***வணக்கம் பிட்
மக்கா நலந்தானா?...
** கீழேயுள்ள படம் இதுபோன்ற சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமாகும் படத்தை சரியான exposure கொண்டு எடுத்திருந்தாலும் படத்தில் perspective சரியில்லாமல் இருப்பது ஒரு குறையே.
#
#
#
#
#
பொதுவாக புகைப்பட
கண்காட்சி, ஓவிய கண்காட்சி போன்ற இடங்களுக்கு சென்று படம்பிடிக்கும்போது பிரேம்களுக்கு
நேராக நின்று நாம சப்ஜெக்ட்ட போகஸ் பண்ணும்போது நம்மளோட பிம்பம் படத்தில் பிரதிபலிக்கும்
அல்லது வருகின்ற வெளிச்சத்த நாமளே எதிரில் நின்னு மறைத்துவிடுவதால் நாம் பிடிக்கும்
படத்திற்கு போதிய வெளிச்சமில்லாமல் படம் இருட்டடிக்க ஆரம்பிக்கும், நாம படத்திற்கு சற்று அருகில் சென்று
படம்பிடிக்கலாம்னு பார்த்தா தடுப்பு வேலி அமைத்திருப்பார்கள் இல்லேன்னா கூட்ட நெரிசலில்
நாம விரும்புறமாதிரி படம்பிடிக்க இயலாத சூழலில் படம்பிடிக்கும் போதோ, அல்லது நாம சற்று பக்கவாட்டில் சென்று
படம்பிடிக்கும் போது கண்டிப்பாக படத்தின் perspective மாறிவிடும் என்பதில் சந்தேகம்
இல்லை.
** கீழேயுள்ள படம் இதுபோன்ற சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமாகும் படத்தை சரியான exposure கொண்டு எடுத்திருந்தாலும் படத்தில் perspective சரியில்லாமல் இருப்பது ஒரு குறையே.
#
சரி,படத்த எடுத்தாச்சு
அத எப்படியாவது சரிசெய்துகொள்ளனும் இல்லையா?இதுபோன்ற குறைகளை சரிசெய்துக்கொள்ள போட்டோஷாப்
அறிமுகம் செய்திருக்கும் டூல் தான் Perspective Crop Tool ஆகும்.
முதலில் படத்தை
போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது பேக்கிரவுண்டு
லேயரை இருமுறை கிளிக் செய்ய உங்களது background லேயர் editable லேயராக மாறிவிடும்.
#
#
இப்போது கிராப்
டூலில் இருக்கும் Perspective Crop Tool ஐ தேர்வு செய்துகொண்டு படத்தின் சப்ஜெக்டடின்
நான்கு மூலைகளையும் மார்க் செய்து கொண்டு விசைபலகையில்
என்டர் ஐ அழுத்த பெர்ஸ்பெக்டிவ் சரி செய்யப்பட்டு படமானது நேராக வந்துவிடும்.
#
#
Final output:
#
#
என்ன பிட் மக்கா
கட்டுரை பயனுள்ளதாக அமைந்ததா? மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்
என்றும் அன்புடன்,
நித்தி ஆனந்த்.