வணக்கம் நண்பர்களே..
முதல் மூன்று வெற்றியாளர்கள் யார் என்பதை பார்க்கும் முன் மற்ற படங்களின் விமர்சனங்களை பார்ப்போம்..
கீழே உள்ள படங்கள் தலைப்பிற்கு பொருத்தமாகவும்..அதே சமயம் படமும் நன்றாக இருக்கின்றது..
இருந்தாலும் , படத்தில் சிறப்பாக எதுவும் இல்லாமலும், எளிதாக எடுக்கப்பட்டது போல் இருப்பதாலும் இச்சுற்றில் இருந்து வெளியேறுகின்றது..
saravanan
ganesan
kavai prabu
senthil kumar
shravyan
tvn vijay prakash
uma sankar
venki raja
viswanath
james
அதே சமயம் ,கீழே உள்ள
balaji baskaran மற்றும்
siva pri ஆகியோர் படங்கள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் தலைப்பிற்கு மிகச்சரியான பொருத்தமாக இல்லை.. எனவே இப்படங்கள் இந்த சுற்றிலிருந்து வெளியேறுகின்றது..
balaji baskaran
siva pri
அடுத்தது
durai அவர்களின் படம் silhouette ஆக பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. ஆனால் தலைப்பிற்கு மிக சரியாக அமையவில்லை..கொஞ்சம் crop செய்திருக்கலாம்..
snapper அவர்களின்
காலி பாட்டிலின் படம், sunstar உடன் மிக நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.. மணலும் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.. இடது ஓரம் கொஞ்சம் இடம் விட்டு படம் எடுத்திருக்கலாம்..படத்தில் பெரிதாக குறைகள் இல்லை. இருந்தாலும் மற்ற படங்கள் தலைப்பிற்கு சற்று சிறப்புடன் இருப்பதால் இச்சுற்றில் வெளியேறுகின்றது..
jagadeesh அவர்களின்
சிறுவர்கள் இல்லாத வெற்று விளையாட்டு திடல் தலைப்பிற்கு மிகவும் நன்றாக உள்ளது.. நல்ல angle லில் படமாக்கபட்டுள்ளது.. இருப்பினும் படம் சற்று தெளிவாக இல்லை.. மற்ற objects கொஞ்சம் distract செய்கின்றது.. இதனால் இச்சுற்றில் வெளியேறுகின்றது..
aaryan அவர்களின் படம்
பார்ப்பதற்கு பளிச்சென்று எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பத படத்திற்கு அழகு.. நீல வானமும் அழகு.. ஆனால் சற்று over satruration ஆக இருப்பதால் அதுவே இப்படத்திற்கு சிறு செயற்கை தன்மையை தருகின்றது..அதே சமயம் இன்னும் கொஞ்சம் அந்த மரத்தை சேர்த்து எடுத்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகின்றது..
aravind
தலைப்பிற்கு மிக நல்ல பொருத்தம்.. ரொம்ப தூரம் காலியான ரோடு.. ஒரு பக்கம் புல்வெளி , மறுபக்கம் காய்ந்த பகுதி.. வானம் எல்லாம் அழகு.. ஆனால் படத்தில் ரோடு பகுதியை இன்னும் சேர்த்து எடுத்து,மேலே வானத்தை குறைத்து எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. அல்லது இந்த மாதிரி crop செய்திருந்தால்,
composition இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும்..
rohini அவர்களின் படம் தலைப்பிற்கு மிக பொருத்தம்.. இடமும் மிக அழகு.. பார்த்தவுடன் அந்த பெஞ்சில் போய் உட்காரவேண்டும் போல் உள்ளது..
ஆனால் over saturation , ஓரத்தில் vignette effect , நட்ட நடுவில் சப்ஜெக்ட்... போன்றவை இப்படத்திற்கு குறைகள்..
tamil vasagan
அவர்களின் படமும் தலைப்பிற்கு மிக பொருத்தம்.. பக்தர்கள் யாரும் இல்லாத கோவில்,அந்த தூண்கள் எல்லாம் படத்திற்கு அழகு சேர்கின்றது.. ஆனால் இன்னும் கொஞ்சம் தெளிவாக எடுத்திருக்கலாம், அதே சமயம் கொஞ்சம் லைட் வெளிச்சம் அதிகமாக தெரிவது சற்று உறுத்துகின்றது..
kumaraguru அவர்களின் வெற்று திண்ணை வீடு படம் மிகவும் அருமை.. படத்தில் கலரும் நன்றாக இருக்கின்றது.. ஆனால் வீடு பாதியாக compose செய்து இருப்பது சிறு குறை..
இறுதி சுற்றாக மூன்றாம் இடத்தை பிடிப்பதற்கு இரண்டு படங்கள்.. ஒன்று
muthukumaran ன் அதிகாலை , மற்றொன்று
rajkumar ன் அந்திமாலை யில் எடுக்கப்பட்ட படங்கள்..
இவ்விரண்டில் rajkumar ன் படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் மரம் மிக அழகு.. அதே சமயம் twilight நேரத்தில் இப்படம் அருமை..
rajkumar
muthukumaran
muthukumaran படத்தில்,அருமையான கிராமத்து வீட்டின் முன் வெற்று ஊஞ்சல், அதுவும் காலை வேலையில் நெல்லங்காட்டை(paddy fields) பார்த்துகொண்டே அமைக்கப்பட்டுள்ளது மிகவும் அருமை..
இவ்விரண்டு படங்களில் ,
rajkumar படம் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் தலைப்பிற்கு தேவையான வெற்று இருக்கைகள் தான் முதன்மையாக இருந்திருக்க வேண்டும்.. அதே சமயம் மரம் நடுவில் இருப்பது சற்று உறுத்தல்.. இருந்தாலும் படம் மிக அருமை..
முத்து குமரன் அவர்களின் படம் சற்று சாதாரணமான எடுக்கப்பட்டு இருந்தாலும் படத்தை பார்க்கும் போதே இந்த ஊஞ்சல் வெற்றாக இருக்கவே கூடாது என்று தோன்றுகின்றது இப்படத்திற்கான வெற்றியே..
எனவே,
மூன்றாம் இடம் பிடிப்பது muthukumaran ....
அடுத்தது முதலிடத்திற்கு போட்டி போடுவது
அமைதிச்சாரல் மற்றும்
senthil kumar படங்கள்
இவற்றில்
அமைதிச்சாரல் அவர்களின் படத்தில் இருக்கும் வெற்று ஊஞ்சல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.. distraction இல்லாத background இப்படத்திற்கு பலம்.. ஊஞ்சலும் சற்று வித்தியாசமாக இருப்பதும் நன்று..ஆனால் சற்று over exposure ஆக சப்ஜெக்ட் இருப்பது சிறு குறை..அதே சமயம் இன்னும் கொஞ்சம் இடம் விட்டு composition செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகின்றது..
எனவே,
இரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்...
senthil kumar அவர்களின் படமும் தலைப்பிற்கு பொருத்தம்.. காய்ந்த
புல்வெளி ,மேல் ஏறும் ரோடு எல்லாம் படத்திற்கு அழகு..பார்த்தவுடனேயே ஏதாவது
வண்டியை எடுத்துக்கொண்டு அந்த மேட்டில் வண்டி ஓட்ட வேண்டும் போல்
தூண்டுகின்றது..ஆனால் வலது ஓரத்தில் தெரியும் வீடு(பொம்மை போல் உள்ளது)
பாதியாக க்ராப் செய்திருப்பது படத்திற்கு சிறு குறையே..
இருந்தாலும் அழகான கலர்ஸ், வித்தியாசமான இடம்,தலைப்பிற்கு பொருத்தமான சப்ஜெக்ட் தெளிவாக இருப்பது போன்ற சிறப்புகள் இருப்பதால்,
முதலிடம் பிடிப்பது senthil kumar....
வாழ்த்துக்கள் செந்தில் குமார்..
மேலும் முதல் மூன்று இடம் பிடித்த நண்பர்களுக்கும்.. இதில் கலந்து கொண்ட அனைவரும் PIT ன் வாழ்த்துக்கள்..
விரைவில் அடுத்த மாத போட்டிக்கான தலைப்புடன் உங்களை சந்திக்கின்றோம்..
நன்றி
கருவாயன்..