Monday, July 30, 2007

ZOOM LENS - சில டிப்ஸ்

12 comments:
 
நம்மில் பலரும் தற்பொழுது ZOOM LENS உள்ள டிஜிட்டல் காமிராவையே உபயோகிக்கிறோம். ஆனால் அதுஎதோ படத்த மட்டும் பக்கத்தில் கொண்டுவருகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு வித அழகூட்டும் விசயமாக.. அதாவது Perspective கொடுக்கவும் உபயோகிக்க முடியும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

அருகிலுள்ள இரு பைக்குகளையும் பாருங்கள். நேற்று கிட்டத்தட்டே ஒரே ஆங்கிளில் க்ளிக்கியது தான். அதே பைக்தான். ஆனால் வெவ்வேறு zoom power ல் எடுத்தது. மேலே உள்ள படம் டெலி மோடிலும் கீழே உள்ளது வைட் மோடிலும் எடுத்தது. ஆனால் கீழே உள்ள படத்தில் வண்டியின் நீளம் அதிகமாக இருப்பது போல் தெரிகிறதா? உங்கள் டூ வீலரையும் இந்த மாதிரிஎடுக்கலாமே! ( க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

பிகு: இதனால் தான் போர்ட்ராய்ட் படங்கள் எடுக்க வைட் ஆங்கிள் உபயோகப்படுத்தமாட்டார்கள். காரணம் முக அமைப்பு மாறிவிடும்!

Recent Posts

12 comments:

 1. very interesting!!

  அப்போ mm குறைத்துக்கொண்டே போனால்,படங்கள் மேலும் மேலும் closely packed ஆக அமைந்து கொண்டு போகும் இல்லையா???

  wide angle lens-இன் எதிர்மறை தான் telephoto lens-கள் என கேள்வி பட்டிருக்கிறேன்!! அது சரியா???
  அப்போ telephoto lens -களின் mm அதிகமாக இருக்கும் ,மற்றும் அதில் எடுக்கப்படும் படங்கள் will be spaced out more!!

  Correct-a?? :-)

  நல்ல யோசிக்க வைக்கும் பதிவு!!
  வாழ்த்துக்கள் செல்லா!! :-)

  ReplyDelete
 2. Hi Osai,

  romba nalla information abt the portrait face look with wide angle... haven't realised this before... ippo terinchikiiten.. :-)

  btw, could u tell ur opinion about buying Sony-T100. Most of the reviews abt this camera are good, except the indoor pictures seems not good enoughh..

  your expertise views abt the camera is appreciated.

  Thanks,

  lord labakku doss

  lordlabakkudoss.blogspot.com

  ReplyDelete
 3. நன்றி. மிகவும் சரிதான். எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால் உங்கள் காமிராவில் 10 எக்ஸ் ஷூம் உள்ளது என்றால்
  1 எக்ஸ்= வைடு ஆங்கிள் ( குரூப் போட்டோ!)

  10 எக்ஸ் அப்டிகல் ஷூம் = டெலி போட்டோ ( க்ளோஸப்)

  இன்னும் கார்னர் ரெசொலுயூசன், அபெர்ரேசன்,கலர் நியூட்ராலிட்டி என்று பலவும் லென்ஸ்களின் தரத்தை நிர்மாணிக்கின்றன. என்னைக் கேட்டால் காமிரா வெறும் கருப்பு பெட்டி +ஒரு லைட்மீட்டர் சமாசாரம். லென்ஸ்கள் தான் அதன் ஜீவன்!

  1 லட்சம் விலையுள்ள உயர் ரக காமிராவைவிட 3 மடங்கு அதிக விலையுள்ள லென்ஸ்களை நான் பார்த்திருக்கிறேன்.

  உதாரணத்திற்கு 1.0 / 50 mm லைக்கா, சுமிக்ரொன் லென்ஸ்

  ReplyDelete
 4. Hi anony das, CVR is the right person to answer your question. personally i will suggest you to go for anycamera with Europian lenses like leica or carl zeiss if you are not going for an SLRs.. the ultimate image capturing machines.

  ReplyDelete
 5. @செல்லா!!
  என்ன தல!! என்னை மாட்டி விட்டுட்டீங்க??? :-)

  @அனானி
  இந்த கேமராவை பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது ,ஆனால் POint and shoot கேமராக்கள் என்று வந்தால் நான் முதலில் பரிந்துரைப்பது Canon A620.

  படங்களின் தரம்,கையாள்வதில் எளிமை என பல அம்சங்கள் எனக்கும் இதில் பிடிக்கும் அதுவுமில்லாமல் இதை என் நண்பன் ஒருவனும் பயன்படுத்தி வருகிறான்.

  இதை மேலும் இரண்டு பேருக்கு பரிந்துரை செய்து அவர்கள் இதுவரை என்னிடம் ஏதும் புகார் செய்யவில்லை!! :-)

  உங்கள் கேமராவை பற்றி சிறிது தேடிப்பார்த்ததில் அதில் 5X zoom உள்ளது என கண்டேன்,ஆனால் நான் சொல்லும் கேமராவில் 4X.

  அதுவுமில்லாமல் சோனியில் 8MP,ஆனால் கேனனில் 7MP

  ஆனால் விலையை பார்த்தால் கேனன் 200 - 250 டாலரில் கிடைத்து விடும்,நல்ல டீல்களை நீங்கள் தேடிப்பிடிக்கும் சாமர்த்தியத்தை பொருத்து!! :-)
  சோனி நிச்சயமாக இதைவிட விலை அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்!!

  பொதுவாக கேமராக்கள் பற்றிய தகவல்களுக்கு ஒப்பீடுகளுக்கும் நான் www.dpreview.com எனும் தளத்தை உபயோகிப்பேன்!!
  நன்றாக யோசித்து முடிவெடுங்கள்!!
  வாழ்த்துக்கள்!!

  பி.கு:கேமரா வாங்கிய பின் என்ன வாங்கினீற்கள் என தெரியப்படுத்தவும்!! :-)

  ReplyDelete
 6. CVR and OSAI, thanks to both of you for a very quick response.

  I missed to tell u a point, that I'm interested in Ultracompact... a camera to slide inside my small shirt pocket and weighin. my first digital camera sony dsc-p5 is too outdated and very big to carry now :-(

  canon a620 seems bit bulky...

  do u have any recommendations for ultra compact?

  ReplyDelete
 7. Canon A620 is more of a compact than an ultra compact.
  It aint as small as sony. agreed!! :-)

  I would rather take a good camera than a small camera,but thats me! :-)

  I dont have any information on ultra compact models!
  Research panni thaan paakanum!! :-)

  ReplyDelete
 8. sony cybershot and casio exlim are good ultra light pocket portable cameras.
  -vj

  ReplyDelete
 9. ///this is completely irrelevant to this post..so sorry to ask here//

  (faded effects ) ஐ photoshop ல் செய்யலாமா.?.. அதை எப்படி செய்வது ? ?. அப்படி செய்தால் அந்த படங்கள் போட்டில் சேர்த்துகொள்ளப்படுமா? ?.. இங்கே நான் சில photoshop effects பயன்படுத்தியுள்ளேன்.. இதெல்லாமும் போட்டியில் சேர்க்கப்படுமா அல்லது disqualify செய்வீங்களா...? ..

  இதை போல் இன்னும் சில படங்கள் உள்ளது... photoshop use பண்ணி சப்மிட் பண்ணலாமா ? ? ?

  ReplyDelete
 10. சின்னதா இருந்தாலும் நச்சுனு இருக்கு மேட்டரு.

  (அலுவலக பிஸி. மொக்கை பதிவு போட மட்டுமே நேர அவகாசம் இருக்கு. கூடிய விரைவில் பதிவுடன் வருகிறேன் :) )

  ReplyDelete
 11. தீபா, தங்களின் புகைப்பட்ங்களை பார்த்தேன்! உங்களின் ஒரிஜினல் படங்கள் அழகாக உள்ளன. கண்ணாடிக்கு வெளியே தெரியும் காட்சிகளை மட்டும் ப்ளர் செய்திருப்பது மட்டுமே எனக்கு அழகாகத் தெரிகிறது. ஒரு கிரிட்டிக் என்ற முறையில் சொல்கிறேன்... போட்டாசாப் போன்ற மென்பொருள்கள் மிக மிக அற்புதமானவை. அவற்றை எக்ஸ்பர்டுகள் உபயோகிக்கும் பொழுது அது ஒரு படத்தின் இயற்கைத் தன்மையை கூட்டுவதற்கே பயன்படுத்துவார்கள். அதாவது நீங்கள் உபயோகித்திருப்பதே தெரியாத அளவுக்கு... மேக்கப் போடுவதைப் போல உபயோகிக்களாம். இது எனது தனிப்பட்ட டிப்ஸ்!

  மற்றபடி போட்டிக்கு தாராளமாக பேட் அவுட் செய்ய, பிளர் செய்ய என்று எல்லா விதத்திலும் அழகூட்டலாம் ( அப்படி முடியும் பட்சத்தில்).

  கலர்களை சேபியா மற்றும் கருப்பு வெள்ளை ஆக்கலாம்!

  நாங்கள் போடியிலிருந்து இந்த காரணங்களுக்காக நிச்சயம் விலக்கமாட்டோம் யாரையும். சரியாக வரவில்லை என்றால் மார்க் குறையும்.. அவ்வளவே

  மற்ற படி போட்டி நேரம் நெருங்குவதால் நாளை விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். நான் நடுவர் குழுவில் உள்ளதால் இந்த போட்டியை நடத்த / ஒருங்கிணைக்க நண்பர் CVR மற்றும் Surveyasan அவர்களை வலைப்பூ பொறுப்பேற்க அழைக்கிறேன்!

  ReplyDelete
 12. hi enkitta 5D mark 3 24-105 mm zoom lens iruku macro and wide angle lens enna vanga lam Nu idea venum camera va epadi safety ya vachukanum eppadi clean pannanum nu explain panunga

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff