"Copyright info" என்பது நாம் நம்முடைய புகைபடக்கருவியில் எடுக்கும் படங்களுக்கு நாம் தான் உரிமையாளர் என்பதனை நிரூபிக்க உதவும் ஒன்றாகும்.தற்பொழுது சந்தைக்கு வரும் பெரும்பாலான DSLR கேமராக்களில் நம்முடைய பெயரை பொதிந்துவைக்கும் படி வழிவகை இருக்கின்றது.ஆனால் இதனை நம்மில் பலரும் செய்வது கிடையாது.
இதனால் நமக்கு என்ன நன்மை:
நம்மில் பலரும் தாம் எடுத்த படங்களை இணையதில் பகிர்கின்றனர், சான்றாக புகைப்பட போட்டிக்கு நாம் அனுப்பும் படங்கள் அல்லது சில இணையதளங்களில் பகிரும் படங்கள் பலவும் எந்த நேரத்திலும் யாராலும் களவாடப்படலாம்.ஏன் ஒரு சில பெரிய நிறுவனங்களே இதனை செய்கின்றனர்.சமீபத்தில் நான் எடுத்திருந்த ஒரு Deodorant படத்தினை ருமேனியாவை சேர்ந்த பிரபல இணையவழி விற்பனையாளர் அவரது இணையதளத்தில் எவ்வித முன்னனுமதியின்றி பயன்படுத்தியிருந்தார்கள்.ஒருசில பத்திரிகைகள் கூட சிலவேளைகளில் நாம் எடுத்த படத்தினை நமக்கே தெரியாமல் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இவ்வாறாக நமது படங்கள் களவாடப்பட்டால்,இதனை சட்டரீதியாக உங்களுடைய படங்கள் தான் என்பதை நிரூபிக்க இந்த "Copyright info" வை உங்களது புகைபடக்கருவியில் உள்ளீடு செய்வது உதவிசெய்கிறது.
ஏன்? எதற்கு?:
உங்களில் சிலர் கேட்கலாம்,இதுபோன்று நடக்காமல் இருக்கத்தானே "Watermark" பயன்படுத்துகிறோம் பிறகு ஏன் என்றுகூட கேட்கலாம்.ஆனால் நம்மில் எத்தனை பேர் "watermark" பயன்படுத்துகிறோம்?.அவ்வாறே பயன்படுத்தினாலும் அதனை சிலர் அழகாக clonning டூல் கொண்டு மறைத்தோ அல்லது படத்தை "crop" செய்தோ பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்க.
“Copyright info” வை புகைபடக்கருவியில் உள்ளீடு செய்யும்போது என்ன நடக்கிறது:
இவ்வாறாக உங்களது புகைபடக்கருவியில் “Copyright” ஐ உள்ளீடு செய்யும் போது உங்களது கேமராவில் நீங்கள் உள்ளீடு செய்யும் உங்களது பெயரானது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும்(RAW&JPG) Metadata வாகவாக படத்தினுள்ளே சேமிக்கப்படுகிறது.எனவே உங்களது படத்திற்கு நீங்கள் தான் உரிமை என உங்களால் எத்தருணத்திலும் நிரூபிக்கமுடியும்.
எவ்வாறு “copyright info” ஐ உள்ளீடு செய்வது: Nikon பயனாளர்களுக்கு:
நீங்கள் Nikon கேமராவை பயன்படுத்துபவராக இருந்தால் கேமராவின் மூலமாகவே இத்தகவலை உள்ளீடு செய்ய இயலும். கீழேயுள்ள விளக்கப்படத்தின் படி உள்ளீடு செய்துகொள்ளவும்.
குறிப்பு: Nikon இல் சில entry level DSLR கேமராக்களில் “copyright info”வை உள்ளீடு செய்யும் வசதியினை Nikon நிறுவனம் அளிக்கவில்லை என்பது Nikon இல் ஒரு குறைபாடு. இது போன்ற வேளைகளில் Setup menu>Comment> என்பதனை தேர்வு செய்து Input comment தேர்வு செய்து உங்களது பெயரை உள்ளீடு செய்துகொள்ளவும்.பின்னர் attach comment என்பதனை “டிக்” செய்துகொள்ளவும். கடைசியாக Copyright information ஐ”ON” இல் வைக்கவும்.
Canon பயனாளர்களுக்கு: Canon கேமராக்களை பயன்படுத்துபவர்களுக்கு “copyright info” உள்ளீடு செய்வது மிக எளிது...Canon கேமராவுடன் தரும் Canon Utility சிடியை உங்களது கணினியில் நிறுவிக்கொள்ளவும்(Install).பின்னர் உங்களது கேமராவை உங்களது கணினியோடு யூஎஸ்பி கேபிள் மூலமாக இணைக்கவும். பார்க்க கீழேயுள்ள படம்.
இப்போது கேமராவை "ON" செய்யவும்.
உங்களது கேமரா கணினியோடு இணைக்கப்பட்டவுடன் இந்த Canon Utility யை இயக்கவும்.
பின்னர் தோன்றும் திரையில் Camera settings/Remote shooting ஐ கிளிக் செய்யவும்.
இப்போது Setup menu சென்று Owner,Author,copyright ஆகிய மூன்றையும் உங்களின் விருப்பத்திற்க்கு நிரப்பவும். பின்னர் OK செய்யவும். பின் கேமராவின் இணைப்பை துண்டிக்கவும்.
அவ்வளவுதான் இனி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் நீங்கள் உள்ளீடு செய்த தகவல்கள் அனைத்தும் நீங்கள் எடுத்த படத்தினுள் Metadata வாக பதிந்துவிடும். இதனை சோதிப்பதற்க்கு நீங்கள் எடுத்த படத்தினை உங்களது கணினிக்கு மாற்றம் செய்து பின்னர் படத்தின் மீது மவுஸால் ரைட் கிளிக் செய்து "Properties”என்பதனை அழுத்தவும். பின்னர் Details என்னும் Tabஐ கிளிக் செய்யவும். உங்களது copyright info வானது இப்போது தெரியும்.