Wednesday, June 27, 2007

-01- ஃபிலிம் கேமராவா டிஜிடல் கேமராவா ?

22 comments:
 

முதலில் புகைப்படக் கலைப் பற்றிய என் கருத்தை சொல்லிவிடுகிறேன்.

" எப்படி உங்கள் கேமரா காட்சிகளை பார்க்கும் என்பதை புரிந்துகொண்டால், மனதை நிறுத்தி கண்களால் மட்டுமே காட்சிகளை காண முடிந்தால் புகைப்படக் கலை மிகவும் எளிதானது "

சரி விஷயத்திற்கு வருவோம். பின்னூட்டத்தில் வந்த ஒரு கேள்வி. ஃபிலிம் கேமராவை விட டிஜிடல் எந்த வகையில் சிறந்தது என்று.

இரண்டையும் ஒப்பீடு செய்து பாருங்கள். இன்னமும் ஃப்லிம் கேமராவை விட்டு மாறாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னிடமும் பழைய ரேஞ்ச் ஃபைண்டர் கேமரா இருக்கிறது. டிஜிடலை விட அதன் மீது எனக்கு காதல் அதிகம்.




ஆனால் பல விஷயங்களில் டிஜிடல் கேமரா முன்னிலைப் பெறுகிறது.

எடுத்தப் படங்களை உடனுக்குடன் நாம் பார்ப்பதால், படங்களை பலமுறை எடுத்து அதில் நல்லது எதுவென்று ஒன்று தேர்ந்தெடுக்கலாம். வேண்டாதவற்றை உடனுக்குடன் தவிர்த்து விடலாம்.

ஃப்லிம் கேமராவில் அந்த வசதி இல்லை. எதுவானாலும் ஒரு ரோல் ஃப்லிம் முடிந்த பிறகே அதை டெவலப் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அருமையாக வந்திருக்க வேண்டிய படம் ஒன்று சொதப்பலாக வந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தவறவிட்ட கணங்களை எண்ணி ஏங்குவதைத் தவிற

பகிர்ந்து கொள்ளுதல் மிக எளிதானது.

running cost மிகவும் குறைவு.

எந்த அளவில் வேண்டுமானாலும் கிடைக்கும். இப்போது செல்பேசியிலேயே வந்துவிட்டதால் பயனாளர்கள் மிகவும் அதிகரித்து விட்டனர்.

ஆனால் 35mm ஃபிலிம் கேமரா தரும் தரத்தை 6 மெகா பிக்ஸல்ஸ் கொண்ட டிஜிடல் கேமரா தரமுடியாது என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை. ( எப்படி என்பதை பிறகு பார்ப்போம் ).

புகைப்படக் கலை பழகும் காலத்தில் குறைந்த செலவில் தரமான புகைப்படம் பெறவும் திறமையை செப்பனிடவும் சிறந்த வழி டிஜிடல் கேமரா உபயோகிப்பது மட்டுமே என்பது என் எண்ணம்.

உங்களின் கருத்துகளையும் பதியுங்கள். தொடரலாம்

Related Link: Digital Vs Film

22 comments:

  1. We recommend this blog forever in VVSangam. Congrats and All the best.

    ReplyDelete
  2. இதென்ன புதுக்கரடி, நான் என்னமோ டிஜிடல் கேமரா தான் பெரிசுன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

    35MM அப்படிங்கறது எதைக் குறிக்கிறது? அதற்கு சரியான டிஜிடல் கேமரா எது


    இன்னும் பல கேள்விகள் இருக்கிறது.. நீங்க ஆரம்பிங்க நானும் கேக்கறேன்

    க.ராமச்சந்திரன்

    ReplyDelete
  3. imagecapture sensor size film alavukku iruntha nalla irukkum.

    canon eos 5d la mattum than fullsize sensor irukku.

    tharamana muyarchi, valthukkal.

    ReplyDelete
  4. Kalakkal style aa irukku ungal muyarchi.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி .. பல தளங்கள் ஆரம்பித்து பின் நிறுத்தி விடுகிறார்கள். அவ்வாறில்லாமல் தொடர்ந்து எழுதி வாருங்கள்.

    :) வாழ்த்துகள்

    ReplyDelete
  6. http://photoblog-by-deepa.blogspot.com/

    ReplyDelete
  7. நன்றி இளா. நானும் உங்க சங்கத்துல பழைய மெம்பர் தான். ஆனா என்ன ஆக்டிவ் மெம்பர் கிடையாது :D

    ReplyDelete
  8. நல்ல முயற்சி. பாராட்டுக்கள். போட்டோகிராபி பற்றி வரும் பல பதிவுகளை இந்த ஓரிடத்தில் தொகுக்கவும் செய்வீர்களா? இல்லை இங்கிருக்கும் மெம்பர்கள் மட்டும் எழுதுவார்களா?

    ~அல்வாசிட்டி.விஜய்

    ReplyDelete
  9. /இன்னும் பல கேள்விகள் இருக்கிறது.. நீங்க ஆரம்பிங்க நானும் கேக்கறேன்

    க.ராமச்சந்திரன்//


    கண்டிப்பா.. உங்களுடைய் 35MM கேள்விக்கு விரைவில் தனிப்பதிவு போட்டுடலாம்

    // camera kirukkan said...

    imagecapture sensor size film alavukku iruntha nalla irukkum.

    canon eos 5d la mattum than fullsize sensor irukku.

    tharamana muyarchi, valthukkal.

    June 28, 2007 5:11 AM //


    சாதாரணமா ஒரு 35MM கேமராவோட resolution வந்து கிட்ட தட்ட 16 மெகா பிக்ஸல் இருக்கும். இதைப் பத்தி விரிவா எழுத ஆளைத் தேடறேன்.

    ReplyDelete
  10. வாழ்த்திய அனானிகளுக்கு நன்றி

    ReplyDelete
  11. ஜீவஸ்..
    உங்க அழைப்புக்கு ரொம்ப நன்றி..
    ***ஒருவேளை அருமையாக வந்திருக்க வேண்டிய படம் ஒன்று சொதப்பலாக வந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தவறவிட்ட கணங்களை எண்ணி ஏங்குவதைத் தவிற
    *****
    இது மற்றும் Film camera ல் Print & develpong செலவு ரொம்ப ஜாஸ்தி.. கட்டுப்படியாகலை.. அதானால நான் ( உஜாலா ஸ்டைலில் ) "டிஜிடல்க்கு மாறிட்டேன்"

    நீங்க lecture எழுதுபோதெல்லாம் .. notes எடுக்க நான் கண்டிப்பா வருவேன்.. எனக்கு 4th பென்ச்லே சீட் வேணும்...

    ReplyDelete
  12. தங்களின் வருகைக்கு நன்றி தீபா. குழுவில் பங்கேற்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    புகைப்படங்களை வாரம் ஒருமுறை தேர்வு செய்வது பற்றியும் அதை எப்படி செய்வது என்பது பற்றியும் விரைவில் அறிவிக்கப் படும்

    ReplyDelete
  13. ஜீவ்ஸ்,

    நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நிழற்படம்
    குழுவில் பங்கேற்க்கும் அளவுக்கு நமக்கு photography அறிவு பத்தாது.. நான் இன்னும் ஜுஜுபி
    அப்பப்போ,, எதுக்காவது answer தெரிஞ்சா கண்டிப்பா சொல்லறேன்..

    ReplyDelete
  15. உண்மை..காசு செலவு இல்லங்கறதால டிஜிடல் எடுத்துத்தள்ள வசதி தான்..பழகிட்டு இருக்கேன்..

    தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  16. தொடர்ந்ர்கு எழுதணும்.

    ReplyDelete
  17. இப்ப Digital SLR வந்துடுச்சே. நண்பர் Canon Rebel XT SLR 8MP மூலம் ஒரு படம் எடுத்திருந்தார் அவ்வளவு அருமையாக இருந்தது.

    புகைப்பட பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இளவஞ்சி, முத்துலட்சுமி,விஜய்,கொத்தனார், குறும்பன்.

    அனைவருக்கும் நன்றி.

    //நல்ல முயற்சி. பாராட்டுக்கள். போட்டோகிராபி பற்றி வரும் பல பதிவுகளை இந்த ஓரிடத்தில் தொகுக்கவும் செய்வீர்களா? இல்லை இங்கிருக்கும் மெம்பர்கள் மட்டும் எழுதுவார்களா?

    ~அல்வாசிட்டி.விஜய் //

    ஏற்கனவே சில வீடியோ தொகுத்துள்ளோம். மற்றவற்றையும் கொண்டு வந்து சேர்ப்போம் முடிந்த வரையில்.

    ReplyDelete
  19. கோடக் ப்ரொளனிதான் என் முதல் கேமரா. பின் ஐசொலெட்,யாஷிகா,கான்டினா, ரோலி 35எம்.எம் என்று மாறி இன்று கெனன் ஏஈ 1 வைத்திருக்கிறேன்.நீங்கள் சொன்னது போல 35எம் எம் தான். ஒரு நிகழ்ச்சியில் அதில் கிடைத்தது போல ஸ்பீடு டிஜிட்டலில் கிடைப்பதில்லை.
    சகாதேவன்.

    ReplyDelete
  20. பிலிம் கேமாரவில் 35mm என்பது பிலிமின் சைஸ்.(length and Breath 34mmx24.5mm not exactly i know). ஆனால் மார்கெட்டில் கிடைக்கும் பல் டிஜிட்டல் கேமாராவில் சென்சார் தான் இந்த பிலிம்முக்கு சமமானது. இதன் சைஸ் 1/ 4 to 1/2.5 இன்ச் சாதாரண கேமாரா முதல் செமி SLR வரை.பெரும்பாலன SLR ல் 17mmx24mm. இது 35MM ஐவிட சின்னது. ஒரு இடத்தை இரண்டு கேமராவால் எடுத்தால் இதனால் 35ல் வரும் படத்தில் 3இல் 2 இரண்டுதான் தெரியும் டிஜிட்டல் கேமராவில்.

    சில டிஜிட்டல் கேமராவில் சென்ஸார் 35MMல் வருகிறது. விலை 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை.
    அதே பிலிம் கேமரா 12 முதல் 20 வரைதான்.

    ஆனால் டிஜிட்டல் கேமராதான் எனக்கு பெஸ்ட். ஏனெனில் இது சில்வரஅயோடைடை சேகிக்கிறது. பிரிண்டிக்ங் பேப்பரை சேமிக்கிறது.

    நாடோடி.

    ReplyDelete
  21. அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். பார்ப்போம்...

    ReplyDelete
  22. உங்களுக்கு போட்டோ பத்தி நல்லா தெரியுமா? எனக்கு photographer ஆகா வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கு அதில் சில அடிப்படை விஷயங்கள் தெரிய வேண்டும். கேமரா வில் இருக்கும் ISO and இன்னும் அதிகமான effect பத்தி தெரியவேண்டும். உங்களுக்கு தெரிந்த அனைத்தும் எனக்கு சொல்லி தர முடியுமா? எனக்கு close-up shot எடுக்க ஆசை.

    please call me friend:
    Desingh
    9789042745

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff