Sunday, August 31, 2014

வணக்கம் மக்களே...

சிறப்புக் கவனம் பெறும்  பத்து    படங்களை முதலில் பார்ப்போம். ( not in any specific Order )

போட்டியில் கலந்து கொண்ட எல்லா படங்களுக்குமான கமெண்ட்ஸ்... ஆல்பத்திலேயே தரப்பட்டிருப்பதால் இங்கே மீண்டும் தரவில்லை.

# மஹிரன்


# ஷங்கர் # ஜெய்காந்த்


# வெங்கட்ராமன்

# ராண்டி ஆனந்த்# கார்த்திக் பிரபு
# சதீஷ்# விஜய்


# நவோதயா செந்தில்#ரிஷான் செரீஃப்


***


** 


முதல் மூன்று இடங்களைப் பிடித்த படங்கள்..

மூன்றாம் இடத்தை இரு படங்கள் பகிர்ந்துக் கொள்கின்றன:


3 - சிவகுமார்3 -- விஸ்வநாதன்
இரண்டாம் இடத்தைப் பிடித்த படம்:

2 - வினோத் குமார் :
முதலிடத்தைப் பிடித்த படம் :

1 - நடராஜன்.
சிறப்புக் கவனம் பெற்றவர்கள் அடுத்தமுறை வெற்றியை எட்டிப் பிடிக்க வாழ்த்துகள்! வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்!

***

Tuesday, August 19, 2014

175 வருட வரலாறு. உலகப் புகைப்பட தினம்.

இன்றைய நாளில் நாம் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய சில விஷயங்களை இங்கே பதிவது நன்றாக இருக்குமெனத் தோன்றியது:). வாழ்க்கையில் தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் நம் போன்ற கலைஞர்கள் சற்றே கவனம் எடுத்தால் தவிர்த்திட முடிகிற தவறுகள் என்னென்ன எனப் பார்ப்போமா?


* கோணம் முக்கியம். படத்தை க்ளிக் செய்யும் முன் உங்கள் ஃப்ரேமின் எல்லாப் பக்கங்களிலும் கண்களை ஓட்டுங்கள், சப்ஜெக்டுடன் காட்ட வேண்டிய ஏதாவது முக்கியமான விஷயத்தைக் கோட்டை விடுகிறோமா என. என்னதான் பிறகு சரி செய்து கொள்ளலாம் என்றாலும் கோணல் மாணலாக எடுப்பதைத் தவிருங்கள்.


* நாளை கேமராவுடன் கிளம்புகிறோம் என்றால் முந்தைய இரவே பேட்டரியை சார்ஜில் போடுங்கள். அவசியப்பட்டால் backup battery ஒன்றும் வைத்துக் கொள்ளலாம்.


* மோசமான சீதோஷ்ண நிலைகளிலிருந்து உங்கள் கேமராவைப் பாதுகாக்கத் தவறாதீர்கள். பூஞ்சனம் ஏற்படாமலிருக்க கேமரா பையில் சிலிகான் ஜெல் பாக்கெட் ஒன்றைப் போட்டு வையுங்கள். அடிக்கடி உபயோகிக்காத லென்சுகளை அவற்றிற்கான pouch_களில் போட்டு அதை ஜிப் லாக் பைகளில் பத்திரப் படுத்துங்கள்.

Stay Focused
* மெமரி கார்டை மறக்காதீர்கள். கேமராவிலேயே கூட சேமிக்க முடியுமென்றாலும் அதன் கொள்ளளவு கம்மியே. முன்னர் எடுத்த படங்களை டிரான்ஸ்ஃபர் செய்து விட்டு காலி மெமரி கார்டை எடுத்துப் போகலாம் எனக் கடைசி நேரத்தில் லாப்டாப்பில் இருந்து எடுக்காமலே விட்டு விட்டுக் கிளம்பி வந்து “அடடா” என வருந்திய கலைஞர்களைக் கண்டிருக்கிறேன். முன் போலில்லாமல் அதிக கொள்ளளவில் மெமரி கார்ட் கிடைக்கின்றன. ஆனாலும் கூட ஒன்றே ஒன்றென இருக்காமல் வெளியில் செல்லுகையில் வெவ்வேறு கொள்ளளவில் 2,3 வைத்துக் கொள்வது நல்லது.

#


*வெளியிடங்களில் லென்சுகளை மாற்றும் போது என்ன அவசரமானாலும் சரியாகப் பொருத்தியிருக்கிறோமா எனப் பார்ப்பது அவசியம்.

*ட்ரைபாட் உபயோகிக்கும் போதும் எல்லா கால்களையும் ஒரே அளவில் பொருத்தியிருக்கிறோமா, கேமராவை சரியாக டைட் செய்திருக்கிறோமா என நன்றாக பரிசோதித்த பிறகே படமெடுக்க ஆரம்பிக்க வேண்டும். சின்ன அளவிலான தவறு  கூட கேமராவோடு லென்சையும் சேர்த்துக் கவிழ்த்து விடும். கவனம்!

* படமெடுக்கும் முன் லென்ஸ் கேப்_ஐ கழட்ட மறக்காதீர்கள்:). அதை பத்திரப் படுத்துவது அதை விட முக்கியம். சின்னதாக இருப்பதால் அங்கே இங்கே வைத்தால் கண்ணுக்குப் படாமல் போகும். சட்டைப் பையிலோ, கேமரா பையிலோ போட்டுக் கொள்வது பாதுகாப்பு.

"Passion is energy. Feel the power that comes from 
focusing on what excites you." - Oprah Winfrey
* முந்தைய செட்டிங்கில் இருக்கும் கேமராவை அப்போதைய தேவைக்கேற்ப மாற்ற மறக்காதீர்கள். ஓரிரு நிமிடங்கள் அவற்றைச் சரி பார்த்தபிறகு படமெடுக்க ஆரம்பித்தால் பிறகு கோணங்களில் கவனம் செலுத்த முடியும்.

* கேமரா ஸ்ட்ராப் கழுத்திலோ கையிலோ சரியாகப் பிடித்திருங்கள். நழுவி விழுந்த பிறகு வருந்திப் பயனில்லை.* சப்ஜெக்டிலிருந்து பாதுகாப்பான தொலைவிலிருந்து படம் எடுங்கள். பாதுகாப்பு உங்களுக்கும் வேண்டும். கேமராவுக்கும் வேண்டும்:).*எடுக்கும் படத்தை செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதற்காகப் பார்ப்பது சரி. மற்றபடி ஒவ்வொரு படமும் எப்படி வந்திருக்கிறது என அடிக்கடி பார்த்தபடி நிற்காதீர்கள்.  கவலைப் படாமல் தொடர்ந்து எடுங்கள். இல்லையெனில் அழகான காட்சிகள் பலவற்றைத் தவற விட நேரலாம்.


*ஒவ்வொரு ஷூட் முடிந்த பிறகும் படங்களை (laptop, external hard disk, net என) குறைந்தபட்சம் இரண்டு இடங்களிலாவதுசேமித்து வையுங்கள்.

* அடுத்த நீண்ட நேரத்துக்குப் படமெடுக்கப் போவதில்லை என்றால் கேமராவை ஸ்விட்ச்சை அணைத்திடுங்கள். பேட்டரி பவர் வீணாவது மட்டுமல்ல, கவனிக்காமல் பல நாட்களுக்கு விட்டுவிடும் பட்சத்தில் லீக் ஆகவும் வாய்ப்பிருக்கிறது.

* எத்தனை அபூர்வமான காட்சியானாலும் பரபரப்பாகப் படம் எடுக்காதீர்கள். அந்தப் படபடப்பே படங்களை அற்புதமாக வரவிடாமல் பாதித்திட வாய்ப்புள்ளது. எந்த சூழலானாலும் தெளிவாக, ரிலாக்ஸ்டாக படமெடுத்துதான் பாருங்களேன்:)!

PiT வாசகர்கள் அனைவருக்கும் PiT_ன் 
உலகப் புகைப்பட தின நல்வாழ்த்துகள்! 
HAPPY CLICKING FRIENDS! 
***
Tuesday, August 5, 2014

வணக்கம்.

இந்த மாசப் போட்டிக்குப் புதுசா என்ன தலைப்பைத் தரலாம்னு யோசிச்சப்போ பளிச்சுன்னு அதையே தலைப்பா கொடுத்திடலாம்னு தோணிடுச்சு. ஆமாங்க, “புதுசு”தான் தலைப்பே. Something new and fresh.

கீழே  மாதிரிக்காக சில படங்கள் தந்திருக்கோம். உங்க கற்பனையில் உங்க பார்வையில் புதுசு புதுசாக் கொண்டு வர்றதைப் பாக்கக் காத்திருக்கோம்.

ஐயப்பன் கிருஷ்ணன்
#
#
#
#

ராமலக்ஷ்மி
#
#
#
#
#

MQ நவ்ஃபல்

#

#


போன பதிவுல சொன்னது நினைவுல இருக்கும்தானே? படங்களை அனுப்பும்போது File name மட்டுமில்லாம மெயிலோட subject_லேயும் ஒங்க பேரு இருக்கிற மாதிரிப் பாத்துக்கோங்க. அப்பதான் படம் ஆல்பத்துல சேரும் போது கூடவே ஒங்க பேரும் தன்னப்போல அப்டேட் ஆகும்.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2014

போட்டி விதிமுறைகள் இங்கே.

-- 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff