Wednesday, February 18, 2009

பிப்ரவரி 2009 மாத பிட் போட்டி - முதல் பத்து இடங்கள்

23 comments:
 
அநியாயத்துக்கு படுத்திட்டீங்க மக்களே....
இப்படி ஆளாளுக்கு அழகழகா படம் எடுத்தா அப்புறம் என்னை மாதிரி நடுவர்கள் என்ன செய்வது.


மிகவும் சிரமப்பட்டு தேர்ந்தெடுத்த முதல் பத்து(எந்தவித வரிசைப்படுத்தலும் இல்லாமல்)ஒப்பாரி


சூர்யா


அமல்


கைப்புள்ள


காரூரன்


கருவாயன்


கயல்விழி முத்துலெட்சுமி


பிரகாஷ்


MQN


நந்து


முதல் பத்தில் வராவிட்டாலும் கடைசியில் என்னை மண்டை காய வைத்த பிற படங்கள் சில (Special mention)
இவை மிக நல்ல படங்கள் தான் ,ஆனால் முதல் பத்து படங்களின் உயர் தரத்தினால் இவைகளின் சிறிய குறைகளும் பெரியதாக தெரிகிறது..

ஸ்ரீராம்

மறுக்க முடியாத ஆக்‌ஷன் படம்,ஆனால் காட்சியமைப்பில் சற்றே குறைபாடு.இடது பக்கம் தேவையில்லாமல் இருக்கும் மனிதரால் கவனம் சிதறடிக்கப்படுகிறது.சற்றே சுற்றியிருக்கும் பகுதிகளை வெட்டி விட்டு இன்னும் கவனத்தை ஆக்‌ஷனுக்கு எடுத்து சென்றிருக்கலாம்.

Truth

முகத்தை சுற்றிய இடங்கள் எல்லாம் overexposed.கூடவே அதிகப்படியான ப்ளாஷினால் படத்தில் செயற்கைத்தனம் சற்று அதிகமாகவே இருப்பது போன்ற உணர்வு.பிற்பகுதி வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும்.சட்டையும் வெள்ளையாக இருப்பதால் படத்தில் contrast பெருமளவு அடிப்பட்டு போய்விட்டது.

நந்தகுமார்

இவரு அந்த இடத்துக்கு வருவாருன்னு அனுமானித்து காத்திருந்து எடுத்தீங்களா?? இல்லனா வரது பாத்து உடனே எடுத்தீங்களான்னு தெரியாது,ஆனா வருபவர் உங்களுக்கு தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் இது சூப்பர் டைமிங்.படத்தில் ஒளியமைப்பு மற்றும் framing வெகு பிரமாதம்.ஆனா படத்தை பார்த்தா ஆக்‌ஷன் படம் என்ற உனர்வு வராதது படத்தின் மிகப்பெரிய மைனஸ் :(

வெங்கட்நாராயணன்

அற்புதமான ஒளியமைப்பு இந்தப்படத்தில்.அதனால தான் இதே மாதிரி எடுக்கப்பட்ட ஜோவின் வசந்தகுமார் அவர்களின் படத்தை பின்னுக்கு தள்ளி இந்தப்படம் எனது கடைசி பதினான்கில் இடம் பிடித்தது.ஆனா படம் ரொம்ப சாதாரணமாக (cliched) இருந்ததால் மற்ற படங்களோடு ஒப்பிடும்போது அடிப்பட்டு போய் விட்டது.

இந்த முதல் பத்து படங்களை நான் தேர்ந்தெடுக்கும் போது பார்த்த விஷயங்கள்.

1.)தலைப்பிற்கு பொருத்தம்
2.)ஈர்ப்புத்தன்மை(இது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.ஒருத்தருக்கு பிடிச்சது ஒன்னொருத்தருக்கு பிடிக்காம போகலாம்.ஒருத்தருக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சது இன்னொருத்தருக்கு கம்மியா பிடிக்கலாம்.Its a variable factor)
3.)சாதாரண கோணத்தில் எடுக்காமல் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படங்கள்.வித்தியாசமான கருப்பொருள்களை கொண்ட படங்கள்
4.)ஷேக் ஆகாமல் தெளிவு,contrast,காட்சியமைப்பு,ஒளியமைப்பு சிறப்பாக அமைந்த படங்கள்.

சீக்கிரமே முதல் மூன்று படங்களோடு சந்திக்கிறேன். தனியாக உங்கள் படங்களை பற்றிய கருத்துக்கள் வேண்டுமென்றால் பின்னூட்டத்திலோ அல்லது மின்மடலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.நேரம் கிடைக்கும்போது மறுமொழி அளிக்கிறேன்.
வரட்டா?? :-)

23 comments:

 1. Very Nice Selection !
  All the Best for the Top 10 !!!
  -nathas

  ReplyDelete
 2. முதல் படத்தில் பின்னிருப்பது(போவது) ஒரிஜினல் பஸ்ஸா? இல்லை இணைப்பா?

  ReplyDelete
 3. எல்லாம் அருமை!
  திருவாளர் நந்து அவர்கள்
  தண்ணீரின் ஆக்‌ஷனை மட்டும் படமெடுத்திருப்பது அவரது தண்ணி பற்றை காட்டுது.

  ReplyDelete
 4. அத்தனையும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ஹைய்யா முதல் தடவையா .. என் படம் முதல் சுற்றுலயே வெளியே தள்ளப்படல.. :)

  ReplyDelete
 6. கைப்புள்ள கலக்கல்

  ReplyDelete
 7. Congrats to top 10 winners:)

  ReplyDelete
 8. @வால்பையன்
  தனது படத்தை பற்றி ஒப்பாரி ஒரு தனிப்பதிவே போட்டிருக்கிறார்.
  படிச்சு பாருங்க :)

  ReplyDelete
 9. very good selection.

  congrats to winners.

  //ஹைய்யா முதல் தடவையா .. என் படம் முதல் சுற்றுலயே வெளியே தள்ளப்படல.. :)//

  :) kalakkiputteenga! sema padam adhu!

  ReplyDelete
 10. அத்தனையும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. congrats to top 10
  முதல் பத்தில் தேர்வானதில் மகிழ்ச்சி.

  \\முதல் படத்தில் பின்னிருப்பது(போவது) ஒரிஜினல் பஸ்ஸா? இல்லை இணைப்பா?//

  வால் பையன் அந்த படம் சர்ச்சைகுரிய படம் அல்ல. தனிப்பதிவு போட்டிருக்கேன்.

  //ஹைய்யா முதல் தடவையா .. என் படம் முதல் சுற்றுலயே வெளியே தள்ளப்படல.. :)//

  :) kalakkiputteenga! sema padam adhu!//

  ரிப்பீட்டேய் , இதுவரைக்கும் நான் பார்த்த உங்க படங்களில் இதுதான் பெஸ்ட். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நன்றி

  ஏற்கனவே ஒரு புகைப்படம் அனுப்பியதால் இதில் உள்ள படங்களை போட்டிக்கு அனுப்ப முடியவில்லை.

  http://picasaweb.google.co.in/nvenkatnarayanan/AeroShow#

  படங்களை பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் (+ve or -ve)

  All pictures are taken with 1/3200 or 1/4000 shutter speed

  ReplyDelete
 13. நானும் முத்துலெட்சுமியையே ரிப்பீட்டிக்கிறேன்!!

  வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 14. எல்லா படமும் அருமை..அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 15. எல்லாப்படமும் அருமை. வாழ்த்துகள்

  ReplyDelete
 16. வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள். எனது வேறு சில படங்கள் இந்த தளத்தில்.
  http://colourfotos.blogspot.com

  ReplyDelete
 17. 7வது ஃபோட்டோவிற்கு பின்னால் இருப்பது ஸ்கீரீனா?

  படங்கள் அனைத்தும் .... முதல் தரம்.

  PIT gets tougher.

  ReplyDelete
 18. 7 வது படத்தில் பின்னால் இருப்பது தட்டி போர்ட்.. ராமேஸ்வரம் கோயில் போன்றதொரு மண்டப அமைப்பு..தட்டி மங்கலான ஒன்றாக இருந்தது. அதனால் தெளிவாக இல்லை..

  ReplyDelete
 19. நான் ரொம்ப ரசிச்ச படம் எல்லாமே வந்திருக்கு
  அனைவருக்கும் வாழ்துக்கள்.

  அதுலையும் எங்க ஊரு தொழிலதிபர்கள் நந்துணாவும்,சுரேஸ்ணாவும் தேர்வாகிருப்பது டபுல் சந்தோசம்.

  ReplyDelete
 20. அனைத்து படங்களும் அருமை.

  கைப்புள்ளையின் கலக்கல் படம் ... ஒரு கனம் சிலிர்க்க வைத்தது உண்மை.

  ReplyDelete
 21. அனைத்து படங்களும் அருமை என்று அமைந்து நடுவர்களை திக்கு முக்காட வைத்திருக்கும்.
  தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. naa anupna padam ungaluku vanthuducha nu enaku theriyalaye....epdi therijukrathu

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff