Wednesday, June 27, 2007

வலைப்பதிவர்களாகிய எங்களால் இயன்ற ஒரு சிறு கூட்டு முயற்சி!

8 comments:
 



நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் புகைப்படம் வலைப்பூ இன்று உங்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது. இதில் புகைப்படம் எடுக்க கற்றுக் கொடுக்க பல தமிழ் வலைப்பதிவர்கள் முன் வந்திருக்கிறார்கள். ஆரம்ப பாடங்கள் நாளை முதல் ஆரம்பிக்க இருக்கிறோம். வாரம் ஒரு சிறந்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டு இந்த வாரப் புகைப்படம் ஆகவும் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. காமிராக்கள், லென்ஸ்கள், எடுக்கும் முறைகள், கலை, ஒளி, நிழல், வகைகள்... போன்ர அனைத்து விச்யங்களும் விளக்கப்படும் ஒரு தமிழ் முயற்சி.


மேலைநாட்டவர்களோடு ஒப்பிடும் பொழுது நாம் மீடியாக்களின் அருமையை சமீப காலமாகத்தான் உணர்ந்து வருகிறோம். ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டிய விசயத்தை ஒரு புகைப்படம் ஒரு நொடியில் சொல்லிவிடும். மேலும் இது ஒரு மதிப்பு மிக்க பொழுதுபோக்கும் கூட ( A NICE HOBBY!). போர்க்களங்கள் முதல் மருத்துவத்துறை, வான்வெளி வரை இக்கலை இல்லாத இடமே இல்லை எனலாம். நம் தமிழ் மக்கள் இக்கலையை கற்றுத்தேற வலைப்பதிவர்களாகிய எங்களால் இயன்ற ஒரு சிறு கூட்டு முயற்சி!


தங்கள் ஆக்கமும் ஊக்கமும் எங்களை மேலும் படைக்கச்செய்யும்.

8 comments:

  1. nice.

    thodarndhu kalakkunga. koodiya viraivil, naanum godhala eranguren.

    ReplyDelete
  2. மிக நல்லதொரு முயற்சி. புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வமுடனிருந்தும் நானாகவே பரிசோதனை முயற்சிகளில் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த தளம் எனக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

    மேலும் வாசகர்கள் உங்களுக்கு புகைப்படங்கள் அனுப்பினால் அதுகுறித்து உங்கள் விமர்சனங்களை சொல்ல ஒரு பகுதி இருந்தால் மிக உபயோகமாக இருக்கும் என கருதுகிறேன்.

    நட்புடன்,
    அருள்.

    ReplyDelete
  3. digital camerakkum film camera kkum enna diff ? film camera la vara quality digital camera la varuma ?

    ReplyDelete
  4. என்னையும் இந்த வகுப்புலே சேர்த்துக்கோங்க.

    நிறைய தெரிஞ்சுக்கணும்.

    ReplyDelete
  5. ****வாரம் ஒரு சிறந்த புகைப்படம் தேர்வு செய்யப்பட்டு இந்த வாரப் புகைப்படம் ஆகவும் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது****..

    இதுக்கு என்ன பண்ணணும்...தனியா புகைப்படங்களை அனுப்பணுமா?.. வலைப்பதிவு url(s) மட்டும் போதுமா..
    .. எங்கே submit பண்ணனும்...

    ReplyDelete
  6. இதைதான் ரொம்ப ஆவலுடன் எதிர்பாரத்தேன். ஆனால் வந்து இவ்வளவு வருடங்கள் கழித்து கிடைத்திருக்கிறது எனக்கு. ஆவலுடன் நானும் பயணிக்க வருகிறேன் உங்களின் பாதையில்.

    ReplyDelete
  7. புகைப்பட தொழிலில் புதியவரான எனக்கு இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நம்புகிறேன் . மிக்க நன்றி . . !

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff