கிற காமிராதான் அதை பார்க்கும். மற்ற இடங்களில வைக்கிற காமிராக்கள் பார்க்கா.

திருப்பியும் ஸயன்ஸ்_க்கு போக எந்த கோணத்தில ஒளி கண்ணாடியை தாக்குதோ அதே கோணத்துல அது திருப்பி விடப்படும். அதனால டிரக்ட் ரிஃப்லெக்ஷன் பார்க்கப்படுமா என்கிறது ஒளி மூலம், பொருள், காமிரா பார்க்கிற இடங்கள் இவை இருக்கிற கோணங்களை பொறுத்தது. கீழே இருக்கிற படத்தில காமிரா 1&2 நேரடியா விளக்கை பார்க்கா. காமிரா  3 பார்க்கும்!

ஒளி ரிஃப்லெக்ட் ஆகிற கோணத்துல இருக்கிற காமிரா ஒளி மூலத்தையே - அதாவது அதன் வெளிச்சத்தை அதே அளவே பார்க்கணும்.

மற்ற இடங்களில இருக்கிற காமிராக்கள் இந்த ஒளியை பார்க்க முடியாது இல்லையா? அதனால அது கருப்பாகவே பார்க்கும்.

{ஆனால் இப்படி உண்மையில நடக்கிறதில்லை. ஏன்னு யோசியுங்க! பதில பின்னூட்டமா கொடுங்க.}

இந்த கண்ணாடி மாதிரியே பாலிஷ் பண்ண உலோகம், தண்ணீர் எல்லாம் நடந்துக்கும்!

"ஒளி மூலத்தையே - அதாவது அதன் வெளிச்சத்தை அதே அளவே பார்க்கணும்.” இதை படிச்சப்ப கொஞ்சம் சந்தேகம் வந்ததா?

"நெசமாவா? அதே அளவு வெளிச்சத்தைப் பார்க்கும்? எவ்வளோ தூரம் ஆனாலுமா? இப்பதானே இன்வர்ஸ் லா_ன்னு படிச்சோம்? தூரம் அதிகமாக இருந்தாலுமா?

ஆமாம். ஒரு சின்ன சோதனையில சந்தேகத்தை நீக்கிக்கலாம். ஸ்கூல்ல விளையாட்டு பசங்க கண்ணாடியை பயன்படுத்தி நம்ம கண்ணில சூரிய வெளிச்சத்தை அடிச்சது நினைவிருக்கா? அப்ப சூரியன் அளவு வெளிச்சத்தைதானே பார்த்தோம்? ஆனா சூரியன் எவ்வளோ தூரத்தில இருக்கு? :-))

கிடக்கட்டும்.

ஒரு விளக்கை தூரத்தில வெச்சு காமிராவால கண்ணாடில ரிப்லெக்ஷனை பார்க்கலாம். அதையே பாதி தூரத்துக்கு கொண்டு வந்தும் பார்க்கலாம். படத்துல வெளிச்சம் அதேதான் இருக்கும். ஆனா விளக்கோட சைஸ் -அளவு- அதிகமாயிடுத்து!

இரண்டு மடங்கு வெண்ணையை இரண்டு மடங்கு ப்ரெட் ஸ்லைஸ் மேலே தடவற மாதிரிதான். வெண்ணை திக்னஸ் மாறாது! ஒளியோட மொத்த அளவு மாறலை. ஆனா அது பரவின இடம் அதிகமானதால முன்னே இருந்த வெளிச்சமே இருக்கு!

எதுக்கு இதை தெரிஞ்சுக்கணும்?

டிரக்ட் ரிப்லெக்ஷன் ல ஒளி மூலத்தை பார்க்க முடிவதால அது கிட்டே வந்தா எப்படி இருக்கும்ன்னு கற்பனை செய்ய முடியும். அதனால பாலிஷ் பண்ண பொருட்கள் எவ்வளவு ஹைலைடோட தெரியணும்ன்னு திட்டம் போட்டு ஒளி மூலத்தை அமைக்கலாம்.

இது வரைக்கு கோணம்_ன்னு ஒருமையிலேயே பேசிகிட்டு இருந்தோம். ஆனால் ஒளி மூலத்தைப் பொறுத்து இது ஒருமையா இல்லாம போகலாம். ஒரு பெரிய ஒளி மூலமா இருந்து கிட்டேயும் இருந்தா ஒளி ரிப்லக்ட் ஆகிறது ஒரே ஒரு கோணமா இராது. ஒரு கொத்து கோணங்களா இருக்கும். இதை "பாமிலி ஆஃப் ஆங்கிள்ஸ்" என்கிறாங்க. ஏன் இப்படி?

ரிஃப்லக்ட் பண்ணுகிற பரப்பு ஒரு சின்ன துகள் இல்லை. பல துகள்கள் கொண்ட பரப்பு. ஒவ்வொரு துகளும் ஒளியை ப்ரதிபலிக்கும் இல்லையா? வெகு தூரத்தில இருக்கிற சூரியன்னா ஒண்ணும் பிரச்சினை இராது. ஆனா கிட்டே இருக்கிற ஒளி மூலத்தை இவை ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்துல பார்க்கிற வாய்ப்பு இருக்கு. அப்ப திருப்பப்படுகிற ஒளி வெவ்வேறு கோணத்தில இருக்கும். அதனால காமிராவால இதை பார்க்கக்கூடிய இடம் ஒரு சின்ன அளவா இல்லாம பெரிசாக ஆயிடும்.

இந்தக் கோண கொத்து போட்டோகிராபர்களுக்கு மிக முக்கியம்.

யாரும் ஒரு பொருளை நல்லாப் பார்க்க நாம் போடுகிற விளக்கு போட்டோவில வரதை விரும்ப மாட்டோம். அல்லது ஒரு நல்ல வெளிச்சம் தருகிற ஜன்னல், கதவு இது போல இருக்கிறதெல்லாம் படத்தில வரதை விரும்ப மாட்டோம். அதே போல பாலிஷ் பண்ண உலோகம், கண்ணாடி மாதிரி சமாசாரம் எல்லாம் படத்தில இருக்கப்போகிறதுன்னா நம்ம காமிராவுக்கு அதிலேந்து பிரதிபலிச்சு வெளிச்சம் வருமா? அதை எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம்_ன்னு எல்லாம் யோசனை செய்யணும்.

From reflection


நாம படம் எடுக்கிற பொருளுக்கும் ஒளி மூலத்துக்கும் இருக்கிற கோணம் தெரியும் என்கிறதால காமிரா இந்த கோண கொத்துக்குள்ளே வராதுன்னா தைரியமா படம் எடுக்கலாம். இதையே வேற மாதிரியும் யோசனை பண்ணலாம்,
காமிரா இந்தப் பள பள பொருளைப் பார்க்கிற கோணம் இருக்கு இல்லையா? அதை வெச்சு அதோட பிரதிபலிப்பு கோணங்கள்குள்ள ஒளி மூலம் இருக்கான்னும் பார்க்கலாம்.

போட்டோ எடுக்கும்போது சில சமயம் ஒரு பளபளப்பான பொருள் முழுதும் பளபளப்பு தெரியணும்ன்னு விரும்பலாம். அப்ப ஒளி மூலம் பெரிசா இருக்கும் படி பாத்துக்கணும். அப்பதான் கோணக்கொத்து பெரிசா இருக்கும்.


மற்ற சமயங்களில டிரக்ட் ரிப்லக்ஷனே இருக்கக்கூடாதுன்னு நினைக்கலாம். அப்படிப்பட்ட சமயம் காமிராவோட பார்வையில கோணக்கொத்தில ஒளி மூலம் இல்லாம பாத்துக்கணும்.

--


காரமுந்திரி I.
காரமுந்திரி II

1 comment:

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff