Monday, December 29, 2014

வணக்கம் பிட் மக்கா நலமா இன்றைய பிட் கட்டுரையானது tabletop புகைப்படக்கலைக்குத் தேவையான ஒரு Light tent ஐ  நாமாக உருவாக்கி அதில் படமெடுப்பது எப்படி என பார்க்க இருக்கிறோம் J !
கற்றது :


ஓரிரு வருடங்களுக்கு முன் நான் உறுப்பினராக இருக்கும் ஒரு பிரபல பிரெஞ்சு புகைப்படக்குழுவில் சாதாரண அட்டைப்பெட்டியை எப்படி light tentஆக‌ மாற்றி அதில் உணவுபொருட்களை flash உதவியுடன் படமெடுக்கலாம் என விளக்கியிருந்தனர்.

ஆனால் அப்போது என்னிடம் flash மற்றும்  flash trigger இல்லாததால் அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை, ஆனால் சமீபத்தில் என்னுடைய நண்பர் திரு.பாபுராஜ் அவர்கள் அவரது trigger ஐ என்னிடம் சோதனைக்காக அளித்திருந்தார், அதனை வைத்து சில portraitகளை சோதித்த பின்னர் எனக்குத் திடீரென இந்த Light tent ன் ஞாபகம் வந்தது, ஆனால் நமக்கு இந்த வெட்டிங்ஸ்,ஒட்டிங்ஸ் போன்றவைகளுக்கு எல்லாம் நேரம் கிடையாது என்று +1 படிக்கும் பக்கத்துவீட்டு பையன் மதன்குமாரை அழைத்து அவனிடம் கூறினேன், “அரையாண்டு  லீவுல‌ அசால்டா செஞ்சிடலாம் அண்ணா”னு சொன்னவன் சரியா அண்ணாச்சி கடையில இருந்து கொண்டு வந்த ஒரு அட்டை பாக்ஸை காட்டி இது “ஓகேவா” னு  கேட்டான் “டபுள் ஓகே” னு  சொன்னதும் வேலைல இறங்கிட்டான்.

அதாவது அட்டைப்பெட்டியின் அடிப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளை வெட்டி எடுத்து அப்பகுதியை tissue பேப்பர் கொண்டு ஒட்டி கொடுத்துவிட்டான். tissue பேப்பருக்கு பதிலாக baking பேப்பரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த tissue பேப்பர் எனக்கு, எனது பிளாஷ் வெளிப்படுத்தும் harsh light ஐ  சாப்ட்லைட்டாக மாற்றித்தரும் diffuser ஆக‌ வேலைசெய்யும்.

கீழேயிருக்கும் படத்தை உங்கள் கண்கள் பார்த்தாலே போதும் கைகள் தானாக உருவாக்கிவிடும் என்பதால்Light tent உருவாக்குவது குறித்த விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
© Nithi Clicks 2014

© Nithi Clicks 2014

ஒருவழியாக Light Tent தயாரகிவிட்டது,என்னைவிட ஆர்வமாக இருக்கிறான் மதன்குமார், “படங்கள் எடுத்து பார்த்திடலாமா அண்ணா” னு அன்றைய அவனது கிரிக்கெட் ஆட்டத்தை ரத்து செய்துவிட்டு என்னுடனே இருந்தான்.

என்னுடைய பிளாஷை நான் இங்கு flash triggerமூலமாக wireless ஆக fire செய்ய இருப்பதால் எனது பிளாஷை tripodல் பொருத்தி மேலிருந்து கீழாக வைக்கிறேன் (top angle) பார்க்க கீழேயுள்ள படங்கள்:

© Nithi Clicks 2014

© Nithi Clicks 2014
படம்பிடிக்க இருக்கும் பொருளின் முன்புலம் மற்றும் பின்புலம் எந்த நிறத்தில் வேண்டும் என்பதனை உறுதி செய்துகொள்ளுங்கள் பொதுவாக ஒன்று வெள்ளை அல்லது கருப்பு நிறம் இதுபோன்ற புகைப்படங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கு நான் மாணவர்கள் வரைபடங்களுக்கு பயன்படுத்தும் வெள்ளை நிற chart பேப்பரை எனது Light Tentல் விரித்து அதன் மீது என்னுடைய பொருளை வைக்கிறேன்.

நீங்கள் படம்பிடிக்க இருக்கும் பொருளின் பிரதிபலிப்பும் (reflection) உங்களுக்கு தேவையென்றால் கண்ணாடித்துண்டுகளைப் பயன்படுத்தி அதன்மீது பொருளை வைத்து படம்பிடிக்கலாம். உங்களின் Light Tentன் அளவை பொருத்து கண்ணாடிக்கடையில் கேட்டால் அவர்களே கண்ணாடித்துண்டை வெட்டிக்கொடுப்பார்கள்.

மேலும் ஒருவிஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,அதாவது என்னுடைய Digitek flash ஆனது வெறும் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மேனுவல் flash ஆகும்.இது உங்களது கேமரா செட்டிங்ஸ் உடன் synchronize ஆகாது எனவே எந்த அளவிற்கு flash, fire செய்யவேண்டும் என்பதனை உங்களது கேமரா செட்டிங்ஸை பொறுத்து தான் flashல் செட்செய்யவேண்டும்.

கேமரா,லென்ஸ்,செட்டிங்ஸ்:

இங்கு நான் எனது Canon 100D யுடன் Canon EF-50mm F1.8 II லென்ஸை பயன்படுத்துகிறேன், நான் F8,1/200,ISO100ல் படம்பிடிக்கிறேன், முதல் படத்தின் histogram ஐ வைத்தே ,  நீங்களே flash lightன் அளவை மேனுவலாக‌  அட்ஜெஸ்ட் செய்துகொள்வீர்கள், பொதுவாக flashகளின் துணையுடன் எடுக்கும் படங்களுக்கு உங்களது ஷட்டர் வேகம் 1/200 ஐ தாண்டக்கூடாது அதற்க்கு மேல் உங்களது ஷட்டர் வேகம் கேமராவோடு synchronizeஆகாது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள், உங்களது அப்பச்சரின் அளவு நீங்கள் விரும்பும் depth of fieldஐ பொறுத்து அமைத்துக்கொள்ளுங்கள் J
சரி இனி தைரியமாக களத்தில் இறங்குவோம்.

பெற்றது:

முதல் படம் என்னுடைய குளிர்சாதன பெட்டியிலிருந்து எடுத்த தக்காளி பழங்களை எடுத்தேன்.
© Nithi Clicks 2014

அடுத்ததாக என்னோட favorite Danish Butter cookies :
© Nithi Clicks 2014
© Nithi Clicks 2014

பிறகு தோட்டத்தில் பறித்த சாமந்திப்பூ:
© Nithi Clicks 2014

கடைசியாக அம்மாவின் சில சமையலறை அயிட்டங்கள்:
© Nithi Clicks 2014
© Nithi Clicks 2014
மேலே பார்த்த படங்கள் அனைத்தும் இந்த Light tentல் எடுக்கப்பட்ட படங்களே பிற்சேர்க்கை என்று பெரிய அளவில் செய்யவில்லை வெறும் Levels adjustments ஐ கொண்டு கொஞ்சம் tone correction மட்டுமே செய்துகொண்டேன்.

அவ்வளவுதான் மக்கா மிக சுலபமாக செலவில்லாத Light Tent மூலமாக விலைகுறைந்த லென்ஸுடன்,சாதாரண மேனுவல் flash கொண்டு table top புகைப்படங்கள் எடுப்பது எப்படி என அறிந்துகொண்டீர்களா?

இந்தமுறையில் நீங்கள் ice cream parlor, restaurant, bakery, toy shop போன்றவற்றிற்கோ அல்லது சமையல் குறிப்பு போன்ற இணையதளங்களுக்கு இதுமாதிரி படங்களை எடுத்துக்கொடுத்து வருமானமும் ஈட்டிக்கொள்ளலாம்,சிறிய முதலீட்டில் பணம் சம்பாதிக்க ஏதுவாக இப்பதிவு உங்களில் ஒருவருக்காவது பயன்பெற்றால் அதுவே எனக்கும் எங்கள் “பிட்” தளத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மீண்டும் சந்திப்போம்
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்

Tuesday, December 23, 2014

வணக்கம் பிட் மக்கா,நலமா?இன்றைய கட்டுரையில் நாம், Flickr, 500pix,
போன்ற த‌ளங்களில் உங்களது படங்களை வலையேற்றம் செய்வதற்க்கு முன்பாக உங்களது படங்களுக்கான metadataவை போட்டோஷாப்பிலேயே சேர்த்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம். ***

** 
Metadata என்பது உங்களது படத்திற்கான காப்பிரைட், தலைப்பு, படத்தைப்பற்றிய குறிப்பு, உங்களது இணையதள முகவரி, உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போன்ற தகவல்களை உங்களது படத்திற்குள்ளாகவே இணைப்பதேயாகும்.
( copyright, caption, keywords, URL, etc ).

Watermark என்பது உங்களது படத்தின் ஒருபகுதியில் பார்வையில் தெரியும் ஆனால் metadata என்பது உங்களது படத்தினுள் ஒளிந்திருக்கும். உங்களது படம் இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் உங்களது metadataவும் உடன் பயனிக்கிறது. (பேஸ்புக் தளத்தை தவிர). சரி இனி கட்டுரைக்கு போகலாம், முதலில் உங்களது படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும் உங்களது பிற்சேற்கைகளை முடித்துக்கொள்ளவும்.பின்னர் File>FileInfo செல்லவும்.


இதில் நமக்கு தேவையான tabகள், ஒன்று Basic மற்றொன்று IPTC,முதலில் basic tab சென்று உங்கள் படத்திற்க்கான தலைப்பு, படத்தைப்பற்றிய உங்களது கருத்து, படத்திற்கான copyright தகவல்கள் போன்றவற்றை நிரப்பிக்கொள்ளவும், இத்தகவல்களைப்பற்றி நான் விளக்கவேண்டிய அவசியமில்லை நீங்களே எளிமையாக நிரப்பிக்கொள்ளலாம்.


இதில் Description Writer என்னும் ஒன்றைப்பற்றி நான் விளக்க இருக்கிறேன்,அதாவது உங்களது படத்திற்க்கு பொறுத்த‌மான பிறரது வரிகளையோ அல்லது கவிதையோ நீங்கள் Descriptionஆக‌ கொடுக்கும் பட்சத்தில் அவரது பெயரை Description Writer என்பதில் அளிக்கவேண்டும். உதாரணமாக என்னுடைய படம் ஒன்றிற்கு சக நண்பரான திருமதி.ராமலக்ஷ்மியின் கவிதை ஒன்றினை அவர்களது இசைவோடு நான் பயன்படுத்திக்கொள்வதாக இருந்தால் நான் இந்த Description Writer ல் கட்டாயம் அவர்களது பெயரை அளிக்கவேண்டும்.

அடுத்ததாக Keywords இதில் உங்களது படத்திற்கு பொறுத்தமான Tagsகளை அளித்துக்கொள்ளலாம் இதில் ஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் Semicolons அல்லது Commas அளிக்கவேண்டும்,மேலும் இரண்டு வார்த்தைகளை ஒரே tag ஆக அளிக்க அடைப்பு குறியை பயன்படுத்தவேண்டும்.
உதாரணம் : "nithi clicks"

அடுத்தது IPTC Tab: (The International Press Telecommunications Council)
இந்த tabல் நீங்கள் உங்களைப்பற்றிய சொந்த விபரங்களை தெரிவிக்கலாம்,மேலும் இந்தப்படம் யாருக்காவது விலைக்கு தேவையென்றாலோ அல்லது Editorial தொடர்பாக‌ பதிப்பிற்க‌ விரும்பினாலோ உங்களை எளிதாக தொடர்புகொள்வதற்கு ஏதுவாக விபரங்கள் அளிக்கப்படவேண்டும்.


அவ்வளவுதாங்க படத்தை அப்படியே சேமித்துக்கொள்ளுங்கள். 
இனி உங்களது படத்தை நீங்கள் விரும்பியவருக்கோ அல்லது இணையத்திலோ பகிரலாம்.இங்கு என்னுடைய படத்தை நான் பிளிக்கர் இணையதளத்தில் வலைஏற்றுகையில் நான் படத்திற்கு கொடுத்திருந்த title, Description மற்றும் Keywords களை பிளிக்கர் தளம் தானாக எடுத்துக்கொண்டதைப் பாருங்கள்!


பயன்படுத்திப் பாருங்கள்!

என்றும் அன்புடன்
நித்தி ஆனந்த்

Tuesday, December 16, 2014

கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்குதல் சுவாரசியமான அனுபவம். வணிக நோக்கம், கருப்பொருளை "வெளிச்சம்" போட்டுக் காட்டல், எதிர்மறையான உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களுக்கு இந்த கருப்புப் பின்புலம் முக்கியமாகப் பயன்படுகிறது. பலர் கருப்பு பின்புலத்தை "மங்களம்" இல்லை எனத் தவிர்த்துவிடுவர். இந்த விருப்பு, வெறுப்புக்கு அப்பால், கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்குதல் என்பது வழமையான படமாக்குதலில் இருந்து வேறுபட்டது.

கீழே கருப்புப் பின்புலத்தில் படமாக்கப்பட்ட கருப்பொருள்களுக்குச் சில உதாரணங்கள்:



கடந்த மாதப் போட்டி முடிவு அறிவிக்கும்போது ஒரு இடத்தில், கருப்புப் பின்புலத்தில் கருப்பு கருப்பொருளைப் படமாக்குதல் எளிதல்ல எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, கருப்புக்குள் கருப்பை படமாக்குவதில் உள்ள நுட்பத்தையும், அதை எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கமே இப்பதிவு.


பொதுவாக, கருப்புப் பின்புலத்தில் கருப்பொருளைப் படமாக்க நாம் பொருத்தமான அமைப்பு முறையைச் செய்ய வேண்டும். அதற்கு இருக்க வேண்டிய உபகரணங்கள்: DSLR, கருப்புத் திரை, கருப்பு அடிப்பகுதி, இரு மின்விளக்குகள், சிறிய வெண் குடையுடன் பிளாஷ் மற்றும் முக்காலி, மேசை போன்ற இதர பொருட்கள். இவற்றைக் கொண்டு பின்வரும் அமைப்பில் அமைக்கப்பட வேண்டும்.


பலர் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணலாம். காரணம், தொழில்முறையில் இருப்பவர்கள்தான் இம்மாதிரிப் பொருட்கள் எல்லாம் வைத்திருப்பார்கள், நமக்கோ இது ஒரு பொழுதுபோக்கு. நம்மில் பலர் வைத்திருப்பது ஒர் DSLR மற்றும் அதற்குண்டான சில பொருட்கள்தான். உண்மையில் பொருளை அல்லது காட்சியைப் படமாக்குதல் என்பது வெறுமனே "கிளிக்" அல்லாமல் சற்று நுட்பம் பற்றிய அறிந்தால் நாமும் அழகான படங்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம். இனி விடயத்திற்கு வருவோம்.


கருப்பு நிறம் ஒளியை உறிஞ்சும் என்பதால் கருப்பான பொருட்கள் படத்தில் சரியாக விழுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தனிக் கருப்பான பொருளை தெளிவாகப் படம்பிடித்தல் என்பதே சிரமத்தை ஏற்படுத்தும். இங்கு பின்புலம், ஒளிப் பாவனை என்பன அவசியம். பொருளின் ஓரங்கள் ஒளியினால் மிளிரும்போது, பொருள் பின்புலத்தில் இருந்து வேறுபடுத்தப்பட்டுத் தெரியும். கருப்புப் பின்புலத்தில் கருப்புப் பொருள் மறைந்து போகாமலிருக்க ஒளி பொருளின் விளிம்புகளிற்பட்டு ஒளிர வேண்டும். இதற்காகவே மேலுள்ள அமைப்பு முறை அவசியமாகிறது. இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டால் எம்மாலும் கருப்புனுள் கருப்பை படம்பிடிக்க முடியும். பொருளைவிட பின்புலம் கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் அல்லது கிட்டத்தட்ட 70% - 90% கருப்பு நிறத்தில் இருந்தாலும் கருப்பினுள் கருப்பினைப் படமாக்கலாம். (படம் 1) அல்லது பின்புலத்தில் ஒளித் தெரிப்பை ஏற்படுத்தியும் படமாக்கலாம். (படம் 2)

படம் 1

படம் 2
வீட்டிலிருந்த பொருட்களைக் கொண்டு இரு torch light உதவியுடன் கமிராவிலுள்ள பிளாஷைக் கொண்டு எளிய முறையில், மேற் குறிப்பிட்ட அமைப்பு முறையில் படமாக்கப்பட்ட mouse. இங்கு குடையுடன் பிளாஷ் பயன்படுத்தப்படவில்லை. இங்கு போதிய ஒளி கிடைக்காததால் ஓரங்கள் சிறப்பாக வரவில்லை. ஓரங்களுக்கு ஒளித் தெறிப்பு மற்றும் பொருளை வெளிக்காட்டக்கூடிய ஒளி அமைப்பு என்பன மிக முக்கியம். பொருளுக்கும் கருப்புத் திரைக்கும் குறைந்தது 1.5 மீட்டர் இடைவெளி இருப்பது கருப்புத் திரையின் விபரங்கள் தெரியாதவாறு படமாக்க உதவும்.


Friday, December 12, 2014

 ***வணக்கம் பிட் மக்கா நலமா?
இன்றைய கட்டுரை ஒரு தொழில்நுட்ப கட்டுரையாகும்,ஆம்,புகைப்படத்தோடு தொடர்புடைய தொழில்நுட்பப்பதிவாகும். புகைப்படக்கலைக்கு கேமரா மட்டும் தான்னு இல்லாம‌  இல்லாம அலைபேசி கேமரா மற்றும் டேபளட் கேமரா பயன்படுத்தும் காலத்தில் நாம் இருக்கிறோம்.** 

பொதுவாக அலைபேசியிலேயே அதிக மெகாபிக்ஸல்கள் கொண்ட கேமராக்களை இன்றைய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நமக்கு அளிக்கின்றன.அதைவிட ஸ்மார்ட்போன்களில் இருக்கும் நல்ல விஷயமே Panorama mode தாங்க நம்மில் பலரும் இந்த வசதியினை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சரி இவ்வாறாக ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட படங்களை கணினிக்கு எவ்வாறு பரிமாற்றம் செய்வது என பார்க்கலாம்இக்கட்டுரை Android பயனாளர்களுக்ககான கட்டுரையாகும், அதேநேரத்தில் இது விண்டோஸ் இயங்குதளத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும். Mac மற்றும் Linux பயனாளர்கள் இக்கட்டுரையை தவிர்க்கலாம்.
பொதுவாக ஸ்மார்ட்போன்களில் எடுக்கப்படும் படங்கள் ஒன்று அலைபேசியின் இன்டர்னல் மெமரியிலோ அல்லது SD கார்டுகளிலோ சேமிக்கப்ப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட படங்களை கணினிக்கு பரிமாற்றம் செய்ய பொதுவாக USB கேபிள் கொண்டு இணைப்பை ஏற்படுத்தி பரிமாற்றம் செய்யலாம்ஆனால் சிலவேளைகளில் ஸ்மார்ட்போனுக்கான USB டிரைவர்கள் உங்களது இயங்குதளத்திற்கு ஏற்றவாறு கிடைப்பது கிடையாது. அதனால் உங்களது கணினி உங்களது ஸ்மார்ட்போனை அடையாளம் கண்டுக்கொள்ளாது இதுபோன்ற தருணங்களில் இணைப்பு ஏற்படுத்துவது மிகவும் சிரமமானதுஎனினும் இதனை கூகுள் அளித்திடும் இலவச USB டிரைவர்களைக்கொண்டு எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்த நான் எழுதியகட்டுரையை CNET France வெளியிட்டிருந்தது.

ஆனால் « பிட் » தளம் புகைப்படக்கலஞர்களுக்கான தளம் என்பதால் இங்கு நான் புகைப்படக்கலைஞர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரையை தரவேண்டும் ,எனவே இங்கு ஒரு எளியமுறையில் இணைப்பு ஏற்படுத்தும் முறையை பார்ப்போம்.

இதற்கு உங்களிடம் Wi-Fi தொழில்நுட்பம் கொண்ட Modem/Router இருக்கவேண்டும்.
உங்களது கணினி அல்லது மடிக்கணினி இந்த Modem/Routerரோடு wired connection அல்லது wireless connection மூலமாக இணைத்திருக்கவேண்டும்.
(
eg :Lan,Wi-Fi).


 இதேபோலவே உங்களது ஸ்மார்ட்போனும் இதே Modem/Router உடன் இதே நெட்வொர்கில் இணைந்திருக்க வேண்டும்.(through Wi-Fi).
இங்கு நான் என்னுடைய நெட்வொர்க் Schemaவை உதாரணத்திற்கு பகிர்கிறேன்.


இப்போது நாம் , Moborobo என்கிற ஒரு இலவச Smartphone Management டூலை பதிவிறக்கப்போகிறோம்.

முதலில் இந்த சுட்டியை கிளிக்செய்து இந்த Moborobo வை பதிவிறக்கம் செய்து உங்களது கணினியில் அல்லது மடிக்கணினியில் நிறுவிக்கொள்ளவும்.

பின்னர் உங்களது ஸ்மார்ட்போனில் இணையஇணைப்பை ஏற்படுத்தி Mobo Daemon என்ற இந்த Android அப்ளிக்கேஷனை உங்களது மொபைலில் நிறுவிக்கொள்ளவும்.


இப்போது உங்களது கணினியில் Mobo Roboவை இயக்கவும்.கணினியில் Wi-Fi connection பகுதியில் ஒரு QR Code உருவாக்கப்பட்டிருக்கும்.


இப்போது உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் Mobo Daemon இயக்கவும்இனி Wi-Fiயை தேர்வு செய்துகொண்டு Scan QR Code From PC என்பதை அழுத்தவும்.


இப்போது உங்களது ஸ்மார்ட்போனின் கேமரா on ஆகும் அந்த கேமராவை உங்களது கணினியில் தெரியும் QR Code க்கு நேராக காட்டுங்கள்அவ்வளவே உங்களது ஸ்மார்ட்போனும் கணினியும் Wi-Fi இணைப்பு மூலமாக இணைக்கப்பட்டிருக்கும்.


இனி ஸ்மார்ட்போனை வைத்துவிட்டு கணினியில் Mobo Robo Applicationல் Image என்பதை அழுத்த உங்களது இன்டெர்னல் மெமரி மற்றும் SD கார்ட் இல் இருக்கும் அத்தனை படங்களும் (including whats app images) காட்டும் Export /import  ஆப்ஷனைக்கொண்டு கணினி யில் இருந்து ஸ்மார்ட்போனுக்கும், ஸ்மார்ட்போனிலிருந்து கணினிக்கும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். 


போனஸ் டிப்ஸ்:
படங்கள் மட்டுமில்லாமல் Contacts,messages,music,videoனு பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

குறிப்பு:
உங்களிடம் Wi-Fi Modem அல்லது Router இல்லையெனில் நீங்கள் usb கேபிள் மூலமாகத்தான் உங்களது இணைப்பை ஏற்படுத்தவேண்டும்.அவ்வாறு usb கேபிள் மூலமாக இணைப்பு ஏற்படுத்தும் போது உங்களது ஸ்மார்ட் போனில் செட்டிங்ஸ் இல் இருக்கும் developers optionல் USB Debugging கட்டாயமாக Enable செய்யவேண்டும் என்பதை நினைவில்கொள்ளவும்.



அன்புடன்,
நித்தி ஆனந்த்   
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff