Tuesday, May 24, 2016

எல்லாருக்கும் வணக்கம்,

மார்ச் போட்டி அறிவிப்பு முடிவு தாமதமானதற்கு மன்னிக்கவும். ஆர்வத்துடன்பங்கேற்பவர்கள் குறைவானதால், நடத்தும் நாங்களும் சிலமாற்றங்கள்கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

மார்ச் போட்டி - குரூப்புல டூப்பு - முடிகள் இதோ :

சிறப்புக் கவனம் - முரளி தரன் 

அழகான படம். இன்னும் கொஞ்சம் துல்லியமா (ஷார்ப்) எடுத்திருந்தா சிறப்பா வந்திருக்கும்.




மூன்றாமிடம் - நவோதயா செந்தில் ஆனந்தம் 

அழகான வண்ணமயமான படம். அந்த ஆண் நடுவில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பா வந்திருக்கும்.

இரண்டாமிடம் - முனீஷ் குமார் 

உயிரோட்டமான கேண்டிட் படம். நம்மையறியாமல் நம் முகத்தில் ஒரு சிறிய புன்னகையை வரவைக்கும் படம். 



முதலிடம் - வில்லியம் ஜான்சன் 

ஆகா, அழகு! என்ன ஒரு அற்புதமான backlight!! அதை கிளாசிக் நிறம் அப்படியே கவர்ந்து விடுகிறது. 


போட்டியில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அடுத்த அறிவிப்புடன் விரைவில் சந்திக்கிறோம்.
***

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff