Thursday, January 31, 2013

'பிடித்ததில் பிடித்தது' போட்டியில் வெற்றி பெற்ற 118 படங்களில் முந்திய முதல் 12 படங்களை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இனி, போட்டியின் வெற்றியாளர்களை காண்போம்.

மூன்றாம் இடத்தில், Arun Selvarajன் வான வேடிக்கை இடம்பெறுகிறது.
இரவுக்காட்சியை படம் பிடித்தல் சிரமமான ஒரு வேலை. அதுவும், சட்டென வெடித்து மறையும் வான வேடிக்கையை துல்லியமாய் பிடிப்பது மிகக் கடினம்.
அழகாய் படம் பிடித்து காட்சிப்படுத்தியதர்க்காக, முந்துகிறார் அவர். வாழ்த்துக்கள்.




Vijay Vன் படம் வெகுவாய் கவர்ந்தாலும், அதிக ஷார்ப்னஸ் காரணமாக, சற்றே 'பாலிஷ்' குறைந்த மாதிரி தெரிந்தது. ஆனால், இது ஒரு பத்திரிக்கையில் போடும் அளவுக்கு வசீகரமான கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக முன்னேறியது. வாழ்த்துக்கள்.


முதல் இடம், பார்த்ததும் பிடிக்க வைத்த நிறத்தில், இயல்பான காட்சியை திறம்பட பிடித்த Naveenன் சமயல்காரர் படத்துக்கு. வாழ்த்துக்கள்.


நாகப்பனின் தும்பியும், ?ன் குரங்கும், keezhairajaன் துபாயும், kajanன் பெலிக்கனும், சிறப்பு கவனம் பெற்றது.

குசும்பனின் இரவுக் காட்சி அழகாய் தெரிந்தாலும், முழுமை பெறாத காட்சியால் பன்ச் குறைந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றீஸ்.


Friday, January 25, 2013

இம்மாத போட்டியில் மொத்தம் 118 படங்கள் களத்தில் இருக்கின்றன.
குறிப்பிட்ட ஒரு தலைப்பு தராமல், தங்களிடம் இருக்கும் படங்களில் தங்களுக்கு பிடித்ததை  அனுப்பக் கோரியிருந்தோம்.

உங்களுக்குப் பிடித்த படங்களில், எங்களுக்கு பிடித்த சிலவற்றைப் பார்ப்போம். கீழ் வரும் படங்கள் போட்டியின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது.


Naveen


Nagappan


vijay v


kusumban


Arun selvaraj


kalim


sulthan


?


kandeepa


keezhairaza


Nandish


Kajan



போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ். முந்தாத படங்களில் அநேகமாய் கண்ட ப்ரச்சனை, ஃபோக்கஸ் சரிவர ஆகாமம் இருந்தது. ஃபோக்கஸ் சரியாய் இருந்த படங்களில், கட்டம் கட்டியது ஈர்க்காமல் போனது.

டாப்பு மூன்றுடன், கூடிய விரைவில் சந்திப்போம்.


Tuesday, January 1, 2013

PiT நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். PiTக்கு ஆதரவளித்து பங்களிப்பையும் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றீஸ்.

2012ல் உலகம் அழியவில்லை என்றாலும், நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுளைப் பார்த்தால், நாம் அழிவை நோக்கி மெல்ல மெல்ல சென்று கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இயற்கை வளங்களை அழிப்பதில் துவங்கி, சம மனிதனை மதிக்காத சூழ்நிலை வரை, நாம் வாழ்வை அணுகும் முறை சீர்கேட்டை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.

இயன்றவரை, 2013ல், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பங்கம் இல்லாதவரை, நம் அனைவரின் வாழ்விலும் சிறு சிறு மாற்றம் உண்டாக்குமாறு   கேட்டுக் கொள்கிறேன்.

இனி, இந்த மாதத்தின் போட்டிக்கு போவோமா?

தலைப்பு: பிடித்ததில் பிடித்தது
அதாகப்பட்டது, உங்கள் கைவசம் உள்ள படங்களில், உங்களுக்கும் மெத்தப் பிடித்த படத்தை போட்டிக்கு அனுப்பலாம். கைவசம் இருப்பது திருப்திகரமாய் இல்லையானால் புதிதாய் பிடித்தும் அனுப்பலாம்.
இதுவரை PiT போட்டிகளுக்கு அனுப்பப்படாத படமாய் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: ஜனவரி 20.
மற்ற விதிமுறைகள்: இங்கே

1) சர்வேசன் (பழனி 2 கோடைகானல்)
Palaru? (near Palani Hills)


2) Ramalakshmi
ALERT


3) An&
1+1+1


4) MQNaufal


5) Anton


==============

நீங்கள் அனுப்பும் பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு அடிக்கடி நிரம்பி விடுகிறது. இதனால் பலரது போட்டிப்படங்கள் தானாக ஆல்பத்தில் சேர இயலாது போகிறது. இருபது பேர்களின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது. இது தொடர்ந்தால் மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும்.

இந்தக் குளறுபடிகள் நேராமல் தவிர்க்க.. உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தவிர்த்து செய்யத் தெரிந்தவர்கள் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்புங்கள். இதைப் போட்டி விதிமுறையிலும் தெரிவித்திருக்கிறோம். ஒரு வேண்டுகோளாகவே வலியுறுத்தியும் வருகிறோம்.

எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை செயல்படுத்திப் பழகுங்கள். ஏனெனில், PiT போட்டிகள் உங்களை மெருகேற்றிக் கொள்ளவும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவும் பயிற்சிக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது போன்ற பெரிய போட்டிகளில் படத்தின் அளவு விதிமுறையில் குறிப்பிட்டபடி இருக்காவிட்டால் படங்கள் விலக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை ஒருவழக்கமாகக் கொள்வது உங்களுக்கே பயன் தரும்.

அன்புடன்
PiT குழு.


==============
வணக்கம் நண்பர்களே,

முதல் மூன்று இடங்களைப் பிடித்த படங்களைப் பற்றிப் பார்க்கும் முன், விலகும் படங்கள் சிலவற்றைப் பற்றிய சுருக்கமான கருத்துகள்:

#Boopathi


  • கத்தரிப்பு (crop) மற்றும் பட ஒழுங்கமைவு (composition) மேம்பட்டிருக்க வேண்டும்.


#Prabhu

  • தனி மழைத்துளி அழகு. ஆனால் மழைக்காலம் என்பதை அழுத்திச் சொல்வதில் சற்று குறைவாகவுள்ளது.


#Mervin

  • அழகுமிக்க படம். ஆனால் மழைக்காலம் என்பதை அழுத்திச் சொல்வதில் சற்று குறைவாகவுள்ளது.


#Karthikeyan

  • கீழ்ப்பக்க கத்தரிப்பு (crop) படத்தின் அழகைக் குறைத்துவிடுகிறது. 


#Kandeepan

  • அழகாக மழைக்காலம் என்பதை எடுத்துக்காட்டும் படம். 50:50 என இல்லாமல் 75:25 என்ற அளவில் பட ஒழுங்கமைவு (composition) இருந்திருந்தால் நன்றாகவிருந்திருக்கும். 


#Venkatraman

  • நன்றாகவிருந்தாலும், மழைக்காலம் என்பதை அழுத்திச் சொல்வதில் குறைவாகவுள்ளது.


#Siva

  • பக்கவாட்டில் தெரியும் இரண்டாவது வாகனம், குறுக்கே தெரியும் சட்டம் என்பன பிரதான படத்தை திசை திரும்பும் விடயங்கள்




வெற்றி பெற்ற படங்கள்:


மூன்றாம் இடம்
#Kajan

  • தலைப்புக்கேற்ற விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கவனயீர்ப்பு குறைவாகவுள்ளது. 






இரண்டாம் இடம்
#Senthilnathan
  • லென்சில் விழுந்துள்ள மழைத்துளிகள் குறைபாடு




முதல் இடம்
#Kumaraguru
  • காகிதக் கப்பல், நீரில் விழும் துளிகள் மூலம் சாதாரணமாக மழைக்காலத்தை படம்பிடித்தமைக்குப் பாராட்டுக்கள்.



கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!


பிட் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff