Monday, December 29, 2008

டிசம்பர் போட்டி - வெற்றிப் படங்கள்

21 comments:
 
வணக்கம்.

உங்க எல்லாருக்கும் பிலேட்டட் க்ருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
அப்படியே, advanced, புது வருட நல்வாழ்த்துக்களையும் புடிச்சுக்கோங்க ;)

இந்த மாத நிழல்கள் போட்டிக்கு வந்த படங்களை பாத்திருப்பீங்க. வந்திருந்த 49 படங்களிலிருந்து, டாப்10ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையும் பாத்திருப்பீங்க.

சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடுவரும் ஒவ்வொரு முறையை பயன்படுத்துவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, சிறந்த படமானது,
1) பார்த்தவுடன் ஈர்க்கவேண்டும்
2) போட்டித் தலைப்பை மையமாக கொண்டிருக்க வேண்டும்

இவை ரெண்டையும் கூட்டி பிசைந்து ஆராய்ந்ததில் கிட்டிய டாப்10லிருந்து, மூன்றை பிரித்தெடுப்பது கொஞ்சம் டென்ஷனான வேலைதான்.
இதை எடுத்து அதை விடுத்தா, அதை ஏன் எடுக்கலைன்னு எனக்கே நான் காரணம் கண்டுபிடிக்க சிரமமாயிருந்தது.

மாதாமாதமும் முன்னேறி வரும் நம் போட்டியாளர்களின் திறனை பளிச்னு காட்டுது இது.

Hats off to you all!

நிழலை அழுத்தம் திருத்தமாக, மையப் பொருளாக்கி, என்னை மிகவும் ஈர்த்த படங்கள், இம்மாத வெற்றிப் படங்களாக கீழே தந்துள்ளேன்.

மூன்றாம் இடத்தில்: Truth
மாரதான் ரேஸ்ல பாத்திருப்பீங்க. முதல் பரிசு வாங்கப் போறவர், போட்டி ஆரம்பிச்சதும் நிதானமா ஓடுவாரு. முக்கால் வாசி பேரு வேக வேகமா ஓடி, பாதி ஓட்டத்துலையே மூச்சு வாங்கி, வெளியேறிடுவாங்க. நிதானமா ஓட ஆரம்பிச்சவருக்கு, எவ்ளோ தூரத்துக்கு எப்படி ஓடணும், எப்ப வேகத்தை கூட்டணும்னு எல்லாம் துல்லியமா தெரிஞ்சிருக்கும். அப்படித்தான், Truthன் படம் அமஞ்சிருக்கு. தலைப்புக்கு ஏத்த சப்ஜெக்ட் வடிவமைப்பு செஞ்சதும், அலட்டிக்காம க்ளிக்கியிருக்காரு. அற்புதமா வந்திருக்கு படம்.


இரண்டாம் இடத்தில்: Amal (இவர் ஒக்டோபர் மாத‌ போட்டியில் முதல் பரிசை வென்றவர்)
தரை பார்த்த நடையும், நீண்ட நெடு நிழலும், மணலின் நிறமும், படம் எடுக்கப்பட்ட ஏங்கிளும், படத்துக்கு ஒரு அற்புதமான, 'மூட்' உருவாக்கிக் கொடுத்துள்ளது.


முதல் இடத்தில்: Vennila Meeran
எப்படியெல்லாம் யோசிக்கராங்க நம்ம மக்கள்? அடேங்கப்பா. ஷட்டில் ஃபெதரில் இப்படி ஒரு லைட்டிங் செஞ்சு அம்சமா எடுக்க முடியும்னு இதப் பாத்தப்பரம்தான் தெரிஞ்சுது. நிழல் வெறும் நிழலாய் மட்டும் இல்லாமல், அதுவே ஒரு அழகான ஓவியமாய் மாறியிருந்தது இந்த படத்தில். நிழலால் படம் மெறுகேறியதால், இதற்கே முதலிடம்.


வெற்றி பெற்ற Truth, Amal, Vennila Meeran - வாழ்த்துக்களும் வந்தனங்களும்!

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து படங்களையும் பார்க்க இங்கே க்ளிக்கவும்.

பி.கு: MQN படமும் ப்ரமாதமாய் வந்திருந்தது. beautiful shot!!! பாப்பா, கண் மூடிக் கொண்டு ப்ரார்த்தனை செஞ்சிருந்தா இன்னும் ஈர்த்திருக்குமோ? கை நிழலை மறைத்ததாலான்னும் தெரியலை. நீங்களே சொல்லுங்க.

Truth, Amal, Vennila Meeran - முடிந்தால், நீங்கள் வெற்றிப் படத்தை எடுத்த விதம் பற்றி தனிப் பாதிவாய் போட்டு எங்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி!

21 comments:

 1. வாழ்த்துக்கள் Vennila Meeran, Amal, Truth :)

  ReplyDelete
 2. Vennila Meeran, Amal, Truth எனது வாழ்த்துக்கள்.


  இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


  படம் எப்படி இருக்க வேண்டும்/கூடாது என சொல்லுவதற்கு எனது படம் உதவியதை நினைத்து மகிழ்கிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் வின்னர்ஸ் :))

  ReplyDelete
 4. அருமையான முடிவு!!!

  வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 5. ஷட்டில் நிழலும் மணல் நிழலும் வெற்றிக்கு வரும் என்று நினைத்தேன்.
  வாழ்த்துக்கள்!!!!
  நமக்கும் ஐடியாக்கள் கிடைத்தன இதன் மூலம். நன்றி சர்வேசன்!!!

  ReplyDelete
 6. miga sariyana mudivu.... vetri petra anaivarukkum vaazhthukkal...

  -suresh babu

  ReplyDelete
 7. வென்றோருக்கு வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 8. Truth,Amal இவங்க இரண்டு பேரையும் நீகுங்க,இல்லைனா கடைசி வரைக்கும் முதல் இரண்டிடங்கலும் இவங்கதான் வருவாங்க :-).

  எதிர்ப்பார்த்த முடிவுதான்.

  வெற்றிபெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. பரிசு பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  வித்தியாசமான சிந்தனைகள்! நேர்த்தியான கேப்ச்சர்ஸ்!
  நிறைவான தேர்வு!

  ReplyDelete
 10. முதல் 10 இடங்களில் வந்தவர்களுக்கும், வெற்றி பெற்ற வெண்ணிலா மீரான், அமல், Truth ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. நச் படங்கள்! நல்ல தேர்வு.

  அடுத்து.. அடுத்து... ???

  :))))

  ReplyDelete
 12. தள நிருவனர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  முதலாவது இடம்...
  ஆயிரம் பட்டாம்பூச்சிகள் என்னுள் பறந்து அதிலிருந்து வந்த காற்றில் நான் மிதப்பது போல உனர்கிறேன்.

  போட்டியில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
  இது முதல் படம் இல்லையென்றாலும் இது தான் நான் பங்கேற்ற முதல் புகைபட போட்டி. முதல் போட்டியிலேயே இந்த கத்துக்குட்டிக்கு முதல் இடம் என்றென்னும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

  தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், பாராட்டுகளை வழங்கிகொண்டிருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

  போட்டியில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை பதிவு செய்த அனைவருக்கும், போட்டியில் வெற்றி பெற்ற Truth & Amal... ஆகியோருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொருத்தவரையில் எல்லா படமும் வெற்றி பெற்ற படங்கள் தான்.

  போட்டி என்று வரும் போது தான் பல திறமையான, சிறந்த படைப்புகள் உலகுக்கு வருகிறது. அந்த வகையில் போட்டியை நடத்துபவர்களுக்கே பெருமை, பாராட்டுகள் அனைத்தும்.

  மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டு, புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  என்றும் அன்புடன்,

  கத்துக்குட்டி வெண்ணிலா மீரான்

  ReplyDelete
 13. Vetri petravargalukku enn manamarntha vazhthukkal. When is Next assignment

  ReplyDelete
 14. Vetri petravargalukku enn manamarntha vazhthukkal. When is Next assignment

  ReplyDelete
 15. wow :) thanks.
  Congrats Vennila and Amal.
  Congrats to every other participant as well. :)

  ~Truth.

  ReplyDelete
 16. இந்த மாதமும் வெற்றிபெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
  பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றிகள்!!
  Vennila Meeran & Truth - க்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!!!


  பி.கு: ஒவ்வொரு மாதமும் தலைப்பும் அதற்கு வரும் படங்களும், PIT போட்டியின் தரத்தையும் கடுமையையும் உயர்த்திக்கொண்டே செல்லுகிறது.

  ReplyDelete
 17. இன்னமும் கத்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை இந்த மாத போட்டி அழகாக எடுத்துரைத்திருக்கிறது.வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. I repeat,

  Truth, Amal, Vennila Meeran - முடிந்தால், நீங்கள் வெற்றிப் படத்தை எடுத்த விதம் பற்றி தனிப் பாதிவாய் போட்டு எங்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி!

  ;)

  ReplyDelete
 19. Amazing photos! Summa Kalakki irukkaanga! Vaazhthukkal!

  ReplyDelete
 20. this is vennila meeran, i have send my way of photograpy on your email address. please check and post if you like.

  Thanks

  ReplyDelete
 21. vennila meeran, thanks.

  got it and will post it next week.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff