Monday, June 30, 2014

வணக்கம் நண்பர்களே.

ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு.
மாலை நேரம் வந்தால் பாட்டுப் பாடும் மனசு
அர்த்த ஜாமம் என்பது ஹைதர் கால பழசு

புகைப்படப் போட்டிக்கும் மேல இருக்கரதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கறீங்களா?
ஒரு சம்பந்தமும் இல்லை. சும்மா ரைமிங்கா இருக்கட்டுமேன்னு பாட்டோட ஆரம்பிச்சேன்.

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

இன்னொரு பாட்டா? ஆமாங்கோ. ஆனா, இதுக்கும் இந்த மாத போட்டிக்கும் சம்பந்தம் இருக்கு.

இம்மாத போட்டி விவரங்கள் இனி:

போட்டித் தலைப்பு: வெள்ளை (and/or) மஞ்சள்
போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே

படத்தில் பிரதானமாய் வெள்ளை நிறமோ அல்லது மஞ்சள் நிறமோ இருத்தல் அவசியம். மலரும் மலராகட்டும்; துவைத்துத் தொங்கும் வேட்டியாகட்டும்; இளிக்கும் பல்லாகட்டும்; ஆம்லெட்டின் கருவாகட்டும்; மாலைச் சூரியனாகட்டும்; மஞ்சள் நிலாவாகட்டும்; எத்தையாவது ஓண்ணை அனுப்புங்கோ.

surveysan அரிசி:


surveysan ஈ


Ramalakshmi's பூ

Nathas பூ



Nathas பறவை



an& எலுமிச்சம்
water Lemon


கலக்கிடுவோம்.



Sunday, June 29, 2014

வணக்கம் நண்பர்களே,

இம்மாத போட்டி முடிவு முதல் சுற்று இல்லாமல் நேராக இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது. வெற்றி பெற்ற படங்களுக்கு முன்பாக, கவனம் பெற்ற ஐந்து படங்களைப் பார்க்கலாம்.

#ஹேமகுமார்

#மதன் மத்தியு

#முருகன்

#அருண் ஜோஸ்

#சுந்தரம் சம்பத்

முதல் மூன்று இடங்கள் பெற்ற படங்கள்:

மூன்றாமிடம் - ராஜ்

இரண்டாமிடம் - கார்த்திக்ராஜா

முதலாமிடம் - ஜயன்ந்


வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துகள்! 

Tuesday, June 3, 2014

வணக்கம் நண்பர்களே,

இப்பூமியில் உயிர் வாழ முக்கியமாக ஐம்பூதங்களின் உதவி அவசியமாகின்றது. ஐம்பூதங்கள் /பஞ்சபூதங்கள் (ஐந்து இயற்கை சக்திகள் ) பற்றிய மெய்யியல் கருத்து இந்திய மெய்யியலில் காணப்பட, ஜப்பானிய மற்றும் கிரேக்க மெய்யியலில் நான்கு இயற்கை சக்திகள் பற்றிய கருத்து உள்ளது. இம்மாதம் இந்த நான்கு இயற்கை சக்திகளையும் (நான்கு பூதங்களையும்) உங்கள் கமிராவில் அடக்குவதே போட்டிக்கான அடிப்படை தகுதியாகும்.

இம்மாதத் தலைப்பு: நான்கு இயற்கை சக்திகள் (Four elements)

நீர், நிலம், நெருப்பு, காற்று என்பனவே அந்த நான்கு இயற்கை சக்திகளாகும். அழகாய், பார்ப்பவர் ஈர்க்கும் விதமாக இவற்றில் ஒன்றை உங்கள் கமிராவினால் கிளிக் செய்து அனுப்புங்கள்.
நீர்: நீர்த்துளி முதல் சீறும் சமுத்திரம் வரை படமாக்கலாம்

நிலம்: வெப்பத்தில் வெடித்துப் போன நிலம் முதல் அழகாகத் தெரியும் எந்த நில அமைப்பும் போட்டிக்கு ஏற்றது. படத்தைப் பார்த்ததும் நிலமே நினைவுக்கு வர வேண்டும்.

நெருப்பு: சீறும் தீக்குச்சி முதல் காட்டுத்தீ வரை போட்டிக்கு உகந்தது

காற்று: காற்றுக்கு உருவம் இல்லை. ஆனால் அதன் தாக்கத்தில் அசையும் மரங்கள், நகரும் புகை போன்றன கருப் பொருளாக இருக்கலாம். காற்றைக் காண முடியாவிட்டாலும், படத்தைப் பார்த்ததும் காற்றை உணர வேண்டும்.

இதைத்தவிர இந்நான்கு இயற்கைச் சக்திகளில் இரண்டோ, மூன்றோ அல்லது நான்கோ ஒரு படத்தில் இருந்தாலும் சரி. 

போட்டி விதிமுறைகள் இங்கே

படங்கள் வந்து சேரவேண்டிய கடைசித்தேதி: 20-06-2014 

மாதிரிப் படங்கள்:

# Anton


நீர்

நிலம்

நெருப்பு

காற்று





#Ramalakshmi
நெருப்பு

நீர்

  ***

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff