PIT
வாசகர்களுக்கு வணக்கம், இன்றைய கட்டுரையில் நாம் 32 bit புகைப்பட
எடிட்டிங்கை பற்றி பார்க்க இருக்கிறோம். பொதுவாக Auto Bracketing முறையில்
எடுக்கப்படும் படங்களை போட்டோஷாப்பிலோ அல்லது பிற டூல்களிலோ HDR ஆக மட்டுமே
தான் எடிட் செய்ய இயலும் நிலை இருந்தது,இருப்பினும் அனைவரும் இந்த HDR
படங்களை விரும்புவார்களா கேள்விக்குறியே?
ஒருசிலர் HDR படங்களை மிகவும் ரசிப்பவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசிலர் HDR படங்கள் என்றாலே "Over process" என குறைகூறுபவர்களும் இருப்பார்கள், இதற்கு காரணம் HDR டூல்கள் உருவாக்கிக்கொடுக்கும் "Harsh Details" மற்றும் "Halos" ஆகும். எனவே HDR படங்களை விரும்புதல் என்பது அவரவரது தனிப்பட்ட ரசனையை பொறுத்தது. எனினும் இப்போதுள்ள தொழில்நுட்பத்தில்"Auto Bracketing" முறையில் எடுக்கப்படும் படங்களை நம் விருப்பத்திற்கேற்றவாறு HDR அல்லாது சாதாரண முறையிலும் process செய்ய இயலும் என்பதனை PIT வாசகர்களுக்கு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சரி கட்டுரைக்கு செல்லும்முன்னர் "Auto Bracketing" எதற்காக என்பதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். உதாரணமாக ஒரு மலைப்பகுதியை Landscape படமெடுக்கபோகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதில் இருக்கும் பச்சைபசேலென மரங்களும்,மஞ்சள் நிற பாறைகளும் மற்றும் நீல நிற வானம் ஆக இந்த மூன்று அம்சங்களுக்கும் வெகுசிறப்பாக நீங்கள் எடுக்கும் படத்தில் அமையவேண்டுமென்றால் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒவ்வொரு எக்ஸ்போசர் தேவை, எனவே கேமராவில் என்ன தான் Evaluate மீட்டரிங் செட் செய்து இருந்தாலும் பிரேமிற்குள் இருக்கும் இத்தனை அம்சங்களையும் மிக துல்லியமாக எக்ஸ்போஸ் செய்து ஒரே ஷாட்டில் எடுப்பது கடினம், இதுபோன்ற தருணங்களில் நமக்கு இந்த"Auto Bracketing"முறை உதவுகிறது.
அதாவது நீங்கள் எடுக்கும் படமானது, மொத்தம் 3 படமாக ஒன்று 0 Exposure ரிலும் மற்றவை Over மற்றும் Under exposure ரிலும் கேமராவில் பதிவாகிறது. (நீங்கள் கேமராவில் தேர்வு செய்ததிருந்தexposureமதிப்புகளில் ex :+1-1,+2-2,+3-3 etc....).
சரி இப்போது எடுக்கப்பட்ட "Auto Bracketing" படங்களை 32 bit எடிட்டிங் செய்யும் முறை பற்றி பார்க்கலாம். இக்கட்டுரையில் நான் பயன்படுத்தியிருப்பது Lightroom 5.2 மற்றும் Photoshop CS6 ஆகும்.
குறிப்பு : 32 bit எடிட்டிங் செய்ய போடோஷாப் CS6 மற்றும் அதற்கு பின் வந்த பதிப்புகளும் Lightroom 4.2 மற்றும் அதற்கு மேல் வந்த பதிப்புகள் தேவை என்பதை நினைவில் கொள்ளவும்.
முதலில் Lightroom ஐ இயக்கவும், அதில் Edit>Preference செல்லவும் பின்னர் Externel Editing டேபை தேர்வு செய்து பின் File Format என்பதை tiff பார்மேட்டாக மாற்றி ஓகே செய்யவும்.
இனி File>Import Photos and Videos என்பதனை தேர்வு செய்து உங்களது Auto Bracketingசெய்த படங்களை திறக்கவும்.
இப்போது ஒரு படத்தை தேர்வுசெய்து விசைபலகையில் Ctrl+A வை (Select All)அழுத்தவும், இப்போது உங்களின் Auto Bracketing படங்கள் அனைத்தும் Select செய்யப்பட்டிருக்கும்.
இனி மவுஸில் வலது கிளிக் செய்யவும்.ஒரு மெனு தோன்றும் அதில் Edit in>Merge to HDR Pro in Photoshop என்பதை தேர்வுசெய்யவும்.
இப்போது உங்களது போட்டோஷாப் திறந்து அதில் "Merge to HDR Pro" கமாண்ட் திறக்கும் பின்னர் உங்களது "Auto Bracketing" படங்களை merge செய்த பின்னர் தோன்றும் விண்டோவில் "Remove Ghost" என்பதை தேர்வு செய்து பின்னர் 32 bit என்பதனை தேர்வு செய்யவும் கடைசியாக "Complete toning in Adobe Camera Raw" என்பதனை டிக் அடையாளத்தை நீக்கி ஓகே செய்யவும்.
குறிப்பு: நீங்கள் tripod பயன்படுத்தி "Auto Bracketing"படங்கள் எடுத்திருந்தால் இந்த "Remove Ghost"ஆப்ஷனின் tick மார்க்கை நீக்கிவிடலாம்,மாறாக "handheld" எனின் "Remove Ghost" என்பதனை tick செய்யவும்.
இப்போது உங்களது "Auto Bracketing" செய்யப்பட படம் ஒரே படமாக திறக்கப்பட்டிருக்கும். திறந்திருக்கும் இந்த படத்தை மூடவும்,இப்போது உங்களது படத்தினை சேமிக்க போகிறீர்களா என போட்டோஷாப் கேட்கும் Yes என்பதனை கிளிக் செய்யவும்.
இப்போது Lightroom க்கு செல்லவும் கடைசியாக சேமித்த tiff பைல் அங்கு இருப்பதை பார்க்கலாம். இந்த tiff பைலை இரண்டு முறை கிளிக் செய்து Lightroomமில் "Develop" க்கு கொண்டு வரவும்.
அவ்வளவுதான் இனி உங்கள் படத்தை நீங்கள் விரும்பும் வகையில் HDR அல்லாது process செய்து கொள்ளலாம்.
கீழேயுள்ள படம் "Auto Bracketing" இல் -1,0,+1 இல் எடுக்கப்பட்ட படம் சாதாரண படமாக கருப்பு வெள்ளையாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: Lightroom இல்லாதவர்கள் போட்டோஷாப்பிலேயே "Merge to HDR Pro" கமாண்டை பயன்படுத்தி merge செய்து பின்னர் "Camera Raw" வில் எடிட் செய்துகொள்ளலாம். பொதுவாக tiff பைல் அதிக இடம் பிடிக்கும் எனவே உங்களது படம் process முடித்தவுடன் tiff பைலை டெலிட் செய்து விடவும்.
-நித்தி ஆனந்த்

super article
ReplyDeleteநல்ல பதிவு. பொதுவாக ஹெச்டிஆர் ரொம்பவே செயற்கையா இருக்கிறதா தோணும்.முயற்சி செய்து பார்க்கணும். ம்ம்ம் எங்கே நேரம்? :-(
ReplyDeleteArumaiyana pagirvu mikka nandri :)
ReplyDeleteமிகவும் அருமையான தொகுப்பு....
ReplyDeleteமிக்க நன்றி.
ReplyDeleteமிக விபரமாக உள்ள பதிவு.பயனுள்ளதும் கூட
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Nice Article & Thank you Nithi Sir ! - Senthilkumar
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Hi! Very good tips. I tranlated it to english.
ReplyDeleteMaybe next article in english?