வணக்கம் மக்கா,
முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!
இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.
மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்
முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!
இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.
மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்
இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள் முழுவதும் தெரிந்து இருந்தால் இன்னும் நன்றாக வந்து இருக்கும் என்று என் எண்ணம் :)
இரண்டாம் இடத்தில்: கருவாயன்
இவரு குழந்தைகளை வச்சு எடுக்கற படம் எல்லாம் கவிதை மாதிரி இருக்கு. அக்கா தம்பியோட(?) மகிழ்ச்சி நமக்கும் தொத்திக்குது. Backlite Hair is TooGood !. கொஞ்சம் டைட் க்ராப்.
முதல் இடத்தில: Greg
தாயின் பூரிப்பு, குழந்தையின் சிரிப்பு, இவை இலகுவாக இந்த படத்தை முதல் இடத்துக்கு கொண்டு வந்துடுச்சு. இவரு பெரிய ப்ரொஃபஷனல் போல இருக்கு. இந்த படத்துக்கு எங்க எங்க லைட் வச்சு படம் எடுத்தீங்கன்னு சொன்னா எங்கள் அனைவருக்கும் உதவியா இருக்கும் :) இந்த படத்துல குறைன்னு பாக்கறப்போ கொஞ்சம் வெளிச்சம் ஜாஸ்தி :D

மிக அருமையான படம். என்ன கண்கள் அது?. பட்டாஸா இருக்கு. ஆனா "உணர்வுகள்" என்ற தலைப்பு வரும் போது இந்த படத்தால முதல் மூன்று இடங்களில் வர முடியவில்லை :(
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
ஒவ்வொரு படத்திற்கான விமர்சனத்தையும் Picassa Web Albuthula போட்டாச்சு :)