Thursday, September 13, 2007

படம் செய்ய விரும்பு - 3

18 comments:
 
யதார்த்த போட்டோகிராஃபர் பல்லியின் டிப்ஸ்..

சரியான வண்ணத்தோட போட்டோ கிடைக்க மாட்டேங்குதேன்னு கவலைப் படறீங்களா ?

நாம எங்க போட்டோ எடுக்கப்போறோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்லீங்களா ? அதுக்கேத்த மாதிரி வொயிட் பேலன்ஸ் ஐ சரி செஞ்சீங்கன்னா போட்டோ நல்லா வரும்னு சொல்லியிருக்குங்க.


  • அதாவது சூரியன் உச்சத்தில இருக்கும்போது வொயிட்பேலன்ஸ் செட்டிங் க டேலைட்/சன்னி(daylight/sunny) மோட் ல வைக்கனுங்க. அப்படி வைக்கும் போது சூரியனின் ஆதிக்கம் அதிகமா இருந்தா சில நேரம் நீல நிறம் அதிகமா வர்ரதுக்கு சான்ஸ் அதிகம் இருக்குங்க.
  • அப்படி அதிகப்படி நீலம் வரும்போது வருணபகவானை மனசில நினைச்சுக்கிட்டு க்ளொடி (cloudy ) மோட்ல வச்சி எடுத்துப் பாருங்க.
  • பொதுவா வீட்டுக்குள்ளார படம் எடுக்கறப்ப மின்சாரத்தின் ஆதிக்கம் நிறையவே இருக்குமுங்க. முடிஞ்ச வரை இயற்கையான வெளிச்சத்தில படம் பிடிக்கிறது உங்க போட்டோவுக்கு நல்லது.
  • ஹோல்டரில் குண்டுபல்பு( incandecent ) மின்சாரத்துட சேர்ந்து ஆதிக்கம் செய்யும் போது ஆரஞ்சு கலர் அல்லது பிங்க் கலர் உங்க போட்டோல நிறைய வர்ரதுக்கு சான்ஸ் இருக்குங்க. டியூப் லைட் ஆதிக்கத்தினால் உண்மையான நிறம் மாறி வேறு மாதிரி கூட தோன வாய்ப்பு இருக்குங்க. முக்கியம இந்த மெர்குரி வெளிச்சத்துல அது அதிகம் வரலாங்க. அதனால பல்புக்கேத்த மாதிரி வொயிட் பேலன்ஸ் செட்டிங் உங்க கேமரால இருக்கான்னு பாருங்க. அப்படி இல்லாத போது ஆட்டோ பேலன்ஸாண்டவர் துணை உங்களுக்கு கட்டாயம் உண்டுங்க. நம்பிக்கையை கைவிட்டுடாதீங்க.

ஆனா ஆட்டோ பேலன்ஸ் தவறான அல்லது விரும்பத்தகாத மாதிரி உங்களுக்கு போட்டோ தருதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா அடுத்த செட்டிங் மாத்தி எடுத்து பாருங்க. உங்களுக்கு திருப்தியான போட்டோ வர வரைக்கும் எடுத்துட்டே இருங்க. ( set high standard on your photography. dont come to the conclustion " I cant take more than this.. thats it " )
மேலே இருக்கிற போட்டோ ஆட்டோ பேலன்ஸ் மோட்ல எடுத்தது. கொஞ்சம் புளூ ஃபிளிமா மாறிப்போச்சு. இல்லீங்களா


அதையே கொஞ்சம் வொயிட் பேலன்ஸ் செட்டிங் மாத்தி கிளொடு மோடுல எடுத்தது. இப்ப பாத்தீங்கன்னா பெரிய வித்தியாசம் தெரியுமுங்க.

ஆகா மொத்தத்துலா வொயிட் பேலன்ஸை ஆட்டோவில வச்சி எல்லா நேரத்திலையும் எடுத்தா நல்ல பலனளிகாதுங்க.


பொதுவா ஒரு சப்ஜெக்டை நல்ல முறையில படம் எடுக்கணும்னு நினைக்கிறீங்க உங்க கிட்ட ஜூம் குறைவான கேமரா தான் இருக்கேன்னு கவலைப்படறீங்க இல்லையா. இதுக்கு நீங்க கவலைப்பட தேவையில்லீங்க.. பெரும்பாலும் மக்கள் அதுபோல கேமரா தான் வைச்சுட்டு இருக்காங்க. முடிஞ்ச வரையில் அந்த சப்ஜெக்ட் அருகே போயி படம் எடுக்க முயற்சி செய்யுங்க நல்ல பலனைத் தரும்.

முக்கியமா என்ன சொல்ல வரேன்னா வொயிட் பேலன்ஸ் போட்டோ வாழ்கையில முக்கியமுங்க. அதுவும் இல்லாம உங்களோட முயற்சிய்யும் நம்பிக்கையும் தான் இதில முக்கியமுங்க. உங்க மேல நீங்க நம்பிக்கை வச்சே தீரனுங்க. என்னால இவ்வளவு தான் படம் எடுக்க முடியும்னு கட்டாயம் நினைக்காதீங்க. சில நேரம் நல்லா வரும்னு நினைக்கிற போட்டோ சரியா வராமல் போகுமுங்க. அதுக்காக மனம் தளராதீங்க. முயற்சி திருவினையாக்கும்.. என்ன நான் சொல்றது சரிதானுங்களே ?


.. யதார்த்த போட்டோகிராபர் பல்லியின் டிப்ஸ் தொடரும்.

ps: அடிக்கடி நாளிதழ்/மாதஇதழ்களில் வரும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ படிச்சதோட விளைவு.. மன்னிச்சுக்கோங்க மக்கா

http://www.kenrockwell.com/tech/notcamera.htm --- மேலே இருக்கிற போட்டோஸ் இங்கன இருந்து தான் எடுத்தது.

http://www.kenrockwell.com/tech/white-balance-examples.htm -- இதையும் பாக்க மறக்காதீங்க
நம்ம ஆனந்த் அண்ணாச்சி எழுதியது அவரோட பதிவுல

http://anandvinay.blogspot.com/2005/07/white-balance-zen.html
http://anandvinay.blogspot.com/2005/07/5.html

18 comments:

 1. சும்மா சொல்லக்கூடாதுங்க உங்களை.இந்த வெள்ளை சமன்பாட்டை (அதுதாங்க வொய்ட் பேலன்ஸ்) இது வரைக்கும் கண்டுக்காம இருந்தேன்.இன்னைக்கு இருக்குது அதுக்கு விளையாட்டு.

  ReplyDelete
 2. சூப்பர் பதிவு தல!
  நானே இது பத்தி போடனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்.

  வெள்ளை சமன்பாட்டை பற்றி மேலும் தெரிஞ்சுக்கனும்னு நெனைக்கறவங்க AN&-இன் பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்!! :-)

  ReplyDelete
 3. ஒவ்வொன்னாத்தானே ருசிக்க முடியும்.அதுக்குள்ளே An& க்கு விரட்டுறீங்களே CVR.ஆனாலும் தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 4. நன்றி நட்டு.. நிறைய எழுதனும்னு ஆவல்தான் இருந்தாலும் ஆணி வைச்சு அடிக்கிறாங்க... அதனால ரொம்ப சுருக்கமா எழுதவேண்டியதா போச்சு...

  ReplyDelete
 5. வெள்ளைச்சமன்பாடா ? இல்ல வெள்ளை சமன்பாடா ?

  இச்சனுமா கூடாதா ?

  ReplyDelete
 6. பயனுள்ள பதிவு.

  வெள்ளைச் சமன்பாடு நல்லா இருக்கு.
  இச்சுங்க.

  தமிழில் புகைப்படக் கலையில், 'தமிலும்' தங்கிலீஷுமே அதிகப்படியா இருக்கு ;)

  அதுக்கு, முக்காவாசி காரணம் நாந்தேன்னும் தெரியுது.

  'முடிந்தவரை தமிழில்' பதியப் பாக்கோணும் ;)

  ReplyDelete
 7. சர்வேசு,

  தமிழ்ல தொழில்நுட்பத்தை எழுதும்போது கொஞ்சம் கடினமா இருக்குப்பா அதுக்காகத் தான் முடிஞ்ச வரையில் அப்படியே ஆங்கில வார்த்தைய போட்டுடறேன்.. தமிழில் எழுத நானும் முயற்சிக்கிறேன்.

  அன்புடன்

  ஜீவ்ஸ்

  ReplyDelete
 8. நல்ல பதிவு.
  நான் ரொம்ப நாள்களாக முயற்சி செய்து, முடியாமல் தவிக்கும் ஒரு விஷயம்... ஒரு இருட்டான இடத்திலிருந்து வெளிச்சமான பகுதியையோ, அல்லது வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டான பகுதியையோ எடுக்கும் போது, இரண்டு பகுதியம்(ie: இருட்டு + வெளிச்சமான இரண்டு பகுதியும்) ஒரே Exposure'ல் பதிவாக எந்த மாதிரியான white balance select செய்ய வேண்டும்? இருட்டான பகுதி என்றாலும் flash போட்டால் கொஞ்சம் வருகிறது.(அதுவும் வெளிச்சமான பகுதி கொஞ்சம் artificial'ஆக வருகிறது.) ஆனால், வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டான பகுதியை எடுக்கையில் Exposure அதிகம் வேண்டும் என்று அதிகப்படுத்தி எடுத்தால், படமே over exposure ஆகி விடுகிறது. எனது camera'வில்(DSC-H5) one push set என்று வேறு ஒரு option உள்ளது. ஆனால் அதை எப்படி உபயோகப் படுத்தினால் எந்த மாதிரி foto கிடைக்கும் என்பது புரிபடவே மாட்டேங்கிறது. :-(

  ReplyDelete
 9. Athi//


  தனிப்பதிவா போடவேண்டிய விஷயம்.. சேவையார்( அதாங்க.. சீ.வீ.ஆர்) கிட்ட மனு போடப்போறேன்..

  ReplyDelete
 10. உங்க வெள்ளை சமன்பாடு சூப்பர்...

  நான் அடுத்த முறை டிரை பண்ணி பாக்கிறேன்.

  ReplyDelete
 11. jk anna .. நன்றிங்கோ.. டிரை பண்ணிட்டு ரிசல்ட் எப்படி வந்ததுன்னு சொல்லுங்க

  ReplyDelete
 12. Athi,

  What you need to try is HDR.
  HDR is a wonderful concept in the digital picture world, to produce some stunning imagery.

  I havent fully mastered it yet - i am experimenting on it :)

  for your question on dark + light combination images, HDR will help.

  here is some reading, there are specific examples addressing your needs.
  http://www.cambridgeincolour.com/tutorials/high-dynamic-range.htm


  good luck! :)

  ReplyDelete
 13. நன்றி Jeeves மற்றும் சர்வேசன்.
  இன்னும் Photoshop'ல் photo editing பற்றி ஆராயவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்கிறேன். :-) எனது camera'வில் தொடர்ச்சியாக -.3, 0, +.3 Exposures'ல் படம் எடுக்கும் option எதற்கு என்று இப்பொழுது தான் புரிகிறது.
  ஆனாலும் இதை வெறுமனே camera'வில் ஒரே shot'லேயே எடுக்க முடியாது என்பதில் கொஞ்சம் ஏமாற்றம் தான்!

  ReplyDelete
 14. Athi,

  well, point & shoot, there are limitations.

  you can achieve what you want, with some extra fill-in flashes and with the correct angle - trial & error will get you want you want.

  explore HDR, results will be amazing.

  ReplyDelete
 15. ஒன்னும் பிரிலீங்க.. போட்டா ஷாப் இல்லாங்காட்டி இன்னா பன்றது?

  ReplyDelete
 16. best sir.. i want to know about basic of white balance.. what is the different between whitebalance and black balance? sriprabu from madrai

  ReplyDelete
 17. SriPrabu
  black balance சில உயர்தர CamCorder ல் மட்டுமே இருப்பதாக அறிகிறேன். பொதுவாக digital cameraக்களில் white balance செய்ய மட்டுமே வசதி இருக்கும்.

  இங்கே கொஞ்சம் விவரமாய் எழுதி இருக்கேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

  http://anandvinay.blogspot.com/2005/07/5.html

  ReplyDelete
 18. very good article, i will use and sent questions to palliyar

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff