Sunday, July 1, 2007

க்ளிக் க்ளிக் க்ளிக்

19 comments:
 
நல்ல தரமான கேமராவின் ஷட்டர் திறந்து மூடும் சப்தமே சங்கீதம் தான் போங்க.
க்ர-சக்-சக் க்ர-சக்-சக் னு, கேட்டுக்கிடே இருக்கலாம்.

மற்ற பொழுது போக்கு அம்சங்களைப் போல் அல்லாமல், படம் பிடிப்பது பல மடங்கு சுலபமானது.
படம் வரைவது, இசைக் கருவிகள் வாசிப்பது மாதிரி பொழுது போக்கெல்லாம், கத்துக்கரது கஷ்டம்.
சின்ன வயதிலேயே ஆரம்பிக்கவில்லை என்றால், இந்த மாதிரி 'விளையாட்டெல்லாம்' அவ்ளோ சீக்கிரம் மண்டைல ஏராது :).

படம் பிடிக்கரது அப்படி அல்ல.
பழகுவது சுலபம். மெருகேற்றுவது மிகச் சுலபம்.

நான் காமிரா சொந்தமாக வாங்கியது, சிங்கப்பூரில் முதல் வேலைக்குச் செல்லும்போதுதான்.

ஊரில் இருந்த காலத்தில், டில்லி, பம்பாய் என்று சுற்றிய நாட்களில் கையில் காமிரா இருந்ததில்லை.
வேலை நிமித்தமாக டில்லி சென்று, அங்கிருந்து ஒரு ப்ளையிங் விசிட், ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்த்தபோது, கையில் காமிரா இல்லை. அங்கிருந்த ஒரு 'தாடி வாலா', 25 ரூபாய்க்கு காமிரா வாடகைக்குக் கொடுத்தார்.

ஒரு படமும் தேறலை. காமிரா லென்ஸு தொடச்சு 50 வருஷம் ஆகியிருக்கும் போல. எல்லாமே மங்கலா இருந்தது.

அப்பறம் யாஷீகா point-n-shoot வாங்கி சில காலம் கண்டதையெல்லாம் படம் பிடிக்கத் தொடங்கி, Nikon SLR வாங்குமளவுக்கு, புகைப்படம் பிடித்தலில் ஆர்வம் கூடியது.

முறையாக ஒன்றும் கற்றுக் கொண்டதில்லை, இன்று வரை.
புகைப்படம் எடுப்பது இன்னும் அத்துப்படியும் ஆகலை.

10 படம் எடுத்தா, ஒரு 5, 6 தேறும்.

படம் புடிக்க சொல்லித் தரேன்னுட்டு, சும்மா வெட்டிப் பேச்சு பேசரேனேன்னு பாக்கறீங்களா?
என்னத்த சொல்ல. எனக்கும் பெரிய மேட்டரெல்லாம் தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் படிச்சு, அனுபவத்தையும் கலந்து பதிவு போட பாக்கரேன்.
ஜீவ்ஸும், செல்லாவும் கலக்கராங்களே. இன்னும், பல அனுபவஸ்தர்களை உள்ள கூட்டிக்கிட்டு வர முயற்ச்சிக்கறோம்.

இன்றைய க்ளாஸுக்கு, என் அறிவுரைகள்.
1) நிறைய படம் பிடியுங்கள். என்ன எடுக்கரோங்கறது முக்கியமில்லை, அதை எப்படி 'கட்டம் கட்டறோங்கறதுதான்' முக்கியம். View finder ல ஒரு காட்சிய பாக்கும் போது, அந்த காட்சி, வீட்டு சுவத்தில மாட்டினா எப்படி இருக்கும்னு ஒரு கணம் யோசிங்க. அதுக்கேத்த மாதிரி, கட்டத்துக்குள்ள தெரியரத அட்ஜஸ்ட் பண்ணுங்க.

2) நிறைய நிறைய படங்கள பாருங்க. Flickr.com மாதிரி எடத்துல, மத்த பெரிய தலைங்களோட படங்கள பாத்தீங்கன்னாலே, பாதி professional ஆயிடலாம். நீங்க ஒரு செடியோ, பூவோ படம் பிடிக்கும்போது, நீங்கள் flickrல் பார்த்த காட்சி நினைவுக்கு வந்து, உங்கள் படத்தை மெருகேற்ற உதவும். Nothing wrong in imitating framing techniques :). இந்த பக்கத்தை அடிக்கடி பாருங்க. இந்த மாதிரி படமெல்லாம் காட்டுவாங்க. புல்லரிச்சிடும். Very inspirational!

3) வீட்டு விசேஷங்களின் போதோ, பார்ட்டி மாதிரி சமயங்களிலோ, மனிதர்களை எடுக்கும்போது, அவங்கள கைகட்டி வரிசையா நிக்க வச்சு எடுக்காம, அவங்களுக்குத் தெரியாம, casualஆ அவங்க பேசர மாதிரியும், சிரிக்கர மாதிரியும் எடுங்க. ஆல்பத்துக்கு ஒரு spontaneity கெடைக்கும். 'வாரே வா'ன்னு புகழ ஆரம்பிச்சுடுவாங்க உங்க கலைக்-கண்ணை :)

என் கலெக்ஷனில் இருந்து சில!
1) Rose Garden Roses, California (Nikon D80 SLR)
2) San Francisco Golden Gate during a Full Moon Day, (Nikon D80 SLR)
3) மற்ற பழைய படங்கள் (Canon SD 410)

பொறுமையா பாருங்க நம்ம ப்ரேமிங் டெக்னிக்ஸை. மேலும் வரும், கூடிய விரைவில்.


க்ர-சக்-சக்.

:)

19 comments:

 1. Dry day in rose garden, flowers were dry and not wet and rich in looks :(

  ReplyDelete
 2. கலக்கல் ஆரம்பம் சர்வேசா ..

  நல்லதொரு தொடக்கம் ஆரம்பம் ஆகியிருக்கு. அனுபவ படிப்பு தாம்யா பெரிசு.. ஏட்டு சுரைக்காய வச்சு என்ன செய்ய முடியும் சொல்லுங்க ?

  ReplyDelete
 3. survesan,


  good photos. apart from Framing technique, can you talk about aperture setting. looks like you have used some software to enhance your photo ? can you talk bit more about this?

  "Shivram"

  ReplyDelete
 4. சர்வே.. சூப்பர்.
  என்னோட படங்கள் இங்க இருக்குது

  ReplyDelete
 5. நிஜமாவே நீங்க எடுத்த படம்தானா இல்ல சுட்டதா? ஏன் கேட்கிறேன்னா ரொம்ப நல்லா வந்திருக்கு அதான். ;-)

  ReplyDelete
 6. நிழற்படம்,

  //அனுபவ படிப்பு தாம்யா பெரிசு.. ஏட்டு சுரைக்காய வச்சு என்ன செய்ய முடியும் சொல்லுங்க //

  ரொம்ப சரி. கொஞ்ச விஷயத்த படிச்சும் தெரிஞுசுக்கிட்டா, இன்னும் கலக்கலா எடுக்கலாம் :)

  ReplyDelete
 7. anony

  //apart from Framing technique, can you talk about aperture setting. looks like you have used some software to enhance your photo ? can you talk bit more about this?
  ///

  there is a youtube video to the left, which talks about framing techniques. ofcourse, one of us will do a post for aperture/shutter speeds with samples.

  the roses pictures, the golden gate bridge pictures are 'raw' shots. no software used.
  I did use 'Adobe Photoshop' on some, to decrease brightness, etc.. If you want pin point a pic, i can tell you if software is used or not. :)

  ReplyDelete
 8. சிறில், நன்றி.
  உங்க படங்களும் பார்த்தேன். கலக்கல்.
  உங்களுக்கு தெரிஞ்ச விஷயங்கள நீங்களும் பதிங்க. We will have a mutual learning experience :)

  ReplyDelete
 9. ஜெஸிஸா,

  //நிஜமாவே நீங்க எடுத்த படம்தானா இல்ல சுட்டதா? ஏன் கேட்கிறேன்னா ரொம்ப நல்லா வந்திருக்கு அதான். ;-) //

  slide show ல இருக்கர அம்புட்டும், நம்மளதுதானுங்க. slide showக்கு மேல இருக்கர பச்சை பசே போட்டோ, flickr ல இருந்து எடுத்தது.

  ReplyDelete
 10. சர்வேசன்,
  படப்பிடிப்புப் பற்றியோ அல்லது ஒளிப்படக் கருவிகள் பற்றியோ எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாமல் அதேநேரம் புகைப்படப்பிடிப்பில் ஆர்வமுள்ள என் போன்றவர்களுக்கு உங்களின் இப் பதிவு மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. இது போல பல பதிவுகளை இன்னும் நீங்கள் தொடர்ந்து தருவீர்கள் என நம்புகிறேன்.

  உங்களினதும் உங்கள் குழுவினருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

  ReplyDelete
 11. Hi S",
  kalakkal thaan ponga. really the blog is coming up in a nice way. great images will bring a lot of inspiration and you images has done that with the viewvers it seems. I too impressed with them. thodarattum namathu payaNam!

  osai chella

  ReplyDelete
 12. Thanks everyone!

  ///அப்பறம் யாஷீகா point-n-shoot வாங்கி சில காலம் கண்டதையெல்லாம் படம் பிடிக்கத் தொடங்கி, Nikon SLR வாங்குமளவுக்கு, புகைப்பிடித்தலில் ஆர்வம் கூடியது.////

  புகைப்பிடித்தலில் - I meant to say photography, not smoking! :)

  ReplyDelete
 13. சர்வேசன்,
  /* புகைப்பிடித்தலில் - I meant to say photography, not smoking! :) */

  புகைப்படப்பிடித்தலில் என்றால் குழப்பம் இருக்காது என நினைக்கிறேன். :-))

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. சர்வேஸ் அண்ணா உங்கள் படங்கள் அனைத்தும் பார்த்தேன்.. எல்லாம் அருமை ... அண்ணா உங்க photos-ல் colors ரொம்ப அழகா அப்படியே பதிவாயிருக்கு.. ஆனா நான் எடுக்கிற photos-ல் colors தான் problemae.. எப்படி colorsஐ அப்படியே பதிவு செய்வது பற்றி சொல்லுங்க

  ReplyDelete
 16. நான் canon 350d கேமரா வைத்துள்ளேன்...

  ReplyDelete
 17. நல்லது படித்தவர்கள் அனைவரும் மேதைகள் அல்ல. படிக்காதவர்கள் அனைவரும் முட்டாள்களும் அல்ல.

  படித்தவர்களில் முட்டாள்களும் இருக்கிறார்கள். படிக்காதவர்களில் மேதைகளும் இருக்கிறார்கள்.

  புத்தக படிப்பை விட அனுபவ படிப்பே மிக சிறந்தது எனவே உங்களின் படத்தையும் பாடத்தையும் படிக்க காத்திருக்கிறோம்.

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff