Saturday, June 25, 2011

ஜுன் 2011 போட்டி - முடிவுகள்

16 comments:
 
எல்லாருக்கும் வணக்கம்.

ஒரு முடிவோடுதான் வந்திருக்கேன். போட்டியோட முடிவைச் சொன்னேன். :)

சரி, நான் எதன் அடிப்படையில் படங்களை தேர்வு செய்தேன் என்று கூறி விடுகிறேன்.
* படம் தலைப்புக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.
* படம் தெளிவாக இருக்க வேண்டும்
* கம்போசிங் நன்றாக இருக்க வேண்டும்.
* இறுதியாக, என்னுடைய சொந்த ரசனை. :)

இதோ முடிவுகள்:

முன்றாம் இடம்:- விஜய் ப்ரகாஷ்(மதராசப் பட்டணம்)


அருமையான படம். படத்தை பார்த்த உடன் எனக்கு முதலில் மனதில் தோன்றியது, இணையங்களில் உலவி வந்த பழைய சென்னைப் பட்டிணத்தின் படங்கள்தாம். அந்த உணர்வே தோற்றுவித்த கணமே இந்தப் படம் வெற்றி பெற்று விட்டது. அதோடில்லாமல், அழகாக கம்போஸ் செய்திருக்கிறார். ஒரே ஒரு குறை சிறிய சரிவு உள்ளது. விளக்கு கம்பத்தை பார்த்தால் வலது புறம் சிறிது சரிந்திருப்பது தெரியும். 'லீடிங் லைன்ஸ்' வலது புறத்திலிருந்து கண்களை படத்தின் நடுப்பாகத்துக்கு இழுத்து செல்கிறது. எதிரேயுள்ள வீடுகளின் திண்ணைகள் அழகான 'Horizon line'-ஐ அமைத்துள்ளன. முக்கியமாக, அந்த செபியா நிறம்... அருமையான பிராசசிங். அந்த vignette-வை குறைத்திருக்கலாம். மூன்றாம் இடம் பெற்ற விஜய் பிரகாஷுக்கு வாழ்த்துகள்!

இரண்டாம் இடம்: காயத்ரி (பள்ளிக் கூடம்)


அந்த உடையில் அந்த சிறுமியை பார்த்த உடனேயே நமக்கு பள்ளிக்கூடம் நினைவுக்கு வந்து விடுகிறது. மிகவும் அழகா கம்போஸ் செய்யப்பட்ட படம். வெகு இயல்பான pose படத்துக்கு ப்ளஸ் (தற்செயலா அமைஞ்சதா? இல்லை போஸ் கொடுக்க சொன்னீங்களா?). சிறுமியின் அருகில் இருக்கும் படிப்பு/பள்ளி சார்ந்த பொருட்கள் படத்துக்கு வலு சேர்க்கிறது. நல்ல ப்ராசசிங்கும் கூட. வாழ்த்துகள் காயத்ரி!

முதல் இடம்:- ஆன்டன் (அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது)


'வாவ்!!' இதுதான் இந்த படத்தை பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது. படத்தின் தலைப்புக்கு அப்படியே பொருந்தி விடுகிறது. அழகான மேக்ரோ. என்ன தெளிவு, என்ன கூர்மை. Shallow DOF அழகாக பயன்பட்டிருக்கிறது இந்த படத்தில். அருமையான ப்ராசசிங். ஆக மொத்தம் முழு மதிப்பெண்கள் கொடுக்கலாம் இந்த படத்திற்கு. பொது வாக்கெடுப்பு நடத்தினாலும், இப்படமே முதலிடம் பெறும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. வாழ்த்துகள் ஆன்டன்!! கலக்கிட்டீங்க!!!


சிறப்பு கவனம் பெற்ற இரண்டு படங்கள்:

விதூஷ் (பசங்க)


நல்ல படம். வெகு இயல்பா பசங்க விளையாடுவதை படமாக்கி இருக்கிறார். ஆனால், படத்தில் 'noise' அதிகம் உள்ளது (பசங்க உடலில் பார்த்தால் தெரியும்). பாராட்டுகள் விதூஷ்!!


வருண் (அழகர்சாமியின் குதிரை)


பார்த்த உடன் கண்ணைக் கவரும் நிறம். குதிரையின் கால்களும் வாலும் முழுமையாக தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுகள் வருண்!!

சரி, மற்ற படங்களுக்கான எனது கருத்துகள் போட்டியின் ஆல்பத்தில் சேர்த்துள்ளேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. என் மனதில் தோன்றிய ப்ளஸ்/மைனஸ்களே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இங்குள்ள பாடங்களை தேடிப் பிடித்து படியுங்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த மாதமும் ஒரு சுவராஸ்யமான தலைப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. விரைவில் எங்கள் குழு போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திக்கும்.

ஒத்துழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

16 comments:

 1. வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 2. சூப்பர் எதிர்பார்த்த மாதிரியே முடிவு.

  ReplyDelete
 3. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ஆன்டன், காயத்ரி, விஜய் பிரகாஷ், விதூஷ், வருண்:)!

  ReplyDelete
 5. வெற்றிபெற்ற & சிறப்பு கவனம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

  இம்மாத போட்டியில் பலரது படங்கள் முதல் சுற்றில் தேர்வு பெறாமைக்கு காரண‌மாக இருந்தது "Sharpness is missing" "படம் தெளிவில்லை" என்பதுதான்.
  எனவே படத்தின் ஷார்ப்பை தெளிவாக தருவது எப்படி என ஒரு பதிவு போடலாமே.... பயனுள்ளதாய் இருக்குமென்பது எனது கருத்து....

  பிழையிருந்தால் மன்னிக்கவும்

  என்றும் அன்புடன்
  நித்தி கிளிக்ஸ்

  ReplyDelete
 6. எதிர்பார்த்த படங்கள் தான் தேர்வாகியிருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. Congrats Anton..I knew your's will be in first place :)

  Congrats to other winners too.

  ReplyDelete
 8. நான் எழுதனும்னு வந்ததை அதுக்குள்ள ப்ரபு எழுதிட்டாங்க :-) வாழ்த்துக்கள் ஆன்டன் :-)

  வாழ்த்துக்கள் காயத்ரி, விஜய் பிரகாஷ், விதூஷ், வருண்:)!!

  ReplyDelete
 9. நல்ல தேர்வு, naufal.

  வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 12. Thanks Nafual!! Thank you PiT friends!! Congrats fellow winners!!
  Thank for your wishes and comments here and in Picasa album!!

  ReplyDelete
 13. This ‘jumping spider’ is like one of my trump cards as it deserves to 894 views, 457 comments, 70 favorites & 6 galleries in flickr. It played well here too!

  @Prabhu & Sruthi, seems you both have prediction skills :) And, many of you predicted in Picasa album too!

  Dear PiT friends, your “photographic hospitality” is awesome!

  ReplyDelete
 14. Thanks for selecting my photo in 2nd place. Congrats to other winners also !!
  Regards
  Gayathri.s

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff