எல்லாருக்கும் வணக்கம்,
மார்ச் போட்டிக்கான அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இம்மாதத் தலைப்பு : குரூப்புல டூப்பு (Odd one out - பொருந்தாத ஒன்று)
படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 25 மார்ச் 2016
அதாவது நீங்கள் எடுக்கும் படத்தில் ஏதாவது ஒன்று மட்டும் மற்றவற்றுடன் வேறுபட்டிருக்க வேண்டும். மாதிரிப் படங்களை பாருங்கள் புரியும்.
போட்டியில் கலந்துகொள்ள முதலில் https://www.facebook.com/groups/488597597986621/ குழுமத்தில் இணைந்திடுங்கள்.
அதன் பிறகு பிப்ரவரி மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: மார்ச் 2016 போட்டி - பொருந்தாத ஒன்று (Odd One Out) https://www.facebook.com/media/set/…
குழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.
புதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி. மற்றபடி வழக்கமான விதிமுறைகள்தான்.
மாதிரிப் படங்கள்:
# ராமலக்ஷ்மி