வணக்கம் மக்கா இறுதிச்சுற்றில் வென்ற படங்களை பார்ப்பதற்க்கு முன் வெளியேறும் படங்களை பார்க்கலாம். ***
# அப்பு :
அருமையான காட்சிதான் தலைப்பிற்கு பொருத்தமாக இருந்தாலும் குழந்தையை தாங்கும் தாயின் கரத்தை வெட்டிவிட்டது ஒரு குறை.
# பிலால் :
படத்தில் வானம்,கடல்,சூர்யோதய காட்சிதான் பிரதானமாக அமைந்துள்ளது படத்தின் குறையாக ஆகிவிட்டது.
# தியாகராஜன் :
அபிநயத்தில் தாய்பாசத்தை வெளிப்படுத்தும் அருமையான காட்சி இங்கே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் குறையே "கிராப்" தான்.
சற்றே "டைட் கிராப்" செய்து காட்டியிருந்தால் அம்சமாக அமைந்து வெற்றிப்படமாக ஆகியிருக்கும் என்பது எனது கருத்து.
சற்றே "டைட் கிராப்" செய்து காட்டியிருந்தால் அம்சமாக அமைந்து வெற்றிப்படமாக ஆகியிருக்கும் என்பது எனது கருத்து.
# ஜெயராம் அழகுதுரை :
போட்டியின் தலைப்பிற்கு படம் பொருந்தினாலும் தாயும் சேய்களும் எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பதால் காட்சியின் ஆழம் சற்று குறைந்துவிட்டது.
# விக்னேஷ் :
படத்தில் தெரியும் மதில் சுவர் மற்றும் பின்புலம் படத்தில் அதிகம் ஆதிக்கம் செய்கிறது,சற்றே "கிராப்" செய்திருக்கலாம்.
# வின்சன்:
# பிரேம்நாத் :
அற்புதமான படம், ஆனால் படம் Tilt-Shift effect ல கொடுத்திருப்பதே படத்தின் குறையாகும்,குழந்தையின் ஒருகண் மட்டுமே போகஸில் இருக்கிறது,மேலும் பாசத்தை பொழியும் அன்னையை அவுட் ஆப் போகஸ்ல காட்டி அவரின் தலையையும் வெட்டி விட்டீர்களே....
எனவே மூன்றாம் இடத்தில் சஞ்சய் அவர்களின் படம்,படத்தில் சிலகுறைகள் புலப்பட்டாலும் காம்போசிஷன் படத்தை தாங்கி நிற்பதால் மூன்றாமிடத்தில்.
இரண்டாமிடம் பிடிப்பது சாந்தி மாரியப்பன் :
முதலிடம் பிடிப்பது ஆதவன் :
பிரேமில் சில குறைபாடுகள் இருந்தாலும், தாய்பாசத்தை தாங்கி நிற்கும் அற்புதமான காட்சியமைப்பால் முதலிடம் பிடிக்கிறது வாழ்த்துக்கள் ஆதவன்.
நன்றி மக்கா மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களுடன் இணைகிறேன்.
என்றும் அன்புடன்,