Monday, June 29, 2009

PiT ஜூன் 2009 - முதுமை - போட்டி முடிவுகள்

14 comments:
 
இம்மாத போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. முதுமையை க்ளிக்கிய நண்பர்களின் படங்கள் மொத்தமும் இங்கே பார்க்கலாம்.
முதல் சுற்றில் தேறிய படங்களை இங்கே பார்க்கலாம்.

இனி, போட்டியில் வென்ற முதல் மூன்று முதுமைகளைப் பார்க்கலாம்.

3. முதுமையில் வரும் இயலாமையை உணர்த்திய கருவாயனின் படம் அருமை. கலர் டோனும் படத்தின் சப்ஜெக்ட்டில் ஒரு வெறுமையை காட்ட உதவியிருக்கு. மூன்றாம் இடம் பிடித்த கருவாயனுக்கு வாழ்த்துக்கள்!

முதுமையை தத்ரூபமாய் ப்ரதிபலித்த ப்ரகாஷும் கவனத்தை ஈர்த்தார். அருமையான க்ளிக்கு அது. பாட்டியா, இல்லை பெரியவரான்னு கொஞ்சம் கொழப்பம் வந்துது. ப்ரகாஷின் கலர் டோனில் கொஞ்சம் செயற்கைத் தனம் இருந்தது. ஷார்ப்னஸும் குறைவு. கீழே இட, வலதில் மங்கலா இருக்கு? வேணும்னா பண்ண ப்ளர்ரா இல்லை லென்ஸில் தண்ணியா?

2. Vinoவின் தாத்தா படத்துக்கு ரெண்டாவது இடம். படத்தில் ஷார்ப்னெஸ் கம்மியாகி, வெளிறிப்போயிருந்து, காம்போஸிஷன் கொஞ்சம் தப்பாத் தெரிஞ்சாலும், ஒவ்வொரு முறை படங்களை அலசும்போதும், கண்ணு வந்து இந்த தாத்தா மேல நிலை குத்தி நிக்குது. படத்திற்கு அமைந்த வெளிச்சம், தாத்தாவின் நிலமை, கறுப்பு வெள்ளை, இதில் ஏதோ ஒண்ணு இந்தப் படத்தை வசியம் செய்ய வைக்குது. இந்த மாதிரி படங்களில், இயன்றவரை, 'கையெழுத்து' லைட்டா இருக்கணும். கண்ணுக்கு உறுத்தர மாதிரி வைக்காதீங்க. வாழ்த்துக்கள் Vino.


1. சிறப்பான சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்துவிட்டாலே, முக்கா கிணறு தாண்டிய மாதிரி. அன்பு ஆனந்தின் இந்த படம் அந்த வகை. பாட்டி முகத்தின் ரேகைகள் அருமையா பதிஞ்சிருக்கு.
நெற்றியின் பாதியிலிருந்து, 'சின்' வரைக்கும் இன்னும் டைட்டா கிராப் பண்ணியிருக்கலாமோ? வாழ்த்துக்கள் அன்பு ஆனந்த்! இந்த மாச ஃபர்ஸ்ட்டு நீங்கதான்.


தலைப்புக்கேற்ற படங்களை அனுப்பி, போட்டியை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

நண்பர்கள் அனைவரும், எல்லா படங்களையும் பார்த்து, உங்கள் விருப்பு வெறுப்புக்களை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!

14 comments:

 1. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள் :)))

  ReplyDelete
 2. 1, 2,3 ஆ?

  அல்லது

  3, 2, 1ஆ?

  கொஞ்சம் திருத்துங்க ப்ளீஸ்...

  ReplyDelete
 3. முதுமையை முன்னிறுத்தும்
  அருமையான தேர்வு!
  முந்திய மூவருக்கும்
  வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 4. அருமையான தீர்ப்பு.

  நீதிக்கு தலைவணங்குகிறேன்

  ReplyDelete
 5. ஆ!, 3, 2, 1.

  நடுராத்திரில பதிவு போட்டதால் வந்த கன்ஃப்யூஷன் அது. மன்னிக்க! :)

  ReplyDelete
 6. கொஞ்சம் பழைய கேமராதான், ஆனா லென்ஸ்ல தண்ணி எல்லாம் இல்லீங்க. PP effect than :-)

  ReplyDelete
 7. vinovinothggmail.comJune 30, 2009 at 12:05 AM

  Thanks ... And by the Way.,

  "அவர் என் தாத்தா என்று சொல்ல பட்டிருக்குக்கிறது; ஒப்பு கொள்கிறேன்; ஆனால் என் தாய் தந்தையை பெற்றவரல்ல;
  - தந்தை என்று பாராமல் தான் பெற்ற பிள்ளைகளால் துறத்தபட்டு இந்த தேசத்தில் பிச்சைகாரனாய் மாறிப் போகும் தாத்தாக்களில் இவரும் ஒருவர்... அவரை புகைப்படம் எடுத்திடும் பேரன்களில் நானும் ஒருவன்... அவ்வளவே... "

  Happy i got second palce. I accept that pic lacks a lot of Details... nice comments., will b helpful for the next entry.. Thanks again.

  ReplyDelete
 8. படமாக இருக்கும் முதியோர் நலமாக இருக்கட்டும். வெற்றி வேந்தர் மூவருக்கும் வாழ்த்துகள்

  கருவாயன் பாட்டி வெயில்லில நிக்காம நிழலுக்குப் போங்க.

  ReplyDelete
 9. vino,
  ///அவர் என் தாத்தா என்று சொல்ல பட்டிருக்குக்கிறது////

  அப்படி நினைத்துச் சொல்லலை. நீங்கள் எடுத்த 'தாத்தா' படம் என்று கருத்து கொள்ளவும்.

  நன்றி.

  ReplyDelete
 10. ப்ரகாஷ்,
  ///கொஞ்சம் பழைய கேமராதான், ஆனா லென்ஸ்ல தண்ணி எல்லாம் இல்லீங்க. PP effect than :-)//

  :) கீழ மட்டும் இருந்துசு. மேல பி.பி காணும், அதான் சந்தேகம் வந்துடுச்சு :)

  நல்ல க்ளிக் அது. ஒரு மூட் கிரியேட் பண்ணியிருந்தீங்க.

  ReplyDelete
 11. hm... alright. No issues.. :) just wanted to tell my point abt the pic., tats it..

  ReplyDelete
 12. நடுராத்திரில பதிவு போட்டதால் வந்த கன்ஃப்யூஷன் அது.//

  அது தானே நேரம் கெட்ட நேரத்துல பதிவு வந்திருக்கேனு பாத்தேன்... :)

  இப்போ வார்த்தையிலும் அப்டேட் கிளியரா இருக்கு.

  ReplyDelete
 13. congratulations to winners... very good selection.

  ReplyDelete
 14. happy to won the 3rd place...congrats other winners....
  -karuvayan

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff