Friday, August 6, 2010

குழுப்போட்டி - முடிவுகள்

22 comments:
 
குழுப்போட்டி அறிவிப்பு வந்து ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப காலமா இழுத்தடிச்சு, இப்ப ஒரு வழியா முடிவை அறிவிக்கும் நாள் வந்துடுச்சு. இத்தனை நாள் இழுத்தடித்தர்க்கு நெம்ப சாரி. போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றீஸ்.

இனி முடிவுகளை பாப்போம்.

போட்டியில் குதித்த ராஜபாளையம் குழுப் படங்கள் ராஜபாளையத்தின் அழகை பிரதிபலித்து, போட்டித் தலைப்புக்கும் நன்றாய் ஒத்துவந்திருந்தது. 120 படங்களில் பலதும் அருமையாக இருந்தது. ஊரின் ப்ரதான இடங்கள் பலதையும் அரன்கேற்றி இருந்தார்கள். ஒரே குறை, படங்கள் பலதிலும், 'பஞ்ச்' குறைவாகவே இருந்தது, மற்ற குழுக்களின் படங்களோடு ஒப்பிடும்போது.

City of Summer, Sydney, Australia 'குழு'வும்,
Truth 'குழு'வும், ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவில்லைன்னு ஏற்கனவே சொல்லியாச்சு. 'குழு'வோட வரச்சொன்னா, சிங்கிளாதான் வருவோம்னு உறுமிக்கிட்டே வந்ததால், இந்த நிலை.
Truth (25 படங்கள்),ஷ்ரெயா (21 படங்கள்)


Melbourne, Australia குழுவும், விஜயாலன், தனி நபராக க்ளிக்கித் தள்ளி ஆல்பம் செய்திருந்தது, படங்களை அலசும்போது தெரிந்தது. இவரும், ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவில்லை.


போட்டி அறிவித்ததும் துரிதமாய் செயல்பட்டக் குழு, அமல் மற்றும் செந்திலின் LosColoresOrange, Orange County, California குழு. Orange county கடற்கரைகளை கண் முன் கொண்டு நிறுத்தியவர்கள், தங்கள் ஏரியாவின், மற்ற பிரதானங்களை சேர்க்கத் தவறியிருந்தார்கள். ஊரின் வாசம் கிட்டவில்லை. 65 படங்களும், பட்டையை கிளப்பும் விதம் இருந்தும் ஒரு முழுமை இல்லாத நிலை. ட்ராஃபிக் நெரிசல், மக்கள், ஏர்போர்ட், அருகாமை டிஸ்னி, போன்றவைகள் சேர்த்திருந்தால், பன்ச் கூடியிருக்கும்.
குழுப்போட்டியின் மூன்றாம் இடம், Orange County குழுவின், அமல் மற்றும் செந்திலுக்கு. வாழ்த்துக்க்ள் அமல்,செந்தில்.

குழு: Amal, Senthil

அடுத்ததாய் இருப்பது, Delhi குழுவும், Uniquely சிங்கப்பூர் குழுவும்.
இந்த இரு ஆல்பத்தையும் அலசும்போது, எது எதை மிஞ்சுகிரது என்பது ஒரு குழுப்பமான தேர்வாய் இருந்தது.
'எங்க ஏரியா' என்ற தலைப்புக்கு கனக்கச்சிதமாய் பொருந்தி இருந்தன Delhiக் குழுவின் படங்கள். பிரதான கட்டடங்கள், ஜந்தர் மந்தர், ரயில் நிலையம், சாலையோரக் கடை, சமோசாக் கடை, டில்லி மக்கள் என்ற ஒரு 'ஏரியா' ஆல்பத்துக்கு வேண்டிய அனைத்து ரக படங்களும் இடம் பெற்றிருந்தன.
எங்க இடிச்சுதுன்னா, அநேகம் படங்களும் (52) , பொலிவில்லாமல் ஒரு புத்தகத்தில் அச்சிடும் ரகத்தில் இல்லாது இருந்தது.
குழுப்போட்டியின் இரண்டாம் இடம், Deadal Delhiக் குழுவின் Mohankumar, Karunakaran, Venkat Nagarajan மற்றும் Muthuletchumiக்கு.
வாழ்த்துக்கள் Delhiகுழு.


அப்பரம் என்ன? தண்டோரா அடிச்சுட வேண்டியதுதான?
குழுப்போட்டியின் முதல் இடம், நம்ம uniquely சிங்கப்பூர் குழுவையே சேரும்.
பெரிய குழு அமைச்சு பட்டையைக் கிளப்பிட்டாங்க.
( குழு: சத்யா - ஒருங்கிணைப்பாளர், ராம்/Raam - ஆலோசகர், ஜோசப், அறிவிழி - ராஜேஷ், கிஷோர், பாரதி, ராம்குமார்(முகவை)ஜெகதீசன்)

ஒவ்வொரு படமும், அச்சிடத்தக்க வகையில் பளிச் ரகம். மிகவும் ரசனையுடன், பரிசு பெறக்கூடிய சகல லட்சணங்களுடன் படம். மக்கள், கடை, சாலை, வாகனம், கட்டடம், மழை, வெயில், கடல், மிருகம் என்று சகலமும் இருந்தது. சிங்கப்பூரை ஒரு ரவுண்டு அடித்ததைப் போல் அனுபவம் தந்தது.
ஒரே குறை, ஆல்பத்தில் ஒரே மாதிரி யான படங்கள் இரண்டு முறை ஏற்றப்பட்டிருப்பது. சுருக்கியிருக்கலாம். 100+ படங்களில், 20 குறைத்து, குட்டியாக்கியிருக்க்லாம். ஆனாலும், குறையில்லை.

வாழ்த்துக்கள் சிங்கப்பூர் குழு!


ECP, SingaporeAn Evening at ECP, Singapore
At singapore Zoo-3Hong Bao River Festival -3
Swiss Hotel @ SingaporeHong bao River Festival-1


கலந்து கொண்ட அனைவருக்கும் பெரிய நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள்.

முதலிடம் பெற்ற சிங்கப்பூர் குழுவின் ஆல்பத்தில் உள்ள படங்களை, முன்னர் அறிவித்தபடி, ஒரு photo bookஆக (ஒரே ஒரு புத்தகம் மட்டுமே), உருவாக்கி, அனுப்பி வைக்கப்படும்.
சிங்கைக் குழு, ஆல்பத்தை கூட்டிக் குறைத்து, வேண்டு மென்றால் இன்னும் சில புதிய படங்களை அதில் சேர்த்து, உங்களுக்கு மிகவும் பிடித்த 100 படங்களை ஒருங்கிணைத்து ஒரு zip ஃபைலாக ஒரிஜினல் படங்களை esnips.com போன்ற தளத்தில் ஏற்றி தெரியப்படுத்தவும். ஈ.மடலில் surveysan2005 at yahoo.comக்கு குழுவிலிருந்து ஒருவர் தொடர்பு கொள்ளவும். மற்றவை, ஈ.மடலில் அளவளாவலாம்.

நன்றீஸ் மக்கள்ஸ்!

22 comments:

  1. PiT துவங்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது என்பது தற்செயலாக கண்ணில் பட்டது.
    ஊக்குவித்த அனைவருக்கும் நன்றீஸ். :)

    ReplyDelete
  2. பிட்டின் முயற்சிகளுக்கு எங்களது வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணிகள்!

    ReplyDelete
  3. பதிவில் டெல்லி போட்டோஸ் லிங்க் கொடுங்களேன்..

    ReplyDelete
  4. PiT குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    "போதிய படங்களும் ஆல்பத்தில் இல்லை. ஆனாலும்,21 பட்ங்களில் அனைத்தும் அருமை" என்ற நடுவரின் கருத்தை மட்டும் புரிந்துகொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சிங்கப்பூர் குழு !!!!

    ReplyDelete
  7. பிட்டின் மூன்று ஆண்டு கால சாதனையும், சேவையும் மேலும் தொடர வாழ்த்துக்கள்!

    எங்கள் (Uniquely Singapore) குழு போட்டியில் வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ராம், ஜோசப், அறிவிழி - ராஜேஷ், கிஷோர், பாரதி, ராம்குமார், ஜெகதீசன் அனைவருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ராஜபாளையம், கலிபோர்னியா, டெல்லி ஆகிய குழுக்களின் படங்களும் மிக அருமை. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். சிங்கை குழு ஆல்பத்தை விரைவில் zip செய்து அனுப்புகிறோம்.

    ReplyDelete
  8. vijay,

    i think the requirement was minimum of "50" photos ( to make a Photo book ) and 21 was not meeting the requirement.

    ReplyDelete
  9. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. புகைப்படத்தொகுப்பில் 73 புகைப்படங்கள் உள்ளனவே?
    உங்களுக்கு 21 மட்டும்தான் தெரிகின்றனவா?
    (சும்மா தகவலுக்காக மட்டும்.)

    ReplyDelete
  11. நீண்ட நாட்களாகவே நீங்கள் எந்த புதுப்பதிவும் காமெரா பற்றி போடுவதில்லையே ஏன், (சிலது இருந்தாலும் ரொம்பவும் குறைவாக இருக்கிறது) ஒரே போட்டி, விமர்சனம், போட்டி முடிவுகள் என்றே போகிறதே.....

    இந்த தளத்தின் தீவிர வாசகன் நான்.. நீங்கள் அமைதியாக இருப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது!!

    ReplyDelete
  12. மூன்றாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.

    சிங்கப்பூர் குழுவை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

    அறிவிலி-ராஜேஷ், சிங்கப்பூர்.

    ReplyDelete
  13. @ஆதவா..

    உங்களது ஆதங்கம் புரிகின்றது..நீங்கள் நினைப்பதையே தான் நாங்களும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்..

    ஆனால்,எங்கள் அனைவருக்கும் வேலை சுமை அதிகம் இருப்பது மறுக்கமுடியாத உண்மை...

    தனியாக photography ஐ பற்றி ஒரு பதிவு போட வேண்டுமென்றால், மிகவும் எச்சரிக்கையாக கவனித்து தான் எழுத வேண்டும்..இதற்கு கண்டிப்பாக நேரம் அதிகம் பிடிக்கும்..

    போட்டி,விமர்சனம் என்றால் அது வேறு... அது கொஞ்சம் எளிது ..

    விரைவில் அது சரியாகிவிடும்..சற்றே பொறுங்கள்..புது பதிவுகள் ரெடியாகிவிடும்..

    -கருவாயன்

    ReplyDelete
  14. Vijay, 21 pics was in sydney,australia.
    melbournd has 73 pics.

    my bad. will fix it.

    thanks for pointing out and thanks very much for the participation. great clicks.

    ReplyDelete
  15. பரிச்ய் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள் லட்சுமி

    ReplyDelete
  16. Singapore team, pls send the file. thx.

    ReplyDelete
  17. போட்டியில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் குழு, Delhiகுழு & ராஜபாளையம் குழு-விற்கு வாழ்த்துகள்!!!
    எங்கள் குழுவின் கடற்கரை படங்கள் எங்களுடைய மீதிப்படங்களை அமுக்கிவிட்டதா...இல்லை நீங்கள் முடிவில் சொன்னதுபோல் (உங்களுக்கு தெரிந்த ஏரியா என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும்) மக்கள் மற்றும் டிஸ்னிலாண்ட் படங்கள் உங்கள் கண்ணுக்கு தட்டுப்படவில்லையா? உங்கள் விதிகள் மற்றும் படத்தின் தரம் எங்களின் படத்தில் உள்ளது என்பதே எங்களின்( குழுவின் உறுப்பினர்கள் மட்டும் அல்ல) அனுமானம்...
    இன்னும் பல கேள்விகள் மனதில் இருந்தாலும், நீங்க சொன்னதுபோல் (as you said), மற்ற நடுவர்களின் முடிவையும் எதிர்பார்த்து, நீங்கள் குறிப்பிட்ட பின்வரும் உங்கள் கேள்விக்கான பதிலை மற்ற நடுவர்களிடம் எதிர்நோக்கி....

    //எப்படி வெற்றி குழுவை தேர்ந்தெடுப்பீங்க?
    PiT குழும உறுப்பினர்கள் நடுவர்களாக இருந்து, வெற்றி ஆல்பத்தை தேர்ந்தெடுப்போம்.
    //

    தப்பா எடுத்துக்காதீங்க..கேக்கனும்னு தோணுச்சு.. கேட்டுட்டேன்....

    ReplyDelete
  18. அமல்,
    என்னுடைய கருத்து :

    உங்களின் படம் உண்மையிலே மிகவும் தரம் வாய்ந்தது. ஆனால் "நகரம்" என்ற வட்டத்துக்குள் சில படங்கள் மட்டுமே பொருந்துகிறது. பெரும்பாலான படங்கள் பொதுவாய் தனித்து நிற்கிறது. வேறு எந்த இடத்தில் போட்டாலும் அந்தப் படங்கள் பொருந்துவது போல இருக்கிறது. மற்றபடி படம் எடுக்கப் பட்ட கோணம், தரம் என பார்த்தால் உங்கள் படமே அனைத்திலும் முன் நிற்கிறது. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. i didnt get the pictures from singap team yet. fyi.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff