பிரசன்ன கிருஷ்ணன் அவர்களின் "Cloud Bean" இந்த வார படமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது.
இவரின் மற்ற படங்கள் - இங்கே
இவரின் மற்ற படங்கள் - இங்கே
வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு - ரொம்பவே அதிக டஃப் குடுத்திருக்கீங்க. ரொம்ப குறைவான வித்தியாசத்தில் தான் பின் தங்கி இருக்கிறீர்கள். அடுத்த போட்டியில் முதல் மூன்று இடம் உங்களிடம் இருந்து வர்ம் என்று வெகுவாக நம்புகிறேன். வெற்றியாளர்களைக் காட்டிலும் உங்களுக்கு என்னுடைய அதிக வாழ்த்துகள். மீண்டும் அடுத்தப் போட்டியில் சந்திப்போம்.
அமல், மீண்டும் வேண்டுகோள். இந்தப் புகைப்படம் எடுத்தவிதம் பற்றிய உங்கள் பதிவு தாருங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அதற்காக முதல் சுற்றில் வராதவர்களின் படம் அழகில்லை என்று இல்லை. ஆனால் சிலவற்றில் அவை தவறிப் போயின. படத்தின் நடுவில் எழுத்துகள், படத்தை மீறித் தெரியும் பெயர் விளம்பரம், வெட்ட வேண்டியவற்றை வெட்டாமை, Flat Composition போன்ற சில காரணிகளால் அவை முதல் சுற்றில் தேர்வாகவில்லை.
பொதுவாக ஊரில் சொல்லுவாங்க. துலக்க துலக்க பித்தளையும் தங்கம் அப்படின்னு. போட்டோவும் அப்படித்தான். எடுத்தப் புகைப்படத்தை யாரோ எடுத்த மாதிரி தயவு தாட்சண்யம் இல்லாம நீங்களே விமர்சிக்கனும். எங்கெங்க வெட்டனும்னு தோணுதோ அங்க வெட்டிடுங்க. அதுக்கு தேவையான பாடங்கள் ஏற்கனவே இங்கே விவாதிக்கப் பட்டிருக்கின்றன.
மேலே இருக்கும் இருபத்தொன்றில் இருந்து அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்க பட்ட அவஸ்த்தை கொஞ்சம் அதிகம் தான். இருந்தும் என்னுடைய ரசனையின் பேரில் தேர்வு செய்த படங்கள் கீழே..



![]() |
| May2010: Sunset-Sunrise |
இந்த படத்தை தரைல படுத்துகிட்டு எடுத்தேன். இப்படி எடுக்கும் போது வெறும் கையில்(HandHeld) எடுக்கமுடியாது. நமக்கு வாகா இருக்காது, அதே சமயம் balance இருக்காது. சில ட்ரைபாட்கள் மட்டும் தான் தரை மட்டத்துக்கு விரிச்சு வைக்க முடியும், அப்படியும் அது முழுசா தரையோடு இருக்காது, கொஞ்சம் ஆட்டமும் இருக்கும். பெரும்பாலான ட்ரைபாட்களில் "Center Column" இருக்கும், அவற்றை தரை மட்டத்துக்கு விரிச்சு வைக்கவே முடியாது.
தரை மட்ட படம் எடுக்க ட்ரைபாட்களுக்கு மாற்றாக "Ground Pod" உள்ளது. அவற்றின் சில வகை "Panning Ground Pod" மற்றும் "Skimmer"
இதெல்லாம் காசு ரெம்ப கூட. இது எல்லாம் வாங்க முடியாது என்பவர்களுக்கு ஒரு எளிய மாற்று உள்ளது.
உங்ககிட்ட இருக்குற பழைய வானலிய எடுத்துகோங்க, அந்த வானலியின் "நடு சென்டர்ல" ;) ஒரு ஓட்டைபோட்டு, நீங்க வச்சு இருக்குற ட்ரைபாட் ஹெட் பொருத்துவதற்கு ஏதுவான ஒரு ஸ்க்ருவை மாட்டவும். உங்களுடைய "Ground Pod" தயார். விளக்கப் படங்கள் கீழே.
இந்த செய்முறை படங்களின் உதவி - http://taloncraft.com
வேறு வகையான "Ground Pod" செய்யும் முறை இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
தரை மட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றும் சில படங்கள் -
இனிமேல் தரையில் உருண்டு புரண்டு படம் எடுக்க வேண்டியது தான் :)
பி.கு: ஆர்வக்கோளாருல நல்லா இருக்குற வானலியில் ஓட்டை போட்டு, சமையல் செய்வதற்கு திண்டாடினால் நாங்க பொறுப்பு கிடையாது ;)