Saturday, June 30, 2007





பதினாறு வயதில் நான் காந்திகிராமட்தில் படித்துக் கொண்டிருந்த போது நண்பன் சௌந்தர் ஒரு ஆக்ஃபா க்ளிக் 3 காமிராவைக் கையில் கொடுத்தான். அன்றுதான் ஒரு காமிராவை முதன் முதலாகத் தொட்டது. எங்கெங்கோ காசு சேத்தி ஒரு 120 பிலிம் ரோல் ( சிவப்புக்கலர் காகிதத்தில் நூல் கண்டு மாதிரி பிலிமை சுத்தியிருப்பார்கள்!) போட்டு 12 கருப்பு வெள்ளை படங்களை சுட்டுத்தள்ளினேன். அன்று ஆரம்பித்த பந்தம் இன்றும் தொடர்கிறது.. டிஜிட்டல் ருபத்தில்! சரி பாடத்திற்கு வருவோம். நான் பார்த்த பல்வேறு வகையான காமிராக்களைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

POINT AND SHOOT CAMERA

இவை தற்பொழுதும் கடைகளில் கிடைக்கிறது. கொடாக் KB 10 போன்றவைகளெல்லாம் இந்த வகையினதே. விலை 400 ரூபாய் முதல் ஆயிரம் வரை. இவைகள் இன்று பொம்மைகள்!

AUTO FOCUS FILM CAMERA

இவைகளும் தற்பொழுது அருகி வருகின்றன. இவகளின் மூலம் ஓரளவு ப்டங்கள் எடுக்கமுடியும். OLYMPUS mu மாடெல்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

RANGE FINDER CAMERA

பலரும் இதன்மூலம் புகைப்படக் கலையை பாலபாடமாகக் கற்றிருப்பார்கள். எலெக்ட்ரோ35 காமிரா மிகச்சிறந்த உதாரணம். இவற்றில் சில காமிராக்கள் 2000 முதல் 50,000 வரை விற்கப்பட்டன.

LARGE FORMAT CAMERA


இவை பெரிய அளவு நெகடிவ்கள் மூலம் படங்கள் எடுக்க உதவுபவை. இவற்றில் எடுக்கப்படும் படங்கள் BLOW UP போன்ற பெரிய படங்கள் ஆகும். சினார், ஹார்ஷ்மேன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து காமிராக்களையும் விட புகைப்படக் கலை கற்க விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டியது SLR எனப்படும் SINGLE LENSE REFLEX CAMERA! இவ்வகை காமிராக்கள் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்!

Wednesday, June 27, 2007


முதலில் புகைப்படக் கலைப் பற்றிய என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.

" எப்படி உங்கள் கேமரா காட்சிகளை பார்க்கும் என்பதை புரிந்துகொண்டால், மனதை நிறுத்தி கண்களால் மட்டுமே காட்சிகளை காண முடிந்தால் புகைப்படக் கலை மிகவும் எளிதானது "

சரி விஷயத்திற்கு வருவோம். பின்னூட்டத்தில் வந்த ஒரு கேள்வி. ஃபிலிம் கேமராவை விட டிஜிடல் எந்த வகையில் சிறந்தது என்று.

இரண்டையும் ஒப்பீடு செய்து பாருங்கள். இன்னமும் ஃப்லிம் கேமராவை விட்டு மாறாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னிடமும் பழைய ரேஞ்ச் ஃபைண்டர் கேமரா இருக்கிறது. டிஜிடலை விட அதன் மீது எனக்கு காதல் அதிகம்.




ஆனால் பல விஷயங்களில் டிஜிடல் கேமரா முன்னிலைப் பெறுகிறது.

எடுத்தப் படங்களை உடனுக்குடன் நாம் பார்ப்பதால், படங்களை பலமுறை எடுத்து அதில் நல்லது எதுவென்று ஒன்று தேர்ந்தெடுக்கலாம். வேண்டாதவற்றை உடனுக்குடன் தவிர்த்து விடலாம்.

ஃப்லிம் கேமராவில் அந்த வசதி இல்லை. எதுவானாலும் ஒரு ரோல் ஃப்லிம் முடிந்த பிறகே அதை டெவலப் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அருமையாக வந்திருக்க வேண்டிய படம் ஒன்று சொதப்பலாக வந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தவறவிட்ட கணங்களை எண்ணி ஏங்குவதைத் தவிற

பகிர்ந்து கொள்ளுதல் மிக எளிதானது.

running cost மிகவும் குறைவு.

எந்த அளவில் வேண்டுமானாலும் கிடைக்கும். இப்போது செல்பேசியிலேயே வந்துவிட்டதால் பயனாளர்கள் மிகவும் அதிகரித்து விட்டனர்.

ஆனால் 35mm ஃபிலிம் கேமரா தரும் தரத்தை 6 மெகா பிக்ஸல்ஸ் கொண்ட டிஜிடல் கேமரா தரமுடியாது என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை. ( எப்படி என்பதை பிறகு பார்ப்போம் ).

புகைப்படக் கலை பழகும் காலத்தில் குறைந்த செலவில் தரமான புகைப்படம் பெறவும் திறமையை செப்பனிடவும் சிறந்த வழி டிஜிடல் கேமரா உபயோகிப்பது மட்டுமே என்பது என் எண்ணம்.

உங்களின் கருத்துகளையும் பதியுங்கள். தொடரலாம்

Related Link: Digital Vs Film



நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் புகைப்படம் வலைப்பூ இன்று உங்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது. இதில் புகைப்படம் எடுக்க கற்றுக் கொடுக்க பல தமிழ் வலைப்பதிவர்கள் முன் வந்திருக்கிறார்கள். ஆரம்ப பாடங்கள் நாளை முதல் ஆரம்பிக்க இருக்கிறோம். வாரம் ஒரு சிறந்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டு இந்த வாரப் புகைப்படம் ஆகவும் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. காமிராக்கள், லென்ஸ்கள், எடுக்கும் முறைகள், கலை, ஒளி, நிழல், வகைகள்... போன்ர அனைத்து விச்யங்களும் விளக்கப்படும் ஒரு தமிழ் முயற்சி.


மேலைநாட்டவர்களோடு ஒப்பிடும் பொழுது நாம் மீடியாக்களின் அருமையை சமீப காலமாகத்தான் உணர்ந்து வருகிறோம். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டிய விசயத்தை ஒரு புகைப்படம் ஒரு நொடியில் சொல்லிவிடும். மேலும் இது ஒரு மதிப்பு மிக்க பொழுதுபோக்கும் கூட ( A NICE HOBBY!). போர்க்களங்கள் முதல் மருத்துவத்துறை, வான்வெளி வரை இக்கலை இல்லாத இடமே இல்லை எனலாம். நம் தமிழ் மக்கள் இக்கலையை கற்றுத்தேற வலைப்பதிவர்களாகிய எங்களால் இயன்ற ஒரு சிறு கூட்டு முயற்சி!


தங்கள் ஆக்கமும் ஊக்கமும் எங்களை மேலும் படைக்கச்செய்யும்.

Friday, June 22, 2007


புகைப்படம் எடுக்க மிகவும் அவசியமான ஒன்று ஒளி பற்றிய அறிவு. மிகவும் ஆழமாகப் படிக்க விரும்புபவர்கள் ஒவ்வொரு நிறத்தின் வெப்பத்தைப் பற்றியெல்லாம் (Kelvin) படிக்க வேண்டும். நாமக்கு அதெல்லாம் இப்பொழுது தேவை இல்லை.

என்னைப் பொருத்தவரை இயற்கை ஒளியை உபயோகித்து படம்எடுப்பதே எனக்கு கைவந்த கலை. இதுவரை ஒரு உருப்படியான ஃபளாஷ் லைட்டைக்கூட நான் உபயோகித்தது இல்லை! ஆனால் லைட்டிங் மீது எனக்கு ஒரு தனிக்காதலே உண்டு. மேலே உள்ள படம் நன்றாக உள்ளதா?

இது மிகவும்எளிதாகஎடுக்கக்கூடிய படம்தான். உங்கள் இளம்மனிதரை ஒரு திரையிட்ட சன்னலின் வழியாக வரும் ஒளி.. அவரது ஒரு பக்கம் மட்டும் விழுமாறு நிற்கவைக்கவும். பாதி சன்னல் மட்டுமே திரையால் மறைக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் இந்த மென்மையானஎஃபெக்ட்டை பெறமுடியும். முடிந்தவரை நான் முதல் பதிவிலே சொல்லிய மாதிரி கம்போசிங்கில் கவனமாக இருக்கவும். முடிந்தவரை இந்த மாதிரி ப்டங்களுக்கு க்ளோசப்பாக செல்லவேண்டும். ( பலரும் அவ்வாறு செய்வது இல்லை!). இதே படத்தை ஃப்ளாஷ் உபயோகித்து எடுத்திருந்தால் இந்த ஒளியின் , நிழலின் அழகு தெரிந்திருக்காது. படத்தின் ஒரு பகுதி வெளிச்சமாகவும் மறுபகுதி நிழல்களோடும் சேர்ந்து இந்த அழகைக் கொடுக்கிறது எனலாம்.



மேலும் இந்த மாதிரி படத்தைஎடுக்க உங்கள் செல்பேசி காமிரா மிகவும் உதவும்!..எடுத்துத்தான் பாருங்களேன்! சிறுவர்கள் தான்என்றில்லை... உங்கள் காதலியை/காதலனை/மனைவியை/கணவனை' க் கூட க்ளிக்கி அசத்தலாமே!

Thursday, June 21, 2007

பதிவுலக நண்பர் திரு ஐயப்பன் அவர்களிடம் நான் அடிக்கடி பேசுவது உண்டு. (மிகவும் சரக்குள்ள, சமுதாயத்திற்கு உதவும் எண்ணம் உள்ள அடக்கமான ந(ண்)பர்!). அவரும் இன்னும் சில பதிவர்களும் சேர்ந்து ஒரு புகைப்படக் கலை பற்றிய வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். முதலில் சில பேசிக் விசயங்கள் பற்றிய சில பதிவுகளை இங்கேயே தரலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவுத் தொடர்.



மேலே உள்ள படத்தை பாருங்கள். ஒரு சாதாரண தினக் காட்சி.என் வீட்டுக்கு அருகில் காலை பள்ளி செல்லும் இளம் மனிதர்களைஏற்றிச் செல்ல தினம் வரும் ஒரு ஆட்டோ. பூத்துக் குழுங்கும் ஒரு அழகிய மரம்.எடுத்தேன் காமிராவை. சுட்டேன் உடனே. .. இதோ ஒரு அழகிய படம்.

இதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?... ஆம் கம்போசிசன் எனப்படும் விசயம். அதாவது நமது படத்தின்எல்லைகள்எது என்று வியூ ஃபைன்டரால் பார்த்து நாம் முடிவு செய்யும் மென்கலை நுட்பம். இதை மனிதர்களாகிய நாம் தான் செய்ய வேண்டும் ...எவ்வளவு காஸ்ட்லியான காமிராவாக இருந்தாலும்! மேலே உள்ள படத்தில் ஆட்டோ இடமிருந்து வலமாக நிற்கிறது தானே.எனவே கம்போஸ் செய்யும்பொழுது வலது பக்கம் அதிக இடம் விட்டுஎடுக்கப் பட்டதால் அழகாக தெரிகிறது... நீங்களும் உங்கள் காரையோ, பைக்கையோ இதே மாதிரி எடுத்து பருங்கள்... அழகாக இருக்கும். ( செல்பேசியில் உள்ள காமிராவே போதும்... கம்போசிங் பழக!)

(பிகு) படத்தின் மீது க்ளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff