Friday, December 21, 2007

Dec - 2007 PiT போட்டி முடிவுகள்

46 comments:
 

போட்டியில் பங்கெடுத்த அனைத்து படங்களையும் பார்வையிட


இந்த மாசம் PiT போட்டி சும்மா கம-கம ன்னு இருந்தது.. எவ்வளவு வகையான மலர்கள்?!... நாம தினமும் பார்க்கிர ரோஜா , ஜவந்தி, செம்பருத்தின்னு ஆரம்பிச்சு, சூரியகாந்தி, தென்னம்ப்பூ , எருக்கம்பூ , சிலவகை காட்டுப்பூ ன்னு கதம்பத்திலே மலர்கள் சேர.. அவரவர் இருக்கும் பிரதேசத்திலே மட்டுமே பார்க்க கிடைக்கும் பலவகை exotic மலர்கள் ன்னு எல்லாரும் அசத்திட்டீங்க போங்க.

போட்டிக்கு வந்த 104 படங்களில் 55 படங்கள் அருமை , அதிலும் முக்கிய 26 படங்கள் .. ஒவ்வொண்ணுக்கும் தனிதனியா ரசிச்சு கமண்ட் எழுதலாம் .. இனிக்கி போட்டி முடிவு மட்டும் தான்.. ஸோ .. ரசித்த படங்கள் குறித்து அடுத்த பதிவிலே எழுதறேன்... எல்லா போட்டியாளர்களையும் ஒரு விஷயத்திலே பாராட்டியே ஆகணும்.. ஆர்வம் மட்டும் இல்லை... இத மாத போட்டி ரொம்பவும் pro-active ஆ இருந்தது.

பரண்லே பழைய படங்கள் இருந்தாலும்... நேரம் செலவு பண்ணி படம் எடுத்தது மட்டும் இல்லாமல், பிற்தயாரிப்பும் பண்ணி போட்டிருக்காங்க. இது உண்மையிலேயே ஒரு pro-active approach தான்.. Pro-active approach இருக்கும் Ametures தான் நல்ல professionals ஆ வருவாங்க என்பது என்னோட கணிப்பு

சரி.. இந்த மாத முடிவுகளை பார்ப்போமா ? ? ?..
முதல் பரிசு - நந்து
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி
மூன்றாவது வது பரிசு -பிரியா
முதல் பரிசு - நந்து
எருக்கம் பூ! நாம் தினமும் பார்க்கும் பூ தான்.. ரோட்டோரமா தான் அதிகமா பார்க்க முடியும். சாதாரணமா வீட்டிலே வைக்க மாட்டாங்க.. ஆனா பிள்ளையார் சதுர்த்திக்கு மட்டும் இரு எருக்கம் மாலைக்கு, யானை விலை சொல்லுவாங்க.. கேட்டா.. பிள்ளையாருக்கு போடரதுக்கு யானை விலை குடுத்தா தப்பில்லேன்னு லாஜிக் :-)

Jokes, apart...மொத்த 104 படத்திலே இதை பார்க்கும் போதே சும்ம கவனத்தை சுண்டி இழுத்த படம் இது... பச்சை பசேல்ன்ன்னு இலை, 2 shades of purple ரொம்ப துல்லியமா இருக்கு , Background அற்புதமா blur பண்ணியிருக்கு , excellent DOF.
Both technically and Aesthetically இந்த படம் தான் முதல் இடம்ன்னு தீர்மானமாயிடுச்சு .இந்த பூவை வேறே எந்த angle லே எடுத்திருந்தாலும் இலை நடுவிலே வந்து மறைக்கிற மாதிரி தான் வரும்ன்னு நினைக்கிறேன்.. Nandu has taken the best possible shot. Great quality in the sharpness of the picture too
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி

இந்த பூவை பார்த்தா அப்படி ஒண்ணும் ரொம்ப exotic ஆ இல்லை.. Petal -expanse இருக்கும் மலராகவோ தெரியலை.. குட்டியூண்டா தான் இருக்கும்ன்னு என்னோட யூகம் ( இது சரியா இல்லையா ன்னு ஒப்பாரி தான் சொல்லணும்)..

ஆனா இந்த படம் ரெண்டாவது இடத்துக்கு வந்ததுக்கு முக்கிய காரணம் .. அவருடைய imaginative-setup.. அதாவது.. dark background வரணும்ன்னு ஜீன்ஸ் பேண்ட் மேலே வச்சு எடுத்திருக்காரு..
அது மட்டும்மில்லே.. டீச்சர் சொன்னதை அக்ஷரம் பிசகாம பூ மேலே "தண்ணி"யெல்லாம் தெளிச்சு ஒரு "மூட்" க்ரியேட் பண்ணி எடுத்திருக்கார் (..நான் எந்த உள்குத்தும் சொல்லலை... கும்முறவங்க கும்மினா நான் பொறுப்பில்லை).. இந்த படத்தை பார்த்ததும் ஒரு Melonchalic -feel இருக்கு ( Melencholy தமிழில் என்ன சொல்ல ன்னெ எனக்கு தெரியலை)
மூன்றாவது பரிசு - பிரியா

அந்த இதழ் ஒவ்வொண்ணையும் கூர்ந்து பாருங்க... எப்படி பிடிச்சு வச்சு இஸ்த்திரி போட்ட மாதிரி இல்லே..ஒவ்வொரு இதழும் மனசுக்குள்ளே 'சரக்' 'சரக்' ன்னு ஒரு army மாதிரி அணிவகுத்து நடக்குதோன்ன்னு தோணவச்சுது..
இந்த CRISPness in Quality தான் இந்த படத்தை மத்த படங்களை கொஞ்சம் ஓரம்கட்டி 3 வது இடத்துக்கு ஜம்முனு வந்து போஸ் குடுக்குது!
ஜோடி மலர்களை எடுக்கும்போது பொதுவா எல்லாரும் ஒண்ணுக்கொண்ணு பார்ப்பது மாதிரி எடுப்பது தான் பிரபலமான perspective. ஆனா இங்கே பாருங்க.. ஒண்ணு ஹீரொவாட்டம் தெனாவட்டா கேமேராவை பார்த்து சிரிக்குது.. பக்கத்திலே இன்னொண்ணு கிராமத்து ஹீரோயினாட்டம் ஒரக்கண்ணாலே கேமராவையும் ஹீரோவையும் மாத்தி மாத்தி பார்க்கிற மாதிரி இல்லே?!.. பிரியா தெரிஞ்சே செஞ்சாங்களா.. இல்லே.. இந்த மாதிரி அமைஞ்சுதா ன்னு அவங்களா சொன்னா தான் உண்டு.. என்ன சொல்றீங்க பிரியா ? ?

முதல் பரிசு - நந்து
இரெண்டாவது பரிசு - ஒப்பாரி
மூன்றாவது வது பரிசு -பிரியா

போட்டியில் வெற்றி பெற்ற மூவர்க்கும் PiT சார்பாக வாழ்த்துக்கள்... பங்கெடுத்தவர்கள் எல்லாருக்கும்.. Better luck next time.. உங்க கிட்டே என்னென்ன முன்னேற்றங்கள் இருக்குன்னு வரும் பதிவுகளில் சொல்லப்படும்..(நீங்கள் சப்மிட் பண்ணின படங்களை வச்சு தான் சொல்லுவோம்.. so that you can relate better)

போட்டியில் பங்கெடுத்த அனைத்து படங்களையும் பார்வையிட

46 comments:

 1. பங்கு பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
  நடுவர்களின் வேலை எவ்வளவு கஷ்டம் என்று யூகிக்க முடிகிறது!!
  நடுவர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்!! :-)

  ReplyDelete
 2. எனக்கா? எனக்கா? நம்பவே முடியவில்லை. 1.2 மெகா பிக்சல் காமெரா அது. எனக்கும் போட்டோக்ராபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதோ என் குட்டி பெண்ணை மட்டும் போட்டோவாக எடுத்துக்கொண்டு இருப்பேன்.

  பூக்களை படமாக எடுத்தது இதான் முதல் தடவை.

  எப்படியோ சும்மா இருந்த ஒருத்தனை ஒரூ SLR கேமெரா வாங்கிகொண்டு காடு மேடெல்லாம் அலைய விடப்போகும் திருப்பணியை செய்திருக்கிறீர்கள்

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 3. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 4. Congratulations Nandhu, Oppari and Priya!

  Hat's off to the judges for the right choices.

  -Shiva

  ReplyDelete
 5. முதலில் வெற்றி பெற்ற நந்து மற்றும் பிரியா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  நடுவர்களுக்கு மிகச்சிறப்பாகவும் அக்கறையுடனும் போட்டியை நடத்தியதற்கு நன்றிகள். முதல் பத்து படங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

  இரண்டவது இடம் பிடித்ததில் மகிழ்ச்சி , ஏனென்றால் படங்களின் தரம். இந்த முறை 10 இடங்களுக்குள் வந்தால் போதும் என்று நினைத்திருந்தேன்.

  //[Photo] அது மட்டும்மில்லே.. டீச்சர் சொன்னதை அக்ஷரம் பிசிராம பூ மேலே "தண்ணி"யெல்லாம் தெளிச்சு ஒரு "மூட்" க்ரியேட் பண்ணி எடுத்திருக்கார் (..நான் எந்த உள்குத்தும் சொல்லலை... கும்முறவங்க கும்மினா நான் பொறுப்பில்லை)..//

  believe it or not , நான் படங்களை எடுத்து முடித்து பதியலாம் என்று உட்காரும்போதுதான் உங்கள் பதிவை படித்தேன். நான் பூக்களை எடுப்பதும் இதுவே முதல்முறை.

  போட்டியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நந்து, ஒப்பாரி, பிரியா!

  //எப்படியோ சும்மா இருந்த ஒருத்தனை ஒரூ SLR கேமெரா வாங்கிகொண்டு காடு மேடெல்லாம் அலைய விடப்போகும் திருப்பணியை செய்திருக்கிறீர்கள்//

  ரைட்டு பாரஸ்ட் ஆபிசரூக்கு சொல்லிடலாம்!!

  ReplyDelete
 7. Thank you!!! No words to describe :)

  My hearty congrats to both Nandhu and Oppari for their 1st and 2nd place.

  My congrats to all the participants who participated and came out to explore their photo techniques.

  @deepa,

  It just happened that the flowers were natural and it made me to go for it.

  ReplyDelete
 8. வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

  தேர்ந்தெடுத்த தீபாவுக்கும் நன்றி!

  உங்களுக்கு நாங்கள் தமிழில் எழுதுவது எப்படி என்று முதலில் சொல்லித்தர வேண்டும். அவசரப் பதிவு போல! நிறைய எழுத்துப்பிழைகள்.

  ReplyDelete
 9. வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ஆஹா.. நந்து மாமா.. பின்னிட்டிங்க போங்க.. சும்மா இருந்த சங்க ஊதி சூப்ப்பர்ப் சங்காட்டிட்டாங்க PIT Team..ரொம்ப சந்தோஷமா இருக்குங்கோ..

  :))

  ReplyDelete
 10. எங்க குட்டீஸ் ராணியோட அப்பா நந்துவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..

  வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும், கலந்த்க்கிட்டவங்களுக்குமென் மனமார்ந்த வாழ்த்துக்கள். :-)

  ReplyDelete
 11. well conducted contest. excellent spirit.

  congrats Nandhu,oppari and priya.

  ReplyDelete
 12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும் நடுவர்களுக்குப் பாராட்டுகளும்.
  Great work :-)

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நந்து, ஒப்பாரி, பிரியா!!போட்டியிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 14. வெற்றி பெற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும் போட்டியில் கலந்துகொண்ட மற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 15. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. //வெற்றி பெற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும் போட்டியில் கலந்துகொண்ட மற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.//

  ரிப்பீட்டேய்!!

  ReplyDelete
 17. Nandhu, kalakkitteenga! congrats!

  Opparee, paakkumbodhe nenachen, onnu thethiduveengannu. congrats! :)

  Priya, awesome shot! very lively to look at !

  ReplyDelete
 18. நந்து, ஒப்பாரி, ப்ரியா - வாழ்த்துகள். அருமையான படங்கள்.

  நந்து - 1.3mp ன்னா ஒண்ணும் குறைச்சலில்லை. நான் படம் எடுக்க ஆரம்பிச்சது 1.3MP camera ஒண்ணை வச்சுத்தான். அதுல எடுக்க முடிஞ்ச சில படங்களை இப்ப வச்சிருக்கற 5MP Camera -ல எடுக்க முடியலைன்னு அடிக்கடி நெனச்சுக்குவேன்.

  என்னோட ஒண்ணேகால் எம்ப்பில எடுத்ததுல ஒண்ணு ரெண்டு இங்கே :-)

  http://photos1.blogger.com/blogger/1970/310/320/syria-flower1.jpg

  http://photos1.blogger.com/blogger/1970/310/320/syria-flower2.jpg

  ஆனா உங்களோடது அட்டகாசமா இருக்கு. அருமையான லைட்டிங்.

  ஒப்பாரி, ப்ரியா படங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

  மலர்கள்ல இது நல்லா இருக்கு அது நல்லா இல்லைன்னு சொல்றதுக்கு கல்நெஞ்சம் வேணும் - நடுவர்களோட வேலை எவ்வளவு கடினமா இருந்திருக்கும்னு உணர முடியுது! அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்.

  நன்றி.

  ReplyDelete
 19. நந்து f/o நிலா said...
  எனக்கா? எனக்கா? நம்பவே முடியவில்லை. 1.2 மெகா பிக்சல் காமெரா அது. எனக்கும் போட்டோக்ராபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதோ என் குட்டி பெண்ணை மட்டும் போட்டோவாக எடுத்துக்கொண்டு இருப்பேன்.

  பூக்களை படமாக எடுத்தது இதான் முதல் தடவை.

  எப்படியோ சும்மா இருந்த ஒருத்தனை ஒரூ SLR கேமெரா வாங்கிகொண்டு காடு மேடெல்லாம் அலைய விடப்போகும் திருப்பணியை செய்திருக்கிறீர்கள்

  நன்றி நன்றி நன்றி

  மாமா இப்படித்தான் இம்சைக்கும் 2 மாசம் முன்னாடி ஆச்சி... அவருக்கு 3வது பரிசு கிடைச்சது அதுக்கு SLR காமெரா வாங்க போய் விலை கேட்டு அங்கயே மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. Canon or Nikon Basic D-SLR starts from 38,000 and till 1.10 Lakh. அது போக லென்ஸ் தனி விலை.

  ReplyDelete
 20. sundar, thanks a lot for your greetings and understanding. also pixels, lenses, cam bodies dont give a better pic if we dont have that Golden Eye!

  சுந்தர்.. அப்புறம் ஒரு விசயத்தை சொல்லியாக வேண்டும். இங்கு பி.ஐ.டி' யில் தான் ஒரு போட்டி முடிந்தபின்பு பங்கு பெற்றவர்களே வெற்றியாளர்களை பாராட்டும் மனப்பக்குவம் உள்ளது என்று பெருமையாக உள்ளது. இந்தைலகுவான மனநிலைதான் நம்மை ஒரு அழகான ரசிகனாக மாற்றவல்லது. ரசிப்புத்தன்மையில்லாதவன் நல்ல படைப்பாளியாக பரிணமிக்க முடியாது தானே. பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். சில இடங்களில் மார்க் போட்டு மண்டை காஞ்சு முடிவுக்கு வரமுடியாம இருந்தப்போ வெளியிலிருந்து சில கிரிட்டிகள் கமெண்ட்குடுத்து உதவி செய்த தம்பி சி.வி.ஆர் க்கும் நடுவர்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்து
  சிறப்பாக நடத்திய தீபா, செல்லா வுக்கு ஒரு ஸ்பெஷல் வா(ழ்)த்து !

  ReplyDelete
 22. போட்டியின் நடுவர்கள் தீபா மற்றும் ஓசை செல்லாவிற்கு நன்றி.

  வெற்றி பெற்ற போட்டியாளர்கள் நந்து ( சசி-நிலா தொந்தரவு இல்லாம படம் எடுத்து வெற்றி பெற்றதற்கு) மற்றும் ஒப்பாரி, ப்ரியாவிற்கு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 24. வெற்றிபெற்ற நந்து,ஒப்பாரி,ப்ரியா மூவருக்கும் வாழ்த்துக்கள் :).
  நேரம் ஒதுக்கி போட்டி நடத்திய நடுவர்களுக்கு நன்றிகள் பல :)..cheers.

  ReplyDelete
 25. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 26. போட்டியில் இடம் பெற்ற அனைத்துப் படங்களுமே என்னை வியக்க வைத்தது என்றாலும், அட! என்னை பின்னூட்டமிடச் செய்த ஒரே ஒரு படத்திற்கு முதல் பரிசு...பேசாமல் என்னை நடுவராக்கியிருக்கலாம்:-))

  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 27. Hey guys, good job, nice organizing as well. Waiting for the next topic. :)

  ~Truth

  ReplyDelete
 28. வெற்றிப் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.நாட்டாமைகள் தீபா,செல்லா மற்றும் பஞ்சாயத்து தலகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 29. செல்லா

  //also pixels, lenses, cam bodies dont give a better pic //

  Absolutely.

  சேவையார் :-)கிட்ட பேசிட்டிருக்கும்போது இதைத்தான் சொன்னேன் 'என்னோட 1.3MP ல எடுத்த படங்கள் மாதிரி இதுவரை எடுக்கவேயில்லை'ன்னு.

  ஒரே குழுவில் சிறந்து பணியாற்றுபவரை - ஒரு கால்பந்து போட்டியில் கோல் அடிக்கும் சக வீரரைப் பாராட்டும் மனநிலையே இங்கு பங்குபெறும் அனைவருக்கும். எதிரணியே இல்லாத ஓரணிப் போட்டி இது என்பதால் யார் வெற்றி பெற்றாலும் எனது/நமது வெற்றியே!
  நன்றி.

  ReplyDelete
 30. எல்லாருடைய பாரட்டுக்கும் பங்களிப்புக்கும் நன்றி.. எங்க வீட்டு டெலிபோன் வையரை எலி கடிச்சிருக்கு.. அதான் 2 டேஸ் னொ இந்டெர்னெட்..
  @CVR
  சமையல் எல்லாம் பண்ணி முடிச்சு.. கடைசீ நேரத்திலே உப்பு பார்த்து சொன்ன மாதிரி நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி

  ReplyDelete
 31. @நந்து..
  நீங்க ஒரு pro-active amateur ன்னு இந்த பட்த்திலேயே தெரிஞ்சுடுச்சி.. ஸொ.. ஒரு நல்ல பிரொபஷணலா வர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. @shiva
  Thank you for the appreciation and your participation spirit.. keep it up

  ReplyDelete
 33. @ஓப்பாரி
  //
  believe it or not , நான் படங்களை எடுத்து முடித்து பதியலாம் என்று உட்காரும்போதுதான் உங்கள் பதிவை படித்தேன்.////
  .. ஏதொ.. காக்கய் உட்க்கார பனை மரம் விழுத்ததுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி தோணுது..
  .. படத்தை க்ளிக் பண்ண fraction of a second தான் ஆகும்.. ஆனா அதுக்கான முன்னேற்ப்பாட்டை யோசிச்சா அந்த second ரொம்ப அருமையா இருக்கும்ங்கிரதுக்கு உங்க படம் ஒரு எடுத்துக்காட்டு.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. @Priya
  congrats.. even though unintentional,.. the perspective is great

  ReplyDelete
 35. @veyilaan
  //உங்களுக்கு நாங்கள் தமிழில் எழுதுவது எப்படி என்று முதலில் சொல்லித்தர வேண்டும். அவசரப் பதிவு போல! நிறைய எழுத்துப்பிழைகள்.///

  கண்டிப்பா.. அதுக்குதான் தமிழிலே பதிவெழுத ஆரம்பிச்சேன்.. முறையா கத்துக்கலை.. அதான் இத்தனை தப்பு.. இன்னும் 2-3 வருஷத்திலே தப்பில்லாம எழுதுவேன்னு நம்பிக்கை இருக்கு.. பார்ப்போம்

  ReplyDelete
 36. @பொடியன்
  @பூங்கி..
  @வின்செண்ட்
  @துளசி
  @இளா
  @இலவசக்கொத்தனார்
  @சர்வேசன்
  @An&
  @சீனா
  @லொடுக்கு
  @கோபாலன் ராமசுப்பு
  @உண்மை
  @நட்டு

  உங்க எல்லாருடைய ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.. இதே மாதிரி ஒவ்வொரு மாசமும் பிட் போட்டியை சிறப்பா நடத்தி தரணும்ன்னு பிட் சார்பா எல்லாரையும் கேட்டுக்கிறேன்

  ReplyDelete
 37. @சுந்தர்
  பூக்கள் ரெண்டுமே சூப்பர்..

  ReplyDelete
 38. //also pixels, lenses, cam bodies dont give a better pic //


  ஒரு வாசகம்னாலும்... திருவாசகம்யா... திருவாசகம்

  ReplyDelete
 39. கலந்து சிறப்பிச்ச மற்றும் வெற்றி பெற்ற அல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

  ஸ்பெஸல் வாழ்த்து - தீபாவிற்கு. அருமையா பொட்டிய நடத்தினாங்க..

  ReplyDelete
 40. வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த போட்டியில் நடுவரின் வேலை - very challenging one. எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இப்படி ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை இந்த PIT-யில் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்வாக இருக்கிறது.

  ReplyDelete
 41. எதை வச்சு முதல் பரிசுன்னு கொஞ்சம் டீடய்ல்ஸ் தரீங்களா..


  எனக்கென்னமோ இதை விட அருமையான படங்கள் இருந்தது. ஆனாலும் இந்த தேர்வு ஆச்சர்யம் தான். நம்ப முடியவில்லை.

  ReplyDelete
 42. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துககள். முதல் படம் வித்தியாசமான சிந்தனை. நாம சாதாரணமா நினைக்கிற பூக்கள்கூட கேமரா கண்ணுல அழகா தெரியும்னு காட்டிட்டாரு நந்து. சீக்கிரம் SLR வாங்கி காடு மேடெல்லாம் அலைய வாழத்துக்கள். :)

  ReplyDelete
 43. கடந்து 2 மாதமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அடுத்த மாதம் கட்டாயம் வருகிறேன். போன போட்டிகளை இப்போ தான் பாத்தேன். வழக்கம் போல் மக்கள் கலக்கி இருக்காங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 44. நந்து, ஒப்பாரி, பிரியாக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாதிரி போட்டி நடத்துவது உண்மையிலேயே ரொம்ப பெரிய விஷயம். இதனால சும்மா ஏனோ தானோன்னு படம் எடுத்தவங்க எல்லாருக்கும் படம் எடுப்பதில் ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. நடுவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 45. Arumayana theerpu :)

  I personally loved Oppari pic...
  Knew it was gonna win! :D


  Vetri petra NANDHU , OPPARI, & PRIYA :)
  Moovarukkum en manamaarndha vaazhthukkal!

  WISH YOU ALL A VERY HAPPY NEW YEAR !!

  ReplyDelete
 46. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff