அன்பார்ந்த புகைப்படக் கலை மாணவர்களுக்கு ஓசை செல்லாவின் அன்பு வணக்கங்கள். இன்று முதல் பாடங்கள் ஆரம்பம்! உங்களிடம் எந்த வகையான காமிரா இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்து படம் எடுத்து அனுப்புங்கள். இது தியரி மட்டுமல்ல.... நீங்களும் ப்ராக்டிகலாகச் செய்து சுட்டி தரவேண்டிய விடயம். இன்று நான் உங்களுக்கு காமிராவைப் பிடிப்பது பற்றிய சில பாடங்கள்!
நம்மில் பெரும்பாலோர் ஷேக் இல்லாமல் ப்டம்பிடிகவேண்டும் என்று நினைத்தாலும் காமிராவைச் சரியாகப் பிடிக்கத் தெரியாமல் க்ளிக் கி பல நல்ல படங்களை வீணடித்திருப்போம். இப்பொழுது முதலில் ஒரு காமிராவை எப்படிப் பிடிப்பது என்று பார்ப்போம்.
முதல் விதி... காமிராவை இடதுகையால் மட்டுமே தாங்கிப்பிடிக்கவேண்டும் ( நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயிருந்தால்! ). பின்பு எவ்வாறெல்லாம் பிடிக்கலாம்என்பதை பாடமாக அறுக்காமல் படமாகப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!
இது செங்குத்தாக ( Vertical Holding Position) பிடிக்கும் முறை. இங்கும் காமிரா இடது கையாலேயே தாங்கப்படுவதைக் கவனியுங்கள்.
உங்களிடம் போக்கஸ், மற்றும் அப்பர்சர் போன்ற கண்ட்ரோல்களைக் கையாள இடது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் உபயோகப்படுவதை பாருங்கள்.
முன்புறத் தோற்றம். வலது கை க்ளிக்க மற்றும் ஆடாமல் பிடிக்க மட்டுமே. காமிராவின் முழுஎடையும் இடதுகையாளேயே தாங்கப்படவேண்டும்.
சரி பாடம் முடிந்தாகிவிட்டது... உங்கள் டிஜிட்டலில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் காமிராவைப் பிடித்து உங்கள் படங்களை சுட்டுத்தள்ளி உங்கள் பதிவில் போட்டு இங்ஙே சுட்டி கொடுங்கள்! வாழ்த்துக்கள்!
பிகு: நீங்கள் இந்த மாதிரி சரியாகப் பிடித்தாலே நீங்கள் ஒரு நிபுணர் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்! காமிரா எதாக இருந்தாலும்!
நம்மில் பெரும்பாலோர் ஷேக் இல்லாமல் ப்டம்பிடிகவேண்டும் என்று நினைத்தாலும் காமிராவைச் சரியாகப் பிடிக்கத் தெரியாமல் க்ளிக் கி பல நல்ல படங்களை வீணடித்திருப்போம். இப்பொழுது முதலில் ஒரு காமிராவை எப்படிப் பிடிப்பது என்று பார்ப்போம்.
முதல் விதி... காமிராவை இடதுகையால் மட்டுமே தாங்கிப்பிடிக்கவேண்டும் ( நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயிருந்தால்! ). பின்பு எவ்வாறெல்லாம் பிடிக்கலாம்என்பதை பாடமாக அறுக்காமல் படமாகப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!
இது செங்குத்தாக ( Vertical Holding Position) பிடிக்கும் முறை. இங்கும் காமிரா இடது கையாலேயே தாங்கப்படுவதைக் கவனியுங்கள்.
உங்களிடம் போக்கஸ், மற்றும் அப்பர்சர் போன்ற கண்ட்ரோல்களைக் கையாள இடது கை பெருவிரலும் ஆள்காட்டி விரலும் உபயோகப்படுவதை பாருங்கள்.
முன்புறத் தோற்றம். வலது கை க்ளிக்க மற்றும் ஆடாமல் பிடிக்க மட்டுமே. காமிராவின் முழுஎடையும் இடதுகையாளேயே தாங்கப்படவேண்டும்.
சரி பாடம் முடிந்தாகிவிட்டது... உங்கள் டிஜிட்டலில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் காமிராவைப் பிடித்து உங்கள் படங்களை சுட்டுத்தள்ளி உங்கள் பதிவில் போட்டு இங்ஙே சுட்டி கொடுங்கள்! வாழ்த்துக்கள்!
பிகு: நீங்கள் இந்த மாதிரி சரியாகப் பிடித்தாலே நீங்கள் ஒரு நிபுணர் என்று மற்றவர்கள் நினைப்பார்கள்! காமிரா எதாக இருந்தாலும்!
உள்ளேன் ஐயா
ReplyDeleteநல்ல வகுப்பு, மட்டம் போட மாட்டேன்
good one.
ReplyDeleteஅடுத்து, எப்படி க்ளிக்கணும்னு ஒரு பதிவு போடலாம் :)
படங்களோடு விளக்கம் அருமை.
Nice One...
ReplyDeleteவாங்க கானா.. முதல் உள்ளேன் அய்யா சொல்லிய பெருமையைப் பெருகிறீர்கள்!
ReplyDeleteசர்வேசன்.. வரிசையாக வரும்.எப்படிக்க்ளிக்குவது என்பதை நீங்கள் தான் விளக்கவேண்டும்!
நன்றி ப்ரியன். இந்தப்பதிவை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். பாடங்களை மிஸ் பண்ணாமல் படித்தால் பலரும் வலைப்பதிவரோடு புகைப்படக் கலைஞர் என்ற பட்டமும் பெறுவார்களே!
ReplyDeleteநிச்சயமாக செல்லா...
ReplyDeleteவலைப்பூக்களில் இல்லா சில நண்பர்களுக்கு ஏற்கனவே இந்த சுட்டியை தந்திருக்கிறேன்...
உள்ளேன் அய்யா
ReplyDelete10ஆம் வகுப்பு சிறுவன் புகைப்படம் கற்றுக் கொள்ள அல்லது புகைப்படத் துறையில் ஆர்வம் ஏற்படுத்த வசதியாக புகைப்படக் கருவி வாங்கிக் கொடுப்பது எனில் என்னவிதமான கருவி வாங்கிக் கொடுக்கலாம்.
ReplyDeleteஎனது சகோதரனை அமெரிக்காவிலிருந்து வாங்கியனுப்ப சொல்ல வேண்டும்.
கெனான் ரிபெல் என்று ஒரு காமிரா, இருக்கிறது. மிகவும் அருமையான படங்களைஎடுக்களாம்.
ReplyDeleteசுட்டி இங்கே http://tinyurl.com/22c3hu
நான் எனது பெயரை இந்த வகுப்பில் பதிய வைத்துக் கொள்கிறேன் - நாகூர் இஸ்மாயில்
ReplyDeleteசகோதரி துளசி மற்றும் இசுமாயில் அவர்களுக்கும் சீக்கிரம் சூப்பராகக் க்ளிக்க எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteபிடிச்சுக்கிட்டேன். அப்புறம்?
ReplyDeleteஉள்ளேன் அய்யா!
ReplyDeleteஇந்தப் படங்கள் எப்படி இருக்கின்றன. உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள்.
http://inlinethumb24.webshots.com/6487/2271765840052177038S600x600Q85.jpg
http://inlinethumb13.webshots.com/6028/2252928120052177038S600x600Q85.jpg
http://sirumuyarchi.blogspot.com/2007/07/blog-post_06.html
ReplyDeleteவீட்டுப்பாடம் இங்கே..வெட்கப்புன்னகை படம் செங்குத்தா எடுத்தது தான்.
அருள்குமார், மானும் மலரும் நன்றாகவே உள்ளது. மலர் சூப்பர்!
ReplyDeleteமுத்துலட்சுமி, உங்கள் புன்னகைகள் சூப்பர். நீங்க பாசாயிட்டீங்க
உள்ளேன் அய்யா
ReplyDeleteபதிவுக்கு நன்றி. தமிழ்மணத்தில் உபயோகமான பதிவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.
உள்ளேன் ஓசை ஐய்யா
ReplyDeleteநல்ல பதிவு செல்லா.முதல் வகுப்புக்கு கொஞ்சம் நேரமாயிடிச்சி அடுத்த வகுப்புக்கு சரியா வந்துடுறேன். சரி என்னிடம் DSLR இல்லை சாதாரண digital camera ஒகே வா?
ReplyDeletesanthosh, no issues. i know many of us dont have an SLR... and believe me i dont have one now. I sold me pro equipments to start my business. join and shoot and share your images after puting it as posts in your blog.
ReplyDeletethirunelveli vijay avarkaLee vaNakkam. varuka... kLikkuka
ReplyDeleteArul Kumar,
ReplyDeleteFlower super!
Muthulakshmi,
kalakkareenga ponga!
செல்லா
ReplyDeleteஉங்கள் ஓட்டு எந்த புகைப்படக்கருவிக்கு? மின்னனு கருவியா? சுருள் போட்டு எடுக்கும் கருவியா?
ஓகே. என் சோனி டிஜிட்டல் கேமரா (DSC-W70) செவ்வக சைஸ். (RECTANGULAR SIZE) அதை இடது கையால் எப்படி பிடிக்க? அந்த மாதிரி லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராவையும் எப்படி பிடித்து கையாள என்று தெரிவித்தால் நலம்.
ReplyDeleteஅசலம்
ஆஹா க்ளாஸ் சூடு பிடிச்சிருக்குப்போய்..
ReplyDelete//
10ஆம் வகுப்பு சிறுவன் புகைப்படம் கற்றுக் கொள்ள அல்லது புகைப்படத் துறையில் ஆர்வம் ஏற்படுத்த வசதியாக புகைப்படக் கருவி வாங்கிக் கொடுப்பது எனில் என்னவிதமான கருவி வாங்கிக் கொடுக்கலாம்.
எனது சகோதரனை அமெரிக்காவிலிருந்து வாங்கியனுப்ப சொல்ல வேண்டும்.//
அனானி.
மிக நல்லதொரு கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய கேள்விக்கு ஒரு தனிப் பதிவு போடவேண்டும். இருந்தாலும் சில குறிப்புகள்.
1 - மூன்று வகையாக டிஜிடல் கேமராக்களை பிரிக்கலாம். point and shoot, semi SLR and SLR. உங்களுக்கு எது தேவை என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள்.
2 - தேர்ந்தெடுக்கும் கேமராவின் லென்ஸை தயாரிக்கும் நிறுவனம் எதுவென்று பாருங்கள்.
My favourite top choices of lenses in order :
Leica, nikkor and Cannon lenses.
3 - எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று முதலில் முடிவ்ய் செய்யுங்கள். கேமரா $50 ல் இருந்து ஆரம்பிக்கிறது.
முதலில் இந்த விவரங்களை முடிவு செய்த பின்பு அடுத்த கட்டத்திற்கு நகரலாம். நீங்கள் தரும் விவரங்களைக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கிறேன்.
//மாயன் said...
ReplyDeleteசெல்லா
உங்கள் ஓட்டு எந்த புகைப்படக்கருவிக்கு? மின்னனு கருவியா? சுருள் போட்டு எடுக்கும் கருவியா?//
உங்கள் கண்ணிற்கு! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
From my post kankalal kaithu sei...
ஒரு நல்ல புகைப்படம்எடுக்க மிகவும் அத்தியாவசியமானது நமது கலைக்கண் என்பதே!
"Great Photographs are not taken by the best cameras but invariably by a golden eye"என்றுஎன் புகைப்படக் கலை குரு அடிக்கடி சொல்வார்!
மற்றபடி ஒளியைஎதில் பதிவு செய்கிறோம் என்பது அவ்வளவு முக்கியமில்லை. SPB யிடம் உங்கள் பாட்டை CD யில் பதிவு செய்தால் நான்றாக இருக்குமா அல்லது DVD ல் பதிவு செய்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டால் என்ன சொல்வார்!
resolution தவிர்த்து பார்க்கையில் டிஜிட்டல் தான் இனிமேல் வளரக்கூடியது!
டிஜிட்டலுக்குஎனது தாழ்மையான ஓட்டு!
அசலம் :
ReplyDelete//
ஓகே. என் சோனி டிஜிட்டல் கேமரா (DSC-W70) செவ்வக சைஸ். (RECTANGULAR SIZE) அதை இடது கையால் எப்படி பிடிக்க? அந்த மாதிரி லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராவையும் எப்படி பிடித்து கையாள என்று தெரிவித்தால் நலம்.
அசலம்///
இது point&shoot கேமரா.. இதில் கிரிப் பற்றி அதிகம் பேசமுடியாது என்றாலும் இது போன்ற சிறிய கேமராவை இயக்கும் போது கை அதிகம் அசங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
சோனி கார்ல் ஜெயிஸ் (carl zeiss) லென்ஸ் உபயோகிப்பார்கள். சோனி ஆரம்ப நிலைக் கேமராக்களில் எனக்கு தெரிந்த வரையில் அவர்கள் அதிக வார்ம் அப் தருவார்கள் அசலான நிறத்தில் புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்றால் சற்று தடுமாற்றம் வரும்.
//சந்தோஷ் said...
ReplyDeleteநல்ல பதிவு செல்லா.முதல் வகுப்புக்கு கொஞ்சம் நேரமாயிடிச்சி அடுத்த வகுப்புக்கு சரியா வந்துடுறேன். சரி என்னிடம் DSLR இல்லை சாதாரண digital camera ஒகே வா? //
சந்தோஷ் எந்த கேமராவாக இருந்தாலும் நாம் எப்படி எடுக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. கவலையே படாதீர்கள்.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் (புகைப்படத்) தொழிலாளி.
எச்சூஸ் மீ.. மே ஐ கம் இன்...
ReplyDeleteசாரி வாத்தியாரே.. கொஞ்சம் லேடாயிடுச்சு ( 3-4 நாள் இருக்குமா )...
லெட்டா கண்முழிச்சு தியரியெல்லாம் படிச்சுட்டேன்.. என் பிராக்டிகல் நோட் ( lab record) இங்கே இருக்கு... லேட்டானதுக்கு மார்க்கை குறைக்காம.. ஒழுங்கா இன்டெர்ணல் மார்க் குடுங்க
http://photoblog-by-deepa.blogspot.com
http://www.photoblog.com/deepa7476
செம்பருத்தி - வித்தியாசமான கோணம். நன்றாக வந்திருக்கிறது தீபா . வாழ்த்துகள்
ReplyDeleteநிழ்ற்படம்...
ReplyDeleteநன்றி..
/கெனான் ரிபெல் என்று ஒரு காமிரா, இருக்கிறது. மிகவும் அருமையான படங்களைஎடுக்களாம்.
ReplyDeleteசுட்டி இங்கே http://tinyurl.com/22c3hu //
நன்றி செல்லா.
நிழற்படம்,
ReplyDeleteநன்றி
//1 - மூன்று வகையாக டிஜிடல் கேமராக்களை பிரிக்கலாம். point and shoot, semi SLR and SLR. உங்களுக்கு எது தேவை என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள்.//
எனது சாய்ஸ் SLR
///
2 - தேர்ந்தெடுக்கும் கேமராவின் லென்ஸை தயாரிக்கும் நிறுவனம் எதுவென்று பாருங்கள்.
My favourite top choices of lenses in order :
Leica, nikkor and Cannon lenses.//
இதில் எனக்கு ஒரு சாய்ஸும் இல்லை. நீங்களே ஒரு நல்ல தேர்வு ஒன்று பரிந்துரை செய்யுங்கள். சிறுவனுக்கு கற்றுக் கொள்ள வசதியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
///
3 - எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று முதலில் முடிவ்ய் செய்யுங்கள். கேமரா $50 ல் இருந்து ஆரம்பிக்கிறது.
///
செலவு ஒரு பிரச்சனையில்லை
//
முதலில் இந்த விவரங்களை முடிவு செய்த பின்பு அடுத்த கட்டத்திற்கு நகரலாம். நீங்கள் தரும் விவரங்களைக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கிறேன். //
Waiting for அடுத்த கட்டத்திற்கு :-))
நிக்கான் கேமரா(6X zoom) 700 டாலர்(in USA) வரை விலை இருக்கும் என்று கேள்விப்பட்டேன். அதே போல பானசோனிக் கேமரா (12X zoom) வரை 500 டாலர் என்று கேள்விப்பட்டேன்.
slr கேமரா என்றால் நீங்கள் யோசிக்கவே தேவையில்லை. உடனடியாக Nikon D40X வாங்கி விடலாம். ( கிட்ட தட்ட $500 மட்டும் தான் ஆகும்). இது 18 - 50MM லென்ஸ் உடன் வருகிறது. புகுந்து விளையாடலாம். ஆரம்ப புகைப்படக்காரர்களுக்குத் தேவையான அப்படி ஒரு கேமரா ..
ReplyDeleteகாசு ஒரு பிரச்சினையில்லை பரவாயில்லை என்றால் , நிக்கான் டி-80 வாங்கலாம். அது சற்று அதிகம். $1000 வரைப் போகும்.
பானாசோனிக் 12x zoom கேமரா - அது செமி-எஸ்.எல்.ஆர் வகையைச் சார்ந்தது. அதுவும் நல்லக் கேமரா தான். ஆனால் நீங்கள் எஸ் எல் ஆர் வாங்குவது நல்லது. பிற்காலத்தில் மிகவும் உதவும்.
Nikon d80 - is my preference. if budget is constraint then choose nikon d40x
Lemme know if you need more info
-
இது தவிர கைகளை உடம்பிற்கு பக்கமாக இருத்திக்கொண்டால் ஷேக் ஆவதை தவிர்க்கலாம்.அது தவிர படம் எடுக்கும் போது நல்ல பேலன்ஸ்டு பொசிஷனில் இருந்தால் இன்னும் நல்லது. தேவைப்பட்டால் ஏதாவது firm object-ஓடு சாய்ந்து கொண்டு படம் எடுப்பதும் நான் எப்போதும் செய்யும் ஒன்று.
ReplyDeleteமுடிந்தவரை கண்ணுக்கு பக்கத்தில் வ்யூ பைண்டரை வைத்துக்கொண்டு படம் எடுத்தாலே பாதி ஷேக் குறையும்.
பல சமயங்களில் படம் எடுக்கும் போது என்னையும் அறியாமல் மூச்சை பிடித்துக்கொண்டு ,க்ளிக் செய்த பிறகு தான் மூச்சு விடுவேன்!!!! :-))
என் ஹோம்வொர்க்
ReplyDeleteஇங்கே இருக்கு செல்லா
ரொம்ப ரொம்ப சூப்பருங்கோ, பளிச் நு வருது. நீங்க இந்த பாடத்துல பாஸ்! அடுத்த பாடம் படிக்கவேண்டும் இன்னும் சிலவற்றை சரியாகச்செய்ய... CVR இப்ப உங்களுக்கு அடுத்த க்ளாஸ்எடுப்பார்!
ReplyDeleteஉதாரணமா அந்த வினாயகர் கோவில்.. கெட்டுக்கு வெளியேஎடுக்காமல் அந்த அழகான வளைவான பாதையில் கீழே உட்கார்ந்து பாதையோடுஎடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும்! மற்ற படங்களையும் பார்த்தேன். ரயில் வண்டி etc. ரொம்ப நல்லா வந்துருக்கு. கரும்புள்ளிக்கு ... லென்ஸுக்கு வெளியே இருந்தால்.. சாஃப்ட் காட்டன் + லென்S cleaning fluid ( available at all optical shops). உள்ளே இருந்தால் நம்மூரு வர்ரப்ப மெக்கானிக் கிட்ட குடுத்து க்ளீனிங் பண்ணலாம். இப்போதைக்கு அதைப்பத்தி கவலைப்படாமஎடுத்து தள்ளுங்க!
'பாஸ்' பண்ணிவிட்டதுக்கு நன்றி செல்லா.
ReplyDeleteஇங்கே நம்மூர்லே ப்ரைமரி ஸ்கூலில் எந்தப்பிள்ளைகளையும் எதுக்கும் பெயிலாக்கவே மாட்டாங்க.
எந்த வகுப்புலே போய் உக்காந்தாலும், அதுங்க செய்யற எல்லாத்துக்கும் 'கிரேட்..... வெல்டன்'தான்:-)))
லென்ஸ் க்ளினிங் பண்ணியாச்சு. (என் கண்ணாடிக்கு வாங்குனது இருக்கு)
ஒருவேளை உள்ளெ இருக்கோ என்னவோ(-:
realy superb...thanx...
ReplyDeleteநான் 4 வருஷம் லேட்.. என்னையும் சேர்த்துக்குவிங்களா வகுப்புக்கு??
ReplyDeleteSuper sir
ReplyDelete