படம் பிடிப்பதில் உள்ள ஆர்வக் கோளாறினால், சில பல ஆயிரங்களை எடுத்து விட்டு, ஓரளவுக்கு நல்ல DSLR காமிரா வாங்கிடறோம்.
இந்த DSLR கேமராலயும் நல்ல நல்ல படங்களா க்ளிக்கித் தள்ளறோம்.
ஆனா பாருங்க, எந்த அளவுக்கு செலவு பண்றோமோ, அந்த அளவுக்குதான், கேமராவில் வசதிகள் இருக்கும்.
சமீபத்தில் நான் வாங்கின canon rebel xtiல, 18-55mm lense தான் இருக்கு.
தூரத்தில் இருக்கும் பறவையோ, வானத்தில் இருக்கும் நிலாவையோ, பூக்களுக்குள் இருக்கும் மகரந்தத்தையோ இதைக் கொண்டு படம் பிடிக்க முடியாது.
இதுக்கு தனியா ஒரு பெரிய லென்ஸும் (telephoto 70-500mm), ஒரு macro லென்ஸும் வாங்கி வைக்கணும்.
ஆனா, என்ன எடுத்துக்கிட்டா, என்னுடைய 90% படங்கள், 18-55mm கொண்டே எடுத்திடலாம். 10% படங்கள் எடுக்க, என்னாத்துக்கு, தேவையில்லாம பெரிய செலவு செய்யணும்னு, telephoto, macro லென்ஸெல்லாம் வாங்காம காலம் தள்ளியாச்சு.
18-55mm லென்ஸ் வச்சுக்கிட்டு, ஒரு பூவை ஒரு அடி தள்ளி நின்னு, இந்த மாதிரிதான் எடுக்க முடியும்.
இந்தப் படத்தை பாத்த நம்ம ஜீவ்ஸ், என் கிட்ட இந்தப் பூவின் இதழ்களில் படிந்திருக்கும் பனித்துளியின் க்ளோஸ்-அப் இருக்கான்னு கேட்டு, வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சினாரு.
அடடா, அந்த அளவுக்கு கிட்டப் போய் அந்த பனித்துளிய எடுத்தா, ஜம்முனு இருக்குமே, பேசாம மேக்ரோ லென்ஸ் வாங்கிடலாமா இந்த வாரம்னு தீவிரமா யோசிச்சு எங்க குறைந்த விலைக்கு விக்கறான்னு தேட ஆரம்பிச்சேன்.
அந்தத் தேடலின் போதுதான் ஒரு நுட்பம் கண்ணில் பட்டது.
அதாவது, என்ன மாதிரி DSLR கேமரா வச்சிருக்கரவங்க, தனியா macro லென்ஸ் வாங்கமலே, தன்னிடம் இருக்கும் 18-55mm உதவியுடன் macro படங்கள் எடுப்பது எப்படின்னு சொல்லியிருக்காங்க.
முதலில் அதை படிக்கும்போது ஆச்சரியமா இருந்தது, ஏதோ ஏப்ரல்-1 மேட்டர் மாதிரி. ஆனா, இன்னிக்கு அதை முயற்சி செய்து படங்கள் க்ளிக்கியபோது, பெரிய ஆச்சரியம் தான் போங்க.
மக்கா, என்னமா ரூம் போட்டு யோசிக்கறாங்கன்னு ஒரே ஆச்சரியமா போயிடுச்சு.
டெகினிக்கு என்னவா? இதோ சொல்லிடறேன் (மூலம் இங்கே)
1) கேமராவ கைல எடுத்து ஆன் பண்ணிக்கங்க
2) கேமராவின் டயலை 'பூ' modeக்கு மாத்துங்க. (இல்லன்னா, உங்க focal lengthஐ manual modeல சின்னதா தேர்ந்தெடுத்துங்கங்க. eg., 5.6)
3) எந்த பொருளை கிட்டப் போய் எடுக்க ஆசப்பட்டீங்களோ, அதை ஃபோக்கஸ் பண்ணிக்கங்க.
4) இப்ப, உங்க லென்ஸ கழட்டுங்க. (அட, ஆமாங்க, மெய்யாலுமேதான் சொல்றேன்)
5) லென்ஸை தலைகீழ திருப்பி, இந்தப் பக்கத்தை, கேமராவின் பாடியோட ஒட்டிப் பிடிங்க ( இது சரியா பொருந்தாது, அதனால, ஜாக்கிரதையா கையால் அழுத்திப் பிடிக்கணும். உள்ள வெளிச்சம் போகாத மாதிரி)
6) இப்ப, பொருளை நோக்கி கேமராவை பிடித்து, கொஞ்சம் முன்னும் பின்னும் நகர்ந்து, எடுக்க வேண்டிய படம் ஃபோக்கஸ் ஆகும் வரை முயலவும்.
7) பொருள் பளிச்னு தெரியுதா? டகால்னு படத்தை க்ளிக்குங்க.
8) ஆச்சரியப் படுங்க! :)
ரொம்ப சுலபமான அழகான டெக்னிக்கு இது!
கண்டுபிடித்து சொன்ன மகானுக்கு நன்னி!
இனி, இந்த நுட்பத்தை வைத்துப் பிடித்த படங்கள் சில:
இது,'சாதா' 'பூ' மோடில் எடுத்தது (before):
இது மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:
இந்தப் பூக்களும் மேக்ரோ நுட்பத்துடன் எடுத்தது:
இது எல்லா கேமராலயும் வேலை செய்யுமான்னு தெரியல.Canon rebel xtiல எனக்கு வேலை செஞ்சுது. உங்க கேமராவில் முயன்று பார்த்து, படங்களைப் பதியவும்.
கேமரா லென்ஸை கழற்றிப் பிடிக்கும்போது, ஜாக்கிரதையா கையாளவும். எதையாவது ஒடச்சீங்கன்னா, நான் பொறுப்புலேது :)
அசத்துங்க!
நன்றி!
மூலப் பதிவெழுதிய flickr நண்பருக்கு நன்றிகளைச் சொல்லிடுங்க, இங்க க்ளிக்கி
இதோட அறிவியல் விளக்கம் இங்கே
-சர்வேசன்

சூப்பர் பதிவு சர்வே!!
ReplyDeleteநம்ம தற்போதைய நடுவர் நாதஸ் இந்த விஷயத்தை வெச்சுகிட்டு நிறைய படம் காட்டியிருப்பாரு!!!
இத்தனூண்டு எறும்பு எல்லாம் டைட்டு க்ளோஸப்புல எடுத்து பட்டைய கெளப்பியிருக்காரு... :)
CVR,
ReplyDeleteஅடக்கொடுமையே. இவ்ளோ நாளா மேட்டர வெளீல சொல்லாம விட்டுட்டாரே?
தெரிஞ்சிருந்தா, நானும் க்ளோஸப்பியிருப்பனே :)
இனி, லென்ஸ கழட்டி கைல புடிச்சிட்டுதான் அலைவேன் :)
இந்த முறையில் வெளியே படம் எடுக்கும் போது கொஞ்சம் கவனம் மக்கா, தூசி காமிரா உள்ளே போக வாய்ப்புண்டு.
ReplyDeleteநீங்க Nikon DSLR காமிரா வச்சு இருந்தா "Nikon BR-2A 52mm Lens Reversing Ring" வாங்கறது மிகவும் பயன்படும். லென்சை தனியா பிடிக்க தேவை இல்லை. தூசியும் உள்ளே போகாது.
இது நல்ல வழியா இருக்கே! நன்றி சர்வேசன். நான் எக்ஸ்டென்சன் டியுப் ஒன்றை வாங்கி பயன்படுத்துகிறேன். இதுவும் ரொம்ப நல்லா இருக்கு. விளையும் குறைவுதான். இது தான் நான் சொல்றது: http://www.jr.com/canon/pe/CAN_EF12_SL_II/
ReplyDeleteஇதை உபயோகித்து எடுத்த படம் தான் இதுவும்: http://www.flickr.com/photos/snarayanank/2580955326/
சர்வே
ReplyDeleteதூசி, துரும்பு எல்லாம் உள்ளே போனா, சென்சர் துடைக்கும் செலவுக்கு ஒரு மலிவு விலை மேக்ரோ லென்ஸே வாங்கலாமே ;-)
நாதஸ் பதிவில் இதற்காக adaptor இருப்பதாக படித்த ஞாபகம் !
நாதஸ்
ReplyDeleteஉங்க பதிலை நான் பார்க்கவில்லை. திரும்பவும் நீங்க சொன்னதையே நானும் பின்மொழிந்து இருக்கேன்
An&,
ReplyDeletereverse ringனு ஒண்ணு எல்லா கேமராவுக்கும் கெடைக்குது.
ரெண்டூ லென்ஸு தூக்கிக்கிட்டூ அலையரத avoid பண்ணலாம் :))
சர்வேசர்,
ReplyDeleteநல்ல பதிவு. இது பற்றி இன்னும் விரிவா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ( பாதி எழுதி அதுக்கேத்த போட்டோஸ் எடுத்ததெல்லாம் காணாமப் போச்சு:( ) . சில சமயம் ஒரே லென்ஸை திருப்பி பிடிச்சு பண்றப்ப தூசு உள்ள போக சான்ஸ் இருக்கு.
இரண்டு லென்ஸ் இருக்கும்பட்சத்தில் இது ஒரு பெரிய விஷயமே இல்லை.
சில டிப்ஸ் இங்கே பாக்கலாம்.
http://www.slashgear.com/slashtips-how-to-take-extreme-macro-with-stacked-lenses-179079.php
முதலில் ப்ரைம் லென்ஸ் சரியாக பொருத்தி விட்டு அடுத்த லென்ஸை திருப்பி வைத்து பிடித்துக் கொண்டு எடுக்கலாம். அப்படி எடுத்த படம்
http://www.flickr.com/photos/iyappan/2351585877/in/set-72157602218401228/
- முக்கியமான ஒன்று. பொதுவாகவே மேக்ரோ புகைப்படம் எடுக்கும்போது அதிகம் வெளிச்சம் தேவைப்படும். நல்லதொரு டேபிள் லைட் அல்லது நல்ல ஃப்ளாஸ் உபயோகித்தல் நலம்.
some found in net
http://photography-on-the.net/forum/showthread.php?t=239915
http://www.photocritic.org/macro-photography-on-a-budget/
jeeves, a part2 will certainly help :)
ReplyDeleteவிட்டுப்போனது ஏதாவது இருந்தா சொல்லுங்க.
தூசி வருவது உண்மைதான். reverse ring போட்டுக்கிட்டா உதவும்.
இதே மாதிரி, தூரத்தில் இருப்பதை படம் புடிக்க ஏதாச்சும் டெகினிக்கு இருந்தா நல்லாயிருந்திருக்கும் ;)
கொஞ்ச காலத்துக்கு முன்ன நான் முயற்சி பண்ணினது: http://blog.grprakash.com/2008/03/10/macro-shots/
ReplyDeleteprakash, good try.
ReplyDeleteவெறுப்பேத்தாதீங்க சர்வேசன். நல்ல வெளிச்சம் இல்லை கண்ணைகூச வைக்கும் வெளிச்சம் இருந்தாத்தான் இந்த முறையில் வருது. எல்லா இடத்துலயும் அதுக்கு எங்கே போறது.
ReplyDelete//நீங்க Nikon DSLR காமிரா வச்சு இருந்தா "Nikon BR-2A 52mm Lens Reversing Ring" வாங்கறது மிகவும் பயன்படும்.//
நன்றி நாதாஸ். ஜீவ்ஸ் நோட் பண்ணிகுங்க
அப்படியே நல்ல மேக்ரோ லென்ஸ் ஒண்ணு ரெக்கமெண்ட் பண்ணுங்க. விலையை கேட்டா மயக்கம் வரமாதிரி சொல்லிடாதீங்க
ReplyDelete@ நந்து f/o நிலா -
ReplyDelete//அப்படியே நல்ல மேக்ரோ லென்ஸ் ஒண்ணு ரெக்கமெண்ட் பண்ணுங்க. விலையை கேட்டா மயக்கம் வரமாதிரி சொல்லிடாதீங்க//
அண்ணாச்சி, புகைப்பட ஆர்வம் நமக்கு அதிகம் ஆச்சுன்னா நம்மோட பர்ஸூ காலி ஆக போகுதுன்னு அர்த்தம்.. :)
I would recommend
Tamron 90mm 2.8 macro lens (costs around 360$)
&
Sigma 105mm 2.8 macro lens (costs around 400$)
மற்றும்மொரு மலிவான முறை உங்களுடைய லென்சுக்கு "CloseUp Lens attachment" வாங்குவது
Hi,
ReplyDeleteCan you please tell me, how to create a border/frame in Gimp or Picasa?
Thanks in advance...
-Saravanan. D
நேத்து வீட்டுக்கு போயி இதை ட்ரை பண்ணேன். லென்ஸ்ஸ கையில பிடிச்சி அசைக்காம எடுக்கறதுக்குள்ள கழுத்து வலி வந்துடுச்சு! ரொம்ப குஷ்டமப்பா;) இதுக்கு ரொம்ப பொறுமை தேவை. ஆனா இதுல 1:2வுக்கு மேல Macro effect கிடைக்குது. ரொம்ப ஆச்சர்யமா இருந்தது! சரியா எடுத்தா சூப்பரா வரும்!
ReplyDelete@saran
ReplyDeleteஇங்கிட்டு பாருங்க தல!
http://photography-in-tamil.blogspot.com/2007/11/blog-post.html
:)
sathiya, முயற்சி திருவினையாக்கும்.
ReplyDeleteநந்து, புது லென்ஸு வாங்காதீங்க. reversal ring வாங்குங்க. சீப்பா கெடைக்கும். நான் ஒண்ணு இப்பதான் ebayல ஆர்டர் பண்ணேன்.
ரெண்டு நாளைக்கு முன்ன எடுத்த macro படம் இங்கே. கொஞ்சம் மெனக்கட்டா சுலபமா எடுக்க முடீது :)
click here
சர்வேசன்,
ReplyDeleteஇந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு.
யோசிப்பவர் said...
ReplyDeleteசர்வேசன்,
இந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு.//
Sir,
there are vast difference.
First - when you take with PS camera - they are high closeup ( very rare these days ps camera comes with good macro facility
macro is diff. Reversing lens is beginning level for macro
யோசிப்பவர்,
ReplyDelete//இந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு//
hmm. i am sure they call it macro in point&shoot cameras, but you wont get the same effect. You cant go as close as you want to an object :)
//Blogger யோசிப்பவர் said...
ReplyDeleteசர்வேசன்,
இந்த மேக்ரோ வசதி, DSLR இல்லாத கேமராவில் கூட இருக்கு.//
யோசிப்பவரே,
நீங்க சொல்லுவது சரி. ஆனாலும் லென்ஸ் க்வாலிட்டி மாறும். உதாரணத்துக்கு 504 எம் எம் கொண்ட பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராக்கும், 500 எம் எம் கொண்ட எஸ்.எல்.ஆர் கேமராக்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம்.
அதே போல 105 எம் எம் மேக்ரோ லென்ஸ்க்கும் அதே அளவில் உள்ள PS.camera க்கும் உள்ள வித்தியாசம் just cant match it.
போட்டோ பழனி சொன்னதை நான் வழிமொழிகிறேன். வெகு சில ஆரம்பக் கால கேமராக்கள் நல்ல மேக்ரோ கொடுத்தார்கள். இப்போதெல்லாம் வருவது வெறும் சூப்பர் க்ளோஸ் அப் ஷாட்டுக்கான கேமராக்கள் மட்டுமே ( நான் பார்த்த வரையில் ).
சர்வேஷன் - சூப்பர் க்ளோசப் கேமராவில் 0 செண்டிமீட்டர் வரை எடுக்க முடியும் ஆதலால் அது பிரச்சினை இல்லை. ஆனால் மேக்ரோ என்பதற்கும் க்ளோசப் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.
http://www.slrphotographyguide.com/blog/macro/macro-micro-closeup-difference.html இந்த சுட்டியில் இருக்கும் தட்டான் பூச்சி - முதல் படம் க்ளோசப் - அடுத்தது மேக்ரோ
ரிவர்ஸ் லென்ஸ் கெபாசிடி பொறுத்து அது க்ளோசப்பா அல்லது மேக்ரோவா என்று முடிவாகிறது.
பாயிண்ட் அன்ட் ஷூட்டுல் மேக்ரோ என்பது ... உங்கள் ஊகத்திற்கு ;)
ஒரு சந்தேகம்! இடம் பொருள் ஏவல் எல்லாம் பாக்கல. தப்பு எதுவாக இருந்தாலும் தெளிவு படுத்துங்கள்.
ReplyDeleteகீழ் கண்ட சுட்டியை பார்க்கவும்
http://wvs.topleftpixel.com/photos/2008/07/yellow-helmet_bike_01.jpg
இது 19 mm வைத்து எடுத்ததாக தெரிகிறது. சில P&S கேமராவில் இதை விட குறைந்த mm உள்ளன.
இருப்பினும் படத்தில் பார்ப்பது போல் P&S வைத்து எடுக்க முடியவில்லேயே ஏன்?
நான் குறிப்பிட்டது, தரையையும் வானையும் அப்படி கிளிக்கியதை சொல்றேன். இப்படி வானமும், தரையையும் ஒரே focus ல எப்டி எடுக்கிறது.
//ஆனந்த் said...
ReplyDeleteஒரு சந்தேகம்! இடம் பொருள் ஏவல் எல்லாம் பாக்கல. தப்பு எதுவாக இருந்தாலும் தெளிவு படுத்துங்கள்.
கீழ் கண்ட சுட்டியை பார்க்கவும்
http://wvs.topleftpixel.com/photos/2008/07/yellow-helmet_bike_01.jpg
இது 19 mm வைத்து எடுத்ததாக தெரிகிறது. சில P&S கேமராவில் இதை விட குறைந்த mm உள்ளன.
இருப்பினும் படத்தில் பார்ப்பது போல் P&S வைத்து எடுக்க முடியவில்லேயே ஏன்?
நான் குறிப்பிட்டது, தரையையும் வானையும் அப்படி கிளிக்கியதை சொல்றேன். இப்படி வானமும், தரையையும் ஒரே focus ல எப்டி எடுக்கிறது.///
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ?
எடுத்த கேமரா என்னதுன்னு பாத்தீங்களா ? canon EOS 5d - எஸ்.எல்.ஆர் கேமரா
இங்க பாருங்க
http://www.dpreview.com/reviews/canoneos5d/
lens used is wide angle. 19 mm is generally not available in any PS camera. i think it starts with 28 & above. not sure if there is any camera with 18 or below mm camera. lemme know if there is anything like
more wide angle lens - the more wide ( sky to earth ) can be covered.
Jeeves annachi.
ReplyDeleteThe camera that comes with the mobile phones are usually less than 20mm. This one is taken with a camera mobile. http://picasaweb.google.com/grprakash/VisualTaste/photo#5102528354889187762 Later I tried with my EOS 350D, I could not get this effect at all as it had 28-90 lens
// Prakash G.R. said...
ReplyDeleteJeeves annachi.
The camera that comes with the mobile phones are usually less than 20mm. This one is taken with a camera mobile. http://picasaweb.google.com/grprakash/VisualTaste/photo#5102528354889187762 Later I tried with my EOS 350D, I could not get this effect at all as it had 28-90 lens//
there you are - you camera wide angle is less than 20mm and your eos 350d is 28 mm and above.
btw, that was excellent shot. superb
// எடுத்த கேமரா என்னதுன்னு பாத்தீங்களா ? canon EOS 5d - எஸ்.எல்.ஆர் கேமரா
ReplyDeleteஇங்க பாருங்க
http://www.dpreview.com/reviews/canoneos5d/
lens used is wide angle. 19 mm is generally not available in any PS camera. i think it starts with 28 & above. not sure if there is any camera with 18 or below mm camera. lemme know if there is anything like
more wide angle lens - the more wide ( sky to earth ) can be covered. //
Also there is a difference in coverage area between Fullframe DSLR(like Canon EOS 5D) and a DX format DSLR(like Canon XT, XTi etc)
There is a term called crop factor associated with the DX cameras.
Normally this factor is 1.6 for Canon DSLRs and 1.5 for Nikon DSLRs.
To make it simple 28mm lens coverage in a DX format Canon camera is equal to 45mm(28 * 1.6)coverage of a FX format camera. Hence less area is covered by a DX format camera for a wide angle shot :( but u get a zoom effect for a telephoto shot :)
nathas, பெரிய பேச்செல்லாம் பேசறீங்க.
ReplyDeleteஎனக்கு இந்த மேட்டர் எல்லாம் தெல்லேது ;)
விவரங்களுக்கு நன்றி!
I use a normal macro adapter for my lens. Here is one such shot I took from my camera.
ReplyDeletehttp://picasaweb.google.com/kirankumar.gosu/Imaging/photo#5221371416895875874
Truth,
ReplyDeletenice shot. what cam? what sized adapter? where did you buy it?
Truth,
ReplyDeletenice shot. what cam? what sized adapter? where did you buy it?
Truth,
ReplyDeletenice shot. what cam? what sized adapter? where did you buy it?
@SurveySan
ReplyDelete/*SurveySan said...
Truth,
nice shot. what cam? what sized adapter? where did you buy it?
*/
Thanks SurveySan
I've got Canon EOS 400D [I think this is called as Rebel XTi in US norms]
Adapter is a magnifying glass with thread on one end [just like a filter] I have a 10x macro adapter which i fix it to my 18-55mm lens. I purchased it in ebay for some 10-15 pounds, dont remember it now.
~Truth!
Nice post. A new thing for me & lot of discussions the comments section too. Tx.
ReplyDeleteபோன வாரம் macro reversal ring எனது canon rebel xtiக்கு வாங்கி சில புகைப் படங்கள் எடுத்துள்ளேன்.
ReplyDeleteஇங்கே காணலாம்:
http://surveysan.blogspot.com/2008/07/blog-post_13.html
ring இருக்கரது உதவியாத்தான் இருக்கு.
ஆனா, படம் மேக்ரோ எடுப்பது கஷ்டம்தேன் ;)
multi exposure in canon dslr
ReplyDelete