Tuesday, October 29, 2013


அன்பு நண்பர்களே,

`நிகழ்வுகள்` போட்டிக்கு  படங்கள் குறைவாக வந்திருந்ததால் , ஒரு சுற்றை குறைத்து,நேரடியாகவே முடிவுகளை அறிவிக்க வேண்டியதாகிவிட்டது..


வந்திருந்த படங்களில் கடைசி சுற்றுக்கு தகுதி பெற்ற படங்களில், மூன்றாம் இடத்திற்கு VINOD மற்றும் SUNDARARAJAN இருவரின் படங்களில்,

sundararajan





vinod


 vinod படத்தில்  processing சற்று அதிகமாக இருந்தாலும் பார்பதற்கு எதுவும் உறுத்த வில்லை..

அதே சமயம் sundararajan அவர்களின் படத்தில் மணமக்களின் விரல் மற்றும் உடை காம்பினேசன் மிகவும் அருமை.. background ல் தெரியும் கை சற்று உறுத்துகின்றது..

எனவே, மூன்றாம் இடம் பிடிப்பது

vinod




அடுத்தது, முதலிடத்திற்கு போட்டியிடுவது varun மற்றும் guna amuthan 


guna amuthan




varun


இருவரின் படங்களிலும் emotion, expressions நன்றாக படம் பிடிக்கப்பட்டுள்ளதால் இறுதி சுற்றிற்கு முன்னேறியது.. இவற்றில் varun படத்தில் மணமக்களிடம் உறவினர்கள் மகிழ்ச்சியாக உரையாடுவது அருமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது..composition ம் நன்று..

guna amuthan படத்திலும் அதே மாதிரி தான் , அழகான expression.. கீழே கையை கொஞ்சம் கட் செய்யாமல் இருந்திருக்கலாம்.. background சற்றே உறுத்தினாலும் அதிலும் ஒரு expression இருக்கிறதால் பெரிதாக தொந்தரவு செய்யவில்லை..

இவ்விரண்டு படங்களிலும் guna amuthan அவர்களின் படத்தில் expressions நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றது..

எனவே,



இரண்டாமிடம் பிடிப்பது,


Varun





முதலிடம் பிடிப்பது ,


GUNA AMUTHAN




வாழ்த்துக்கள் GUNA AMUTHAN..

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்..

அடுத்த மாத போட்டிக்கான தலைப்புடன் தங்களை மீண்டும் சந்திக்கின்றோம்..

நன்றி
கருவாயன்..








Thursday, October 17, 2013

பொதுவாக கணினியில் சேமித்துவைத்துள்ள படங்களை Thumbnail View பார்க்க உதவும் மென்பொருள்களை  image viewerகள் என்று அழைக்கப்படுகிறது. என்னதான் நாம் பயன்படுத்தும் விண்டோஸ்/லினக்ஸ் பதிப்புகளே இந்த சேவையை வழங்கினாலும்(Windows File explorer/Linux file Explorer) அனைத்துவகையான பார்மேட்டுகளையும் இந்த விண்டோஸ்/ லினக்ஸ் File explorer கள் ஆதரிப்பதுகிடையாது.சான்றாக RAW,PSD பார்மேட்டுகள்.


RAW பார்மேட்டுகளில் படம்பிடிப்பவர்கள் கட்டாயம் ஏதாவது ImageEditorஐ தங்கள் கணினியில்  நிறுவியிருக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அந்த வகையில் கூகுள் வழங்கிடும் பிக்காஸா என்ற இலவச மென்பொருள் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது.அடுத்ததாக புகைப்படக்கலைஞர்கள் பலராலும் பரிந்துரை செய்யப்படும் ஒரு மென்பொருள் Irfanview ஆகும்.இது இலவச பதிப்பாகவும் மற்றும் விலைகொடுத்து வாங்கும் பதிப்பாகவும் கிடைக்கிறது. Irfanview இலவசபதிப்பில் சில நல்லவிஷயங்கள் இருந்தாலும் புதியதாக சந்தைக்கு வரும் புதிய மாடல்cameraகள் தயாரிக்கும் RAW கோப்புகளை ஆதரிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்இவ்வாறு இருக்கையில் தன்னுடைய எளிமையான User Interface மற்றும் RAW கோப்புகளை வேகமாகக் கையாள்வது போன்றவற்றில் Faststone Image Viewer என்ற இந்த இலவச மென்பொருள் மற்ற Image Viewer_ களைக்காட்டிலும் சற்று மேலோங்கி நிற்கிறது (எங்களுடைய பார்வையில்).

பொதுவாகவே PITல் பதியப்படும் கட்டுரைகள் பலவும் அனுபவப்பூர்வமான விஷயங்களை உள்ளடக்கி தான் தயாரிக்கப்படுகிறது.அவ்வாறாக சமீபத்தில் நான் இந்தியா சென்றிருந்த போது « பாண்டிச்சேரி புகைப்படக்கலைஞர்கள் குழுமத்தை »  சேர்ந்த சில உறுப்பினர்கள் தாங்கள் புதியதாக வாங்கிய
 Canon 6D மற்றும் Nikon D5200 போன்ற கேமராக்களில் உருவாக்கப்படும் RAW கோப்புகளை அவர்கள் பயன்படுத்தும் Image Viewer மற்றும் Photoshop CS5, Photoshop CS6  மென்பொருளானது கையாள மறுப்பதாகவும்,என்னிடம் கூறி இதற்கு மாற்றுவழி இருந்தால் கூறுங்களேன் என கேட்டிருந்தார்கள்.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் போட்டோஷாப்  போன்ற மென்பொருட்களும் ஏன் RAW கோப்புகளை திறக்க மறுக்கிறது ? இதற்கு விளக்கம் கூறுங்களேன் எனவும் என்னிடம் நண்பர்கள் கேட்டிருந்தார்கள். அதாவது உங்களது கேமராவானது சந்தைக்கு விற்பனைக்கு வரும்முன்னர் வெளிவந்த போட்டோஷாப் பதிப்பை நீங்கள் பயன்படுத்துவீர்களேயானால் உங்களது Camera Profile லானது போட்டோஷாப்பில் இருக்காது ஆகவே உங்களது RAW கோப்பை Photoshop Camera RAW வால் புரிந்துகொள்ள தெரியாமல் திறக்கமறுக்கிறது. ஆக புதியதாக சந்தைக்கு வந்த கேமராக்களின் RAW கோப்புகளை போட்டோஷாப்பில் திறக்கவேண்டுமெனில் நீங்கள் உங்களது போட்டோஷாப்பையும்,போட்டோஷப்பிலிருக்கும் Camera RAW வையும் தற்பொழுதைய பதிப்பிற்கு உபரியாக பணம் செலுத்தி  மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆனால் இது அனைவருக்கும் சாத்தியப்படுமா?
விலைசெலுத்தி வாங்கப்படும் மென்பொருட்களிலேயே இவ்வளவு குறைகள் இருக்கும் போது இலவச மென்பொருளாக கிடைக்கும் Faststone Image Viewer இல் சந்தையில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேமராக்கள் தயாரிக்கும் RAW  கோப்புகளை எடிட் செய்வதில் ஆரம்பித்து ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த Fastsone  Image Viewer ஐ ஏன் பிட் வாசகர்கள் பயன்படுத்திப்பார்க்ககூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

Faststone ஒருமுறை இயக்கியவுடன் இடதுபுறம் File Explorer ரும் வலதுபுறம் நீங்கள் தேர்வுசெய்த போல்டரில் இருக்கும் படங்களும் தெரியும்.


இப்போது எந்த படத்தினை நீங்கள் திறக்க இருக்கிறீர்களோ அந்த படத்தின் மீது இருமுறை மவுஸால் கிளிக் செய்தாலே போதும். Fullscreen வியூவில் தெரியும். அதன்பிறகு உங்களுடைய மவுஸை நான்கு மூலைக்கு நகர்த்தி எந்த ஆப்ஷன் தேவையோ அந்த ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளவேண்டியது தான்.

இக்கட்டுரைக்காக நான் எடுத்துக்கொண்ட படங்களை பாருங்கள்.கீழேயுள்ள படமானது என்னுடைய நண்பர் கேமராவில்(Canon 6D) RAW வில் நான் candid ஆக கிளிக் செய்தது.


இந்த RAW கோப்பை 100 சதவீதம் Faststoneல் கருப்பு வெள்ளையாக எடிட் செய்து காட்டியிருக்கிறேன்.இப்படம் என்னுடைய வீட்டில் மிகவும் low lighting இல் எடுக்கப்பட்டது. என்னதான் Canon 6D full frameல் எடுத்திருந்தாலும் ISO3200க்கு படத்தை பெரிது படுத்திப்பார்க்கையில் லேசான‌ Noise தென்பட்டது.Faststoneல் noiseசரிசெய்யப்பட்டு இருப்பதை காணலாம்.

இதேபோல கீழேயுள்ள படமானது Nikon D5200 இல் எடுக்கப்பட்டRAW கோப்பு,இதனை பிற டூல்களின் உதவியின்றி Faststone கொண்டு process செய்யப்பட்டுள்ளது.

Photo credit: Lakhsmi.

கீழேயிருக்கும் படமானது எனது லண்டன் நகர பயணதின்போது Panasonic FZ 38 இல் RAW பார்மேட்டாக எடுத்தது.இப்படத்தினை details சற்றுகூட்டவேண்டும் என நினைத்திருந்தேன்.அவ்வாறாக Faststone ல் sharpen செய்யப்பட்ட படத்தினை காணலாம்.
இதுபோன்று விலைகொடுத்து வாங்கும் எடிட்டிங் மென்பொருட்களில் இருக்கும் பல அம்சங்களும் இந்த இலவச மென்பொருளில் இருக்கின்றது என்பது இதன் சிறப்பு.
  • Image browser and viewer with a familiar Windows Explorer-like user interface
  • Support of many popular image formats
  • Crystal-clear and customizable one-click image magnifier
  • Powerful image editing tools: Resize/resample, rotate/flip, crop, sharpen/blur, adjust lighting/colors/curves/levels etc.
  • Eleven re-sampling algorithms to choose from when resizing images
  • Image color effects: gray scale, sepia, negative, Red/Green/Blue adjustment
  • Image special effects: annotation, drop shadow, framing, bump map, sketch, oil painting, lens
  • Draw texts, lines, highlights, rectangles, ovals and callout objects on images
  • Clone Stamp and Healing Brush
  • Superior Red-Eye effect removal/reduction with completely natural looking end result
  • Multi-level Undo/Redo capability
  • One-touch best fit/actual size image display support
  • Image management, including tagging capability, with drag-and-drop and Copy To/Move To Folder support
  • Histogram display with color counter feature
  • Compare images side-by-side (up to 4 at a time) to easily cull those forgettable shots
  • Image EXIF metadata support (plus comment editing for JPEGs)
  • Configurable batch processing to convert/rename large or small collections of images
  • Slideshow creation with 150+ transition effects and music support (MP3, WMA, WAV...)
  • Create efficient image attachment(s) for emailing to family and friends
  • Print images with full page-layout control
  • Create fully configurable Contact Sheets
  • Create memorable artistic image montages from your family photos for personalized desktop wallpapers (Wallpaper Anywhere)
  • Acquire images from scanner. Support batch scanning to PDF, TIFF, JPEG and PNG
  • Versatile screen capture capability
  • Powerful Save As interface to compare image quality and control generated file size
  • Run favorite programs with one keystroke from within Image Viewer
  • Offer portable version of the program which can be run from a removable storage device
  • Configurable mouse wheel support
  • Support multiple program skins
  • Support dual-monitor configurations
  • Support touch interface (tap, swipe, pinch)
  • And much more... 

    நான்
    இந்த மென்பொருளுக்கான பாடங்களை தொடர்பதிவாக போடலாம் என எண்ணியிருந்தேன் ஆனால் அதற்கவசியமில்லாமல் Faststone 
    இணையதளத்திலேயே PDF tutorial லாக தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Faststone Image Viewerஐ பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை அழுத்தவும்.

    Tutorial பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை அழுத்தவும்.


-நித்தி ஆனந்த்

Monday, October 7, 2013

PIT வாசகர்களுக்கு வணக்கம், இன்றைய கட்டுரையில் நாம் 32 bit புகைப்பட எடிட்டிங்கை பற்றி பார்க்க இருக்கிறோம். பொதுவாக Auto Bracketing முறையில் எடுக்கப்படும் படங்களை போட்டோஷாப்பிலோ அல்லது பிற டூல்களிலோ HDR ஆக மட்டுமே தான் எடிட் செய்ய இயலும் நிலை இருந்தது,இருப்பினும் அனைவரும் இந்த HDR படங்களை விரும்புவார்களா கேள்விக்குறியே?

ஒருசிலர் HDR படங்களை மிகவும் ரசிப்பவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசிலர் HDR படங்கள் என்றாலே "Over process" என குறைகூறுபவர்களும் இருப்பார்கள், இதற்கு காரணம் HDR டூல்கள் உருவாக்கிக்கொடுக்கும் "Harsh Details" மற்றும் "Halos" ஆகும். எனவே HDR படங்களை  விரும்புதல் என்பது அவரவரது தனிப்பட்ட ரசனையை பொறுத்தது. எனினும் இப்போதுள்ள தொழில்நுட்பத்தில்"Auto Bracketing" முறையில் எடுக்கப்படும் படங்களை நம் விருப்பத்திற்கேற்றவாறு HDR அல்லாது சாதாரண முறையிலும் process செய்ய இயலும் என்பதனை PIT வாசகர்களுக்கு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சரி கட்டுரைக்கு செல்லும்முன்னர் "Auto Bracketing" எதற்காக என்பதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். உதாரணமாக ஒரு மலைப்பகுதியை Landscape படமெடுக்கபோகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதில் இருக்கும் பச்சைபசேலென மரங்களும்,மஞ்சள் நிற பாறைகளும் மற்றும் நீல நிற வானம் ஆக இந்த மூன்று அம்சங்களுக்கும் வெகுசிறப்பாக நீங்கள் எடுக்கும் படத்தில் அமையவேண்டுமென்றால் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒவ்வொரு எக்ஸ்போசர் தேவை, எனவே கேமராவில் என்ன தான் Evaluate மீட்டரிங் செட் செய்து இருந்தாலும் பிரேமிற்குள் இருக்கும் இத்தனை அம்சங்களையும் மிக துல்லியமாக எக்ஸ்போஸ் செய்து ஒரே ஷாட்டில் எடுப்பது கடினம், இதுபோன்ற தருணங்களில் நமக்கு இந்த"Auto Bracketing"முறை உதவுகிறது.
அதாவது நீங்கள் எடுக்கும் படமானது, மொத்தம் 3 படமாக ஒன்று 0 Exposure ரிலும் மற்றவை Over மற்றும் Under exposure ரிலும் கேமராவில் பதிவாகிறது. (நீங்கள் கேமராவில் தேர்வு செய்ததிருந்தexposureமதிப்புகளில் ex :+1-1,+2-2,+3-3 etc....).

சரி இப்போது எடுக்கப்பட்ட "Auto Bracketing" படங்களை 32 bit எடிட்டிங் செய்யும் முறை பற்றி பார்க்கலாம். இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியிருப்பது Lightroom 5.2 மற்றும் Photoshop CS6 ஆகும்.

குறிப்பு : 32 bit எடிட்டிங் செய்ய போடோஷாப் CS6 மற்றும் அதற்கு பின் வந்த பதிப்புகளும் Lightroom 4.2 மற்றும் அதற்கு மேல் வந்த பதிப்புகள் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.

முதலில் Lightroom ஐ இயக்கவும், அதில் Edit>Preference செல்லவும் பின்னர் Externel Editing டேபை தேர்வு செய்து பின் File Format என்பதை tiff பார்மேட்டாக மாற்றி ஓகே செய்யவும்.



இனி File>Import Photos and Videos என்பதனை தேர்வு செய்து உங்களது Auto Bracketingசெய்த படங்களை திறக்கவும்.



 இப்போது ஒரு படத்தை தேர்வுசெய்து விசைபலகையில் Ctrl+A வை  (Select All)அழுத்தவும், இப்போது உங்களின் Auto Bracketing படங்கள் அனைத்தும் Select செய்யப்பட்டிருக்கும்.

இனி மவுஸில் வலது கிளிக் செய்யவும்.ஒரு மெனு தோன்றும் அதில் Edit in>Merge to HDR Pro in Photoshop என்பதை தேர்வுசெய்யவும்.



இப்போது உங்களது போட்டோஷாப் திறந்து அதில் "Merge to HDR Pro" கமாண்ட் திறக்கும் பின்னர் உங்களது "Auto Bracketing" படங்களை merge செய்த பின்னர் தோன்றும் விண்டோவில் "Remove Ghost" என்பதை தேர்வு செய்து பின்னர் 32 bit என்பதனை தேர்வு செய்யவும் கடைசியாக "Complete toning in Adobe Camera Raw" என்பதனை டிக் அடையாளத்தை நீக்கி ஓகே செய்யவும்.
குறிப்பு: நீங்கள் tripod பயன்படுத்தி "Auto Bracketing"படங்கள் எடுத்திருந்தால் இந்த "Remove Ghost"ஆப்ஷனின் tick மார்க்கை நீக்கிவிடலாம்,மாறாக "handheld" எனின் "Remove Ghost" என்பதனை tick செய்யவும்.



இப்போது உங்களது "Auto Bracketing" செய்யப்பட படம் ஒரே படமாக திறக்கப்பட்டிருக்கும். திறந்திருக்கும் இந்த படத்தை மூடவும்,இப்போது உங்களது படத்தினை சேமிக்க போகிறீர்களா என போட்டோஷாப் கேட்கும் Yes என்பதனை கிளிக் செய்யவும்.


இப்போது Lightroom க்கு செல்லவும் கடைசியாக சேமித்த tiff பைல் அங்கு இருப்பதை பார்க்கலாம். இந்த tiff பைலை இரண்டு முறை கிளிக் செய்து Lightroomமில் "Develop" க்கு கொண்டு வரவும்.




அவ்வளவுதான் இனி உங்கள் படத்தை நீங்கள் விரும்பும் வகையில் HDR அல்லாது process செய்து கொள்ளலாம்.

கீழேயுள்ள‌ படம் "Auto Bracketing" இல் -1,0,+1 இல் எடுக்கப்பட்ட படம் சாதாரண படமாக   கருப்பு வெள்ளையாக‌ எடிட் செய்யப்பட்டுள்ளது.



குறிப்பு: Lightroom இல்லாதவர்கள் போட்டோஷாப்பிலேயே "Merge to HDR Pro" கமாண்டை பயன்படுத்தி merge செய்து பின்னர் "Camera Raw" வில் எடிட் செய்துகொள்ளலாம். பொதுவாக tiff பைல் அதிக இடம் பிடிக்கும் எனவே உங்களது படம் process முடித்தவுடன் tiff பைலை டெலிட் செய்து விடவும்.

-நித்தி ஆனந்த்

Sunday, October 6, 2013

வணக்கம் நண்பர்களே,

இந்த மாதப் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு : நிகழ்ச்சிகள் 

இது திருமணம், பிறந்த நாள், கிரஹ பிரவேஷம் போன்ற விழா நிகழ்ச்சிகள்  எது வேண்டுமானாலும் இருக்கலாம்..

போட்டிக்கான படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 20 - 10 - 2013
  
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

மாதிரி படங்கள்..

# கருவாயன்








# ராமலக்ஷ்மி


நன்றி
கருவாயன் 

Friday, October 4, 2013

வணக்கம் நண்பர்களே. முன்னேறிய பத்தில் வெற்றி பெறும் படங்களைப் பார்ப்போம்.

சிறப்புக் கவனம்:
# சந்தியா

# சரவணன்


வெளியேறும் பிற படங்களில் பெரிய குறையேதுமில்லை வென்ற படங்கள் அவற்றைவிடச் சிறப்பாக இருப்பதானால் என்றாலும் கீழ்வரும் படம் சிறப்புக்கவனம் பெற்றிருக்கும்  கத்திரிப்பில் கவனம் செலுத்தியிருந்தால்.. 

# துளசி கோபால்
  
படத்தின் சப்ஜெக்ட் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அல்லது படத்திலிருப்பவர் பார்வை எங்கு செல்கிறதோ அந்த இடத்தில் அதிக இடம் விட்டு பின்பக்கமிருக்கும் வெற்றிடத்தை நீக்கி விடுவது அவசியம். இது போன்ற வெற்றிடங்கள் அருமையான சப்ஜெக்டில் முழுமையாகப் பார்வையைச் செலுத்த விடாமல் கவனச் சிதறலுக்கு வழி வகுத்திடும். 
 #
நல்ல லைட்டிங், சரியான சமயத்தில் பாவனையைச் சிறைப்பிடித்த விதம் எனப் பாராட்டுகளைப் பெறும் படம் இப்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்புதானே?

மூன்றாம் இடம்:
# பூபதி

இசையின்றி நாட்டியமா? இசையையும் அதில் மெய்மறந்த நங்கையையும் செலக்டிவ் கலரிங் மூலமாக பிரித்தும் இணைத்தும் காட்டியிருக்கும் விதம் அற்புதம்.

இரண்டாம் இடம்: 
# ஆயில்யன்

அபிநயம், துல்லியம், ஒளி அமைப்பு, DOF எல்லாம்.. எல்லாமே.. அருமை.

முதலிடம்:
# குணா அமுதன்

ஆடும் நங்கையரை அழகான கோணத்தில், இரவில், ஒளி வெள்ளத்தில் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார். மேடை ஓரத்தில் அரை வெளிச்சத்தில் தெரிகிற.. குறு குறுவென்று எட்டிப் பார்க்கிற.. இரண்டு பெண்கள் படத்தின் மீதான நம் ஆர்வத்தை அதிகரிக்கிறார்கள். நாட்டியத் தாரகையரின் கைகளாலும் கால்களாலும் அமைந்த Leading line மிகச் சரியாக அந்த இரண்டு பெண்களை நோக்கி நம்மை அழைத்துச் சென்று (அவர்கள் மேடையை நோக்கி நிற்பதால்) அதே வேகத்தில் மீண்டும் ஒரிஜனல் சப்ஜெக்டான, முன்னால் ஆடும் பெண் மேல் கொண்டு வந்து நம் பார்வையை நிறுத்தும் மேஜிக் சூப்பர். பாராட்டுகள் குணா அமுதன்!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

இம்மாதப் போட்டி அறிவிப்பு விரைவில்..
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff