Wednesday, December 26, 2012

வணக்கம் நண்பர்களே,

முதல் சுற்றுக்குத் தேர்வான 10 படங்கள்.  வரிசைப்படுத்தலுக்கும் படங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

#Boopathi



#Kumaraguru


#Senthilnathan


#Prabhu


#Kajan


#Mervin


#Karthikeyan


#Kandeepan


#Venkatraman


#Siva


கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்துப் பேருக்கும் வாழ்த்துக்கள்!!

***

Tuesday, December 18, 2012

இந்தத் தொடரை எழுதி வரும் திரு நடராஜன் கல்பட்டு அவர்களின் புகைப்பட அனுபவங்கள் பேட்டியாக  பொதிகை தொலைக்காட்சியின் “பொன்னான முதுமை” நிகழ்ச்சியில் ஒளி பரப்பாக உள்ளது.

பேட்டி இரு பகுதிகளாக  நாளை டிசம்பர் 19 மற்றும் 26 தேதிகளில் மதியம் 3:30 மணியளவில் ஒளி பரப்பாக உள்ளன.

மீண்டும் இரு பகுதிகளும் டிசம்பர் 21 மற்றும் 28 தேதிகளில் நள்ளிரவு 12-00 மணிக்கு மறு ஒளி பரப்பாக உள்ளன.

பேட்டியோடு அவர் எடுத்த ஒளிப்படங்களையும் நிகழ்ச்சியில் காண்பிக்க இருக்கிறார்கள்.  

- PiT
---------------------------------------------------------------------------------------------------------------------------

வண்ணாத்திக் குருவி

பறவைகளில் தையல் காரரையும் நெசவாளியும் பார்த்தோம். இவர்கள் இருக்கும்போது ஒரு சலவைத் தொழிலாளி வேண்டாம்?

ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்?  வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக் குருவிக்கு இப்பெயரோ?  அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ?

 #1

வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் பிரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளை    களிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி தான்.  வீட்டு வேலை அதிகம் செய்வதால் அந்த நிறமோ!  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும்.                       

இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவா?  எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.

 வில்லன் மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வெண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்.  நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்து விட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.     சொந்த அனுபவத்தில் தான் இதைச்சொல்கிறேன்.

இந்த விஷயத்தை எனது அண்ணன் மகனிடம் சொன்ன போது அதை ஒரு கேலிச் சித்திரமாக்கி விட்டான் அவன்.  அந்தப் படம் இதோ:
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்த பின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.

 வண்ணாத்திக் குருவியை 1965ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.

 பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம்.  அலுவலகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் கும்பலாக வந்தவர்களில் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க அலுத்துப் போய் பதில் சொல்லாமல் நின்றோம் ஒரு கணம்.  மறு கணம் அவர்களில் ஒருவர், "விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!

அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது நாங்கள் வண்ணாத்திக் குருவியின் வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்பது!
***


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

&  

ஒரே ஒரு போட்டோவுக்கு எட்டு வாரம் - தினகரன் வசந்தத்தில் நேர்காணல்

Tuesday, December 11, 2012


சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஏராளமான பரிசுகளுடன் காத்திருக்கிறது உங்கள் படங்களுக்காக ரெட் ஃப்ரேம்ஸ்.

பொதுவான விதிகள் மீண்டும் இங்கு:

நீங்கள் நேசிக்கும் ஒரு ஊரின் இடங்களையும், மக்களையும், அதன் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளையும் படமாக்க வேண்டும். அது பிறந்த ஊரோ, வசிக்கும் ஊரோ அல்லது குறிப்பிட்ட சிறப்புகளினால் மனதைப் பறிகொடுத்த ஊரோ எதுவாயினும் இருக்கலாம்.

தகுதி: பதினெட்டு வயதான அனைத்து இந்தியர்களும் கலந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை.

ஒருவர் பத்து படங்கள் மட்டுமே சமர்பிக்கலாம்.

மூன்று இலட்சம்
 ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.

படங்களின் உரிமை முழுக்க முழுக்க எடுத்தவரையே சாரும். பரிசினை வெல்லும் பட்சத்தில் அவற்றை ரெட் ஃப்ரேம்ஸ் ப்ரோமோட் செய்ய உங்கள் அனுமதியைத் தர வேண்டும்.

படங்கள் வேறு போட்டிகளில் பரிசினை வென்றவையாக இருக்கக் கூடாது.

இரண்டு வருட காலத்துக்குள் எடுத்தவையாக இருக்க வேண்டியது அவசியம்.

சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் எனக் கலை சம்பந்தமானவற்றையும் காட்சிப் படுத்தலாம். ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக எடுத்தவையாக இருக்கக் கூடாது.

முடிவுத் தேதி: 20 ஜனவரி 2013

---------------------

விரிவாக அறிந்திட இங்கே செல்லுங்கள்: http://www.redframes.in/fomc_2012.php
வாராந்திரப் பரிசுகளும் உண்டு. ஆறாம் வாரத்துக்கான படங்களை அனுப்ப நாளையே (12/12/12) கடைசித் தேதி போன்ற Red Frames-ன் அவ்வப்போதான அறிவிப்புகளையும் நினைவூட்டல்களையும் பெற நீங்கள் ஃபேஸ்புக்கிலும் தொடரலாம்:  http://www.facebook.com/redframes.in?fref=ts

[சென்ற வருடப் போட்டி முடிவுகள் மற்றும் பெங்களூரில் நடந்த கண்காட்சி குறித்த பதிவு இங்கே.]


 கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!
***







Saturday, December 8, 2012

தையல்காரர் இருந்தால் அவர் தைத்திடத் துணி வேண்டாம்?  துணி வேண்டு மென்றால் அதை நெய்திட ஒருவர் வேண்டாம்?  பறவைகள் உலகில் ஒரு நெசவாளி இருக்கிறார்.  அவர் தான் தூக்கணாங் குருவி.
# 1
(தூக்கணாங் குருவி  படம்  நடராஜன் கல்பட்டு)

சிட்டுக் குருவி போன்றிருக்கும் இப் பறவையின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் பல ஆச்சரியம் அளித்திடும் விஷயங்கள் வெளி வரும்.  கூட்டமாக வாழ்ந்திடும் குணம் கொண்டவை இவை.  ஒரே மரத்தில் பல பறவைகள் தங்கள் தொங்கிடும் கூடுகளை அமைத்திடும்.

இந்தப் பறவை நெல், சோளம் போன்ற தாவரங்களின் இலையை நார் நாராகக் கிழித்துத் தன் கூட்டினை நெய்து கட்டும்.  நீர் நிலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளில் இருந்து அழகான பந்து போன்ற கூடுகளுக்கு நுழைவு வாயில் கவிழ்த்துப் பிடித்த நாதசுரம் போன்று கீழ்ப் பக்கம் தொங்கிடும்.

 [கீழ்வரும் வண்ணப்படங்கள் கட்டுரைக்காக இணையத்திலிருந்து..]

 
#2


கூட்டினைக் கட்டுவது ஆண் பறவை.  அது பாதி கட்டி முடித்திருக்கும் கூட்டின் மீதமர்ந்து தன் இறக்கைகளைப் பட பட வென்று அடித்துக் கொண்டு கீச்சிடும் ஒரு பெண் பறவையின் கவனத்தை ஈர்த்திட.  பெண் பறவை வந்து பார்த்து, வீட்டின் தரம் பிடித்து, கூடி வாழ சம்மதித்து, கூட்டிற்குள்ளே குஞ்சுகள் வாழ்ந்திட பஞ்சு மெத்தை தயார் செய்ய ஆரம்பித்த  உடனே ஆண் பறவை அருகிலேயே மற்றொரு கூட்டினைக் கட்டி இரண்டாம் தாரம் தேடிடும்!  தாரம் இரண்டோடு நிற்குமா என்பதும் நிச்சயமில்லை!

#3
(ஆண் பறவை வீடுகட்ட....)

#4
(பெண் பறவை வீட்டின் தரம் பார்த்துத் தாரமாகிட....)

என்ன ஒரு சாமர்த்தியக் காரர் பார்த்தீர்களா இந்த நெசவாளி?

இவர்கள் மனைவி சேர்த்திடும் விஷயத்தில் மட்டும் தான் திருடர்கள் என்றில்லை.  ஒரு பறவை ஒரு நார் கொண்டு வந்து பின்னி விட்டு அடுத்த நார் எடுத்துவரப் போகும் போது பக்கத்தில் கூடு கட்டிக் கொண்டிருக்கும் வேறொரு பறவை கடைசியாக நெய்யப் பட்ட நாரினைத் தன் அலகினால் பிடித்திழுத்துத் தன் கூட்டினைக் கட்ட எடுத்துச் செல்லும்.  இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.  திருடர்கள் இல்லாத இடமே இல்லையா!

சில தூக்கணாங் குருவிகளுக்குப் பயித்தியமும் பிடிக்குமோ என்று ஒரு சந்தேகம் எனக்கு.  காரணம் ஆரம்பித்த கூண்டினை முடிக்கத் தெரியாது அதிலிருந்தே மீண்டும் மிண்டும் கட்டிக்கொண்டே போகும் சில பறவைகள்!

இயற்கையைப் படம் பிடிக்கப் போனால் பல வேடிக்கைகளைக் கண்டு ரசிக்கலாம் நீங்கள்.


Legend Talks..
திரு கல்பட்டு நடராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

Monday, December 3, 2012

வணக்கம் நண்பர்களே,

2012 இன் இறுதிக்கு வந்துவிட்டோம். மழைக்காலமும் ஆரம்பமாகியாச்சு. விடுமுறை, பண்டிகை, மழைக்கு குடை வாங்க, குளிருக்கு ஆடை வாங்க என எல்லோரும் பிஸியா இருப்பீங்க. மாரியோ கோடையோ, சந்தோசமோ துக்கமோ, நினைவுகளையெல்லாம் பதிவு செய்யும் போட்டோகிராபி நம்மலோட இணைஞ்சி பிஸியா இருக்கும். ஆகவே, நீங்க மாரிகாலத்துல புடிச்ச நல்ல படங்கள “மழைக்காலம்” என்ற தலைப்புக்கேற்ப அனுப்பிவிடுங்க. என்னவெல்லாம் அனுப்பலாம்? மழைத்துளி, குளிருக்காக போர்த்திய மனிதன், மழையில் நனையும் பூ, குடை பிடித்துச் செல்லும் குழந்தை என என்னவெல்லாம் “மழைக்காலம்” என்ற தலைப்புக்குப் பொருத்தமாயிருந்தாலும் அனுப்புங்க. படத்தப் பார்த்ததுமே மழைக்காலம் அதில பிரதிபலிக்கனும். அதுதான் ரொம்ப முக்கியம்.

தலைப்பு: மழைக்காலம்

மாதிரிப்படங்கள்:

#1 அன்டன்

#2 ராமலக்ஷ்மி


#3 அன்டன்

#4 சர்வேசன்

#5 சர்வேசன்

#6 நவ்ஃபல்


படங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி: 20 டிசம்பர் 2012
போட்டி விதிமுறைகள்: இங்கே 

அன்புடன்
அன்டன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் அனுப்பும் பெரிய அளவுப் படங்களால் பிகாஸாவின் கொள்ளளவு அடிக்கடி நிரம்பி விடுகிறது. இதனால் பலரது போட்டிப்படங்கள் தானாக ஆல்பத்தில் சேர இயலாது போகிறது. இருபது பேர்களின் படங்கள் இடம்பெறக் கூடிய அளவை ஒருவரது படமே எடுத்துக் கொள்கிறது. இது தொடர்ந்தால் மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும். பலர் கவனியாமல் பழைய முகவரிக்கே அனுப்ப நேரிடும். 

இந்தக் குளறுபடிகள் நேராமல் தவிர்க்க.. உங்கள் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தவிர்த்து செய்யத் தெரிந்தவர்கள் சிரமம் பாராமல் அளவைக் குறைத்து அனுப்புங்கள். இதைப் போட்டி விதிமுறையிலும் தெரிவித்திருக்கிறோம். ஒரு வேண்டுகோளாகவே வலியுறுத்தியும் வருகிறோம். 

எப்படி அளவைக் குறைக்கலாம் என்பதையும் இந்தப் பதிவில் விளக்கியிருக்கிறோம்: http://photography-in-tamil.blogspot.in/2012/04/blog-post_15.html

கற்றுக் கொள்ளுங்கள்.  கற்றதை செயல்படுத்திப் பழகுங்கள். ஏனெனில்,

PiT போட்டிகள் உங்களை மெருகேற்றிக் கொள்ளவும் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவும் பயிற்சிக் களமாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது போன்ற பெரிய போட்டிகளில் படத்தின் அளவு விதிமுறையில் குறிப்பிட்டபடி இருக்காவிட்டால் படங்கள் விலக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதை ஒருவழக்கமாகக் கொள்வது உங்களுக்கே பயன் தரும். 

அன்புடன்
PiT குழு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Saturday, December 1, 2012

வணக்கம் நண்பர்களே.

நவம்பர் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யாரென அறிய ஆவலாக இருப்பீர்கள்.

சிறப்புக் கவனம்-1
# சதீஷ் குமார்


சிறப்புக் கவனம்-2
# அருண்

 

மூன்றாம் இடம்
#ஹரீஷ்
 


இரண்டாம் இடம்
# ராஜசேகரன்


முதல் இடம்
விஸ்வநாத்

வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள்! 
 ***

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐந்து படங்களும் 15 டிசம்பர் அதீதம் இணைய இதழின் ஃபோட்டோ கார்னரில் வெளியாவதுடன், முகப்பின் Header Slide Show-விலும் இடம் பெறும்.
*** 
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff