பதினாறு வயதில் நான் காந்திகிராமட்தில் படித்துக் கொண்டிருந்த போது நண்பன் சௌந்தர் ஒரு ஆக்ஃபா க்ளிக் 3 காமிராவைக் கையில் கொடுத்தான். அன்றுதான் ஒரு காமிராவை முதன் முதலாகத் தொட்டது. எங்கெங்கோ காசு சேத்தி ஒரு 120 பிலிம் ரோல் ( சிவப்புக்கலர் காகிதத்தில் நூல் கண்டு மாதிரி பிலிமை சுத்தியிருப்பார்கள்!) போட்டு 12 கருப்பு வெள்ளை படங்களை சுட்டுத்தள்ளினேன். அன்று ஆரம்பித்த பந்தம் இன்றும் தொடர்கிறது.. டிஜிட்டல் ருபத்தில்! சரி பாடத்திற்கு வருவோம். நான் பார்த்த பல்வேறு வகையான காமிராக்களைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
POINT AND SHOOT CAMERA
இவை தற்பொழுதும் கடைகளில் கிடைக்கிறது. கொடாக் KB 10 போன்றவைகளெல்லாம் இந்த வகையினதே. விலை 400 ரூபாய் முதல் ஆயிரம் வரை. இவைகள் இன்று பொம்மைகள்!
AUTO FOCUS FILM CAMERA
இவைகளும் தற்பொழுது அருகி வருகின்றன. இவகளின் மூலம் ஓரளவு ப்டங்கள் எடுக்கமுடியும். OLYMPUS mu மாடெல்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
RANGE FINDER CAMERA
பலரும் இதன்மூலம் புகைப்படக் கலையை பாலபாடமாகக் கற்றிருப்பார்கள். எலெக்ட்ரோ35 காமிரா மிகச்சிறந்த உதாரணம். இவற்றில் சில காமிராக்கள் 2000 முதல் 50,000 வரை விற்கப்பட்டன.
LARGE FORMAT CAMERA
இவை பெரிய அளவு நெகடிவ்கள் மூலம் படங்கள் எடுக்க உதவுபவை. இவற்றில் எடுக்கப்படும் படங்கள் BLOW UP போன்ற பெரிய படங்கள் ஆகும். சினார், ஹார்ஷ்மேன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.
ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து காமிராக்களையும் விட புகைப்படக் கலை கற்க விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டியது SLR எனப்படும் SINGLE LENSE REFLEX CAMERA! இவ்வகை காமிராக்கள் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்!
எங்கப்பாவுடைய பழைய பிலிம் கியாமரா இன்னமும் நல்லா தான் வேலை செய்யுது.. ஆனா.. நாங்க தான் அதை ஒரு Museum peice மாதிரி Almairah லே வச்ச்சிருக்கோம்..
ReplyDeleteவனவாசம் போயிட்டு கண்ண முழிச்சுப் பார்த்தால் நீ முந்தி நான் முந்தின்னு ஒவ்வொருத்தரும் அசத்திரீங்க போங்க!
ReplyDeleteஅருமையாக வந்துகொண்டிருக்கின்றன பதிவுகள் . வாழ்த்துக்கள் தல.
ReplyDelete:)
செல்லா,
ReplyDeleteநல்ல உபயோகமான பதிவு.
மிக்க நன்றி.
CLICK 3 யில் தான் நானும் துவக்கினேன்- அதே 16 வயதில்.சரியான வெளிச்சத்தில் சரியான தூரத்தில் படமெடுத்தால் அருமையாக வரும். இப்பொழுது நிக்கான் D70 !!
ReplyDeleteSLR என்பதன் விரிவாக்கத்தை இன்றுதான் தெரிந்து கொள்கிறேன். நன்றிகள் பல உங்களுக்கு...
ReplyDelete