Friday, March 30, 2012

வணக்கம் அனைவருக்கும்.

முதல பன்னிரன்டு படங்களை ஏற்கனவே பார்த்தோம். அதில் இருந்து முதல் மூன்றுக்கு முன்னேறும் படங்களை கவனிப்போம்.


கொஞ்சம் டைட் கிராப்பிங் என்றாலும் தெளிவான படம்  மற்றும் தலைப்புக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது.  கொஞ்சம்  Breathing Space around the subject  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மூன்றாம் இடத்தைப் பிடித்தப் படம் :


ஜெரால்ட் :



மதிய அல்லது அதிக வெயில் என்பதால் சற்றே வெளிறினாற் போல தெரிகிறது என்று நினைக்கிறேன்.  இருந்தும் தலைப்பில் இருந்து விலகாமலும் அதே நேரம் டீடெயில்ஸ் தெளிவாகவும் இருந்ததால் இரண்டாம் இடத்த்தைப் பிடிக்கும் படம்


சிகாமணி :


4



க்ளோனிங்க் செய்தது போல இரண்டு துதிக்கைகளுடன் யானையும் பாகனும்  சட்டென்று மனதைக் கவர்ந்து முதலிடம் செல்லும் படம்

சத்தியா :




பெரும்பாலான படங்களுக்கு அங்கேயே கமெண்ட் போட்டிருக்கிறேன். மிச்சம் இருப்பவற்றிற்கு இரண்டொரு நாட்களில் கமெண்ட் அளிக்கிறேன்.

வெற்றியாளருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் வாழ்த்துகள்.
அடிக்கடி சுற்றுலா செல்பவர்களா நீங்கள்? உங்கள் படங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ வேண்டுமா? உதவி செய்யக் காத்திருக்கும் தளமே http://www.picsean.com/. சென்ற வருடம் இந்தத் தளம் Flickr (mail) வழியாகத் தொடர்பு கொண்டு, கீழுள்ள படத்தை என்னிடம் விரும்பிக் கேட்டு வாங்கி Make My Trip.com_யிடம் விற்றுக் கொடுத்தது.

டிஸ்கவர் இன்டியா, மிஸ்டிகல் கேரளா, பேரடைஸ் காலிங் எனத் தனது ‘பல’ பேக்கேஜ் டூர்களுக்காக மேக் மை ட்ரிப் டாட் காம் எனது இந்தப் படத்தினைப் பயன்படுத்தி வருகிறது:

சரி, அவர்களுக்குத் தேவையானதை மட்டுமேதான் நாம் கொடுக்க வேண்டுமா? அவர்களின் தேவையை எப்படி அறிவது? எடுத்த எந்தப்படங்களையும் கொடுக்கலாமா? எனும் கேள்விகள் உங்களில் பலருக்கு வரக்கூடும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

Picsean தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு நம் படங்களைச் சமர்ப்பித்து வரலாம். தேவையைச் சொல்லி எனது படத்தை வாங்கியிருந்தாலும் தொடர்ந்து எனது படங்களை தங்கள் தளத்தில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டிருந்தது பிக்ஸியன். சமீபத்தில் மீண்டும் கர்நாடக, தமிழக கோவில் படங்கள் சிலவற்றை அங்கு பதிந்து வைத்தேன். படம் எடுத்த இடம், விவரங்கள் ஆகியவற்றையும் கூடவே அளித்திடல் நன்று. Landscape image எனில் அகலமும், Portrait image எனில் உயரமும் [அதாவது உயர அகலத்தில் எது அதிகமோ அது] 2200 பிக்ஸல் இருக்குமாறும்; dpi 300 இருக்குமாறும் படங்களை அங்கு வலையேற்ற வேண்டும்.

நம் படங்களுக்கானத் தேவையை அவர்களாகக் கண்டறிந்தோ அல்லது தேவைப்படுகிறவருக்கோ விற்றுத் தருகிறார்கள். இணையதள உபயோகத்திற்கு 10$ எனில் அச்சுப் பத்திரிகைகளின் அரைப் பக்க உபயோகத்துக்கு 50$ முழுப்பக்கத்துக்கு 100$ என்பதாகத் தெரிவித்திருந்தார்கள். பணத்தை நமது paypal கணக்குக்குச் செலுத்தி விடுகிறார்கள். முகப்புத்தகத்தில் http://www.facebook.com/picsean இவர்களைத் தொடர்வதும் அவ்வப்போதைய தேவைகள்,போட்டிகளை அறிய உதவும்.

ஆல்பத்தில் உறங்கும் உங்கள் பயணப் படங்கள் பலரும் பார்க்கும் வகையில் பயனாக இது ஒரு நல்ல வாய்ப்பு.



பெண்களுக்கு மட்டுமே ஆன புகைப்படப் போட்டி
:

இந்தத் தளத்தில்அறிவிப்பாகியிருக்கும் EVA '12 புகைப்படப் போட்டியில் விருப்பமானவர் கலந்து கொள்ளுங்கள். நாளை மார்ச் 31ஆம் தேதியே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

Thursday, March 29, 2012

முதலிடத்திற்கு எனது படத்தை தேர்வு செய்தமைக்கு நன்றிகள்! புகைப்படம் எடுத்த அனுபவத்திற்கு முன்னால் PIT குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். புகைப்படக் கலை பற்றி அறிய இணையத்தில் நிறைய ஆங்கிலத் தளங்கள் இருந்த போதிலும் சில தொழில்நுட்பங்களை விளங்கிக் கொள்ளவதில் சிரமம் இருந்தது. தமிழில் இதை விளக்கினால் நன்றாகப் புரியும் என்ற தேடலில் கிடைத்த தோழமைதான் PIT. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

PITஐ எனக்கு அறிமுகப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டிக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர் சதீஷ்க்கு நன்றிகள்.

"கண்ணாடிப் பேழை" சவால் போட்டிக்கான தலைப்பை பார்த்ததுல இருந்து ஒரு கண்ணாடியை விட்டு வைக்கலை. Indoorல எடுத்த பல படங்கள்ல நல்ல பிரதிபலிப்பு தெரிஞ்சதுனா உள்ளே இருக்கும் பொருட்கள் சரியா தெரியலை. அதனால இந்த தலைப்புக்கு அவுட்டோர் காட்சிதான் சரியா இருக்கும்னு போனப்பதான் இந்த காட்சி கண்ல பட்டது:

சிங்கப்பூரின் ராஃபெல்ஸ் சிட்டியில் அமைந்திருக்கும் "Popeyes" ரெஸ்டாரண்டின் பின் வாசலின் வெளியே நின்று எடுத்த படம். இங்கு முதலில் படம் எடுத்த போது மாலை 6 மணி. ஆனால் அஸ்தமிக்கும் சூரிய வெளிச்சம் கண்ணாடியில் பிரதிபலித்து உள்ளிருக்கும் காட்சியின் தெளிவை மறைத்து விட்டது. எந்தவித இணைப்பும் இல்லாமல் படர்ந்திருக்கும் கண்ணாடியின் பிரதிபலிப்பை விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே காத்திருந்து இரவு 7:15 க்கு எடுத்த படம்தான் இது. சிங்கப்பூரில் இரவு 7 மணிவரை சூரிய வெளிச்சம் இருக்கும். அந்த மாலை நேரத்து நீலநிற வெளிச்சம் கண்ணாடியில் வெளிப்புற காட்சி பிரதிபலிப்பிற்கு அருமையாக உதவ உட்புறகாட்சிக்கு ரெஸ்டாரண்ட்டின் ஆரஞ்சு வண்ண விளக்குகள் துணைபுரிந்தன.

படத்தை crop செய்வதற்கு மட்டுமே photo editor உபயோகித்தேன் மற்றபடிஎந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிறச்சேர்க்கை முழுக்க முழுக்க சூரியன் மற்றும் நியான் விளக்கின் ஒளிக் கலவைதான்.

காரமுந்திரியின் முந்தய எட்டு பாகங்களும் ஒளி பற்றி அறிய மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒன்பதாம் பாகத்திற்காக ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

நன்றிகளுடன்,
முத்துக்குமார்.







வாழ்த்துகள் முத்துக்குமார்!

விரைவில் இரண்டாம் பரிசு பெற்ற ரம்யா சந்திரகாந்தனின் பகிர்வும் வெளியாகும்.

-PiT




தொடர்புடைய பதிவுகள்:
1. கடைவீதியில் ஓர் கண்ணாடிப்பேழை - 'ஒளி' பாடத்திற்கு ஒரு போட்டி

2. ‘கண்ணாடிப் பேழை’ சவால் போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பதினைந்து

3. சவால் போட்டியில் வென்றவர்கள்

Monday, March 26, 2012

கலர் படத்தை desaturate பண்ணா கருப்பு வெள்ளை படம். இதுல என்ன பெரிய சவால்? இப்படியாகத்தான் ஆரம்பித்தது நண்பர்களின் கேள்வி.

வண்ணப் படத்தில் நீங்கள் சொல்லவரும் காட்சிகளில் கருத்துகளை வண்ணம் நீர்க்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. Focus of attraction Moves as per the color. கருப்பு வெள்ளையில் அந்த பிரச்சினை இன்றி நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்ல முடியும். மேலும் முகபாவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அதிக அழுத்தம் கருப்பு வெள்ளைப் படங்களால் தர முடியும்.

ஆனால் வெறுமனே Desaturate செய்தால் போதுமா ? போதாது என்கிறது வந்துள்ள படங்கள்.

கருப்பு, வெள்ளை, சாம்பல் ( Gray ) இவற்றின் கலவை தான் அல்லவா இந்த கருப்புவெள்ளை படங்கள். வெறுமே படங்களை எடுத்துக் கொண்டு வெறுமனே கருப்பு வெள்ளைக்கு மாற்றுவது will not suffice to enable needed punch in the photo. தேவையான இடத்தில் கருப்பு/வெள்ளை/சாம்பல் சரியான அளவில் இருக்க வேண்டும். தேவையான இடங்களில் Shades சரியாக அமையாமல் போனால், சரியான ஷார்ப்னெஸ் கிடைக்காமல் போனால், அவை பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற கணக்கில் போய்விடும்.

பல பேர் நல்ல படங்கள் எடுக்கிறீர்கள். இதில் ஆரம்பம் தொட்டே தொடர்ந்து பங்கு பெறும் பலரும் ஒரு சிறிய விஷயங்களில் கோட்டை விடுகிறீர்கள். துலக்கத் துலக்க பித்தளையும் தங்கமாகும். அது போல நம் புகைப்படங்களில் எங்கே தவறுகள் செய்கிறோம் என்று கவனித்து அதை சரி செய்தால் போதும். மிக அழகிய புகைப்படக் கலைஞராக உங்களை அது மாற்றிவிடும்.

கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் நன்றாக வந்திருக்கும் என்று நினைத்த படங்களை ஆல்பத்திலேயே எடிட் செய்து போட்டிருக்கிறேன்.

மற்றுமொரு வேண்டுகோள். போட்டி பதிவில் சொன்னது போல தயவு செய்து 1024x768 அளவுக்கு படம் அனுப்புங்கள். அதை விட அதிகம் வேண்டாமே ப்ளீஸ்.

சரி இப்போது முதல் பத்தில் வந்த படங்களை பார்ப்போம். ( Not in any order )


செல்வா :


வருண் :


தாமோதர் சந்த்ரு :


நித்தி கிளிக்ஸ்:


சவுந்தரராஜன் ஜீவரத்னம் :



சக்திவேலன் :


சத்தியா :



தருமி :



சிகாமணி :




கவிதா :




கலியபெருமாள் :


முதன் முறையாகப் போட்டியில் கலந்து கொள்கிறார். விதிமுறையை சரிவரக் கவனியாமல் இரண்டாவது என்ட்ரியாக அனுப்பியிருந்த படம். இருப்பினும் படம் சிறப்பாக இருந்தபடியால் ஊக்கம் அளிக்கும் விதத்தில் முதல் சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறது.

ஜெரால்ட் :




முதல் மூன்றுக்கான அடுத்த பதிவு விரைவில்...

Thursday, March 22, 2012

சிறப்புக் கவனம்:
# தமிழ்த் தேனீ
நல்லாவே வந்திருக்கு....சாதாரணமா பிரதிபலிப்பே நல்லாத் தெரியும் என்கிற வரிகளை நினைச்சுப்பாருங்க! அதற்கு சிறப்பான உதாரணம்.

# சதீஷ் குமார்

இரண்டில எது.. ஏன்.. நல்லா தெரியும்ன்னு விளக்கக்கூடிய படமா அமைஞ்சு போச்சு! உள்ளே இருக்கிற / ரிஃப்ளெக்ட் ஆகிற இரண்டுமே பளிச்சுன்னு அமைஞ்சிருக்கு! காருக்கு வெளியே இருக்கிறவரால விழுகிற நிழல்ல உள்ளே இருக்கிறவர் தெரியறார். வெளியே இருக்கிறவர் முகம் சரியா தெரியாதது ஒரு குறை!

மூன்றாவது இடம்:
# யோசிப்பவர்

சொல்ல வந்த கான்செப்டை கரெக்டா காட்டின முதல் படம். பச்சை வயலையும் பார்க்கலாம், ரிப்லெக்ஷனையும் பார்க்கலாம்! பார்வை குவிப்பை பொறுத்து!

இரண்டாம் இடம்:
# ரம்யா சந்திரகாந்தன்


அறையின் உள்ளேயும் தூண்கள் இருக்க, வெளியிலிருக்கும் தூண்களின் பிம்பங்கள் பிரமாதப்படுத்துகின்றன படத்தை. இதுவும் சரி, அடுத்து வரும் படமும் சரி, கண்ணாடி எங்கேன்னு யோசிக்க வேண்டி இருக்கு. எது நிஜம் எது பொய்ன்னு ஒரு மயக்கம் வருமே அந்த மாதிரி!

முதலிடம்:
# முத்துகுமார்

இது ரெஸ்டாரண்டுக்கு உள்ளேந்து எடுத்ததா? கொடுத்த வரிகளுக்கும் இது மிகச்சரியா இருக்கு! [“உதாரணமா கடைத்தெருவுக்கு போறோம். கண்ணாடி ஷோ கேஸ்ல அழகழகா பல விஷயங்கள் இருக்கு. அதெல்லாம் பார்க்கிறோம். ஆமா, பாக்கிறோமா? தங்கமணி பாக்கிறாங்க. அவங்களுக்கு அதுல சுவாரசியம் இருக்கு. பக்கத்திலேயே இருக்கிற ரங்கமணி என்ன பார்க்கிறார்? அந்த கண்ணாடியில பிரதிபலிக்கிற காலேஜ் பொண்ணை பாக்கிறார். அவர் அப்படி பாக்கிறது தங்கமணிக்கு தெரியறதில்லை. சாதாரணமா இந்த பிரதிபலிப்பு உள்ளே இருக்கிற பொருட்களைவிட நல்லாவே தெரிஞ்சுகிட்டு இருக்கும். அது ஒரு போட்டோவா இந்த காட்சியை பிடிச்சாத்தான் தெரியும்.”]


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

முதல் பரிசு பெற்ற முத்துக்குமார் விருப்பமானால் படத்தை எடுத்த அனுபவத்தை photos.in.tamil@gmail.com-க்கு அனுப்பலாம். அது தனிப்பதிவாக வெளியிடப்படும். முத்துக்குமாரின் படத்துடன் விரைவில் காரமுந்திரியைக் கொறிக்கத் தொடங்குவோம்!
***


-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/

Tuesday, March 20, 2012

வணக்கம் நண்பர்களே..

இதற்கு முந்தைய பகுதிகள்:

1. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 1..
2. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 2.. கேமராக்களை எப்படி பிடிப்பது?
3. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 3.. Exposure என்றால் என்ன?
4. புகைப்படங்களில் நேர்த்தி : பாகம் - 4.. Exposure compensation..


இந்த பகுதியில்,

Programme mode ல் படம் நன்றாக வரும் என்றால் , எதற்கு manual mode , aperture mode மற்றும் பல்வேறு modeகள் எல்லாம்?

கேமராவில்,

manual mode,
aperture priority mode ,
shutter speed mode ,
programme mode

தவிர கிட்டதட்ட அனைத்துமே pre - programmed தான்..

Exposure ஐ பொறுத்தவரையில் இரண்டு விசயங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன..அவை apeture மற்றும் shutter speed.. இவ்விரண்டையும் மாற்றி மாற்றி வெளிச்சத்திற்கேற்ப அமைப்பது தான் நமது வேலையே...

இதில்,

Manual mode:




பயன்படுத்தும் போது நம்மிடம் shutter speed மற்றும் aperture இவ்விரண்டும் நமது கண்ட்ரோலில் தான் இயங்கும்.. இதில் இரண்டையும் கண்டிப்பாக நாம் தான் வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் மாற்ற வேண்டும்.. இவை தவிர மற்ற அனைத்து செட்டிங்ஸ்களையும் நாமே தான் ஒவ்வொரு தடவையும் மாற்றம் செய்ய வேண்டும்..

சுருக்கமாக சொன்னால் ,இந்த mode ல் கேமரா ஒரு வேலையும் பார்க்காது.. எல்லாமே நாம் தான்..

Programme mode:




என்பது, ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த இரண்டை (aperture மற்றும் shutter speed) மட்டும் கேமராவே பார்த்துக்கொள்ளும்.. மற்ற செட்டிங்ஸ் எல்லாம் நாம் தான் பார்த்து மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும்..



Aperture mode:



இந்த mode பயன்படுத்தினால், aperture ஐ நாம் மாற்றிக்கொள்ளலாம்..shutter speed ஐ கேமராவே பார்த்துக்கொள்ளும்..

நாம் தேர்ந்தெடுக்கும் aperture ற்கு தகுந்தாற்போல் , வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதற்கேற்றார் போல் shutter speed ஐ கேமராவே பார்த்துக்கொள்ளும்.

மற்ற settings அனைத்தும் நாம் தான் பார்க்கவேண்டும்..

Shutter speed mode :



என்பதில் shutter speed ஐ நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்.. aperture ஐ கேமரா பார்த்துக்கொள்ளும்..

அதே சமயம் மற்ற செட்டிங்ஸ் அனைத்தும் நாம் தான் பார்க்க வேண்டும்..

முக்கியமான இந்த (P,A,S,M) mode களை தவிர , இப்பொழுதெல்லாம் பற்பல pre set mode கள் நிறைய இருக்கின்றன... அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

Preset scene modes :

இவைகள் எல்லாம் கிட்டதட்ட auto mode மாதிரி தான்.. எல்லா விசயங்களும் கேமரா தான் தீர்மானிக்கும்..

ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு mode லும் மாறுபட்டு exposure அமைக்கும் ..

இந்த mode கள் எதற்காக என்றால் , பலரும் படம் எடுக்கும் போது auto mode லேயே படமெடுப்பதால் ஒரு சில இடங்களுக்கு அது சொதப்பும்.. கொஞ்சம் மாற்றி எடுக்க ஆசைப்படுபவர்கள், ஒவ்வொரு தடவையும் கவனிக்க தெரியாதவர்களுக்கு உதவவே இந்த pre set scence mode கள் கேமராக்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன..







அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்..

Macro mode:



இந்த மோட் ஐ பயன்படுத்தும் போது நம்மால் ஒரு சப்ஜெக்டிற்கு மிக அருகிலேயே லென்ஸ் ஃபோகஸ் செய்ய முடியும்.

ஒரு சில சிறிய கேமராக்களில் கிட்டதட்ட வெறும் 2mm வரையில் கூட ஃபோகஸ் ஆகும் திறன் உண்டு..

அதே சமயம், அப்படி மிக அருகில் சென்று படம் எடுக்கும் போது வெளிச்சம் தடைபடும் , மேலும் depth of field ம் மிகவும் குறைந்து விடும்.. இதனால் flash தானாக open ஆகிவிடும், f number (aperture) ம் அதிகமாகிவிடும்..

இதை தான் macro mode ல் programme செய்யப்பட்டிருக்கும்..

இந்த விசயங்கள் சிறிய கேமராவிற்கும் , DSLR கேமராவிற்கும் கட்டாயம் மாறுபடும்..

சிறிய கேமராவில் தான் focus மிக அருகில் சென்றாலும் focus ஆகும்.. ஆனால் DSLR கேமராவில் அப்படியில்லை, macro என்பது முற்றிலும் லென்ஸை சார்ந்தது.. இதனால் DSLRல் macro mode பயன்படுத்தும் போது close ஆக ஃபோகஸ் ஆகாது.. மற்ற mode ல் எப்படி focus ஆகின்றதோ அதே மாதிரி தான் focus ஆகும்..

எனவே DSLR ஐ பொறுத்தவரையில் macro mode என்பது ஒரு programmed செட்டிங்ஸ் ..அவ்வளவு தான்
..

Sports mode:




இந்த mode ஐ பயன்படுத்தும் போது , கேமரா முடிந்தளவு அதிக shutter speed ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளும்...

இதனால் action சப்ஜெக்ட் எடுக்கும் போது அதை freeze செய்வதற்கு இந்த வகை mode உதவியாக இருக்கும்..

கவனிக்க,இந்த mode பயன்படுத்தினால் எல்லா படங்களும் freeze ஆகி , ஆடாமல் படம் வந்து விடும் என்று அர்த்தமில்லை.. வெளிச்சம் இல்லையென்றால் எல்லா mode ம் ஒன்று தான்..


Portrait mode:



இந்த mode ஐ பயன்படுத்தி எடுக்கும் போது aperture என்பது maximum ஆக மாறிவிடும்..

ஏனென்றால் portrait எடுக்கும் போது background ல் out of focus வரவேண்டும் என்பதற்காக இம்மாதிரி settings தரப்பட்டிருக்கும்.. அதே சமயம் safety க்காக flash ம் open ஆகிவிடும்..

Landscape mode:



இந்த mode எதற்கு என்றால்.. பொதுவாக நாம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்றால் landscape அழகாக இருப்பதால் படம் எடுப்போம் அல்லவா...

அந்த மாதிரி எடுக்கும் போது படம் முழுக்க corner to corner detail வேண்டும்.. இதனால் கேமராவில் f number(aperture) என்பது அதிகமாக இருக்க வேண்டும்..

அதனால் இந்த மோட் பயன்படுத்தும் போது ஓரளவிற்கு அதிகமான f number ஐயே கேமரா தேர்ந்தெடுத்துக்கொள்ளும்..



இவை தவிர பல்வேறு pre set mode கள் கேமராவுக்கு கேமரா மாறுபட்டு இருக்கும்..ஆனால் இவையெல்லாம் ஒரு feature என்று வியாபார தந்திரத்திற்காக தான் வருகின்றது.. அவ்வளவு தான்.. இவை செய்யும் வேலைகள் எல்லாம் ஒன்று தான்..

இவற்றையெல்லாம் விட்டு விட்டு நாம் முதலில் பார்த்த நான்கை மட்டும் (P,A,S,M) பயன்படுத்தி பழகினால் போதும்...

இன்னும் சொல்லப்போனால் அந்த நான்கில் முக்கியமாக இரண்டை(programme , aperture mode) பயன்படுத்தி பழகினாலே போதும் என்பது எனது கருத்து..



எது சிறந்தது ?


என்னை கேட்டால் இன்றைய டிஜிட்டல் உலகில், நான் எடுக்கின்ற 90% படங்கள் programme mode ல் எடுக்கின்றேன்.. அதிலேயே எனக்கு போதுமானதாக இருக்கின்றது..இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.. ஒரு சில டெக்னிக்கலான படம் எடுக்கும் போது கண்டிப்பாக சில மாற்றங்கள் தேவை..

ஒரு சிலர் manual mode தான் சிறந்தது என்றும் , அதில் படமெடுத்தால் நல்ல தெளிவாக படம் வரும் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் படத்தின் தெளிவிற்கும் இந்த mode களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

இதில் அனைத்திலும் ஒரே விசயம் என்னவென்றால், சரியான வெளிச்சத்தை அமைப்பது தான்..

எந்த mode ல் போட்டு படம் எடுத்தாலும் சரியான வெளிச்சம் அமைத்தால் போதும், படம் எல்லாம் ஒரே குவாலிட்டியில் தான் வரும்..

ஒரு சில சமயம் மட்டும் மாற்றங்கள் தேவைப்படும் , ஏன் என்றால் ஒரு சில கிரிடிக்கலான, இரண்டு வித வெளிச்சங்களில், programme modeஐ பயன்படுத்தும் போது சரியான ஒளியை தராது(exposure compensation ஐ பயன்படுத்தி மாற்றலாம்)..அந்த மாதிரி நேரங்களில் மட்டும் manual mode ஐ பயன்படுத்தி எடுக்கும் போது சரியாக படம் வரும்..

ஆனால் , இதெல்லாம் இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு பெரிய விசயமே இல்லை..

முன்பெல்லாம் நெகட்டிவ் பயன்படுத்திய காலங்களில் நாம் படமெடுத்தவுடனே preview எனப்து இல்லை.. அதனால் நாம் எடுத்த படம் சரியானது தானா என்பதை பார்க்கமுடியாது. அதனால் ரிஸ்க் எடுக்காமல் manual mode ல் படமெடுப்பது என்பது அப்போதைக்கு safety யாக இருந்து வந்தது..

ஆனால் இன்றைக்கு ஒரு படம் எடுத்த உடன் படம் சரியானது தானா என்பது உடனடியாக பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தவறாக இருந்தால் காசா , பணமா ? எளிதாக வேறொரு செட்டிங்ஸ்ல் மாற்றி இன்னொரு படம் எடுத்தால் போதும்.. அவ்வளவு தான்..

என்ன தான் manual mode சில சமயம் சிறந்ததாக இருந்தாலும், ஒவ்வொரு தடவையும் நாம் இரண்டு செட்டிங்ஸ் (aperture , shutter speed ) ஐ மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. இது சில நேரங்களில் நமக்கு சிரமம் தரும்..

இவற்றுடன் நாம் ஒரு படத்தின் composition ஐயும் சேர்த்து கவனிக்கும் போது சில நடைமுறை சிரமங்கள் ஏற்படுகின்றன..

இதனால்,இன்றை டிஜிட்டல் கேமராவில் programme mode பல நேரங்களில் சிறந்ததாக இருக்கின்றது.. இதில் நாம் எதையும் கவனிக்க வேண்டியது இல்லை.. ஏற்கனவே போன பகுதியில் சொன்ன மாதிரி, படம் எடுத்த பின் பார்க்கவும் , சரியான வெளிச்சம் இல்லை என்றால் + அல்லது 0 அல்லது - எது சரியோ அதை மாற்றி அமைத்து இன்னொன்று எடுத்தால் போதும் அவ்வளவு தான்..

இந்த மோட் ல் படமெடுத்து பழகினால் ஒரு சில நாட்களில் நமக்கு எது சரியானது என்று விரைவில் பழகிவிடும்.. இதனால் நமக்கு படத்தை கம்போஸ் செய்வதற்கு எந்தவித சிரமமும் இருக்காது..

எனவே , நார்மலாக படமெடுப்பதற்கு வேறு மோட்கள் பற்றிய கவலைகள் வேண்டாம்...

ஆனால், ஒரு சில க்ரியேட்டிவாக படம் எடுக்கும் நேரங்களிலும் , முக்கியமாக fast lens பயன்படுத்தும் போதும் நமக்கு programme mode சில இடங்களில் பலன் தராது..

அது என்னவென்றால், நாம் apertureயோ, shutter speed யோ மாற்றி எடுக்க நேரிடும் போது , programme mode ஐ பயன்படுத்தினால் படம் தவறாகிவிட வாய்ப்புண்டு..

அதே சமயம் , programme mode பயன்படுத்தி படமெடுக்கும் போது , aperture ,shutter speed தவிர பல செட்டிங்ஸ்களை நாம் தான் பார்த்து கவனித்து மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

சரி , அப்படி என்ன மாற்றங்கள் எல்லாம் செய்ய வேண்டும் ? aperture என்றால் என்ன? அவற்றை மாற்றுவதால் என்னென்ன பலன்கள்? போன்றவைகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்...

நன்றி
கருவாயன்.

Monday, March 19, 2012

உற்சாகமாக சவாலை எதிர்கொண்ட ஐம்பது படங்களில் முதல் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பதினைந்து படங்கள்! [எந்த வரிசையின் படியும் அமையாத பட்டியலே.]

# ரம்யா சந்திரகாந்தன்


# சதீஷ் குமார்


# அஜின்ஹரி


# சுதாகர் M


# யோசிப்பவர்



# சதீஷ் குமார்


# சுதாகர் M


# தமிழ் வாசகன்


# வருண் சங்கர்


# தமிழ்த் தேனீ


# அஜின்ஹரி


# முத்துகுமார்


# விலிங்டன் G


# கோமேதக ராஜா


# யோசிப்பவர்


சவால் போட்டி என்பதால் ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சிரத்தையுடன் முயன்று படமெடுத்து அனுப்பியிருந்தார்கள் பலரும். அவர்களுக்குப் பாராட்டுகள். எதிர் பார்த்த விஷயம் நமது பார்வையைப் பொறுத்து ஒரு இடத்திலேயே கண்ணாடி மூலம் உள்ளே இருக்கிறதையும் பார்க்கலாம் அல்லது அதில் தெரிகிற பிரதிபலிப்பை பார்க்கலாம் என்பது. சிலர் படங்களில் அது நன்றாகவே வந்திருக்கிறது. கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும் நன்றி. விரைவில் போட்டியில் வென்ற படங்களின் பட்டியல் வெளியாகும்.
***

-திவா
‘சித்திரம் பேசுதடி’
http://chitirampesuthati.blogspot.com/
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff